செவ்வாய், 30 டிசம்பர், 2014

சுவிசில் கடும் பனிப்பொழிவு :வாகன போக்குவரத்து சில பாதிப்பு

 சுவிஸ்லாந்தில் பலபகுதிகளில் கடந்த சில தினங்களாக  பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது
இன்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் குளிர்  ஏற்பட்டுள்ளது .
அதன் . புகைப்படங்கள் இணைப்பு.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
 



 

சனி, 27 டிசம்பர், 2014

வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்

சுவிட்சர்லாந்தில் உள்ள இஸ்ரேலிய வங்கி ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியை சிறப்பு பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. சுவிஸில் உள்ள Mizrahi-Tefahot என்னும் இஸ்ரேலிய வங்கியில் புதன் கிழமையன்று கொள்ளை முயற்சி நடந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்பட்ட செய்தியில், நபர் ஒருவர் வங்கிக்குள் நுழைந்து கொள்ளையிட முயன்றதாகவும், ஆனால் சில பணியாளர்கள் அதனை தடுத்ததோடு உடனடியாக அலாரமை அடித்ததாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் சில பணியாளர்கள் தப்பித்து வங்கியை விட்டு வெளியே தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர். அந்த நேரத்தில் வங்கி மேலாளருடன் அமர்ந்து பேசிய கொள்ளையன் பணம் தரும்படி மிரட்டியுள்ளான். ஆனால் பாதுகாப்பு படையினர் வந்ததை அறிந்த அவன், அவர்கள் வங்கிக்குள் நுழைவதற்குள் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

வெள்ளி, 26 டிசம்பர், 2014

நிவாரண பணிகளை மேற்கொள்ளும் சுவிஸ்




சுவிட்சர்லாந்தின் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு முகமை, வடகொரி்யாவிற்கு உணவு பாதுகாப்பு, மண் அரிப்பை சரிசெய்தல் மற்றும் சுத்தமான குடிநீரை அணுக ஒத்துழைப்பும் தனது பங்களிப்பையும் வழங்கி வருகிறது. வடகொரியாவிற்கு கடந்த 1995ம் ஆண்டில் இருந்து இந்த உதவிகளை சுவிஸ் அமைப்பு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2012ம் ஆண்டில் இருந்து முற்றிலும் மனிதாபிமான திட்டங்களை வடகொரியாவில் செயல்படுத்திவருகிறது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் பால் பவுடர் வழங்குவது மட்டுமல்லாமல், தண்னீர் விநியோகம், கழிவு நீர் மேலாண்மை போன்றவற்றிலும் உதவ முன்வந்துள்ளது. மேலும், மண் அரிப்பை தடுக்க சர்வான பகுதிகளில் மரங்களை நட்டுள்ளனர். இதன்மூலம் நிலையான உணவு கிடைக்க வழி செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 6 டிசம்பர், 2014

பாலியல் தொழிலாளி அடித்துக் கொலை

 சுவிசில் ஆஸ்திரிய பாலியல் தொழிலாளி ஒருவரை அடித்து, கொலை செய்த சுவிஸ் நபருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிசின் Langenthal என்ற நகரில் கடந்த மார்ச் மாதம் 10ம் திகதி, 2012ம் ஆண்டு ஆஸ்திரியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
மிக கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில், 28 வயது மதிக்கத்தக்க சுவிஸ் நபர் மீது சந்தேகம் எழுந்தது.
குறித்த நபர் பெண்ணிடம் இருந்த பணத்தை கொள்ளை அடித்ததுடன், கடுமையாக தாக்கி சென்றுள்ளது தெரியவந்தது.
மேலும் கொலை செய்வதற்கு தான் கொகைன் போதைப் பொருளை பயன்படுத்தியதாகவும், தன்னால் தாக்குதலை நிறுத்த முடியவில்லை என்றும், இது ஒரு திரைப்படம் போல இருந்தது எனவும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில் குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 5 டிசம்பர், 2014

ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் சுவிஸ்!

 உலகின் சுவிட்சர்லாந்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், ஊழல் குறைந்து நாடுகள் பட்டியலில் சுவிஸ் உள்ளதாக தெரியவந்துள்ளது.
Transparency International எனப்படும் அமைப்பு நடத்திய இந்த கருத்துக்கணிப்பில், 2014ம் ஆண்டில் பொதுத் துறை ஊழல் எந்தெந்த நாடுகளில் எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
175 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளை புதன் கிழமை வெளியிட்டுள்ளனர்.
இதில் ஊழல் குறைந்து காணப்படும் நாடாக டென்மார்க் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து நியூசிலாந்து, ஃபின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் முறையே 2, 3 மற்றும் 4ம் இடங்களை பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் சுவிஸ் 5ம் இடத்தினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, பர்படாஸ், ஹொங்காங் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் அனைத்தும் 17ம் இடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலின் கடைசி இரண்டு இடங்களை சோமாலியா மற்றும் வடகொரியா பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இதேப்போல நிதி வெளிப்படைத்தன்மை என்று வந்தாலும் சுவிஸே சிறந்த நாடாக விளங்குவதாக அந்த கருத்துகணிப்பு மேற்கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது. 

வியாழன், 4 டிசம்பர், 2014

அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பெண்மணி

 சுவிட்சர்லாந்தின் அடுத்த ஆண்டிற்கான ஜனாதிபதியாக நீதி அமைச்சரும் சோசலிச கட்சி உறுப்பினருமான Sommaruga என்பவர் தேசிய பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸ் பாராளுமன்றத்தில் புதன் கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சுழற்சி முறையில் தெரிவு செய்யப்படும் ஒராண்டு ஜனாதிபதி பதவிக்கு ஃபெடரல் கவுன்சிலில் இருந்த 7 உறுப்பினர்களில் ஒருவரான 54 வயதாகும் Sommaruga தெரிவாகியுள்ளார்.
அவர் மொத்தம் உள்ள 236 வாக்குகளில் 186 வாக்குகளை முன்னிலை பெற்று வெற்றி பெற்றதால் அடுத்த ஆண்டிற்கான ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸில் உள்ள ஸக் என்னும் நகரில் பிறந்த Sommaruga, Aargau மண்டலத்தில் வளர்ந்துள்ளார். Fribourg பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற அவர், லூசெர்ன், கலிஃபோர்னியா மற்றும் ரோமில் பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.
பின்னர் 1993ம் ஆண்டு, சுவிஸ் நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளையிலின் லாபி குழுவில் சேர்ந்துள்ளார்.
தற்போது ஜனாதிபதி பதவியில் இருக்கும் Didier Burkhalte பதவியிலிருந்து விலகிய பின், வரும் ஜனவரி 1ம் திகதி முதல் இவர் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 20 நவம்பர், 2014

சுவிட்சர்லாந்தில் காணாமல் போன போலந்து இளைஞர் சடலமாக மீட்பு

 கடந்த மாதம் காணாமல் போன போலந்து நாட்டு இளைஞரின் சடலம் பல நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளது.
சுவிஸின் வாட் மாகாணத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் நவம்பர் மாதம் 4ம் திகதி அன்று ஜூரா - நார்ட் வடியோஸ் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 15 தினங்களாக 70க்கும் மேற்பட்ட நபர்கள், மோப்ப நாய் மற்றும் ஹெலிகாப்டரின் உதவியுடன் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன அந்த இளைஞரின் சடலத்தை கடந்த புதன்கிழமை அன்று மீட்டுள்ளனர்.
இவர் தனது உறவினர்களை சந்திக்க சுவிஸ் வந்துவிட்டு பின்னர் திரும்பி செல்கையில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.
மேலும், வெகு நேரமாகியும் இவர் வீடு திரும்பாததை அறிந்த உறவினர் பொலிசாரிடம் புகார் கொடுத்ததையடுத்து தற்போது பொலிசார் அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 15 அக்டோபர், 2014

சுவிஸ் ஓய்வூதியத் திட்டம்! ஆய்வில் தகவல்

 உலகின் தலைசிறந்த ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாக சுவிட்சர்லாந்தின் ஓய்வூதிய திட்டம் இருப்பதாக அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில், 25 நாடுகளில் பின்பற்றப்படும் ஓய்வூதியங்களை ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுவிஸ் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
அந்த ஆய்வின் முடிவில், நல்ல பலன்களை வழங்கும் ஓய்வூதியத்தை வழங்குவதில் டென்மார்க் முதலிடம் வகிப்பதாக தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடத்தை பிடித்துள்ளன.
மேலும் சுவிஸ் ஓய்வூதியம் பற்றி கூறுகையில், சுவிஸ் ஓய்வூதியம் பல நல்ல அம்சங்களை கொண்டுள்ளதாகவும், சில பகுதிகளை மட்டும் முன்னேற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 31 ஜூலை, 2014

சுவிசின் யுக்தி நாய்களை பாதுகாக்க..

 சுவிசில் நடைபெறவுள்ள தேசிய தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்கள் செல்லப்பிராணியாய் வளர்க்கும் நாய்களை அயல்நாட்டிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
சுவிசின் பேசல் மாகாணத்தில் ஆகஸ்ட் 1ம் திகதி முதல் 7ம் திகதி வரை தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளது.
விதவிதமான ருசிகர உணவு வகைகளுடனும், வானவெடிக்கைகளுடனும் களைகட்டவுள்ள இந்த தேசிய நாள் திருவிழாவில் சுமார் 1.5 மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தரவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவிழாவில் வெடிக்கப்படும் வானவெடிக்கைகள் மற்றும் பட்டாசு சத்தங்களும் அங்குள்ள நாய்களை பாதிக்கும் என விலங்கியல் சங்கம் வலியுறுத்துகின்றது.
இதுகுறித்து விலங்கியல் சங்க தலைவர் கூறியதாவது, இந்த வெடி சத்தங்கள் நாய்களை பாதிக்கும் என்பதால் விழா நடைபெறும் ஒரு வாரத்திற்கு அவைகள் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு அனுப்படும்.
மேலும் அங்குள்ள விலங்கியல் நலச்சங்கள் அவைகளை பாதுகாத்து உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
 
மற்றைய செய்திகள்

பகீர் தகவல் உணவு பொட்டலங்களில் நச்சு பொருட்களா?

பகீர் தகவல் உணவு பொட்டலங்களில் நச்சு பொருட்களா?

சுவிசில் பொட்டலங்களாய் கட்டப்படும் உணவு பொருட்களில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அபயாகரமான பொருட்கள் கலக்கப்படுவதாக அந்நாட்டின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிசின் சூரிச் மாகாணத்தில் உள்ள அரக்கட்டளை மற்றும் பொதியில் மன்றத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு குறித்து கூறியதாவது, இந்த உணவுப் பொருட்களுடன் கண்ணிற்கு புலப்படும் வகையிலேயே மொத்தம் 175 நச்சு பொருட்கள் கலக்கப்பட்டது தெரிந்துள்ளது.
மேலும் நமது கண்ணிற்கு தெரியாமல் சுமார் 6000 வகையான நச்சுபொருட்கள் இதில் கலந்திருக்கக்கூடும். இவை புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஏனெனில் உணவு நன்றாக இருக்க வேண்டும், ருசியும் நிறமும் மக்களை கவர வேண்டும் என்பதற்காக பல தரப்பட்ட இராசயனங்கள் உணவு பொட்டலங்களுடன் கலக்கப்படுகின்றன.
இந்நிலையில் நாளடைவில் இந்த உணவு பொட்டலங்கள் தங்களது காலவதியாகும் நேரத்தை நெருங்கும்போது, அவற்றை உட்கொள்ளும் மக்களுக்கு நீண்டகால நோய் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
எனவே மக்கள் உணவு பொட்டலங்களை தெரிவு செய்கையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
 மற்றைய செய்திகள்

ருசியான விருந்துடன் களைகட்டப்போகும் தேசிய நாள் கொண்டாட்டம்

சுவிசில் தேசிய நாளை முன்னிட்டு எல்லா பண்ணைகளும் மக்கள் அனைவருக்கும் சிறப்பு உணவு பரிமாற முன்வந்துள்ளது.
சுவிசில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தேசிய நாளாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாகும்.
இந்நிலையில் இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் அனைத்து பண்ணைகளாலும் மக்களுக்கு பாராம்பரிய உணவு வகைகள் அளிக்கப்படுகின்றது.
சுமார் 1.5 மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தரவிருக்கும் இந்த விழாவில், வழங்கப்படும் உணவின் விலை 35 பிராங்குகள் ஆகும்.
மேலும் சில உணவு 100க்கும் மேற்பட்ட மக்களை கவறும் என எதிர்பார்க்கபடுகிறது.
எனினும் இந்த ஆண்டு இவ்விழாவை சிறப்பிக்க மொத்தம் 350 பண்ணைகள் மட்டுமே முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
மற்றைய செய்திகள்

ஆனந்த குளியல் போட சென்ற வாலிபருக்கு நேர்ந்த அவலம்

சுவிசில் நதியில் குளிக்க சென்ற நபர் ஒருவர் கனமான பாறை ஒன்றின் மீது மோதி பலத்த காயமடைந்துள்ளார்.
சுவிசின் சூரிச் மாகாணத்தில் உள்ள லிமட் என்னும் நதியில் கடந்த 26ம் திகதி வாலிபர் (27) ஒருவர் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது அவர் அருகே இருந்த பாலத்திலிருந்து நதியில் குதித்ததால் அங்குள்ள பாறை ஒன்றில் முட்டி மோதிக் கொண்டுள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
தற்போது உயிருக்கு போராடும் நிலையில் உள்ள அந்ந வாலிபருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், நதியில் குளிப்பது என்பது சுலபமான விடயம் இல்லை என்றும் அதற்கு சில நுணகங்களை அறிந்து நாம் நீச்சலில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மற்றைய செய்திகள்

திங்கள், 28 ஜூலை, 2014

விமான விபத்தில் சுவிஸ் பெண் பலி

 அல்ஜீரிய விமான விபத்தில் சுவிஸை சேர்ந்த ஒரு பெண் பலியாகியுள்ளார் என்று அவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் புர்கினா பாகோ தலைநகரிலிருந்து அல்ஜீரிய தலைநகருக்கு 116 பேருடன் பயணித்த AH5017 என்ற விமானம் கடந்த வியாழக்கிழமை மாலியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் பிரான்ஸ், புர்கினா பாகோ, லெபனான், அல்ஜீரியா, ஸ்பெயின், கனடா, ஜேர்மனி மற்றும் லுசம்பரிக் நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர்.
இதில் பயணித்தவர்களில் 51 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அதில் ஒரு சுவிஸை சேர்ந்த 30 வயதான பெண்ணும் பயணம் செய்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நியூசாடெலில் உள்ள லாசன்னே பல்கலைக்கழகத்தில் ஸ்பானிஷ் மற்றும் மத வரலாறு படிக்கும் மாணவி என்றும், அவரது டுவிட்டர் பக்கத்தில் உலகம் கலாச்சாரத்தாலும், கலாச்சாரம் உலகத்தாலும் கவரப்பட்டுள்ளது என்றும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மற்றைய செய்திகள்

ஞாயிறு, 20 ஜூலை, 2014

விமான விபத்து: பாதையை மாற்றும் சுவிஸ் ஏர்லைன்ஸ்

உக்ரைனில் மலேசிய விமானத்திற்கு ஏற்பட்ட தாக்குதலால் தற்போது சுவிஸ் ஏர்லைன்சும் தனது விமானத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ளது.
கடந்த 17ம் திகதி ஆம்ஸ்டர்டாமிலிருந்து 298 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய விமானம் போயிங் 777, உக்ரைன் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அனைவரும் பலியாகியுள்ளனர்.
இதனால் சுவிஸ் ஏர்லைன்ஸ் உக்ரைன் வான்வெளியில் பறக்காது என்றும் கருங்கடல் மீது திசைதிருப்ப பட்டுள்ளது எனவும் சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் திசை திருப்பம் செய்வதை அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட விமான நிறுவனங்களும் செயல்படுத்தியுள்ளத
மற்றைய செய்திகள்
 

கறுப்பு பண முதலைகளுக்கு “செக்” வைக்கும் ஜெட்லி

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை பெற எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது, சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்கள் 700 பேரின் பெயர் பட்டியலை எச்.எஸ்.பி.சி. வங்கியிடம் இருந்து பிரான்ஸ் அரசு பெற்று, இந்தியாவிடம் ஏற்கனவே அளித்துள்ளது.
ஆனால் அப்பெயர்களை பகிரங்கமாக வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவை வழங்கப்பட்டன.அந்த இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது வருமானவரித்துறை நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றவுடனே, கறுப்பு பணத்தை மீட்பதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அக்குழு கேட்ட விவரங்களை எல்லாம் அளித்துள்ளோம். பதவி ஏற்றதில் இருந்தே, இந்த விடயத்தை சுவிஸ் அரசிடம் தீவிரமாக எடுத்துச் சென்று வருகிறோம்.
பொருளாதாரத்தை மீட்டு எடுக்க இன்னும் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது.மேலும் பட்ஜெட்டை தாண்டி, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
மற்றைய செய்திகள்
 

திங்கள், 16 ஜூன், 2014

சுவிஸ் பல்கழைக்கழகம் மொழியை கண்டறியும் முயற்சியில்

சுவிட்சர்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை ஆராய்ந்து மக்கள் எவ்வாறு மொழியினை பயன்படுத்துகின்றனர் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெர்ன், சூரிச் மற்றும் நியூசேடல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இவர்கள் மக்களை குறுஞ்செய்தி அனுப்புமாறு கூறியுள்ளனர். அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்புபவர்களுக்கு பரிசு அளிப்பதாக கூறியுள்ளனர். மேலும், யூலை 13ம் திகதி வரை அனுப்ப அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் அனுப்பியுள்ளனர். !மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஞாயிறு, 1 ஜூன், 2014

உலக விஞ்ஞானிகளுடன் கலக்கிய சுவிஸ்

உலக விஞ்ஞானிகளுடன் இணைந்த சுவிஸ் ஆய்வாளர்கள் கோரோனா என்ற ஒரு வகை கிருமிக்கான புதிய தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துள்ளனர்.
கோரோனா என்ற கிருமியினால் ஏற்படும் சார்ஸ் மற்றும் மெர்ஸ் ஆகிய நோய்கள் மனிதனின் மேல் மற்றும் கீழ் சுவாச தடங்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இதனால் கடந்த 2002ம் ஆண்டு உலக முழுவதும் இந்த நோய் தாக்கப்பட்டு 800க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து சவுதி அரேபியாவில் சுமார் 636 பேர் பாதிக்கப்பட்டதுடன், 193 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இந்த நோயை போக்குவதற்கான மருந்தை சுவீடன் நாட்டை சார்ந்த எட்வர்ட் என்ற விஞ்ஞானியும் சுவிசை சேர்ந்த வால்கோர் என்ற ஆய்வாளரும் தங்களது ஆராய்ச்சி குழுவினருடன் இணைந்து ஆய்வில் செயல்பட்டு, k22 என்ற மருத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இந்த மருந்து கோரோனா வைரஸ் கிருமியை தாக்கி கொல்லும் வல்லமை படைத்தது என அவர்கள் கூறியுள்ளனர்.
 

சனி, 24 மே, 2014

தீவிரம் தவளைகளை காக்கும் முயற்சியில் சுவிஸ்

சுவிசில் தவளைகளை காப்பாற்ற சுமார் 260,00 பிராங்குகள் செலவிட அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சுவிசில் சுரங்கப்பாதை கட்டுவதால் அங்கு பாதிக்கபடவிருந்த 100 தவளைகளை வேறு இடம் மாற்ற போவதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிஸின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சோலோதுர்ன் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுவதால், அங்குள்ள அரிய வகை தவளைகளை 260,000 பிராங்குகள் செலவில் இடம் பெயர்க்க முடிவு செய்துள்ளது.
மத்திய சாலைகள் அமைச்சகம் 500 மில்லியன் பிராங்குகள் செலவில் பெல்சென் சுரங்கப்பாதயை புதுபிக்க உள்ளது.
இதனால் அந்த சுரங்கபாதையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தவளைகளை இடம் பெயர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதை செயல்படுத்த இந்த மாதத்திலிருந்தே இயற்கை பாதுகாப்பு குழுவினர் இரவுகளில் செயல்பட்டு, தவளைகளை பிடித்து இடம் பெயர்த்து வருகின்றனர்.
5.5 செ.மீ நீளம் வளரும் மிட்வைஃப் டோட்ஸ் என அழைக்கப்படும் இந்த தவளைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதால், இதனை பாதுகாப்பதில் அரசு திவீரமாக இறங்கி இதுவரை 10 தவளைகள் பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தவளைகள் கடந்த 2013ம் ஆண்டில் சுவிசின் சிறந்த விலங்காக அறிவிக்கபட்டது குறிப்பிடதக்கது.
 


 

சுவிசில் களைகட்டும் "வையின்" விற்பனை

 சுவிசர்லாந்து வையின் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிகமாக வைன் விற்பனை செய்யும் சுவிசின் ஜெனிவா மாகாணத்தில், சுமார் 3 மில்லியன் வைன் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
ஜெனிவாவில் உள்ள ஃப்ரீ பொர்ட்ஸ் மற்றும் வேர்ஹொசஸ் ஆகிய வைன் நிறுவனங்கள், தற்போது தங்களது 125 ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.
எனவே இந்த விழாவை முன்னிட்டு காண்டன் மாகாணத்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனங்கள், வையின் மற்றும் மற்ற மது பானங்களுக்கு வரி் செலுத்துவதை இலவசமாக்கியுள்ளது.
இதனைதொடர்ந்து மொல்தவியா என்ற கிராமம் 1.5 மில்லியன் வைன் பாட்டில்களை கொண்டு, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் சுவிஸ் நகரத்தில் வையின் தயரிப்பதற்கான காரணத்தை கூறுகையில், தங்கள் நிறுவனத்தின் வெர்ஹவுஸ் 22 கால் பந்து மைதானத்தை விட பெரியதாக இருப்பதாகவும், ஐரோப்பிய நாட்டின் மைய பகுதியில் அமைந்துள்ளதாகவும் நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுமார் 10,400 பரப்பளவு கட்டடத்தை இதற்காக பயன்படுத்தபோவதாகவும் அவர்கூறியுள்ளார்.

 

 

வியாழன், 22 மே, 2014

விலைமாதுக்களாய் மாற்றப்படும் அப்பாவி பெண்கள்

சுவிசில் அச்சுறுத்தல் மற்றும் வன்முறை காரணமாக பெண்கள் கடத்தப்பட்டு விலைமாதுக்களாய் மாற்றப்படுகின்றனர்
சுவிசில் பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்திற்கு தள்ளப்படும் சம்பவங்கள் ஏராளமாய் நிகழ்ந்துள்ளன.
கடந்த 2007ம் ஆண்டில் தலைநகர் பெரினின் நியடூ என்ற நகரில் 23 பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அந்த பெண்களை மீட்டு, அவர்களுக்கு தலைவியாக இருந்த பெண்ணை கைது செய்திருந்தனர்.
தற்போது இதுபோல் பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட வைப்பது வளர்ந்து வருவதால் இப்பிரச்சனைக்கு தீர்வு ஒன்றை காண வேண்டும் என சுவிஸ் சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 

திங்கள், 19 மே, 2014

பரபரப்பை ஏற்படுத்திய குட்டி கரடி

சுவிசர்லாந்தில் கரடி குட்டி ஒன்று 9 செம்மறி ஆடுகளை வேட்டையாடி கொன்றுள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசின் கிராபுடன் மாகாணத்தில் உள்ள m-25 என்ற இனத்தை சார்ந்த கரடி குட்டி ஒன்று ”லொவர் எங்கடென்” என்ற பகுதியில் திரிந்து கொண்டிருந்த 9 ஆடுகளை கிழித்து கொன்றுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பயத்தில் ஆழ்ந்ததுடன், இந்த கரடி குட்டியை கொன்றுவிடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த WWF சுற்றுசூழல் குழு இந்த வகை கரடிகள் அழிந்து வருவதால் அவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளது.
மேலும் வனவிலங்கு துறை அலுவலகர்களால் கொல்லப்பட்ட m-13 மற்றும் JJ3 கரடிகளை இந்த கரடிகளையும் கொல்லும் அபாயம் மீண்டும் ஏற்படகூடாது என இந்த குழு எச்சரித்துள்ளது





வியாழன், 15 மே, 2014

கரடியால் சிக்கல்களை அனுபவிக்கும் பூங்கா

கரடியால் சிக்கல்களை அனுபவிக்கும் பூங்கா
சுவிசின் உயிரியல் பூங்காவில் தந்தை கரடி தனது இரண்டு குட்டிகளையும் கொன்றதுக்கு கண்டனம் தெரிவித்து ரயில் ஓட்டுனர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள உயிரியல் பூங்காவில் மிஷா, மாஷி கரடிகளுக்கு கடந்த ஜனவரி 15ம் திகதி இரண்டு ஆண் கரடி குட்டிகள் பிறந்தது.
இதில் தந்தை கரடியான மிஷா கடந்த 3ம் திகதியில் தனது குட்டியை தூக்கி போட்டு விளையாடி கொண்டிருக்கையில் எதிர்பாரதவிதமாக அக்குட்டி கிழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்நிலையில் மற்றொரு கரடி குட்டியையும், தந்தை கரடி அதேபோல் விளையாடி கொன்றுள்ளது.
இதனால் பூங்காவின் மேலாளர்கள் வனவிலங்கு துறையினர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், அந்நாட்டில் வசிக்கும் கேர்ட் நோன்லிட்ஸ் என்பவர் அந்த பூங்காவின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவர், நாய் வளர்ப்பை தனது பொழுதுபோக்காக கொண்டவர், இதுகுறித்து அவர் கூறுகையில், கரடிகள், இவ்வாறு தனது குட்டிகளை கொல்வது இயல்பாக நடப்பது, ஆனால் பூங்காவினர் தான் இதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


ஞாயிறு, 11 மே, 2014

பண விவகாரத்தில் தகவல்களை தர முடியாது: சுவிஸ்

 இந்தியர்கள் குறித்த தகவல்களை, கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி தர முடியாது என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றன.
இந்த விவகாரத்தில் ஜேர்மன் வங்கியில் பணம் பதுக்கிய 18 இந்தியர்களின் தகவல்களை இந்திய அரசு உயர்நீதிமன்றம் தாக்கல் செய்தது. இந்நிலையில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பண கணக்கு விவரங்களை தர வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு சுவிஸ் நிதியமைச்சர் ஈவ்லின் வித்மர் ஸ்லம்புக்கு, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கடிதத்தில் எச்எஸ்பிசி வங்கி கிளைகளில் கறுப்பு பணத்தை பதுக்கியவர்களின் கணக்கு விவரங்களை தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் தகவல்களை தர முடியாது என சுவிஸ் மறுத்துள்ளது.
இதுகுறித்து சுவிஸ் நிதித்துறை செயலர் அளித்த பேட்டியில், வரி ஏய்ப்பு செய்வோர் மீது இந்தியாவை போலவே சுவிஸ் அரசும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளது. இந்தியா மற்றும் சுவிஸ் நாடுகளுக்கு இடையே கடந்த 2011ம் ஆண்டு சர்வதேச வரி விதிப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இரட்டை வரிவிதிப்பு முறை நடைமுறையில் உள்ளது.
வங்கி தொடர்பாக ஏற்கனவே இந்தியா கோரி வந்த பல்வேறு கோரிக்கைகளில் சுவிஸ் முடிந்தவரை சாதகமான பதில்களை அளித்து வந்துள்ளது.
தற்போது சர்வதேச விதிகளின்படி ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்ட தகவல்களை தர இயலாது என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 6 மே, 2014

கணவனை காப்பாற்ற நதியில் மூழ்கிய மனைவி

சுவிட்சர்லாந்தில் கணவனை காப்பாற்றுவதற்கு நதியில் மூழ்கி மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவன், மனைவி இரண்டு பேரும், தங்களது இரண்டு வளர்ப்பு நாய்களை கூட்டிக் கொண்டு, LOMBOCH RIVER என்ற ஆற்றின் கரை வழியே கரை ஒரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கையில், இரண்டு நாய்களில் ஒன்று துள்ளிக்குதித்து ஓடி, ஆற்றில் விழுந்து விட்டது.
 
அந்த நாயைக் காப்பாற்ற, கணவனும் ஆற்றில் குதித்துள்ளார், இதனைக் கண்ட மனைவியும், தனது வளர்ப்பு நாயையும், கணவனையும் காப்பாற்றும் பொருட்டு ஆற்றில் குதித்துள்ளார்.
இந்த ஆறு 11கி.மீ நீளம் கொண்டது, மேலும் LAKE THUN என்ற ஏரியுடன் சென்று கலக்கும் மிகப் பெரிய நீளமான ஆறு ஆகும், ஆகவே இந்த 55 வயதுப் பெண் ஆற்றில் குதித்தவுடன், வெள்ளப் பெருக்கினால் அடித்துச் செல்லப்படுகையில், பயங்கர காயங்களுக்குள்ளானார்.
 
அவரது கணவன் தனது நாயைக் காப்பாற்றியவுடன், தனது மனைவியை ஆற்றுக்குள் சுயநினைவின்றி மீட்டெடுத்து, போது மக்களின் உதவியுடன் முதலுதவிகள் செய்து காப்பாற்ற முயற்சிகள் செய்துள்ளார்.
மேலும் அவசரஊர்தி மூலம் மருத்துவமனை கொண்டு செல்லும்வழியில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
 

கொத்திரைச்சியின் விலை ஏற்றம்: ஏக்கத்தில் சுவிஸ் பிரியர்கள்

இறைச்சி தயாரிப்பாளர்கள் சுவிட்சர்லாந்தில் தேசிய உணவாகிய (CERVELAT) கொத்திறைச்சியின் விலை ஏற்றத்தைக் குறித்து முன்னதாகவே அறிவித்துள்ளார்கள்.
சுவிஸ் இறைச்சித் தயாரிப்பாளர்களின் சங்கம், வியாழக்கிழமையன்று தனது வாடிக்கையாளர்களுக்கு கொத்திறைச்சியின் விலை ஏற்றம் குறித்து அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, பன்றி இறைச்சியின் விலை 15% விலை உயர்வும், கொத்திறைச்சி மற்றும் இதரவகை இறைச்சிகளின் விலை 10% விலை ஏற்றத்தையும் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் சுவிஸ் மக்களின் மிகப் பிரியமான உணவான பன்றி கொத்திறைச்சியின் விலை ஏறுமுகமாக உள்ளது குறித்து சுவிஸ் மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
2012ம் ஆண்டிலிருந்து தற்போது வரை சுவிஸ் மக்களின் தேசிய உணவாகிய CERVELAT என்று அழைக்கபடும் கொத்திறைச்சியின் விலை கூடிக் கொண்டே போகின்றது.
இதற்கு காரணமாக சுவிஸ் இறைச்சித் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுகையில், பன்றி, மாடு, ஆடு போன்ற கால்நடைகளின் பராமரிப்பு செலவுகள் பன் மடங்கு கூடிவிட்டதாகவும், அவைகளின் இறைச்சியை பாதுகாத்து, பதப்படுத்தும் செலவுகள் மிக அதிகமாக இருப்பதாகவும் இவைகளை ஈடுகட்ட விலை உயர்வுதான் தவிர்க்கமுடியாத ஒரே வழி என்றும் கூறியுள்ளது.
 

வியாழன், 1 மே, 2014

தபால்களை பிரிப்பவர்கள் நடத்திய திருட்டு

 சுவிட்சர்லாந்தில் தபால்களை பிரிப்பவர்கள் 1,14,000 டாலர்கள் மதிப்புள்ள கருவிகளை திருடியுள்ளார்.
லுசேன் வாயூத் மண்டலத்தில் உள்ள சுவிஸ் தபால் அலுவலகத்தின் தேசிய அஞ்சலக ஆபரேட்டர்களாக பணிபுரியம் இரண்டு நபர்கள் 1.00,000 பிராங்குகள் (1,14,000) டொலர்கள் மதிப்புள்ள பொருட்களும், கருவிகளும் அடங்கிய பார்சல் பெட்டிகளை அபகரித்து திருடி சென்றுள்ளனர்.
இந்த இரண்டு திருடர்கரும் 40 வயது மிக்க எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் என்று NORD வாயூத்மண்டல நீதிமன்றம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் திருடிய பொருட்களை, அவர்களது குடியிருப்பில் பதுக்கி வைத்ததன் மூலம் பொலிசார் அவர்களை கையும், களவுமாக பிடித்துள்ளனர்.
இந்த திருடர்கள் இருவரும் நீதிமன்றத்தில் தங்களது திருட்டினை நியாயப்படுத்தும் வகையில், தாங்கள் பகுதி நேர ஊழியர்கள் என்றும், தங்களுக்கு சம்பளம் போதிய அளவு இல்லாததால் இவ்வாறு திருடியதாக கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் இவர்களுக்கு 18,000 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

வாட்ச் விலையுயர்ந்ததல்ல: வாதாடும் அதிகாரி ?

இந்தோனேசிய இராணுவ தலைமை அதிகாரி சுவிஸின் விலைமதிப்புள்ள கடிகாரம் அணிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த இராணுவ தலைமை அதிகாரி மோல்டோகோ என்பவர், சுவிஸில் வாங்கப்பட்ட விலையுயர்ந்த கடிகாரத்தை கையில் அணிந்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியானது.
ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார், இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த கடிகாரத்தை எடுத்து உடைத்துகாட்டி, மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை யாராவது இப்படி உடைப்பார்களா? இது சீனாவில் 430 டொலர்களுக்கு வாங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
இருப்பினும், அந்நாட்டு மக்கள் வறுமையில் வாடும்போது, உயர் அதிகாரிகள் விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வியாழன், 24 ஏப்ரல், 2014

சுவிஸ் பிரிட்டிஷ் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் ...

 சுவிஸ் நிறுவனமான நோவார்ட்டிஸின் நோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் பிரிவை பிரிட்டிஷ் நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் ஏழு பில்லியன் டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
உலகின் இரண்டு முன்னணி மருந்து தயாரிப்பு பெருநிறுவனங்களான நோவார்டிஸும் கிளாக்ஸோ ஸ்மித்க்ளைனும் ஒன்றின் தொழில் பிரிவை மற்றொன்று வாங்கும் விதமாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
அந்த உடன்பாட்டின்படி மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமலேயே மருந்துக் கடைகளில் வாங்கக் கூடிய மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை கூட்டாக தயாரித்து விற்பார்கள்.
தம்மிடையே ஏற்பட்டுள்ள உடன்பாடு மற்றும் வர்த்தப் பரிமாற்றம் மூலம் இரண்டு நிறுவனங்களும் அதன் பங்குதாரர்களும் பயனடைவார்கள் என கிளாக்ஸோவும் நோவார்ட்டிஸும் அறிவித்துள்ளன.
மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம் நோவார்ட்டிஸ் நிறுவனம் தனது கால்நடை மருந்துப் பிரிவை லில்லி நிறுவனத்துக்கு 5.4 பில்லியன் டொலருக்கு விற்க உடன்பட்டுள்ளது. 

திங்கள், 21 ஏப்ரல், 2014

ஜேர்மனியர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து கடத்தப்படும் பணம்

ஜேர்மனியர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து பணத்தைக் கடத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள், அதிகரித்துக் கொண்டே போகின்றது.
சுங்க இலாகா அதிகாரிகள், சோதனையிடுகையில் ஜெர்மன்- சுவிஸ் எல்லைப் பகுதிகளில், இந்த பணக்கடத்தல் சம்பவங்கள் வெகுவாக இடம்பெற்று வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ள புற பகுதிகளில், ஒரு நபருக்கு அனுமதிக்கப்பட்ட பணத்தொகை 10 ஆயிரம் யூரோக்கள் ( 12,200 பிராங்குகள் ஆகும்). அந்த விதிகளை மீறி, ஜேர்மனியர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து பணத்தைக் கடத்திச் செல்கின்றனர்.
2013ம் ஆண்டில் 573 மில்லியன் யூரோக்கள் கடத்தப்பட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பணக்கடத்தல்காரர்கள், மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுகின்றனர். அவர்கள் ஒரு நாளில் நான்கு பேர்களாக ஜேர்மனிய - சுவிஸ் எல்லைப் பகுதிகளில் கார்களின் பிரயாணம் செய்கையில், ஒவ்வொரும் தங்களது, பர்சுகளில் 9,900 யூரோக்களை பணமாக வைத்துள்ளனர்.
அதிகாரிகள் அவர்களை சோதிக்கும்போது, அவர்களது அனுமதிக்கப்பட்ட லிமிட் ஆன 10000 யூரோக்களுக்கு கிழே இரப்பதால், எல்லைப் பாதுகாப்பில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகளால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க இயலுவதில்லை.
அவர்கள் சுவிஸ்- ஜேர்மன் எல்லையை எளிதாக பணத்துடன், கடந்து விடுகின்றனர்
 

 

சனி, 12 ஏப்ரல், 2014

சுவிஸ் விமானி இந்தோனேசியாவில் கைது

 இலங்கையில் இருந்து சென்ற விமானம் ஒன்று இந்தோனேசியா விமானப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுவிசை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானி ஒருவர் விமானம் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக உலகை வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

இலங்கை வழியாக இந்தோனேசியா வான் பரப்பில் பறந்த போது அந்நாட்டு போர் ஜெட் விமானங்களினால் சுற்றிவளைக்கப்பட்டு ஷோவக்டோ விமான தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன் விமானப்படையினர் விமானத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
65 வயதான ஹெனிஸ் பேயர் என்ற இந்த விமானி கொழும்பில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக இந்தோனேசியா வான் பரப்பில் பறந்ததால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.


                    
 

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

அதிஷ்டவசமாக தப்பிய விமானங்கள் !!!


சுவிசில் எதிரெதிரே மோதிக்கொள்விருந்த இரண்டு விமானங்கள் விமான அதிகாரிகளால் தவிர்க்கப்பட்டுள்ளது.
சுவிசின் சூரிச் மாகாணத்தில் கடந்த 20ம் திகதி நெட்ஜெட் என்ற நிறுவனத்தினால் இயக்கப்பட்டு வரும் ஹாக்கர் - 800 என்ற வியாபார விமானம் தரையிரக்கதிற்கு தயாராகிக்கொண்டிருந்தது.
அப்போது அவ்விமானம் தரையிருங்கும் பாதையிலேயே பயிற்சி விமானம் ஒன்றும் தரையிரங்க முயற்சித்துள்ளது.
இதை பார்த்த விமான போக்குவரத்து அதிகாரிகள் பயிற்சி விமானத்தை வேறொரு இடத்தில் தரை இறங்குமாறு விமான ஓட்டுநருக்கு கட்டளையிட்டனர்.
இதனால் இரு விமானங்களும் விபத்திலிருந்து காப்பற்றப்பட்டதுன், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பயிற்சி விமானமானது ஜேர்மனியிலுள்ள நியூஹாம்பர்க் நகரத்தில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது
 

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

குரோஷியாவுடன் சமரச உடன்பாட்டை எட்டிய சுவிஸ்

  சுவிட்சர்லாந்து, குரோஷியா நாட்டுடன் சமதான உடன்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிசில் நிகழ்ந்த வாக்கெடுப்பிற்கு பின்னர் சுமார் 10 ஆண்டுகாலம் இருந்த இடைக்கால ஆட்சி, குரோஷியவிற்கு சுவிஸ் வேலைவாய்ப்பு மையங்களில் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இதன்பின் குரோஷியாவிற்கு வேலை வாய்ப்பளிக்க சுவிஸ் நிராகரித்து வந்ததால், குரோஷியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் 28 நாடாக இணைந்துள்ளது.
தற்போது சுவிஸ் மக்கள் சுதந்திரத்துடன் செயல்பட குரோஷியாவுடன் சமரச உடன்பட்டை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையே உள்ள முரண்பாடு முடிவிற்கு வரும் என அறிக்கை ஒன்றை சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தத்தினால் குரோஷிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கீகாரத்துடன் சுவிசில் வேலை செய்யும் உரிமை கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
 

புதன், 2 ஏப்ரல், 2014

வீராங்கனைக்கு நேர்ந்த அவலம்

சுவிசில் பனிச்சறுக்கு விளையாட்டு வீராங்கனை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள பெர்னீஸ் ஒபர்லாந்த் பகுதியை சேர்ந்த 35 வயது விளையாட்டு வீராங்கனை மலையின் உச்சியிலிருந்து குதித்துள்ளார்.
அப்போது எதிர்பாரதவிதமாக மலைக்குன்றின் மீது மோதி கிழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து அப்பெண்ணை மீட்பு படையினர் மீட்பதற்கு முன்னரே அவர் இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்பெண் வீராங்கனையுடன் இருவர் வந்திருந்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 

ஞாயிறு, 30 மார்ச், 2014

தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! -காணொளி,

சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் இங்கு பிறந்தவர்கள், அல்லது இலங்கையில் பிறந்து சிறுவயதில் இங்கு வந்தவர்கள். இவர்கள் தாங்கள் வாழும் சுவிஸ் நாட்டின் கலாசாரத்திற்குள்ளும், தங்களின் பெற்றோரின் கலாசாரத்திற்குள்ளும் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள் என அந்த விபரணப்படத்தில் தெரிவிக்கப்படுகிறது. பெற்றோர் தங்கள் விருப்பத்தை புரிந்து கொள்வதில்லை என்றும் தங்கள் பாரம்பரிய கலாசாரத்தை பேணுமாறும் திருமண விடயத்தில் தங்கள் விரும்பங்களை விட பெற்றோரின் விருப்பம் சில வேளையில் முக்கியத்துவம் பெற்று விடுவதாகவும் அவர்கள் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் தெரிவிக்கின்றனர். விபரணப் படம். (காணொளி, இணைப்பு)

 
வீட்டிற்குள் தமிழ் மொழியை தமிழ் கலாசாரத்தை பேண வேண்டிய நிலை, வீட்டை விட்டு வெளியில் வந்தால் வேறு ஒரு மொழி, வேறு ஒரு கலாசாரம், இந்த இரட்டை வாழ்க்கை பற்றி விபரிக்கிறது இந்த விபரணப்படம்.இந்த ஆவணப்படம், தமிழர்களின் பெற்றோர்களுடைய கலாச்சார பராம்பரிய கட்டுப்பாடு மற்றும் கட்டுக்கோப்புகளைக் காணும் தமிழ் பிள்ளைகள், வாலிப வயதினர் சுவிட்சர்லாந்தின் மேற்கத்திய முற்றிலும் சுதந்திரமான கலாச்சாரத்தைக் கண்டு வியந்து அதன்மேல் ஆவல் கொண்டுள்ளனர் என்று 22 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவி லாவண்யா சின்னத்துரை அவர்கள் கூறியுள்ளார், சுவிட்சர்லாந்தில் உள்ள புதிய தலைமுறை இளைஞர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை எதிர்க்கின்றனர், ஜாதி, மதம், மொழி தொடர்பில் திருமணத்தை வெறுக்கின்றனர். இதனால் இளைய சமுதாய புதிய தலைமுறையினர் பெற்றோர்களை திருப்திபடுத்த கட்டுப்பாடான வாழ்க்கையையும், தங்களை தாங்களே திருப்திப்படுத்திக்கொள்ள சுவிட்சர்லாந்தின் சுதந்திரமான மேற்கத்திய ஜரோப்பிய கலாச்சாரத்தை மேற்கொள்கின்றனர் என்பதை இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கின்றது.
Blogger இயக்குவது.