திங்கள், 24 பிப்ரவரி, 2014

இரசாயன கசிவு:அவதியில் தொழிலாளர்கள்


சுவிசின் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கசிவினால் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சுவிசின் பிராட்டெலன் பகுதியில் உள்ள இரசாயன நிறுவனத்தில் கடந்த 21ம் திகதி கார்சினோஜிக் திரவம் கசிந்து கட்டடத்தில் இரசாயனம் சூழந்ததால் அங்கிருந்த நான்கு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு இராணுவ பொலிஸ், தீயணைப்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இவர்கள் 4 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இச்சம்பவத்தினால் அருகே உள்ள பகுதிகளில் உயிர்சேதம் ஏதும் ஆகவில்லை என்றும் தொழில்நுட்ப கோளாரின் காரணமாக இவ்விபத்து நிகழ்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சுவைக்கசுவிஸை ஈர்த்த இனிப்புகள்


சுவிட்சர்லாந்தில் இனிப்புகளின் விற்பனை அமோகமாக உள்ளது என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் நாட்டு மக்கள் இனிப்புக்களை அதிகளவு சுவைக்க கூடியவர்கள், அந்த வகையில் தங்கள் நாட்டு இனிப்புகள் விற்பனையில் லாபம் ஈட்டுவதிலும் பெரும் பங்கு வகித்துள்ளனர்.
இதுகுறித்து “பிஸ்கோசே” நிறுவனம் கூறுகையில், சுவிசில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக 3.4 கிலோ சொக்லேட்டுகள் உட்கொள்ளப்படுகிறது. அதிலும் பெரும்பாலாக 22.8 சதவீதம் இனிப்பில்லா சொக்லேட்டுகள் விற்பனையாகின்றது.

மேலும் கடந்த 2013ம் ஆண்டில் இனிப்பின் விற்பனை 4.9 சதவீதமாகும், இந்த சதவீதமானது 2012ம் ஆண்டை காட்டிலும் 340 மில்லியன் பிராங்குகள் விற்பனையில் அதிகரித்துள்ளது என்றும் சுவிஸிலிருந்து மற்ற நாடுகளுக்கு கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 34,155 மிட்டாய் வகைகள் மற்றும் சொக்லேட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த 2014ம் ஆண்டிலும் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தையில் இனிப்பு வகைகளுக்கு அமோகமான விற்பனை இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
 

சனி, 22 பிப்ரவரி, 2014

சுவிசை துறந்த ஜேர்மானிய பேராசிரியர்

சுவிசில் பணிபுரியும் ஜேர்மனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
சுவிசில் கடந்த 9ம் திகதி நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள், மிக இறுக்கமான வெளியுறவு கொள்கைக்கு வழிவகுத்துள்ளது.
எனவே வருகிற 3 ஆண்டுகளில் சுவிசில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 1999ம் ஆண்டு முதல் சுவிசிற்கு குடிபெயர்ந்து, சூரிசின் தொழில்நுட்ப மத்திய நிலையத்தில்(Federal Institute for Technology) பணிபுரியம் கிறிஸ்டோபர் ஹோக்கர் என்ற ஜேர்மானிய பேராசியர் தற்போது தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து கிறிஸ்டோபர் கூறுகையில், சுவிசில் உள்ள நிலைமை குறித்து அதிகளவு பேச விரும்பவில்லை என்றும், தங்களது உதவி இல்லாது சுவிஸ் எவ்வாறு இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் பேட்டியளித்துள்ளார்.
மேலும் இந்த முடிவினை மாணவர்களுடனான எந்தவித கருத்துவேறுபாட்டிலோ, பிரச்சனைகளாலோ எடுக்கவில்லை என்றும், ஜேர்மனியின் ஆக்ஸ்பெர்க் நகரில் பணியை தொடரப் போவதாகவும் கூறியுள்ளார்.
இவரது செயல் ”அதிகப்பிரசங்கி” தனமாக உள்ளது என 73.3 சதவீத மக்கள் ஓன்லைனில் தெரிவித்துள்ளதாக சூரிச் நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
 

புதன், 19 பிப்ரவரி, 2014

சுவிசில் பலி எடுக்கும் பனிச்சறுக்கு

 
பனிச்சறுக்கில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சுவிசில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாகவே பனிச்சறுக்கால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் சுவிசின் வாலிஸ் மலைப்பகுதி பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த அமெரிக்க நபர், இரண்டு பாறைகளுக்கு இடையே இருந்த பனிக்கட்டியால் இழுத்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பனியில் புதைந்த அந்நபரை தொண்டி எடுத்ததுடன், ஹெலிகாப்டரின் மூலம் சியன் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கு முன்தினமே ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 21 வயது வாலிபர் பனிச்சறுக்கில் பலியானார்.

இதேபோல் கடந்த வாரம் இங்கிலாந்தை சேர்ந்த இருவர் பலியாகியது குறிப்பிடதக்கது.

அபராதத்தினால் வெகுண்டெழுந்த பெற்றோர்


 சுவிசில் குழந்தைகளை பள்ளி விடுமுறை விடுவதற்கு முன்பே அமெரிக்காவிற்கு அழைத்து சென்ற பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுவிஸின் சூரிச் மாகாணத்தைச் சேர்ந்த ஒபர்லேண்ட் பகுதியில் வசித்து வரும் பெற்றோருக்கு இரு பெண் குழந்தைகள்.

இவர்கள் கடந்த 2012ம் ஆண்டில் கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றுள்ளனர்.

இந்நிலையில் பள்ளி நிர்வாகிகள் இவர்களை தொடர்பு கொண்ட போது இந்த ஒரு வார கால இடைவெளியில் தாங்களே தங்கள் குழந்தைகளுக்கு பாடம் புகட்டி கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதை ஏற்க மறுத்த பள்ளி நிர்வாகம் குழந்தைகளின் பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்ததில் பள்ளி விதிகளை மீறிய குற்றத்திற்காக 1,600 பிராங்குகள் அபராதமும், சட்டவழக்கு அபராதமாக 1,100 பிராங்குகளும் விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த பெற்றோர் சூரிச்சின் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அங்கும் இவர்ளது வழக்கிற்கு 2000 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை சுவிஸ் உச்சநீதிமன்றத்தில் கொண்டு செல்ல இருப்பதாக பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் கடத்தப்பட்ட விமானம் தரையிறக்கம் (காணோளி )

ஜெனிவாவில் கடத்தப்பட்ட விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து ரோம் நோக்கி பயணித்த விமானம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானமானது எத்தியோப்பா விமான நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடத்தல்காரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் பயணித்த பணியாளர்களும், பயணிகளும் பாதுகாப்புடன் உள்ளதாக விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 

திங்கள், 10 பிப்ரவரி, 2014

சுவிஸ் மக்கள் வாக்களிப்பு குடிவரவைக் கட்டுப்படுத்துவதற்கு ஆதரவாக .

ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்டுள்ள மக்களின் சுதந்திர நடமாட்ட ஒப்பந்தத்தில்
இருந்து சுவிட்சர்லாந்து விலக வேண்டுமா என்பது தொடர்பில் அந்நாட்டில் நடந்துள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஆம் விலகவேண்டும் என்பதற்கு ஆதரவாக சுவிஸ் மக்கள் வாக்களித்துள்ளனர் .
ஆம் விலக வேண்டும் என்பதற்கு ஆதரவாக 50.5 சதவீதம் முதல் 51 சதவீதம் வரையான வாக்குகள் பதிவாக , மிகக் குறைவான வித்தியாசத்தில் ஆம் விலக வேண்டும் என்ற முடிவு வந்துள்ளது .

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் சுவிட்சர்லாந்துக்குள் விருப்பத்திற்கேற்ப வருவதையும் தங்குவதையும் முடிவுக்கு கொண்டுவந்து முன்பிருந்ததுபோல கடுமையான கோட்டா விதிகளை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக சுவிட்சர்லாந்தில் ஞயிற்றுக்கிழமை நடந்த வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி நண்பகலோடு முடிவுக்கு வந்தது .
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு இல்லை என்றாலும் ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளில் பெரும்பான்மையானவற்றை அந்த நாடும் ஏற்றுக்கொண்டுள்ளது .
ஐரோப்பிய நாடுகள் இடையில் மக்களின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிக்கின்ற கொள்கை , ஷெங்கன் ஒப்பந்தம் அடிப்படையில் நாட்டின் எல்லைகளை திறந்துவிடுகின்ற கொள்கை போன்றவற்றையும் சுவிட்சர்லாந்து ஏற்றுள்ளது .

ஐக்கிய பொருட்சந்தையாக திகழும் ஐரோப்பிய ஒற்றைச் சந்தையில் தமக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக சுவிஸ் இவற்றைச் செய்துள்ளது .
ஆனால் பிற ஐரோப்பிய நாடுகளைப்போலவே குடிவரவு என்ற விவகாரம் சுவிஸ்ஸிலும் முக்கிய அரசியல் விவகாரமாக இருந்துவருகிறது .
திறந்த எல்லைகள் காரணமாக ஏராளமான வெளிநாட்டினர் தொடர்ந்து வந்து குடியேறுவதால் வீட்டுவசதி , கல்வி , மருத்துவம் போக்குவரத்து போன்ற சேவைகள் திணறுவதாகவும் இதனால் கோட்டா முறை கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மக்களில் ஒரு சாரார் வாதிடுகின்றனர் .

ஆனால் சுவிட்சர்லாந்து பொருளாதாரம் முன்னேற்றப் பாதியில் பயணிக்க மக்களின் சுதந்திர நடமாட்ட அவசியம் என சுவிஸ் அரசாங்கமும் அந்நாட்டின் தொழில்துறைத் தலைவர்களும் வாதிடுகின்றனர் .
எல்லைகளை திறந்துவிட்டால்தான் ஐரோப்பிய ஒற்றைச் சந்தையின் பலன்களை சுவிட்சர்லாந்தால் அனுபவிக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர் .

வியாழன், 6 பிப்ரவரி, 2014

பெயர் மாற்றம் வேண்டாம் ப்ளீஸ்

சுவிசில் ஆண்குழந்தைக்கு பெண்ணின் பெயரும், பெண்குழந்தைக்கு ஆணின் பெயரும் வைக்கப்பட்டு வருவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சுவிஸ் தலைநகர் பெர்னில் பெரும்பாலான தம்பதிகள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு விருப்ப பெயரை வைப்பதாக எண்ணி பெயர் மாற்றம் செய்து வருகின்றனர்.
அனால் இப்பெயர் மாற்றத்தால் ஏற்கனவே சிலர் திருநங்கைகளாவும், ஓரினச் சேர்க்கையாளர்களாகவும் மாறியதால் பெர்ன் அதிகாரிகள் இச்செயலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் Huttwil என்ற நகரத்தில் வசிக்கும் அலைன் மற்றும் மிரியாம் பெலெக் தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இக்குழந்தை பிறந்த 15 நிமிடங்களிலேயே தம்பதிகள் அதற்கு ”ஜெஸ்ஸிகோ” பெயர் வைக்க தீர்மானித்தனர்.

இதுகுறித்து பெர்ன் அதிகாரிகள் கூறுகையில், ஜெஸ்ஸிகோ என்பது பெண்ணின் பெயராக இருப்பதால் அதை முதற் பெயராக வைக்க வேண்டாம் என கடிதம் ஒன்றில் தெரிவித்தனர்.
இத்தம்பதிகள் அதிகாரிகளிடம் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் ஜெஸ்ஸிகா என பெயர் வைப்பதாக தீர்மானித்திருந்தனர் என்றும் ஆண் குழந்தை பிறந்ததால் “ஜெஸ்ஸிகோ” என பெயர் வைக்கின்றனர் எனவும் கூறினர்.

எனினும் இதற்கு அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களின் உரிமை என்று 1994ம் ஆண்டில் வெளிவந்த சட்டத்தை குழந்தையின் தந்தை சூட்டி காட்டியுள்ளார்.
இறுதிவரை அதிகாரிகள் சமரசம் ஆகாததால் குழந்தையின் தந்தை சண்டையிட தொடங்கி கைகலப்பானது

புதன், 5 பிப்ரவரி, 2014

சுவிசில் பெருகி வரும் டீசல் கார்கள்

சுவிசில் 2012ம் ஆண்டை விட கடந்தாண்டில் டீசல் கார்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் அதிகரித்துள்ளன.

சுவிசில் கடந்தாண்டில் மட்டும் 402,117 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த 2012ம் ஆண்டை காட்டிலும் 6.7 சதவீதம் அதிகம் என மத்திய புள்ளியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுவிஸில் முதன்முறையாக கடந்தாண்டில் டீசல் வண்டிகள் ஒரு மில்லியனை கடந்து 1,035,843 மில்லியனாக அதிகரித்ததுடன் 2012ம் ஆண்டுடன் ஓப்பிடுகையில் 10.9 சதவீதம் கூடுதலாக காணப்பட்டது.

டீசல் கார்கள் 20 முதல் 30 கி.மீ வரை அதிக மைலேஜ் தருவதால் மக்களிடையே பலத்த வறவேற்பை பெற்றுள்ளது.
மேலும் சுவிசில் 24 சதவீதம் கலப்புவகை கார்களும் 53 சதவீதம் மின்சாரத்தால் இயங்கும் கார்களும் உபயோகிக்கப்படுகிறது
 

கொள்ளையர்களின் கைவரிசை: 1000 பிராங்குகள் அபேஸ்

 சுவிசில் துப்பாக்கி முனையில் நபர் ஒருவரை மிரட்டி வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசின் சூரிச் நகரத்தில் இருக்கும் டைடிக்கன் இரயில் நிலையத்தில் நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கி வைத்து தன்னிடம் இருக்கும் பொருட்களை தருமாறு அங்கிருந்த கொள்ளையன் ஒருவன் மிரட்டியுள்ளான்.
அப்போது அச்சம் கொண்ட அந்நபர் செய்வதறியாது தன்னிடம் இருந்த கைகடிகாரத்தையும், 1,000 பிராங்குகளையும் கொள்ளையனிடம் கொடுத்த போதிலும் அவனை துப்பாக்கியால் தலையில் தாக்கியதுடன், Square என்ற அடுத்த ரயில் நிறுத்ததிற்கு தன் கூட்டத்துடன் அக்கொள்ளையன் தப்பி ஓடினான் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் சிறிய காயங்களுடன் தவித்து கொண்டிருந்த அந்நபரை அவ்வழியே வந்த இருவர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இச்சம்பவத்திற்கான சாட்சிகளை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக சூரிச் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திங்கள், 3 பிப்ரவரி, 2014

ஆறு வயது சிறுமியின் அழுகுரல்

சுவிட்சர்லாந்தில் 6 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசின் சூரிச் மகாணத்தில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் கடந்த ஜனவரி 27ம் திகதி 6 வயது சிறுமி ஒருவர் அறிமுகமில்லாத நபர் ஒருவரால் கழிப்பறையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக Institute of Forensic Science என்ற தடய அறிவியல் நிறுவனம் புலனாய்வு மேற்கொண்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அச்சிறுமி தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால், பலாத்காரம் செய்த நபரை கண்டறிய சிறுமியின் பள்ளியின் அருகில் புலனாய்வு அதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு சிறுமியின் பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
 

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

மக்களை குஷிப்படுத்திய டான்ஸ். காணொளி .

லுசேன் சுவிஸ் நாட்டு மக்கள் டான்ஸ் காணொளியால் மகிழ்ச்சியாக உள்ளனர்.
லுசேன்னில் உள்ள மகிழ்ச்சி டான்ஸ் காணொளி தயாரிப்பாளர்கள் 15 மணிநேரம் இந்த காணொளியை பதிவு செய்துள்ளனர், இந்த காணொளி லுசேன் நகரத்தின் பல பகுதிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது.

THEATRE SCHOOL என்ற டான்ஸ் கம்பனியின் டான்ஸ் நடிகர்கள், நடிகைகள், இந்த டான்ஸ் காணொளியில் பங்கேற்றுள்ளனர்.

அவர்கள் மிகவும் புகழ்பெற்ற நடனக்கலை வல்லுனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

20க்கும் மேற்பட்ட உலகின் மிகச்சிறந்த நடனக்கலை வல்லுனர்கள் இந்த மகிழ்ச்சி டான்ஸ் காணொளியில் பங்கேற்று இசையுடன் கூடிய நடனம் ஆடியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் LAUSANNE நகரம் மட்டுமே இதில் பங்கேற்க முதலில் தேர்ச்சி பெற்ற நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்க உலகெங்கிலும் இருந்து 93 நாடுகளிலுள்ள நடனக் கலை நிபுணர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து பங்கேற்றுள்ளனர்.
Blogger இயக்குவது.