வியாழன், 31 ஜூலை, 2014

சுவிசின் யுக்தி நாய்களை பாதுகாக்க..

 சுவிசில் நடைபெறவுள்ள தேசிய தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்கள் செல்லப்பிராணியாய் வளர்க்கும் நாய்களை அயல்நாட்டிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
சுவிசின் பேசல் மாகாணத்தில் ஆகஸ்ட் 1ம் திகதி முதல் 7ம் திகதி வரை தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளது.
விதவிதமான ருசிகர உணவு வகைகளுடனும், வானவெடிக்கைகளுடனும் களைகட்டவுள்ள இந்த தேசிய நாள் திருவிழாவில் சுமார் 1.5 மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தரவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவிழாவில் வெடிக்கப்படும் வானவெடிக்கைகள் மற்றும் பட்டாசு சத்தங்களும் அங்குள்ள நாய்களை பாதிக்கும் என விலங்கியல் சங்கம் வலியுறுத்துகின்றது.
இதுகுறித்து விலங்கியல் சங்க தலைவர் கூறியதாவது, இந்த வெடி சத்தங்கள் நாய்களை பாதிக்கும் என்பதால் விழா நடைபெறும் ஒரு வாரத்திற்கு அவைகள் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு அனுப்படும்.
மேலும் அங்குள்ள விலங்கியல் நலச்சங்கள் அவைகளை பாதுகாத்து உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
 
மற்றைய செய்திகள்

பகீர் தகவல் உணவு பொட்டலங்களில் நச்சு பொருட்களா?

பகீர் தகவல் உணவு பொட்டலங்களில் நச்சு பொருட்களா?

சுவிசில் பொட்டலங்களாய் கட்டப்படும் உணவு பொருட்களில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அபயாகரமான பொருட்கள் கலக்கப்படுவதாக அந்நாட்டின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிசின் சூரிச் மாகாணத்தில் உள்ள அரக்கட்டளை மற்றும் பொதியில் மன்றத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு குறித்து கூறியதாவது, இந்த உணவுப் பொருட்களுடன் கண்ணிற்கு புலப்படும் வகையிலேயே மொத்தம் 175 நச்சு பொருட்கள் கலக்கப்பட்டது தெரிந்துள்ளது.
மேலும் நமது கண்ணிற்கு தெரியாமல் சுமார் 6000 வகையான நச்சுபொருட்கள் இதில் கலந்திருக்கக்கூடும். இவை புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஏனெனில் உணவு நன்றாக இருக்க வேண்டும், ருசியும் நிறமும் மக்களை கவர வேண்டும் என்பதற்காக பல தரப்பட்ட இராசயனங்கள் உணவு பொட்டலங்களுடன் கலக்கப்படுகின்றன.
இந்நிலையில் நாளடைவில் இந்த உணவு பொட்டலங்கள் தங்களது காலவதியாகும் நேரத்தை நெருங்கும்போது, அவற்றை உட்கொள்ளும் மக்களுக்கு நீண்டகால நோய் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
எனவே மக்கள் உணவு பொட்டலங்களை தெரிவு செய்கையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
 மற்றைய செய்திகள்

ருசியான விருந்துடன் களைகட்டப்போகும் தேசிய நாள் கொண்டாட்டம்

சுவிசில் தேசிய நாளை முன்னிட்டு எல்லா பண்ணைகளும் மக்கள் அனைவருக்கும் சிறப்பு உணவு பரிமாற முன்வந்துள்ளது.
சுவிசில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தேசிய நாளாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாகும்.
இந்நிலையில் இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் அனைத்து பண்ணைகளாலும் மக்களுக்கு பாராம்பரிய உணவு வகைகள் அளிக்கப்படுகின்றது.
சுமார் 1.5 மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தரவிருக்கும் இந்த விழாவில், வழங்கப்படும் உணவின் விலை 35 பிராங்குகள் ஆகும்.
மேலும் சில உணவு 100க்கும் மேற்பட்ட மக்களை கவறும் என எதிர்பார்க்கபடுகிறது.
எனினும் இந்த ஆண்டு இவ்விழாவை சிறப்பிக்க மொத்தம் 350 பண்ணைகள் மட்டுமே முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
மற்றைய செய்திகள்

ஆனந்த குளியல் போட சென்ற வாலிபருக்கு நேர்ந்த அவலம்

சுவிசில் நதியில் குளிக்க சென்ற நபர் ஒருவர் கனமான பாறை ஒன்றின் மீது மோதி பலத்த காயமடைந்துள்ளார்.
சுவிசின் சூரிச் மாகாணத்தில் உள்ள லிமட் என்னும் நதியில் கடந்த 26ம் திகதி வாலிபர் (27) ஒருவர் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது அவர் அருகே இருந்த பாலத்திலிருந்து நதியில் குதித்ததால் அங்குள்ள பாறை ஒன்றில் முட்டி மோதிக் கொண்டுள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
தற்போது உயிருக்கு போராடும் நிலையில் உள்ள அந்ந வாலிபருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், நதியில் குளிப்பது என்பது சுலபமான விடயம் இல்லை என்றும் அதற்கு சில நுணகங்களை அறிந்து நாம் நீச்சலில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மற்றைய செய்திகள்

திங்கள், 28 ஜூலை, 2014

விமான விபத்தில் சுவிஸ் பெண் பலி

 அல்ஜீரிய விமான விபத்தில் சுவிஸை சேர்ந்த ஒரு பெண் பலியாகியுள்ளார் என்று அவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் புர்கினா பாகோ தலைநகரிலிருந்து அல்ஜீரிய தலைநகருக்கு 116 பேருடன் பயணித்த AH5017 என்ற விமானம் கடந்த வியாழக்கிழமை மாலியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் பிரான்ஸ், புர்கினா பாகோ, லெபனான், அல்ஜீரியா, ஸ்பெயின், கனடா, ஜேர்மனி மற்றும் லுசம்பரிக் நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர்.
இதில் பயணித்தவர்களில் 51 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அதில் ஒரு சுவிஸை சேர்ந்த 30 வயதான பெண்ணும் பயணம் செய்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நியூசாடெலில் உள்ள லாசன்னே பல்கலைக்கழகத்தில் ஸ்பானிஷ் மற்றும் மத வரலாறு படிக்கும் மாணவி என்றும், அவரது டுவிட்டர் பக்கத்தில் உலகம் கலாச்சாரத்தாலும், கலாச்சாரம் உலகத்தாலும் கவரப்பட்டுள்ளது என்றும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மற்றைய செய்திகள்

ஞாயிறு, 20 ஜூலை, 2014

விமான விபத்து: பாதையை மாற்றும் சுவிஸ் ஏர்லைன்ஸ்

உக்ரைனில் மலேசிய விமானத்திற்கு ஏற்பட்ட தாக்குதலால் தற்போது சுவிஸ் ஏர்லைன்சும் தனது விமானத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ளது.
கடந்த 17ம் திகதி ஆம்ஸ்டர்டாமிலிருந்து 298 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய விமானம் போயிங் 777, உக்ரைன் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அனைவரும் பலியாகியுள்ளனர்.
இதனால் சுவிஸ் ஏர்லைன்ஸ் உக்ரைன் வான்வெளியில் பறக்காது என்றும் கருங்கடல் மீது திசைதிருப்ப பட்டுள்ளது எனவும் சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் திசை திருப்பம் செய்வதை அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட விமான நிறுவனங்களும் செயல்படுத்தியுள்ளத
மற்றைய செய்திகள்
 

கறுப்பு பண முதலைகளுக்கு “செக்” வைக்கும் ஜெட்லி

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை பெற எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது, சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்கள் 700 பேரின் பெயர் பட்டியலை எச்.எஸ்.பி.சி. வங்கியிடம் இருந்து பிரான்ஸ் அரசு பெற்று, இந்தியாவிடம் ஏற்கனவே அளித்துள்ளது.
ஆனால் அப்பெயர்களை பகிரங்கமாக வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவை வழங்கப்பட்டன.அந்த இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது வருமானவரித்துறை நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றவுடனே, கறுப்பு பணத்தை மீட்பதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அக்குழு கேட்ட விவரங்களை எல்லாம் அளித்துள்ளோம். பதவி ஏற்றதில் இருந்தே, இந்த விடயத்தை சுவிஸ் அரசிடம் தீவிரமாக எடுத்துச் சென்று வருகிறோம்.
பொருளாதாரத்தை மீட்டு எடுக்க இன்னும் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது.மேலும் பட்ஜெட்டை தாண்டி, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
மற்றைய செய்திகள்
 
Blogger இயக்குவது.