செவ்வாய், 30 டிசம்பர், 2014

சுவிசில் கடும் பனிப்பொழிவு :வாகன போக்குவரத்து சில பாதிப்பு

 சுவிஸ்லாந்தில் பலபகுதிகளில் கடந்த சில தினங்களாக  பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது
இன்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் குளிர்  ஏற்பட்டுள்ளது .
அதன் . புகைப்படங்கள் இணைப்பு.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
 



 

சனி, 27 டிசம்பர், 2014

வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்

சுவிட்சர்லாந்தில் உள்ள இஸ்ரேலிய வங்கி ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியை சிறப்பு பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. சுவிஸில் உள்ள Mizrahi-Tefahot என்னும் இஸ்ரேலிய வங்கியில் புதன் கிழமையன்று கொள்ளை முயற்சி நடந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்பட்ட செய்தியில், நபர் ஒருவர் வங்கிக்குள் நுழைந்து கொள்ளையிட முயன்றதாகவும், ஆனால் சில பணியாளர்கள் அதனை தடுத்ததோடு உடனடியாக அலாரமை அடித்ததாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் சில பணியாளர்கள் தப்பித்து வங்கியை விட்டு வெளியே தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர். அந்த நேரத்தில் வங்கி மேலாளருடன் அமர்ந்து பேசிய கொள்ளையன் பணம் தரும்படி மிரட்டியுள்ளான். ஆனால் பாதுகாப்பு படையினர் வந்ததை அறிந்த அவன், அவர்கள் வங்கிக்குள் நுழைவதற்குள் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

வெள்ளி, 26 டிசம்பர், 2014

நிவாரண பணிகளை மேற்கொள்ளும் சுவிஸ்




சுவிட்சர்லாந்தின் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு முகமை, வடகொரி்யாவிற்கு உணவு பாதுகாப்பு, மண் அரிப்பை சரிசெய்தல் மற்றும் சுத்தமான குடிநீரை அணுக ஒத்துழைப்பும் தனது பங்களிப்பையும் வழங்கி வருகிறது. வடகொரியாவிற்கு கடந்த 1995ம் ஆண்டில் இருந்து இந்த உதவிகளை சுவிஸ் அமைப்பு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2012ம் ஆண்டில் இருந்து முற்றிலும் மனிதாபிமான திட்டங்களை வடகொரியாவில் செயல்படுத்திவருகிறது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் பால் பவுடர் வழங்குவது மட்டுமல்லாமல், தண்னீர் விநியோகம், கழிவு நீர் மேலாண்மை போன்றவற்றிலும் உதவ முன்வந்துள்ளது. மேலும், மண் அரிப்பை தடுக்க சர்வான பகுதிகளில் மரங்களை நட்டுள்ளனர். இதன்மூலம் நிலையான உணவு கிடைக்க வழி செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 6 டிசம்பர், 2014

பாலியல் தொழிலாளி அடித்துக் கொலை

 சுவிசில் ஆஸ்திரிய பாலியல் தொழிலாளி ஒருவரை அடித்து, கொலை செய்த சுவிஸ் நபருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிசின் Langenthal என்ற நகரில் கடந்த மார்ச் மாதம் 10ம் திகதி, 2012ம் ஆண்டு ஆஸ்திரியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
மிக கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில், 28 வயது மதிக்கத்தக்க சுவிஸ் நபர் மீது சந்தேகம் எழுந்தது.
குறித்த நபர் பெண்ணிடம் இருந்த பணத்தை கொள்ளை அடித்ததுடன், கடுமையாக தாக்கி சென்றுள்ளது தெரியவந்தது.
மேலும் கொலை செய்வதற்கு தான் கொகைன் போதைப் பொருளை பயன்படுத்தியதாகவும், தன்னால் தாக்குதலை நிறுத்த முடியவில்லை என்றும், இது ஒரு திரைப்படம் போல இருந்தது எனவும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில் குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 5 டிசம்பர், 2014

ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் சுவிஸ்!

 உலகின் சுவிட்சர்லாந்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், ஊழல் குறைந்து நாடுகள் பட்டியலில் சுவிஸ் உள்ளதாக தெரியவந்துள்ளது.
Transparency International எனப்படும் அமைப்பு நடத்திய இந்த கருத்துக்கணிப்பில், 2014ம் ஆண்டில் பொதுத் துறை ஊழல் எந்தெந்த நாடுகளில் எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
175 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளை புதன் கிழமை வெளியிட்டுள்ளனர்.
இதில் ஊழல் குறைந்து காணப்படும் நாடாக டென்மார்க் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து நியூசிலாந்து, ஃபின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் முறையே 2, 3 மற்றும் 4ம் இடங்களை பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் சுவிஸ் 5ம் இடத்தினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, பர்படாஸ், ஹொங்காங் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் அனைத்தும் 17ம் இடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலின் கடைசி இரண்டு இடங்களை சோமாலியா மற்றும் வடகொரியா பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இதேப்போல நிதி வெளிப்படைத்தன்மை என்று வந்தாலும் சுவிஸே சிறந்த நாடாக விளங்குவதாக அந்த கருத்துகணிப்பு மேற்கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது. 

வியாழன், 4 டிசம்பர், 2014

அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பெண்மணி

 சுவிட்சர்லாந்தின் அடுத்த ஆண்டிற்கான ஜனாதிபதியாக நீதி அமைச்சரும் சோசலிச கட்சி உறுப்பினருமான Sommaruga என்பவர் தேசிய பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸ் பாராளுமன்றத்தில் புதன் கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சுழற்சி முறையில் தெரிவு செய்யப்படும் ஒராண்டு ஜனாதிபதி பதவிக்கு ஃபெடரல் கவுன்சிலில் இருந்த 7 உறுப்பினர்களில் ஒருவரான 54 வயதாகும் Sommaruga தெரிவாகியுள்ளார்.
அவர் மொத்தம் உள்ள 236 வாக்குகளில் 186 வாக்குகளை முன்னிலை பெற்று வெற்றி பெற்றதால் அடுத்த ஆண்டிற்கான ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸில் உள்ள ஸக் என்னும் நகரில் பிறந்த Sommaruga, Aargau மண்டலத்தில் வளர்ந்துள்ளார். Fribourg பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற அவர், லூசெர்ன், கலிஃபோர்னியா மற்றும் ரோமில் பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.
பின்னர் 1993ம் ஆண்டு, சுவிஸ் நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளையிலின் லாபி குழுவில் சேர்ந்துள்ளார்.
தற்போது ஜனாதிபதி பதவியில் இருக்கும் Didier Burkhalte பதவியிலிருந்து விலகிய பின், வரும் ஜனவரி 1ம் திகதி முதல் இவர் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
Blogger இயக்குவது.