திங்கள், 30 டிசம்பர், 2013

தாமதமாக வருகை தந்த வெள்ளை கிறிஸ்துமஸ்

சுவிஸின் வடக்கு ஆல்ப்ஸ் பகுதியில் வசிப்பவர்களுக்கு பொதுவாக கிறிஸ்துமஸ் காலத்தில் அமையும் வெள்ளை கிறிஸ்துமஸ் இவ்வாண்டு சற்று தாமதமாகவே அமைந்துள்ளது.
கடந்த டிசம்பர் 26ம் திகதி ஆல்ப்ஸ் மலையின் வடக்கு பகுதியில் 20 முதல் 40 சென்டீமீற்றர்கள் பனியால் சூழப்பட்டது என RTS செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

“பாக்சிங் டே” என அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் மறுநாளில் உயர்ந்த மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வெள்ளை கம்பளத்தை விரித்தது போல பனி படர்ந்து அழகாய் காட்சியளித்தது.
இதனைத் தொடர்ந்து தெற்கு இத்தாலிய பேசும் காண்டனில் ஒரு மீற்றர் தூரத்திற்க்கு பனி படர்ந்திருந்தது.

இதுகுறித்து பனிச்சரிவு ஆய்வாளர்கள் கூறுகையில், சுவிஸில் பனியின் தாக்கம் 120 செண்டிமீட்டராய் பதிவாகியுள்ளது. கடந்த 61 ஆண்டுகளாய் வரலாறு காணாத அளவில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதற்கிடையில் டிக்கினோவில் குறைந்த தட்பவெப்பத்தால் கிறிஸ்துமஸ் மற்றும் பாக்சிங் டே ஆகிய தினங்களில் பிற்பகல் வரை தொடர் கனமழை பெய்தது. இதனால் லுகானூ ஏரிக்கு அபாயம் உள்ளது என அறிவிக்கப்பட்டது.

இக்கனமழை புயலாக மாறி மத்திய சுவிஸ் பகுதி,வாயூத் என்ற மாவட்டம் மற்றும் சில நகரங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. மேலும் ரயில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

வெள்ளி, 27 டிசம்பர், 2013

சுவிஸை உலுக்கிய புயல்காற்று

சுவிஸில் கடும் புயல்காற்று வீசியதால் நேற்றைய கிறிஸ்துமஸ் தினத்தில் மலைரயில் மற்றும் கேபிள்கார் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இக்கடும் புயல் ஐரோப்பாவின் மிக உயரமான ரயில்வே என்ற பெருமையை கொண்ட தலைநகரம் பேர்னில் இருக்கும் ”ஜங்க்ப்ராவ் இரயில் நிலையத்தில்” இரயில் பாதைகள் கடும் பாதிப்பிற்குள்ளானது.
இந்நிலையில் இங்கு ரயில் ஒன்று வீட்டின் மீது மோதி அவ்வீடு

 புயல் காற்றினால் தள்ளப்பட்டு ரயில் பாதையில் வந்து விழுந்தது.இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் மத்திய சுவிஸில் உள்ள சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பின்பு கிறிஸ்துமஸ் தினமான நேற்று சரி செய்யப்பட்டது.

இப்புயலின் தாக்கம் குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது, மத்திய சுவிஸில் புயல் காற்றின் சீற்றம் 208 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியது. பின்பு கிறிஸ்துமஸின் முந்தைய இரவு ரைன் பள்ளதாக்கில் 110 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியது.

மேலும் நேற்று குளிர்பனி படர தொடங்கியதால் புயல்காற்று நின்று உடனே மழையும் பனிப்பொழிவையும் ஏற்படுத்தியது. இதன் பின்னர் சுவிஸில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
 

புதன், 25 டிசம்பர், 2013

சுவிஸில் தஞ்சமடைய ரஷ்ய தொழிலதிபர் முயற்சி


ரஷ்யா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலதிபர் கோடோர்கோவ்ஸ்கி சுவிஸ் தூதரகத்தில் விசாவிற்காக விண்ணப்பித்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த கோடோர்கோவ்ஸ்கி என்ற தொழிலதிபர் நிதிமோசடியில் ஈடுபட்டதால் ரஷ்ய அரசு இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனை தொடர்ந்து அடுத்த வருடம் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படுவதாக இருந்த இவர் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புதினால் மன்னிக்கப்பட்டு கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார்.

இவரின் மனைவி மற்றும் இரட்டை மகன்கள் ஜேர்மனில் வசித்து வருகின்றனர். இதையடுத்து ஜேர்மன் சென்ற இவருக்கு ஜேர்மன் அரசாங்கம் ஒரு வருட காலமே தங்குவதற்கு அவகாசம் அளித்துள்ளது
இதனால் தன் சொத்துகளை சுவிஸ் வங்கியில் போட்டுவிட்டு குடும்பத்தினருடன் சுவிஸில் நிரந்தரமாக தங்குவதற்காக சுவிஸ் தூதரகத்தில் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்.
மேலும் தன் 10 வருட சிறைவாசத்தை குறித்து தான் மிகவும் வெட்கப்படுவதாகவும் பல வேதனைகளை அனுபவித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 

தலைமறைவாகிய சுவிஸ் வங்கி நிறுவனர்

வரி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுவிஸ் வங்கியின் நிறுவனரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரான்சின் முன்னாள் வரவு செலவு திட்ட நிதியமைச்சர் ஜெரோம் ஆசாக்.
இவர் தன்னிடம் இருந்த ஏராளமான பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்திருந்தார்.
இதன் பின் பொலிசார் ரெய்டின் போது பணத்தை குறித்த நிறுவனர் Dominique Reyl என்பவரின் கணக்கில் மாற்றிவிட்டு, தான் தப்பிக்கும் வகையில் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சுவிஸ் வங்கியின் முன்னாள் பணியாளர் பியரி கோண்டமிரி மூலம் பிரான்ஸ் அரசியல்வாதிகளின் ரகசிய கணக்குகள் அம்பலமானது.

இதனையடுத்து Dominique Reyl மீது ஊழலுக்கு துணையாக இருந்தார் என்ற பெயரில் வழக்கு தொடரப்பட்டதுடன், கடந்த டிசம்பர் 11ம் திகதி மேஜிஸ்டிரேட்டால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

மேலும் விசாரணைக்கு வராமல், அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு கொடுக்காமல் இந்நிறுவனர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு தலைமறைவானதால் பொலிசார் இவரை பிடிக்கும் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 

சனி, 21 டிசம்பர், 2013

பேச்சுரிமையை இழந்த பேச்சாளர்: சுவிஸ் தடாலடி

சுவிட்சர்லாந்தில் எகிப்திய போதகரின் கடுமையான சொற்பொழிவை கண்டித்து அந்நாட்டு அரசு, அவர் சொற்பொழிவாற்ற தடை விதித்துள்ளது.
 சில மாதங்களுக்கு முன்பு சுவிஸில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவர் ஆற்றிய சொற்பொழிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், இஸ்லாம் மதத்தை மறந்து அதன் நம்பிக்கையை துறக்கும் இஸ்லாமியர்களுக்கு மரண தண்டனையே உகந்த தண்டனையாகும் என தடாலடியாக அறிக்கையை விடுத்துள்ளார்.
இதனைதொடர்ந்து ”சுவிஸ் சூப்பர் லீகின்” மற்றும் ”பேசல் கால்பந்தாட்ட குழுவின்” முக்கிய கால்பந்தாட்ட வீரரான எகிப்திய வீரரையும் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

ஆனால் இதுபோன்ற சொற்பொழிவுகள் இன்னும் தொடர்ந்தால் கலவரம் ஏற்பட பல வாய்ப்புகள் உள்ளது என்பதால் ஜெனிவாவில் கடந்த சனிக்கிழமையன்று நடக்கவிருந்த அவரின் மற்றொரு சொற்பொழிவு மாநாட்டை சுவிஸ் பொலிசார், கூட்டமைப்பு அலுவலகம் மற்றும் மத்திய இடம்பெயர்த்தல் அலுவலகம் தடை செய்துள்ளது.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

விலைமாதுக்களுக்கு அல்வா கொடுத்த மோசடி மன்னன்

 ஜெனிவாவில் 20க்கும் மேற்பட்ட விலைமாதுக்களிடம் ரியல் எஸ்டேட் உரிமையாளர் 3 மில்லியன் பிராங்குகளை மோசடி செய்துள்ளனர்.
ஜெனிவாவில் 40 வயது நிரம்பிய ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர் மசாஜ் பார்லர்களில் வேலை செய்யும் பெண்களை குறிவைத்து தம் மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

இப்போலி ஆசாமி அப்பெண்களிடம் நிலம் மற்றும் சொத்துக்களை விற்பதாக கூறி போலி வரைபடங்கள், புராஜட்கள் மற்றும் பத்திரங்களையும் காண்பித்து இதற்கு முதலீடாக பணம் செலுத்த வேண்டும் என கூறி பணம்பரித்துள்ளான்.

ஆனால் RTS என்ற தொலைக்காட்சியின் அறிக்கையில் ”தனக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் நான் இதற்கு பொறுப்பேற்க இயலாது என அவர் கைவிரித்துள்ளார்.
இதனால் இவரிடம் ஏமாந்த பெண்கள் தங்கள் வாழ்வாதார சேமிப்பை இழந்துள்ளனர்.
மேலும் இப்பெண்களிடம் சுருட்டிய பணத்தையெல்லாம் இம்மோசடி மன்னன் செலவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

புதன், 18 டிசம்பர், 2013

லீலைமன்னனின் ஆட்டத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி

 சிறுமிகளை சீரழித்து வந்த நீதி மேலாளர் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெனிவாவை சேர்ந்த 64 வயது மதிக்கதக்க நீதிமேலாளர் ஒருவர், பட்டியலிட்டு கூறும் அளவில் பல சிறுமைகளை திட்டமிட்டு பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் நியான் மாநகராட்சியில் கிளாண்ட் என்ற இடத்தில் 11 வயது சிறுமியிடம் பழுது பார்க்க வந்த பணியாளை போல் நடித்து வீட்டினுள் நுழைந்து கத்தி முனையில் அச்சிறுமையை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து நீச்சல்குளத்தில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடக்க முயன்றபோதும் தண்டிக்கப்பட்டார்.

மேலும் கடந்தாண்டு மற்றொரு சிறுமியை பாலத்காரம் செய்ய முயன்ற போது கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் பெடோபைல் என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட இந்த 64 வயது மனிதர் தண்டனை காலம் முடியும் முன்பே உயிர் துறப்பார் என்றும் ஓன்லைன் தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 

கொலைகுற்றத்தால் மனம் நொந்த காதலி

 சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் தன் காதலனை கொலை செய்த குற்றத்திற்காக வருந்துவதாக தொலைக்காட்சி செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் பிரான்சை சேர்ந்த தன் காதலரான வங்கியாளரை கடந்த 2005ம் ஆண்டு சுட்டு கொன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இவருக்கு 8 அரை வருடம் சிறை தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்பளித்தது.

அதில் ஏற்கனவே 4 வருடங்கள் அவர் ரிமாண்டில் வைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்துள்ளார்.
இதுகுறித்து தொலைகாட்சியில் அவர் வெளியிட்ட செய்தியில், இக்கொலை சம்பவம் நிகழ்ந்த போது தன் மனநிலை சரியில்லை என்றும் தான் எழுதிய கடிதம் தொலைகாட்சி செய்தி எந்நேரத்தில் வெளியானது என எனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

மேலும் இப்பிரெஞ்சு வங்கியாளர் மிக பெரும் செல்வந்தர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி நிக்கேலஸ் சர்கோசியின் நெருங்கிய நண்பரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது
 

திடீர் தீவிபத்து: சிரமத்திற்குள்ளான இருவர்

சுவிசின் சூரிச் மாகணத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் எல்லையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் இரண்டு பேர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு ஏற்பட்ட கட்டிட தீவிபத்தில் மூன்றுமாடி கட்டிடத்தில் மூன்றாவது மாடியின் மேல் தீப்பற்றி கொண்டது.

இதனால் ஏற்பட்ட புகையை சுவாசித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பெரும் போராட்டத்திற்கு பின்பே தீயை அணைக்க முடிந்தது என்று கூறியுள்ளனர்.

மேலும் இத்தீவிபத்தால் மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டு தளங்களும் சாம்பலாகி கருகிவிட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

பணம் கொழிக்கும் நிலத்தடி பாதுகாப்பு வர்த்தகம்

டெல் டாவிஸ் என்ற உயர் தொழிற்நுட்ப தகவல் விபரங்களை பாதுகாக்கும் நிலையம் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையருகில் நிலத்தடி சுரங்கப் பாதையில் இயங்கி வருகின்றது.
இந்த நிலையத்தில் பல நாடுகளை சேர்ந்த நபர்கள் சுவிஸ் வங்கிகளில் இரகசியமான வங்கி கணக்குகளை வைத்திருக்கும் விபரங்கள் மற்றும் இரகசிய தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை அதன் உரிமையாளர்களை தவிர வேறு எவரும் பெறமுடியாது. இங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியவை.

“பயோமெட்ரிக் ” கைரேகை ஸ்கேனர்கள், ஆயுதம் தாங்கிய காவலர்கள், எஃகுவினால் ஆனா நான்கு டொன் எடை கொண்ட பாதுகாப்பு பெட்டகம் (ஆயுத தாக்குதல்களை தாங்கக் கூடியது)உள்ளது.
இதன் கதவுகளுக்கு பின்னர் தகவல்களின் விபரங்கள் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அதில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இரகசியங்கள் உரியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
தமது விபரங்களை பாதுகாத்து வைத்துள்ள நபர்கள் அதற்கான சேவை வாடகை பெரும் தொகையாக இருந்தாலும் அது பற்றி பொருட்படுத்துவதில்லை.

விபரங்கள் கசிய 100 வீதம் சாத்தியமில்லை என்பதே இதற்கான காரணம். இந்த இரகசிய தகவல் விபர பாதுகாப்பு நிலையம் போன்று சுவிட்சர்லாந்தில் 55 நிலையங்கள் உள்ளன.
இதனால் சுவிட்சர்லாந்தின் நிலத்தடி சுரங்க பாதையில் அமைந்துள்ள தகவல் விபரப் பாதுகாப்பு பெட்டக வியாபாரம் மூலம் பணம் கொழித்து வருவது ஆச்சரியமான விடயமில்லை.
 

வியாழன், 5 டிசம்பர், 2013

ஜேர்மனில் மரணங்கள் குறித்து ஆய்வு!

ஜேர்மன் நாட்டில் கிட்டத்தட்ட 750 பேர் வலதுசாரி தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனில் 1990 மற்றும் 2011ம் ஆண்டுகளில் 849 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் தற்போதைய புள்ளி விபரத்தின் படி 60 நபர்கள் வலதுசாரி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஆனால் இந்த தொடர்கொலைகளுக்கு ‘நியோ நாசி’ என்கிற நாசி தீவிரவாத அமைப்பினரே காரணம் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடந்து 16 மாநிலங்களில் ஜேர்மன், நாசி தீவிரவாத அமைப்பிற்கும், பிற தீவிரவாத அமைப்பிற்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடக்கின்றது.
 

திங்கள், 2 டிசம்பர், 2013

பணக்கார பட்டியலில் ‘காம்ப்ராட்’ குடும்பம்

சுவிட்சர்லாந்து நாட்டில் வெளியிடப்பட்ட பணக்கார பட்டியலில் காம்ப்ராட் குடும்பம் முதலிடம் பிடித்துள்ளது.

சுவிஸ் வணிக இதழ் அந்நாட்டைச் சேர்ந்த 300 செல்வந்தர்கள் மத்தியில் அவர்களின் வருவாயின் அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் சுவிஸ்நாட்டைச் சேர்ந்த இம்ராட் காம்ப்ராட்(74) என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
பல்வேறு வகையான தொழில்களை செய்து வரும் இவர் கடந்த 2013 ஆண்டில் 45 முதல் 46 பில்லியன் பிராங்க் வருமானத்தை ஈட்டியுள்ளார்.

இவரது தொழிலுக்கு இவருடைய மூன்று மகன்களும் உறுதுணையாக இருந்து செயலாற்றி வருகின்றனர்.

வெள்ளி, 29 நவம்பர், 2013

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! களைக்கட்டுகிறது சுவிஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து, சுவிஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டியையை முன்னிட்டு, மக்களை கவரும் விதமாக கடைகளில் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வண்ணவண்ண விளக்குகளால் கடைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே சூரிஜ்(Zurich) மற்றும் லுகெர்னி(Lucerne) நகரங்களில் ரயில் நிலையம் அருகில் உள்ள கடைகள் Apps ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கடைகள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஜெனீவாவின் ஏரிக்கரையில் அமைந்துள்ள மான்ட்ரியக்ஸ்(Montreux) நகர கடைகளில் பெரிய மர அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு வரும் வாடிக்கையாளர்கள் இளைப்பாருவதற்காக பிட்ஸா மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து நிர்வாக சங்கத்தின் தலைவர் யுவஸ்கார்னரோ கூறுகையில், இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது ஜாஸ் திருவிழா.
பல்வேறு நாடுகளிலிருந்து வணிகர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்கின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தால், இந்நகரம் முழுவதுமே மக்கள் வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளது.

ஆண்டுதோறும் புதுவிதமான மாற்றங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தாண்டு 250க்கும் மேலான வணிகர்கள் கடை வைத்துள்ளனர், இதனால் சுவிசின் மற்ற நகரங்களுக்கும், மான்ட்ரியக்ஸ் நகரத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

வியாழன், 28 நவம்பர், 2013

சுவிஸ் எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த அமெரிக்கா

ஜெனிவாவில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் ஊழல் நடைபெற்றுள்ளதால் அமெரிக்கா அபராதம் விதித்துள்ளது.
ஜெனிவாவை சேர்ந்த வேதற்போட் சர்வதேச எண்ணெய் நிறுவனம் 100 நாடுகளில் 55,000 பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றது.

இந்நிறுவனம் சில நாடுகளில் லஞ்சமளித்து ஊழலில் ஈடுப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
23 மில்லியன் டொலர்களை கடந்த 2003 ஆண்டு முதல் 2007 ஆண்டு வரை ஈரானுக்கு வழங்கியுள்ளது. கியூபாவிற்கு 69 மில்லியன் டொலர்களை 2005 முதல் 2006 வரை வழங்கி 295,000 டொலர்கள் அளவில் வியாபாரம் நடத்தியுள்ளது.
மேலும் அரசாங்க நிறுவனங்களுக்கு 91 மில்லியன் லஞ்சம் வழங்கியுள்ளது போன்ற தகவல்கள் அம்பலமானது.

இதனை அறிந்த அமெரிக்க அரசு நிறுவனம் 250 மில்லியன் டொலர்கள் அபராதம் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கு 65.6 மில்லியன் டொலர்கள், குற்றவியல் தண்டனையாக 87.2 மில்லியன் டொலர்களை நீதிதுறைக்கு செலுத்தவேண்டும் என்றும் மீதமுள்ள அபராத பணத்தை வருமான வரித்துறை மற்றும் வணிகத்துறை பகிர்ந்துக் கொள்ளும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வேதற்போட் நிறுவனத்தின் தலைவர் பெர்நாட் டுரோக் டன்னர் (Bernard Duroc-Danner) கூறுகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொழில் முன்னணி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நிலைநிறுத்தவே நாங்கள் எண்ணினோம் என்று கூறியுள்ளார்.
 

களைகட்டிய சாலைவரி ஸ்டிக்கர்!!!

சுவிட்சர்லாந்தில் விதிமுறைகளை மீறி சாலைவரி ஸ்டிக்கர் விற்கப்பட்டுள்ளதை மத்திய அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.
வாகனங்களில் ஒட்டப்படும் சாலைவரி ஸ்டிக்கர் டிசம்பர் மாதம் 1 திகதி விற்கப்படவுள்ளதாக அந்நாட்டு மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சுவிஸ் எலக்ட்ரானிக்ஸ் என்ற சில்லரை வணிக நிறுவனமானது 40 பிராங்குகள் பெருமானமுள்ள நெடுஞ்சாலை சாலைவரி ஸ்டிக்கர்களை மிக குறைந்த தள்ளுபடி விலையான 29,95 பிராங்குக்கு விற்பனை செய்யப்போவதாக அந்நிறுவனத்திற்கு சொந்தமான 21 கிளைகளிலும் இந்த மாதமே அறிவித்தது.
இதனை கேள்விபட்ட வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஸ்டிக்கர்களை வாங்கி குவித்தனர்.

இதனை கேள்விபட்ட மத்திய அதிகாரிகள் வேகமாக அந்நிறுவனத்திற்கு சென்று இந்த விற்பனை சட்டவிரோதமானது என்று நிறுத்திவிட்டனர்.
ஆனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த ஸ்டிக்கர்களை வாங்கிவிட்டனர்.
 

புதன், 27 நவம்பர், 2013

சுவிட்சர்லாந்தில் ரயில் விபத்து: 11 பேர் காயம்!!

சுவிட்சர்லாந்தில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ரெயில் ஒன்று சரக்கு வாகனத்துடன் மோதியதில் ரெயிலில் வந்துகொண்டிருந்த 11 பயணிகள் காயமடைந்தனர்.
பனிமலைகள் மிகுந்த வலைஸ் நகரத்திலிருந்து இந்த ரெயில் திரும்பிவந்துகொண்டிருந்தபோது மொரேல் என்ற கிராமத்தின் அருகே இருந்த ஆளில்லா லெவல் கிராசிங்கைக் கடக்க வான் சாரதி ஒருவர் முயற்சித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் பயணிகளுக்குக் காயமேற்பட்டது.  மொத்தம் 41 பயணிகள் ரெயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர். அதில் 11 பேருக்குக் காயமேற்பட்டது. இதில் இருவருக்குப் பாதிப்புகள் அதிகமாகவும் மற்றவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ரெயில் மற்றும் வாகன சாரதி காயமின்றி தப்பித்தனர். ரெயிலின் மூன்று பெட்டிகள் இந்த விபத்தின் காரணமாகத் தடம் புரண்டன. 

கடந்த 2010 ஆம் ஆண்டில் செர்மாட்டிலிருந்து செயின்ட் மோரிசுக்கு சென்றுகொண்டிருந்த வலைஸ் கிளேசியர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 64 வயது கொண்ட ஜப்பானியப் பெண் பயணி ஒருவர் இறந்தார்.

பனிரெண்டுக்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்தனர். அந்த விபத்து நடந்த இடத்திற்கு சற்று தூரத்திலேயே தற்போது புதிய விபத்து நடந்துள்ளது.
 

செவ்வாய், 26 நவம்பர், 2013

பெருமளவில் ஊதியக்குறைப்பு: சுவிஸ் அரசு தடாலடி

சுவிஸ் நாட்டில் ஊதியக்குறைப்பு செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மூன்றில் இரண்டு பங்கு உயர்மட்ட முதலாளிகள் கூடுதல் ஊதியமளிப்பது அதிருப்தி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும் 1:2 என்ற விகிதத்திற்கு ஊதியத்தை கட்டுபடுத்த வேண்டும் என சுவிஸ் வர்த்தகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவர்(Christoph Darbellay) கிரிஸ்டோபர் தார்பேல்லே கூறுகையில், அநியாயமான ஊதியத்தை கொடுத்தது மன அமைதியின்மையாக உள்ளதென தெரிவித்தார்.

மேலும் இம்முறை இவ்வருவாய் உயர்வை முன்னிட்டு நாம் ‘ஆம்’ வாக்களிப்பது என்று வாகாலினை நாமே சுட்டுகொள்வதற்கு சமம் என்றும் சுவிசின் இல்லை என வாக்களிப்பது 1:12 என்னும் விகதத்தில் சட்டவருவாய்துறை மற்றும் வெளியூட்டு நிறுவனங்களை அச்சத்தில் ஆழ்த்தும் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சுவிஸின் பொருளாதார அமைச்சர் ஜோகன் ஸ்னைடர் அம்மான்(Johann Schneider-Ammann) கூறுகையில், சுவிஸ் பொருளாதாரம் தான் பாராட்டுவதில்லை எனவும் கூறியுள்ளார்.
இப்பிரச்சனையையொட்டி சோசலிச பார்ட்டி தலைமையில் பொது ஜனநாயக வாக்கெடுப்பு

பிரச்சாரம் இளைஞர் பிரிவிலுள்ள பசுமைவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நடைப்பெற்றது.
இதில் 1:12 என்கிற ஒரு முறைசாரா விகிதத்தில் தங்களுக்கு ஊதியமளிப்பதாக அவர்கள் வாதிட்டுள்ளனர்.
மேலும் மக்கள் இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

திங்கள், 25 நவம்பர், 2013

கால்களுக்கு வலிமை வேண்டுமா? இதோ சுவிஸ் பந்து பயிற்சி(காணொளி, இணைப்பு)


சுவிஸ் பந்து பயிற்சிகள் விரைவில் நல்ல பலனை தரக்கூடியது.
இந்த வகையில் இந்த பயிற்சி கால்களை வலிமையாக்கி, கால்களில் உள்ள அதிகப்படியான சதையை குறைய உதவுகிறது.

பயிற்சி செய்முறை
முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். சுவிஸ் பந்தை கால் பாதத்திற்கு இடையே வைத்து கொள்ளவும். பின்னர் கைகளை தரையில் ஊன்றி கால்களை மெதுவாக மேல் நோக்கி தூக்கி கீழே இறக்கவும்.

இவ்வாறு ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முதல் 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் நன்றாக பழகிய பின்னர் 25 முதல் 30 முறை செய்யலாம். எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க அதிகரிக்க பலன் விரைவில் கிடைப்பதை காணலாம்.

இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் உங்கள் கால்கள் நன்கு வலிமையடைந்து, கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைந்திருப்பதை காணலாம்.
 

ஞாயிறு, 24 நவம்பர், 2013

சுவிஸ் மனநல மருத்துவர்களில் உச்சத்தை எட்டியது

                                

சுவிஸ் மக்கள் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்வினை அடைய மனநல நிபுணர்களை நாடுகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸில் பொருளாதார கூட்டுரவு சங்கம் கூறுகையில், கடந்த 2011ம் ஆண்டின் ஆய்வின் தகவல் படி இத்தாலி, ஜப்பான் போன்ற 34 நாடுகளுடன் மக்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது சுவிஸ் மக்கள் வாழும் காலம் 82 வருடம் 8 மாதக்காலம் என தெரிவித்துள்ளது.

மேலும் 2011ம் ஆண்டில் சுவிசில் பிறந்த பெண்கள் வாழும் காலம் 82 வருடம் 2 மாதக்காலமாகவும், ஆண்களின் வாழும் காலம் 77 வருடம் 3 மாதக்காலமாகமவும், இவ்விருபாலர்களும் 5 வருடம் 5 மாதக்காலம் வாழும் கால வித்தாசம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயல்நாடுகளான பிரான்சில் 22.1 சதவீத மனநல மருத்துவர்களும், அமெரிக்காவில் 14.1 சதவீதமும், மெக்சிகோவில் குறைந்தபட்சமாக 1.2 சதவீத அளவில் மட்டுமே மனநல மருத்துவர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

சுவிசில் தினந்தினம் மனநல மருத்துவர்கள் அதிகரிக்கின்றனர். மொத்தம் 45.1 சதவீத மருத்துவர்கள் இருக்கின்றனர் என்றும் பிற நாடுகளை காட்டிலும் மூன்று மடங்கு மிகுதியான மனநல மருத்துவர்கள் சுவிசில் இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது
 

சனி, 23 நவம்பர், 2013

கொலைக்குற்றத்தை மறைக்கும் ஜெனிவா பேராசிரியை

அமெரிக்காவில் நடந்த கொலை தொடர்பில் தன் மீதான குற்றச்சாட்டை ஜெனிவா பெண் பேராசிரியர் மறுத்துள்ளார்.

கலிபோர்னியாவில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் வெஸ்டர் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றும் பெண் ஒருவர் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மனோத்துவ உளவியல் துறை பேராசிரியரான நார்மா பெட்ரீஷியா எஸ்பார்கா (39) என்பவர் கலிப்போர்னியாவில் 1995ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி ராமிரேஸ்(24) என்பவரை திட்டமிட்டு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

எஸ்பார்கா இந்த சம்பவம் குறித்து வேன் என்ற நபரிடம் விபரித்துள்ளார். இதனையடுத்து வேன் மற்றும் இரண்டு பேர் இணைந்து ராமிரேஸை கொலை செய்துள்ளனர் என நீதிமன்றம் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க பொலிசாரினால் 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர் தற்பொழுது மூன்று லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவரின் கணவரான ஜோர்ஜ் என்பவர் நரம்பியல் நிபுணராவார். அவரே எஸ்பார்காவின் 4 வயது குழந்தை வளர்த்து வருகிறார். தன் மனைவி குற்றமற்றவர் என்று ஜோர்ஜ் வாதிட்டு வருகிறார்.
 

இராணுவ ஆதிக்கம் இல்லாத சிறந்த நாடு சுவிஸ்: நாளிதழ் புகழாரம்


 சுவிட்சர்லாந்து நாடானது இராணுவ ஆதிக்கம் இல்லாத சிறந்த நாடு என்று பிரிட்டிஷ் நாளிதழான மோனகல் புகழாரம் சூட்டியுள்ளது.
இந்த நாளிதழ் நடத்திய கணக்கெடுப்பில் தரவரிசையில் சுவிட்சர்லாந்து 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
முதலாவது இடத்தை ஜேர்மனியும், இரண்டாவது இடத்தை பிரித்தானியாவும், மூன்றாவது இடத்தை அமெரிக்காவும், நான்காவது இடத்தை பிரான்சும், ஐந்தாவது

 இடத்தை ஜப்பானும், ஆறாவது இடத்தை சுவீடனும், ஏழாவது இடத்தை அவுஸ்திரேலியாவும், எட்டாவது இடத்தை சுவிட்ஸர்லாந்தும் ஒன்பதாவது இடத்தை கனடாவும் பத்தாவது இடத்தை இத்தாலியும் பிடித்துள்ளது.
மேலும் சுவிஸ் நாட்டுக் கொடியுடன் வெளிவரும் எந்தப் பொருட்களும் உலகெங்கிலும் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டுள்ளது.

ஐரோப்பாவின் விளையாட்டுத் தளமான சுவிட்வர்லாந்து, பனிச்சறுக்கு விளையாட்டில் தரமாகவும், சொக்லேட் தயாரிப்பதிலும் உலகின் மிகச் சிறந்த சுவர்க்கடிகாரங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் தயாரிப்பதிலும் சிறந்தது என்று தெரிவித்துள்ளது.

மேலும் அமைதி மாநாடு நடத்தப்படுவதற்கு ஒரு சிறந்த இடமாக சுவிட்சர்லாந்து உள்ளது என்று கூறியுள்ளது
 

வியாழன், 21 நவம்பர், 2013

மலேரியாவை ஒழிப்போம்: திரைப்பட எழுத்தாளர் ரிச்சர்ட் அறைகூவல்



உலகமக்கள் அனைவரும் மலேரியாவை ஒழிக்க பாடுபட வேண்டும் என திரைப்பட கதாசிரியர் ரிச்சர்ட் காட்டிஸ் ஜெனிவாவில் நேற்று அறைகூவல் விடுத்துள்ளார்.
ரிச்சர்ட் கடந்த 10 ஆண்டுகளாக மலேரிய ஒழிப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரிச்சர்ட் இதுகுறித்து கூறுகையில், இதற்கான எளிய வழிமுறைகள் ஏற்கனவே உள்ளன. அவற்றை முறைப்படி பின்பற்றுவது மலேரியாவை ஒழிக்க உதவும்.
மேலும் வருடத்தில் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மலேரியாவினால் கொல்லப்படுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலான மக்கள் ஆப்பிரிக்க கண்ட நாடுகளிலேயே உயரிழந்து வருகின்றனர் என்றும் மலேரிய நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஒரு ஆப்பிரிக்க குழந்தையின் மரணம் கொடூரமானது, கற்பனை செய்தும் பார்க்க முடியாதது எனவும் கூறியுள்ளார்.

பஞ்சத்தில் வாடி வரும் எத்தியோப்பியாவில் ரிச்சர்ட் 1985 ஆம் ஆண்டு நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டார்.

1988ம் ஆண்டு ஐ.நா மற்றும் உஸ்பொகிஸ்தானுடன் இணைந்து மலேரியா நோயை பரப்பும் கொசுக்களை அழிக்கும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 

அழைப்பிதழோடு விபச்சாரத்தில் அசத்தும் அதிகாரிகள்



சூரிச் பகுதியில் விபச்சாரத்திற்கு துணை போன 11 பொலிசார்கள் குறித்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் இயங்கி வரும் சில்லி இரவு நேர விடுதியில் 11 பொலிசார்கள் அங்கு நடக்கும் விபச்சாரத்திற்கு உதவி செய்துள்ளனர்.

அதாவது அங்கு நடைபெறும் அக்டோபர்பிஸ்ட் விருந்தில் இவர்களுக்கு வரவேற்பு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளன.
இதில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகள் அங்கு வழங்கப்படும் வகை வகையான உணவுகள் மற்றும் பெண்களை லஞ்சமாக பெற்றுக்கொள்கின்றனர்.

மேலும் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளும் வாடிக்கையாளர்கள் அதிமாக செலவு செய்து அழைப்பிதழை பெற்றுக்கொள்வார்கள். ஆனால் இந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு மட்டும் இந்த அழைப்பிதழ் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இவர்கள் தினமும் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளலாம். இந்நிலையில் இந்த உண்மையான வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் காவல்துறை உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுதியின் உரிமையாளர் எதுவும் கூற மறுத்துவிட்ட நிலையில் பொலிசாருக்கு 50 பிராங்குகள் அபராதம் விதித்து தலைமை அதிகாரி உத்தவிட்டுள்ளார்
 

திங்கள், 18 நவம்பர், 2013

வறிய நாடுகளுக்கு உதவும் மனப்பான்மையற்ற சுவிஸ்


 
உலகில் செல்வந்த நாடுகள் வரிசையில் இருக்கும் சுவிட்சர்லாந்து வறிய நாடுகளுக்கு உதவும் நாடுகள் வரிசையில் மோசமான இடத்தில் இருப்பதாக அமெரிக்காவின் அறிக்கை ஒன்றில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த உலகளாவிய அபிவிருத்தி மையம் Center for Global Development (CGD) வெளியிட்டு அறிக்கையில், சுவிட்சர்லாந்து சர்வதேச அமைதிக் காக்கும் பணிக்காக மிகவும் குறைவான பணத்தையே செலவிட்டுள்ளது.

மேலும் மனித வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களுக்காக சுவிட்சர்லாந்து செலவுகளை செய்வதே இல்லை என்றும் சர்வதேச அபிவிருத்தி மையத்தின் அறிக்கையின் படி மிகவும் கீழ் மட்டத்திலேயே உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

எனினும் டென்மார்க் முதலிடத்தில் இருப்பதுடன் சுவீடன், நோர்வே, லக்ஸ்ஸம்பேர்க், நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
தென் கொரியாவும் ஜப்பானும் கடைசி நிலையில் இருப்பதுடன் ஏனைய நாடுகளுக்கு உதவி செய்யும் கொள்கையை பின்பற்றி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஞாயிறு, 17 நவம்பர், 2013

சுவிஸில் முதல் “ரயில் காபி ஷாப்” ஆரம்பம்


 சுவிட்சர்லாந்தில் மத்திய ரயில்வே, ஸ்டார்பக்ஜ் காப்பி ஷாப்புடன் இணைந்து ஓடும் ரயில்களில் காப்பி ஷாப் சேவையை ஆரம்பித்துள்ளது.

இதுவே உலகில் முதல் ஸ்டார் பக்ஸ் கபேவுடன் கூடிய ரயில். இச்சேவை நவம்பர் 27ம் திகதி முதல் சுவிஸ் நகரங்களுக்குள் ஓடும் ரயில்களில் தொடங்கப்பட உள்ளது.

ஸ்டார் பக்ஸ் காப்பி ஷாப் அமெரிக்காவிலுள்ள சியாட்டல் நகரில்மிகப் பெரிய நிறுவனமாகும். அது மிகப் பெரிய காப்பி ஹவுஸ் தொடர் நிறுவனமாக உலகெங்கிலும் உள்ளது.

இது 62 நாடுகளில் 21,000 காப்பி ஷாப்புக்களை வெற்றிகரமாக நடத்தி வாடிக்கையாளர்களில் ரயில் பயணிகளின் சௌகரியத்தையும் வீட்டில் ஓய்வெடுப்பது போன்ற வசதியையும் செய்து கொடுப்பதில் முன்னணியில் உள்ளது
 

ஜப்பானில் களைகட்டும் சுவிஸ் சொக்லேட்


 
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சொக்லேட் தொழிற்சாலை ஜப்பானில் திறக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் சூரிச் பகுதியை சேர்ந்த சொக்லேட் தயாரிப்பாளர் பேர்ரி கேவிபாட் என்பவர் 18.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவு செய்து தொழிற்சாலையை திறந்துள்ளார்.

இது ஆசியாவின் மிகப்பெரிய சொக்லேட் தொழிற்சாலையாகும்.
இதுகுறித்து ஜப்பான் பிரதம மந்திரி ஷின்ஷோ ஏபீ கூறுகையில், சைனாவின் திறந்தவெளி பொருளாதாரக் கொள்கையை சமாளிக்கும் நோக்குடன் இத்திட்டத்தை முதலீடு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

ஜப்பானியர்களில் பெரும்பாலனோர் சாக்கோலீக்ஸ் சொக்லேட் பிரியர்களாக இருப்பதால் சொக்லேட் விற்பனை வெகுவாக களைகட்டும் என்று நம்பலாம்.
 

தேர்வில் சுறுசுறுப்பு வேண்டும்! மாத்திரைகளை பயன்படுத்தும் மாணவர்கள்


 சுவிட்சர்லாந்தில் ஏழு மாணவர்களில் ஒருவர் படிப்பதற்காக சுறுசுப்பை கொடுக்கும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இந்த மாணவர்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் திறனை அதிகரிக்க செய்யும் மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
சூரிச், பெசல் மற்றும் ஆஎச் பல்கலைக்கழங்களில் பயிலும் 6 ஆயிரத்து 725 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களில் 13.8 வீதமானவர்கள் தமது கல்வித் திறனை அதிகரிக்க செய்யும் மாத்திரைகளை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இவர்கள் ரிட்டாலின், தூக்க மாத்திரைகள், அம்பெட்டாமின்ஸ் ஆகிய மாத்திரைகளை பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் பரீட்சைகளின் போது இவற்றை பயன்படுத்துவதாக சூரிச் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சைகோஸ்டிமுலன்ட்ஸ் மருந்துகளை பயன்படுத்தும் மாணவர்களை ஆய்வு செய்த சூரிச் ஆய்வு நிலையம், 95 வீதமான மாணவர்கள் சுறுசுப்பு

மாத்திரைகள் அல்லது நியூசோஎன்சோன்ஸ்மென்ட் போன்ற மாத்திரைகள் பற்றி அறிந்திருந்தாலும் அவற்றை மிக குறைந்தளவிலேயே பயன்படுத்தியுள்ளதாக கண்டறிந்துள்ளது.
 

 

அமெரிக்க குடியுரிமையை இழந்த சுவிஸ் பாடகி


சுவிட்சர்லாந்தில் மிக நீண்டகாலமாக வசித்து வரும் பாப் இசைக் கலைஞரான டினா டோனர் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 73 வயதான டினா 2009ம் ஆண்டு வரை பாப் இசைப் பாடகியாக இருந்துடன் இசைத்துறையில் இருந்து ஓய்வுபெற்றார்.

இருபது ஆண்டு காலமாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த இவர் அந்நாட்டு குடியுரிமையை பெற்ற செய்தியான பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சுவிஸ் பிரஜையான டினா தனது அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கடந்த அக்டோபர் மாதம் 24ம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்தாக தி வொஷிங்டன் போஸ்ட் வெளிநாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.
 
 

உலகின் அரிய மஞ்சள் வைரம் 8.3 கோடி டொலருக்கு ஏலம்


சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் அரிய வகை வைரங்களின் ஏலம் நடைபெற்றது.

59.60 கேரட் எடை கொண்ட மஞ்சள் வைரம் என்றழைக்கப்படும் இந்த அரியவகை வெளிர்சிகப்பு நிற வைரம் சுமார் 6 கோடி அமெரிக்க டொலர்கள் வரை ஏலம் போகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்ப்பார்ப்பை முறியடித்து 8.3 கோடி அமெரிக்க டொலர்களுக்கு  இந்த வைரம் விற்பனையானது.

தொடக்க விலையாக சுவிட்சர்லாந்து நாட்டு ‘பிராங்க்’கில் 48 மில்லியன் பிராங்காக ஏலம் போன இந்த வைரத்தின் விலை படிப்படியாக 10 லட்சம் பிராங்குகளாக உயர்ந்தது. இறுதியாக 6.7 கோடி பிராங்குகளுக்கு (8.3 கோடி அமெரிக்க டாலர்) ஏலம் முடிவடைந்தது.

தனது பெயர், இருப்பிடம் பற்றிய தகவல்களை வெளியிட மறுத்துவிட்ட ஏலம் எடுத்த நபர், வேறொருவர் சார்பாக இந்த ஏலத்தில் பங்கேற்றதாக தெரிவித்தார்.
 

ஞாயிறு, 10 நவம்பர், 2013

ஆங்கிலத்தில் பின்தங்கும் சுவிஸ்

 
சுவிட்சர்லாந்து நாடு ஆங்கிலத் திறமையில் பின்தங்கி காணப்படுகின்றது என்று ஆங்கில திறமை அட்டவணை தெரிவித்துள்ளது(English Profiency Index).
உலகளவில் இந்த அட்டவணை மேற்கொள்ளப்பட்டதில் சுவிஸ் நாடு 16 வது இடத்திலேயே ஆங்கில மொழியினை வைத்துள்ளது என்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், சுவிஸில் பன்மொழிகள் பேசப்படுகின்றன என்றும் ஆனால் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலி மற்றும் ரோமன்ஷ் என நான்கு தேசிய மொழிகளை கொண்டுள்ளது. அவற்றில் ஜேர்மனி மொழி பேசுபோர் 64 சதவீதமும், பிரெஞ்சு 20 சதவீதமும், இத்தாலியன் 7 சதவீதம் மற்றும் ரோமன்ஷ் பேசுவேர் 1 சதவீதமும் உள்ளனர்.

சுவிஸில் ஆங்கில திறமை பின்னோக்கி செல்வதற்கு சரியான வெளிக்காட்டுதல் இல்லாததே காரணம் என்று தெரிவித்துள்ளது.
 

வேலையில்லாமல்சுவிசில் திண்டாடும் வெளிநாட்டவர்கள்


சுவிசில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வெளிநாட்டவர்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிசில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு புள்ளிவிபர தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த மூன்று மாதங்களாக மாறாமல் இருந்த இந்த சதவிகிதம் சற்று மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சுவிசை தாயகமாக கொண்ட இளைஞர்கள் 2.2 சதவிகிதம் பேரும், வெளிநாட்டவர்கள் 5.8 சதவிகிதம் பேரும் வேலையில்லாமல் இருக்கின்றனர்.
எனவே வெளிநாட்டவர்களால் தான் சுவிசில் வேலையில்லாதோரின் சதவிகிதம் அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சனி, 9 நவம்பர், 2013

சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு


பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத், பொலோனியம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத், கடந்த 2004ல் அக்டோபரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார், அதன்பின் நவம்பரில் இறந்தார்.

இந்நிலையில் மனைவியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவரது சடலம் அப்போது பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2006ல் ரஷ்ய உளவு துறையை சேர்ந்த அலெக்சாண்டர் லிட்வென்கோ, லண்டன் ஓட்டலில் தங்கியிருந்த போது காபியில் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.
அதேபோல் அராபத்துக்கும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு அராபத் உடல் தோண்டியெடுக்கப்பட்டு அவரது உடலின் பல்வேறு உறுப்புகளை எடுத்து பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
சுவிட்சர்லாந்து நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், அறிவியல் அடிப்படையில் அராபத் இயற்கையாக நோய்வாய்பட்டு இறக்கவில்லை. அவரது உடலின் பல்வேறு உறுப்புகளில் பொலோனியம் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையை பெற்றுக் கொண்ட பின், அராபத் மனைவி சுஹா பாரிசில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், எனது கணவருக்கு அரசியல் எதிரிகள் அதிகம், விஷம் கொடுத்து அவர் கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது.
இதற்காக நான் எந்த நாட்டையும், தனி நபர் யாரையும் குற்றவாளி என்று கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

செவ்வாய், 5 நவம்பர், 2013

மில்லியன் கணக்கான பரிசினை பெற தாமதன் ஏன்?


சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய லொத்தரி பரிசாக யூரோ மில்லியன் லொத்தரி ஜாக்பாட்(Euro Million Lottery Jackpot) கருதப்படுகிறது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 114 மில்லியன் பிராங்குகள் அதாவது 125 மில்லியன் டொலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிசினை வென்ற நபர் இதுவரையிலும் பணத்தை பெற்றுக்கொள்ள வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் பேச்சாளர் கூறுகையில், பரிசுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு வாரத்திற்குள் 80 சதவிகித மக்கள் பெற்றுச் செல்வர்.

ஆனால் ஜாக்பாட்டை வென்ற நபர் இன்னும் வரவில்லை, ஆறு மாதங்கள் கழிந்த பிறகு பரிசு கிடைக்கப்பெறாது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் லி மான்டின் என்பவர் கூறுகையில், பரிசு

பெற்ற நபர் நிதிநிலைமையின் காரணமாக பெறாமல் இருக்கலாம்.
அதாவது 2013ம் ஆண்டு பரிசினை பெற்றால் அதிகளவு வரி செலுத்த நேரிடும்.
இதுவே 2014ம் ஆண்டு என்ற போது குறைந்தளவு வரி செலுத்தினாலே போதுமானதாகும் என்று தெரிவித்துள்ளார்.
 

சனி, 2 நவம்பர், 2013

உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியல்:


இந்தாண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் பிபா கால்பந்தாட்ட அமைப்பின் அதிபர் பிளாட்டர் இடம்பெற்றுள்ளார்.
உலகின் அதிகாரம் மிக்க அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிடும்.

இந்நிலையில் இந்தாண்டுக்கான பத்திரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பிபா கால்பந்தாட்ட அமைப்பின் பிளாட்டர் 69வது இடத்தை பிடித்துள்ளார், கடந்தாண்டு பிடித்த இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இவர் 4வது தடவையாக அதிபராக பதவி வகிக்கிறார்(1998, 2002, 2007, 2011).
இந்த ஆண்டின் டாப் 10 பட்டியல்:

1. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின்.
2. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா.
3. சீன கம்யூனிஸ்ட் தலைவர் க்சி ஜின்பிங்.
4. கத்தோலிக்க மதகுரு போப் பிரான்சிஸ்.
5. ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல்.
6. மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ்.
7. அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர் பென் எஸ்.பெர்னகே.
8. சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ்.
9. ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மரியோ டிராகி.
10. வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி மைக்கேல் டியூக்.
 

புதன், 30 அக்டோபர், 2013

இறப்பை ஏற்படுத்தும் சுவிஸ் நோய்த்தொற்று மருத்துவமனைகள்


 
சுவிட்சர்லாந்தில் கிருமிகளால் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுவிசோநோ மருத்துவகுழு

 அமைப்பு தெரிவித்துள்ளது.
சுவிஸ்நோ மருத்துவகுழு நடத்திய ஆய்வில் சுவிட்சர்லாந்தில் மருத்துவமனைகள் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 600 மரணங்களையும், 15,000 நோய்த்தொற்றையும் கட்டுப்படுத்தலாம் என்று தெரியவந்துள்ளது.

மேலும் இந்நாடு சுகாதார வசதிகளில் பிற நாடுகளை விட பின்தங்கி உள்ளது. மத்திய பொது சுகாதார அலுவலகம் தொற்றுநோய்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக ஒரு தேசிய திட்டத்தை தற்போது

 தொடங்கியுள்ளது.
சுவிஸில் பெருங்குடல் அல்லது மலக்குடல் தொடர்பான அறுவை சிகிச்சைகளில் எட்டு பேரில் ஒருவர் நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த எண்ணிக்கை ஜேர்மனியில் 11 பேர், பிரான்சில் 13 பேர் மற்றும் அமெரிக்காவில் 16 பேரில் ஒருவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

திருடியை வலைவீசி தேடும் சுவிஸ் பெண்


சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய செல்போனை திருடி சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த கல்லூரி மாணவி நில்டாயூஸ் நிஷி(வயது 24).
இவர் கடந்த ஏப்ரல் மாதம் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது போது, செல்போன்(ஸ்மார்ட் போன்) தொலைந்து போனது.
இந்நிலையில் DropBox-யை அவர் தற்செயலாக சோதித்தபோது திருட்டுப்போன செல்போனை மொராக்கோவில் ஒரு இளம்பெண்

பயன்படுத்தி வருவதும், அந்த செல்போன் கொண்டு எடுக்கப்பட்ட இளம்பெண்ணின் புகைப்படங்களையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆனால் அந்த பெண்ணுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் இணையத்தளத்தில் தனி வளைத்தளம் உருவாக்கி இளம்பெண்ணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இவருடைய வளைத்தளத்தில் மொராக்கோ நாட்டை சேர்ந்த 13 ஆயிரம் பேர் பார்வையிட்டும் எதுவும் கிடைக்கவில்லையாம்.
எனினும் விரைவில் அந்த பெண்ணை கண்டுபிடிப்பேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் நில்டாயூஸ்.
 

செவ்வாய், 22 அக்டோபர், 2013

இடைத்தரகர் கைது ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ,..


விவிஐபிகளுக்கான ஹெலிகொப்டர்களை வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் இடைத்தரகர் கய்டோ ரால்ப் ஹாஸ்செக், சுவிட்சர்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிக முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்துவதற்காக 12 ஹெலிகொப்டர்களை வாங்க இந்திய இராணுவ அமைச்சகம் டெண்டர் விட்டது.
இதில், இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட்(AgustaWestland) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது.
ரூ.3 ஆயிரத்து 600 கோடி செலவில் 12 ஹெலிகொப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்த பேரத்தில், ரூ.360 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது, இந்த ஹெலிகொப்டர் பேரத்தில் முக்கிய தரகராக செயல்பட்டவர் கய்டோ ரால்ப் ஹாஸ்செக்(வயது 62). இவர் சுவிஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின்பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இத்தாலி நாட்டு லா ரிபப்ளிகா செய்தி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கெய்டோவை சுவிஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, அவரை இத்தாலிக்கு நாடு கடத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கெய்டோ பெடரல் கோர்ட்டில் அப்பீல் செய்யாவிட்டால் அவர் சுவிஸ் நாட்டில் இருந்து ஒரு வாரத்தில் இத்தாலிக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தியாகி, ஹாஸ்செக் உள்ளிட்ட 13 பேரின் பெயரைச் சேர்த்துள்ளது.

தற்போது கைதாகியுள்ள ஹாஸ்செக்கும், இன்னொரு இடைத்தரகரான கார்லோ ஜெரோசா என்பவரும், மொஹாலியைச் சேர்ந்த ஐடிஎஸ் இன்போடெக் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த ஆரோமேட்ரிக்ஸ் இன்போ சொலூசன்ஸ் நிறுவனம் மூலம் இந்தியாவுக்கு 50 மில்லியன் ஈரோ லஞ்சப் பணத்தை அனுப்பி வைத்ததாக சிபிஐ கூறியுள்ளது.

மேலும் 2.43 கோடி ஈரோ லஞ்சப் பணத்தை அகஸ்டாவெஸ்ட்லேன்ட் நிறுவனத்திடமிருந்து வாங்கிய இவர்கள், அதை ஐடிஎஸ் துனிஷியா நிறுவனத்தின் கணக்கில் சேர்த்துள்ளனர் என்றும் சிபிஐ கூறுகிறது.

இந்த வழக்கை விசாரித்து வரும் இத்தாலிய புலனாய்வு அமைப்புகள், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க, அகஸ்டாவெஸ்ட்லேன்ட் நிறுவனத்தின் மூல நிறுவனமான பின்மெக்கானிகாவின் தலைமை செயலதிகாரி, இடைத்தரகர்களைப் பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

புதன், 16 அக்டோபர், 2013

உயிருக்காக போராடும் 79 வயது முதியவர்


 சுவிட்சர்லாந்தில் 79 வயது முதியவர் ஒருவர் விபத்துக்குள்ளானதில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவிஸின் சூரிச் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் அமர்ந்திருக்கையில் 60 வயது பெண்ணொருவர் ஒட்டிய கார் ஒன்று அவர் மீது மோதியது.

இதில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இது சம்பந்தமாக பொலிசார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

செவ்வாய், 15 அக்டோபர், 2013

ஏலத்திற்கு வருகிறது உலகின் பெரிய Orange Diamond


உலகில் காணப்படும் ஆரேஞ்ச் நிற டயமண்ட்களிலே பெரிது எனக் கருதப்படும் பேரிக்காய் வடிவம் கொண்ட வைரம் ஒன்று ஏலத்திற்கு விடப்படவிருக்கின்றது.
சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா பகுதியில் வசிக்கும் கிறிஸ்ரே என்பவரால் இது ஏலத்திற்கு விடப்படவுள்ளது.

இதன் இறுதிப் பெறுமதியானது 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என எதிர்பார்ப்பதாக கிறிஸ்ரே குறிப்பிட்டுள்ளார்.

(வீடியோ இணைப்பு)

மலைகளை மூடும் பனி சுவிஸில்


 
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள பனிவீழ்ச்சியால் மலைகள் மூடப்படும் நிலைமைக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுவிஸில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டதால் பனிவீழ்ச்சிகளும் ஆரம்பித்துவிட்டன.

மேலும் இந்த பனிவீழ்ச்சிகள் மலைகளை மூடும் அளவுக்கு அதிகமாகியுள்ளன. புலிலா, சான் பெர்னரிடோ, ஸ்பிலகின் மற்றும் கிரவ்பெடன் போன்ற மலைகளை சுமார் 2,000 மீற்றர் அளவுக்கு பனிவீழ்ச்சி மூடியுள்ளது.

மேலும் சூரிச் பகுதியில் வெப்பநிலை 16 டிகிரியிலும் மற்றும் சியான் பகுதியில் 14 டிகிரி அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வெப்பநிலை அடுத்தவாரத்தில் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

புதன், 9 அக்டோபர், 2013

இத்தாலியில் சடலமாக மீட்பு சுவிஸைச் சேர்ந்த 6 வயது சிறுவன்


 
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன சுவிஸ் சிறுவன் இரண்டு நாட்களுக்குப் பின்னர் இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
இத்தாலியின் தெற்குப் பகுதியான டஸ்கனி பிரதேசம் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு விடுமுறையைக் கழித்துவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தினரின் கார் விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் 6 வயது சிறுவன் காணாமல் போனான். இதனையடுத்து, இரு தினங்களாக தீயணைப்புப் படையினர், நீச்சல் வீரர்கள் மேலும் பலர் மோப்ப நாய்களுடன் தேடினர்.
அப்பகுதியிலிருந்து 150 மீற்றர் தூரத்திலுள்ள பாலத்தில் கார் சிக்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சிறுவனின் உடல் 7 கிலோமீற்றர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் அம்மா கால்நடையாக வீட்டுக்குத் திரும்பினார். அவர் காயப்படவில்லை எனினும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தார்.
காரினுள் சிறுவனின் கலர் பென்சில்கள் மட்டும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

திங்கள், 7 அக்டோபர், 2013

நெடுஞ்சாலையில்தீப்பற்றி எரிந்தது. சுவிஸில் கோர விபத்து


சுவிட்சர்லாந்து நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வான் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் நாட்டில் உள்ள A1 நெடுஞ்சாலையில் வான் ஒன்று படுவிபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்தது.

இந்த தீப்பொறியானது 100 மீற்றர் தொலைவிற்கு பரவியதால் இதனை அணைப்பதற்காக 70 அவசரப்படையினர், 50 தீயணைப்பு படையினர், 3 அவசர ஊர்தி, இரண்டு ஹெலிகொப்டர் போன்றவை வரவைக்கப்பட்டன.
இதனால் இந்த நெடுஞ்சாலை பாதையானது 5 மணி நேரத்திற்கு முன்னதாகவே மூடப்பட்டது.

மேலும், இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் மோசமான காயங்களுடன் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

ஓடும் ரயிலிலிருந்து ஜன்னல் வழியாக குதித்த வாலிபர்



சுவிஸில் ஓடும் ரயிலிலிருந்து குதித்த வாலிபருக்கு பலமான காயம் ஏற்பட்டுள்ளது.
19 வயதே ஆன இவருக்கு, தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை சர் ரயில் நிலையத்தில் நடந்தது.
இது குறித்து விசாரித்த பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், அந்த வாலிபர் உண்டேர்வாஷ் நகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

ரயில் சரியாக 6:01க்கு நிலையத்தை அடைந்தது. ஆனால், அப்போது இறங்காமல் விட்ட வாலிபர் வண்டி கிளம்பிய 3 நிமிடங்கள் கழித்து வண்டியை நிறுத்த உதவும் செயினை இழுத்திருக்கிறார்.

ஆனால் அது பயனடையாததால், உடனே ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து விட்டார். ஓடும் ரயிலில் இருந்து குதித்ததால் தலையில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் இது பற்றிய விசாரணையை நடத்தி வருகிறோம். இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரேனும் இருந்தால் சர் ரயில் நிலையத்திலோ அல்லது 081 257 73 00 என்ற இந்த தொலைபேசி எண்ணுக்கோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சனி, 5 அக்டோபர், 2013

சுவிஸில் இருந்து திருப்பி அனுப்பப்படும் இலங்கை தமிழர்கள்

சுவிஸில் இருந்து திருப்பி அனுப்பப்படும் இலங்கை தமிழர்கள்
[ வெள்ளிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2013, 03:34.58 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தி இவர்களின் புகலிடக் கோரிக்கையானது 2011ம் ஆண்டு ரத்துசெய்யப்பட்டது.
மேலும் இவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு செல்லுமாறு சுவிஸ் அரசாங்கம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இவர்களில் ஒருவர், நாங்கள் எங்கள் நாட்டிற்கு சென்றால் எங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் எனவே எங்களை திருப்பி அனுப்ப வேண்டாம் எனவும் சுவிஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையானது அகதிகள் ஜக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையருக்கு எடுத்து செல்லப்பட்டது. சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்கள் ஏராளமாக வசிக்கின்றனர்.
மேலும் இலங்கையில் 1972 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைபெற்ற போரில் 100,000 மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மனித உரிமை தலைவர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு 40,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கை அரசோ இதனை மறுத்துவிட்டு சமரச செயல்களில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

வியாழன், 26 செப்டம்பர், 2013

தவளை கடத்திய மனிதருக்கு அபராதம்


அரிய வகை தவளைகளை கடத்திய பிரான்ஸ் நபர் ஒருவர் சுவிஸ் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாக்சி ஒட்டுனர் ஒருவர் தன்னுடைய வாகனத்தில் 35 வகையான தவளைகளை ஏற்றிக்கொண்டு செப்டம்பர் 14ம் திகதி ஜேர்மன் நாட்டை கடந்து சுவிஸ் நாட்டினை கடக்க முயலும் போது சுங்க அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளார்.

சுங்க அதிகாரிகள் இவரிடம் சோதனை நடத்தியதில், இவர் முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஒட்டியதுடன் கலர் கலரான  ஒபோகா, எக்ஸிடோபேட்ஸ் மற்றும் ராணிடொமெயா போன்ற அரியவகை தவளை இனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இவருக்கு 2,000 பிராங்க் அபராதம் விதித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் விலங்குகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்பவர்கள் முறையான சான்றிதழ்களை அந்தந்த அமைப்புகளிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஆல்ப்ஸ் மலையில் இறந்த மாணவியின் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு


சுவிட்சர்லாந்தில் ஆல்ஃபைன் மலையில் இறந்துபோன மாணவி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 வயது பள்ளி மாணவி ஒருவர் ஆல்ஃபைன் மலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தார்.
மாணவியின் மரணத்துக்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்று ஈவோலின் ரிசாரட் மேலாளர் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி மீது வழக்கு தொடரப்பட்டது.

தற்போது நடைபெற்று வந்த இந்த வழக்கில் மேலாளருக்கு 9 மாத சிறை தண்டனையும் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு 6 மாத சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

சுவிஸில் சுருங்கிய பனிக்கட்டி மலை


சுவிஸ் நாட்டின் மார்ட்டரேட் பனிக்கட்டி (Morteratsch glacier) மலையானது சுருங்கியதால் அந்நாட்டின் வெப்பநிலை போக்கு உயர்த்திக்காட்டப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது மார்ட்டரேட் பனிக்கட்டி மலை.
அழகான அமைப்புடன் கூடிய இப்பனிக்கட்டி மலையானது வெகுவாக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துள்ளது.

தற்போது இந்த பனிக்கட்டி மலையானது சுருங்கியதால் அந்நாட்டின் வெப்பநிலை போக்கு அதிகரித்துள்ளது.

கடந்த நூற்றாண்டில் இந்த பனிக்கட்டி மலையானது 2.4 கிலோ மீற்றர் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது பனிக்கட்டி மலையானது கொஞ்சம் அதிகமாகவே சுருங்கியுள்ளது.

இது குறித்து சுற்றுலாப்பயணி ஒருவர் கூறுகையில், இது கொஞ்சம் அற்புதமாக உள்ளது என்றும் அதேசமயம் அச்சுறுத்தலான விடயம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த பனிப்பாறையானது காலநிலை மாற்றங்களை எடுத்துக்காட்டுவதற்கு சிறந்த உதாரணம் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.

சனி, 21 செப்டம்பர், 2013

அதிபரின் சொத்து விபரத்தை அம்பலப்படுத்திய சுவிஸ் வங்கி


பீனி பேபி நிறுவனத்தின் அதிபரான டை வார்னர் சுவிஸ் வங்கியில் உள்ள தன்னுடைய சொத்துக்களுக்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் டை வார்னர். 69 வயதான இவர் பிரபலமான பீனி பேபி பொம்மை தயாரிப்பு நிறுவனமான TYயின் அதிபர் ஆவார்.
இவர் 3 மில்லியன் சொத்துக்களை சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்து அதற்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 2002ம் ஆண்டு 49.1

மில்லியன் வருமானத்தை கொண்ட இவர் அவற்றில் 3.1 மில்லியன் தொகையை சுவிஸ் வங்கியில் மறைத்துவைத்துள்ளார்.
இந்நிலையில், சுவிஸின் UBS வங்கியானது இவரது சொத்துவிபரங்களை அம்பலமாக்கியது.

இதனைத் தொடர்ந்து 5 வருட சிறைத்தண்டனையும், 250,000 டொலர் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் போர்ப்ஸ் சஞ்சிகையின் மதிப்பிட்டின்படி 2.6 பில்லியன் சொத்துக்கள் கொண்ட இவர் அமெரிக்காவின் 209வது பணக்காரர் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
 

மீண்டும் சுவிஸ் பொருளாதாரம் உயர்வு!


சுவிட்சர்லாந்தில் பொருளாதாரமானது மீண்டும் உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

2013ம் ஆண்டில் யூன் மாதம் 1.4 சதவிகிதமாக இருந்த பொருளாதாரம் மூன்றே மாதத்தில் 1.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று பொருளாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் 2014ம் ஆண்டில் இந்த பொருளாதார உயர்வானது 2.3 சதவிகிதத்தை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என செகோ (State Secretariat for Economic Affairs (seco)) அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்குள்ளாக சர்வதேச பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றும் குறிப்பாக யூரோவில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது சுவிஸ் நாடானது உள்நாட்டு பொருளாதாரத்தால் பயனடைந்து வருகிறது.

மேலும் வேலைவாய்ப்பின்மையில் 3.3 சதவீதமானது வருகின்ற ஆண்டில் 3.2 சதவீதமாக குறையும் என செகோ எதிர்பார்க்கிறது

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

விடுதலையான சிறைக்கைதி மர்மமான முறையில்!


சுவிட்சர்லாந்தில் சிறையில் இருந்து தப்பிச் சென்று உயிரிழந்த கைதியின் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
சுவிஸில் அந்தமாட்டன் (39) என்பவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 2011ம் ஆண்டு ஜெனிவா சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரான்சை பிறப்பிடமாக கொண்ட இவர் 2001ம் ஆண்டு ஜெனிவாவிற்கு குடிபெயர்ந்து வந்துள்ளார்.

பின்பு பாலியல் செயல்களில் ஈடுபட்ட வந்த இவர் கடைசியாக 2011ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இவர் தண்டனை காலங்கள் முடிந்து சைகோதெரப்பிஸ்ட் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் இருந்து வெளிவந்த இவர் மர்மமான முறையில் ஜேர்மனின் எல்லைப்பகுதியான அதாவது சுவிட்சர்லாந்துக்கு அருகில் இறந்து கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்
Blogger இயக்குவது.