புதன், 27 டிசம்பர், 2017

சுவிசில் ரயில் கட்டணங்கள் அடுத்தாண்டு குறைக்கப்படும்;

சுவிஸில் மதிப்பு கூட்டு வரிகள் குறைக்கப்படுவதன் விளைவாக ரயில் கட்டணங்களும் அடுத்தாண்டு குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வரியானது 8லிருந்து 7.7 சதவீதமாக வரும் ஜனவரி முதல் குறைக்கப்படவுள்ளது, இதன் காரணமாக
 யூன் மாதம் முதல் சுவிஸ் ரயில் பயண கட்டணங்கள் 0.3 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்படவுள்ளதாக நாட்டின் பொது போக்குவரத்து தொழில் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பழைய ஓய்வூதிய திட்டத்தை விரிவாக்கம் செய்யலாமா என கடந்த செப்டம்பர் மாதம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் வாக்காளர்கள் அதை நிராகரித்தனர்.
இதன் காரணமாகவே நாட்டின் மதிப்பு கூட்டு வரி குறைக்கப்படவுள்ளது, சுவிஸில் ரயில் பயண கட்டணங்கள் குறைக்கப்படும் அதே வேளையில் ஜேர்மனியில் இந்த மாதம் 2 சதவீத கட்டணம் 
உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல பிரித்தானியாவில் வரும் ஜனவரி 2-ஆம் திகதி முதல் 3.4 சதவீதம் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது 
குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






சனி, 9 டிசம்பர், 2017

தொடர்வண்டி (TRAM) போக்குவரத்து சுவிஸ் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஆரம்பம்.

பாசல் மாநில போக்குவரவு சேவையான BVB நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாசல் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள ஜேர்மனியின் Weil am Rhein நகரின் தொடருந்து நிலையம் வரை Tram போக்குவரத்தை  விஸ்தரித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக பாசல் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டின் எல்லை நகரான St louis நகரின் தொடருந்து நிலையம் வரை தனது போக்குவரத்தினை விஸ்தரிக்க நீண்ட காலமாய் எடுத்த முயற்சி இன்று நடைமுறைக்கு வருகின்றது
இன்று மதியம் ஒரு மணியளவில் உத்தியோகபூர்வமான போக்குவரவு ஆரம்பமாகவுள்ளது. இன்று மதியம் ஒரு மணி முதல் இரவு ஆறு மணி வரை இலவசமாக பயணஞ் செய்ய முடியும். இச் சேவையை வரவேற்கும் முகமாக இரு நாடுகளிலும் பல தரப்பட்ட சிறப்பு நிகழ்வுகள்
 நடைபெறவுள்ளன.
கீழே இணைக்கப்பட்டுள்ள இரண்டாவது படத்திலுள்ள அட்டைகள் பாசல் மாநிலத்தின் அனைத்து Tram மற்றும் பேருந்துக்களிலும் உள்ளது. அதை எடுத்துச் செல்பவர்களுக்கு இலவச குளிர்பானம் 
காத்திருக்கின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 24 நவம்பர், 2017

ஈழத் தமிழர்கள் சுவிசில் இருந்து நாடுகடத்தப் படும் ஆபத்தில் உள்ளனர்!?

சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள மற்றும் அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் 
அபாயம் எழுந்துள்ளது.
சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் குடியேறிகள் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கிய உடன்படிக்கையொன்றை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சுவிற்ஸர்லாந்து அரசின் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா நேற்றைய தினம் ஸ்ரீலங்காவின் உள்துறை அமைச்சர் எஸ்.பி. நாவின்னவுடன் குடியேறிகள் தொடர்பான உடன்படிக்கை ஒன்றை
 கைச்சாத்திட்டார்.
இந்த உடன்படிக்கை ஊடாக சுவிற்ஸர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் அரசியல் தஞ்சக் கோரிகளுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பது உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை மிகவும் முக்கியமானது என்றும், குடிவரவுத் துறையில் தாங்கள் நடைமுறைப்படுத்திவரும் நடைமுறைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றும் மூன்று நாள் விஜயமாக ஸ்ரீலங்கா வந்துள்ள சுவிற்ஸர்லாந்து நீதி அமைச்சர்
 தெரித்துள்ளார்.
அதேவேளை, இந்த உடன்படிக்கை அரசியல் தஞ்சக் கோரிக்களை நாடு கடத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸர்லாந்தில் 50 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈழத்தமிழர்கள் ஆவர். கடந்த 30 வருட யுத்தம் காரணமாக ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் உட்பட உயிர் ஆபத்துக்களை அடுத்தே இவர்கள் புலம்பெயர்ந்து சுவிஸர்லா்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
இவர்கள் உட்பட புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் உட்பட புலம்பெயர் சமூகத்தினர் நாடு திரும்ப வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதேவேளை, தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதை அடுத்து ஸ்ரீலங்காவில் மனித உரிமைகளும், தனி மனித சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிவரும் சுவிஸர்லாந்து உட்பட மேற்குலக நாடுகள், ஈழத் தமிழர்களின் அரசியல் தஞ்சம் கோரிக்கைகளை நிராகரித்து வருவதுடன், உடனடியாக நாடு கடத்தியும்
 வருகின்றன.
எனினும், ஸ்ரீலங்காவில் இன்னமும் இயல்பு நிலை ஏற்படவில்லை என்றும், நாடு கடத்தப்படும் ஈழத்தமிழர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே அரச படையினராலும, புலனாய்வுத் துறையினராலும் கைதுசெய்யப்பட்டும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சுவிஸர்லாந்து அரச சார்பற்ற அமைப்புக்கள் மாத்திரமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு உட்பட பல அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்து 
வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுவிஸர்லாந்து நீதி அமைச்சரை சந்தித்த வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும், நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கும் அளவிற்கு நிலமை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று
 கூறியிருந்தார்
மிகவும் கொடூரமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டம் அமுலில் இருப்பதால், நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறை வைக்கப்படும் நிலமையும், சித்திரவதைகளுக்கு ஆளாகும் அபாயமும் இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பத்து 15 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாத அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்காத நிலையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாக கருத முடியாது என்றும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் புறந்தள்ளிய நிலையில், ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும் சுவிஸர்லாந்து அரசின் குடியேறிகள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான மத்திய அரசின் அமைச்சர் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா, ஸ்ரீலங்கா அரசுடன், அரசியல் தஞசக் கோரிகளை நாடு கடத்துவதை உறுதிசெய்யும் உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருக்கின்றார்.
சுவிஸர்லாந்து அரசு சித்திரவதைக்கூடத்திற்குள் மக்களை தள்ளிவிடுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள சுவிஸ்ர்லாந்து நீதி அமைச்சர் சிமோனெட்டா 
சோம்மருகா, இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நாடு கடத்துவதற்கு முன்னர் நாடு கடத்தப்படவுள்ள அனைவரும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படுவார்கள் என்று அவர்
 தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு உதவிகள் தேவையா அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கலாமா, அல்லது நாடு கடத்துவது சரிதானா, அது நியாயமான தீர்மானமா என்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என சுவிஸர்லாந்து நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எது எவ்வாறாயினும் அடுத்துவரும் தினங்களில் ஸ்ரீலங்காவுடன் புதிதாக ஏற்படுத்திக்கொண்ட குடியேறிகள் தொடர்பான புதிய உடன்படிக்கைக்கு அமைய சுவிஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அகதிகளின் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச அமைப்புக்களும், அகதிகள் சட்டத்தரணிகளும் எச்சரிக்கை
 விடுத்துள்ளனர்.
அது மாத்திரமன்றி சுவிஸர்லாந்து அரசின் இந்த நடவடிக்கையை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளும் ஸ்ரீலங்காவுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை நிராகரித்து அவர்களை நாடு கடத்தக்கூடிய ஆபத்து நீடிப்பதாகவும் அகதிகள் தொடர்பான சட்ட நிபுணர்கள்
 தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் இவற்றை நிராகரிக்கும் சுவிஸர்லாந்து அரசு, கடந்த யூலை மாதமும் ஈழத் தமிழர் ஒருவரின் அகதி கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக 
அறிவித்துள்ளது.
அதேவேளை சுவிஸர்லாந்து குடிவரவுத்துறை அலுவலகத் தகவல்களுக்கு அமைய 2016 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் இலங்கையர்களின் 1316 அரசியல் தஞ்சம் கோரிய விண்ணப்பங்கள் தீர்மானம் எடுக்கப்படாது வைக்கப்பட்டிருப்பதாக அந்த அலுவலக புள்ளி 
விபரங்கள் கூறுகின்றன.
அதேவேளை இந்தக் காலப்பகுதியில் இலங்கையர்கள் ஐயாயிரம் பேர் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்ததாகவும். இவர்களில் 3674 பேருக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இவர்களில் 1613 பேருக்கு பாரிய உயிர் ஆபத்து இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுவிஸர்லாந்து குடிவரவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 23 நவம்பர், 2017

அகதியாய் வெளிநாட்டுக்கு 1985 ஆம் ஆண்டுகளில் வந்த தமிழர்கள் பட்ட துன்பங்கள்

1985 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு அகதியாய் வந்த தமிழர்கள் என்ன பாடுபட்டார்கள், அகதியாய் வந்தவர்கள் ஆரம்ப காலங்களில் எவ்வளவு கஸ்ரங்களுக்கு மத்தியில் மொழி தெரியாமல் வேலை தேடினார்கள், அகதி முகாம்களில் எப்படியிருந்தார்கள் என்பதையெல்லாம்
 பிரதிபலிக்கும் 
• நாட்டில இருந்து வெளிநாடு வந்தவர்கள் எவ்வளவு அழகாகவும், ஜடாமுடியுடனும் இருந்தார்கள் என்பதை .
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வசதியாக வாழ்வதாகவே எல்லோரும் “கற்பனையில்” நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் பட்ட, படும் கஸ்ரம் பலருக்கு புரிவதில்லை.இதனை பிரதிபலிக்கும் விதமாக 1986ம் ஆண்டளவில் சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநிலத்தில் உள்ள சொலிகோபன் எனும் இடத்தில் அமைந்திருந்த “அகதி முகாமில்” படமாக்கப்படட
 திரைப்படம் இது.
மேற்படி அகதி முகாமில் மொத்தமாக ஐம்பது பேர் வசித்து வந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.1986ம் ஆண்டளவில் சுவிஸ் உட்பட ஐரோப்பிய நாடெங்கும் அகதிகளின் வருகை காரணமாக இனத்துவேசம் ஓரளவு காணப்பட்ட போதிலும், சுவிஸ் நாட்டு வயதானவர்கள், தமிழர்களை பராமரித்து சாதாரண (பண்ணை) வேலை வழங்க பின் நிற்க்கவில்லை. ஆயினும் அன்றைய கால கட்டத்தில் “ஒரு நாள் சம்பளம்” நான்கு 
அல்லது ஐந்து பிராங் மட்டுமே.. ஆகக்கூடிய சம்பளம் ஏழு சுவிஸ் பிராங்.இருப்பினும் இந்த சம்பளத்தை பெறுவதுக்காகவேனும் காலையில் எழுந்து வீடுவீடாக சென்று வேலை கேட்பதும், மாலையில் அகதி முகாம் வந்து, வலைப்பந்து விளையாடி, முடிவெட்டிக் குளித்து,
 சாப்பிட்டு, எல்லோரும் 
ஒரு அறையில் இருந்து (ஐம்பது ராப்பன் கொடுத்து) படம் பார்ப்பதும், ஊரில் இருந்து உறவுகளிடம் இருந்து வரும் கடிதங்களை பார்த்து சந்தோசம் அடைவதும், மாலை நேரங்களில் உதைபந்து விளையாட்டு, ரெஸ்ர்லிங் போன்றவற்றை பார்ப்பதும், நித்திரையுமாகவே 
வாழ்க்கை..
இலங்கை புதினங்களை கிழமையில் ஒருமுறை வரும் பத்திரிகையை அனைவரும் பார்த்து தெரிந்து கொள்வதுடன், “தமிழீழ தகவல் நடுவத்தால்” ஒளிபரப்பாகும் செய்திகளை, தினம்தோறும் பதிவு செய்து அதனை மீண்டும் கேட்டு, எழுதி விளம்பர பலகையில் ஒட்டி அனைவரும் விழுந்தடித்து பார்ப்பதே வழமை. (இப்போது போல் அக்காலத்தில் கொம்பியூட்டர்
 வசதி இல்லை)அகதிமுகாமில் வைத்து கிழமைக்கு கிழமை தரும் பணத்தை பெறுவதுக்காகவே வரிசையில் நிற்பதும், கடைக்கு அழைத்து சென்று பொருட்க்கள் வாங்குவதும், எப்போதாவது ஒருநாள் உயிர்க்கோழியை வாங்கி உரித்து சமைத்து சந்தோசமாக 
சாப்பிடுவதும், யாருடைய பிறந்த நாளையாவது “எப்போதோ ஒருநாள்” சந்தோசமாக கொண்டாடும் போது மட்டுமே, விருந்து போல் சாப்பிடுவதும், சென்சிலுவை சங்கத்தினால் தரப்படும் உடுப்புக்காக வரிசையில் நின்று வாங்குவதும், காசு கிடைத்ததும் ஊரில் உள்ள உறவுகளுடன் தொலைபேசியில் 
கதைப்பதுமான வாழ்க்கை
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 19 நவம்பர், 2017

மாவீர் 2017 க்கான இரு இறுவெட்டுக்கள் பாசெலில் வௌியிடப்பட்டது

பாசெலில்   நேற்றைய தினம் சுவிஸ் Basel lausen(18.11.2017) நகரில் நடைபெற்ற திரு. கலைப்பரிதி அவர்களின் வரிகளுக்கு திரு. இசைப் பிரியன் அவர்களின் இசையில் உருவான இரு இறுவெட்டுக்கலான, காந்தளின் கனவு மற்றும் புறப்படும் புதுயுகம் ஆகிய இறுவெட்டுக்கள்
 வெளியிடப்பட்டுள்ளது,
இதில் யேர்மனியிலிருந்து மாவீரரின் அண்ணர் ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகனும் கலற்து கொண்டார் எமதுமாவீரர்கள் நினைவைசுமந்த பாடல்கள் மண்ணைநேசிக்கும் ஒவ்வெரு தமிழனும் கேட்கவேண்டிய பாடல்கள் எம்காவல் தெய்வங்களின் 
காணிக்கையாக!
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 17 நவம்பர், 2017

மனித உரிமைகள் நிலைமைகள்பற்ரி சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு

சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு…சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று அடைக்கலம் கோரியவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளதாக சுவிற்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் குடிவரவுக்கான பணியகத்தை மேற்கோள்காட்டி, சுவிஸ்இன்போ இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலைமைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.
குறிப்பாக, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் உரிமைகள் தொடர்பான விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே, இப்போது தஞ்சம் கோரும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் இன்னும் அதிகமான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும்.
அத்துடன் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளது” என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வெள்ளி, 10 நவம்பர், 2017

சுவிசில் பணியாற்ற காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பயனுள்ள தகவல்

சுவிட்சர்லாந்தில் பணியாற்ற காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கான பயனுள்ள தகவல் இதுவாகும்.
Organization for Economic Cooperation and Development-ன் படி அமெரிக்கா, லக்சம்பெர்க்கை அடுத்து சுவிட்சர்லாந்தில் சம்பளம் அதிகம், ஏனெனில் ஐரோப்பாவை பொறுத்த வரையில் வாழ்வதற்கு அதிக விலையுயர்ந்த நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும்.
ஆண்- பெண்களுக்கு இடையேயான சம்பள விகிதமும் இங்கு அதிகம், ஐரோப்பிய நாடுகளில் இங்கு தான் அதிகளவு வித்தியாசம் உண்டு. சமீபத்திய ஆய்வின் படி ஆண்களை விட பெண்களுக்கு 19.3 சதவிகிதம் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது, குறிப்பாக 
சுவிட்சர்லாந்து பெண்களை விட வெளிநாட்டை சேர்ந்த பெண்களுக்கு சம்பளம் குறைவு.வருடத்திற்கு சுவிட்சர்லாந்தில் 20 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுகிறது, ஆகஸ்ட் 1ம் திகதி சுவிஸ் தேசிய தினத்தன்று அனைத்து மாகாணங்களிலும் விடுமுறை 
வழங்கப்பட்டாலும், மற்ற பொது விடுமுறைகள் மாகாணங்களை பொறுத்து வேறுபடுகிறது.
சுவிட்சர்லாந்தில் வாழ்க்கை/பணி இரண்டுக்கும்மான Balance-யை சமமான முறையில் கொண்டு செல்ல முடியும், இதன் காரணமாகவே உலகளவில் வாழ்வதற்கு மிகச்சிறந்த நாடுகளின் பட்டியலிலும்
 இடம்பிடித்துள்ளது.
சுவிசின் சட்டப்படி, நிறுவனம் தொழிலாளரை ஒரு வாரத்திற்கு 45 மணிநேரம் பணியாற்ற அழைக்கலாம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது அதிகம். பிரான்சில் வாரத்திற்கு 35 மணிநேரமும், பிரித்தானியாவில் 36.5 மணிநேரமும் பணியாற்றுகின்றனர்.
ஒரு ஆண்டுக்கு வேலை செய்த பின்னர், வேலையை இழந்துவிட்டால் அவர்களுக்கு அதிகளவான சலுகைகள் கிடைக்கும், இதேபோன்று ஒரு நாளைக்கு எட்டு மணிநேரத்திற்கும்
 அதிகமாக
 பணியாற்றினால் குறித்த நிறுவனம் உங்களுக்கான விபத்து காப்பீட்டை செலுத்த வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்காக 14 வார சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது, தந்தைமார்களுக்கு பெரும்பாலும் குழந்தை பிறந்த அன்றைய தினம் மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது, இதேபோன்று பணியாற்றும் தாய்மார்களாக இருப்பின் குழந்தை வளர்ப்புக்கும் அதிக தொகை செலவிட வேண்டும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வியாழன், 19 அக்டோபர், 2017

சுவிஸ் மணமகளை திருமணம் செய்யவிருந்த இளைஞன் மரணம்!

இலங்கையின் தென்பகுதியான பேருவளையில் உயிரிழந்த இளைஞனின் உடற்பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது
வாகன விபத்தில் உயிரிழந்த 26 வயதுடைய இளைஞனின் கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகிய உடற் பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த இளைஞர் அடுத்த மாதம் சுவிஸ்ட்சர்லாந்து பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைய ஆயத்தமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி இரவு அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
பேருவளை, மொரகல்ல பகுதியை சேர்ந்த சுரேஷ் அபேகுணவர்தன என்ற இளைஞன் வாகன விபத்துக்குள்ளான நிலையில் அவர் மூளைச் சாவடைந்துள்ளார்.
இதனால் அவரது உடற்பாகங்கள் தானம் செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற மரண விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் தந்தை வாக்குமூலம் வழங்கிய போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
‘உயிரிழந்தவர் எனது மகன். எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்மார்கள் உள்ளனர். உயிரிழந்த மகன் மொரகல்லவில பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான விடுதியை நடத்தினார்.
17ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் நான் உறங்கி கொண்டிருந்த போதுஇ மனைவி மற்றும் கடைசி மகன் சத்தமாக மூத்த மகன் விபத்துக்குள்ளாகியதாக கூறினர்.
மகனை பார்க்க சென்ற போது அவர் மூளைச் சாவடைந்துள்ளதாகவும், அவர் உயிர் பிழைக்க முடியாதெனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவரது உடற்பாகங்களை தானம் வழங்க விருப்பம் என கூறினோம்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





சுவிசில் பலியான இளைஞனின் குடும்பம் சுவிஸ் வர அழைப்பு

சுவிட்ஸர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் அகதிகள் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த சுப்பிரமணியம் கரன் என்பவர் அண்மையில் சுவிஸ் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார். மரணமானவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அவரின் குடும்பத்தினருக்கு சுவிஸ் அரசாங்கம் அ
ழைப்பு விடுத்துள்ளது.
முல்லைத்தீவை சேர்ந்த சுப்பிரமணியம் கரனின் வீட்டிற்கு சென்றிருந்த சுவிஸ் தூதரக அதிகாரிகள், குடும்பத்தாரின் நிலையையும் பார்வையிட்டிருந்தனர்.இதனையடுத்து நேற்று முன்தினம் குடும்ப உறுப்பினர்கள் சுவிஸ் தூதரகத்தினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டு , மிக விரைவில் சுவிஸ் பயணத்துக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவரின் மனைவி, இரு மகள்கள், மற்றும் சகோதரன் உள்ளிட்டவர்களை இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சுவிஸ் அரசின் செலவுடன் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் சக அகதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அங்குள்ள சக அகதிகளால் பொலிஸாருக்கு முறையிடப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த சுவிஸ் பொலிஸார், குறித்த இலங்கையரை சுட்டுக்கொன்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 27 செப்டம்பர், 2017

தனியாக சென்ற சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை பெண் ஒருவர் காப்பாற்றினார்



சுவிட்சர்லாந்து நாட்டில் தனியாக சென்ற சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை பெண் ஒருவர் துணிச்சலாக எதிர்கொண்டு விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Wattenwil நகரில் 12 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் 
வசித்து வருகிறார்.
சில கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பாடசாலைக்கு தினமும் சைக்கிளில் சென்று வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன் தினம் வழக்கம்போல் பாடசாலைக்கு சென்றுவிட்டு தனியாக சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.அப்போது, சாலையில் நடந்து வந்த நபர் ஒருவர் திடீரென சிறுமி மீது பாய்ந்து கீழே தள்ளியுள்ளார்.
பின்னர், சிறுமியை கற்பழிக்கும் நோக்கில் அருகில் உள்ள அடர்ந்த காட்டிற்கு இழுத்து செல்ல முயன்றுள்ளார்.நபரின் தாக்குதலை எதிர்க்கொள்ள முடியாமல் சிறுமி உதவிக்கு அலறியுள்ளார்.அப்போது, காரில் வந்த பெண் ஒருவர் சிறுமியின் அலறலை கேட்டு காரை 
நிறுத்தியுள்ளார்.
பின்னர், காரை விட்டு இறங்கிய அவர் விரைவாக சென்று சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை எதிர்த்து சண்டையிட்டுள்ளார்.நிலைமையை உணர்ந்த நபர் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக பெண் பொலிசாரிடம் புகார் அளித்தபோது, ‘சிறுமியை கற்பழிக்க முயன்ற நபர் எனக்கு பரிச்சயமானவர்.
இங்கு வசித்து வரும் பாதிரியார் ஒருவரின் மகன் தான் அந்த தாக்குதல்தாரி’ என புகார் அளித்துள்ளார்.பெண்ணின் புகாரை பெற்ற பொலிசார் 56 வயதான நபரை கைது செய்து விசாரணை நடத்தி 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

சுவிற்சர்லாந்தின் பேர்ன் பெருநகர் ஈழமாக மாறியது

பொன்னார் மேனியன் புலித்தோலை அரைக்கிசைத்த பெருமான் பொன்நகர் 
சுவிஸ்  பேர்ன் பெருநகர் தமிழ்  ஈழமாக காட்சி அளித்தது
பேர்னில் சுவிற்சர்லாந்தில் அருட்பேரரசி ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரனாக செந்தமிழ்த்திருமறை கருவறையில் ஒலிக்க திருக்கோபுரத்தில் நால்வர் பெருமக்கள் எழுந்துநிற்க
 அருளாட்சி புரிகிறான்.
சுவிற்சர்லாந்தின் பேர்ன் பெருநகரில் சைவமும் தமிழும் சிறந்து விளங்க ஞானலிங்கேச்சுரர் பெருங்கருணை புரிந்து ஐரோப்பாத்திடலில் நாளும் தமிழ் ஒலிக்க அருள்செய்துளான்பொற்றடை ஆண்டுத் திருவிழா பெருவிழாவாக 17. 08. 2017 வியாழக்கிழமை முதல் 29. 08. 2017 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்று வருகிறது.
26. 08. 2017 சனிக்கிழமை தேர்த்திருவிழா பெரும் சைவப்பெருவிழாவாக நடைபெற்றது. ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட அடியார்கூட்டம் பெரும்திரளாக ஒன்றுகூடிய பெருநிகழ்வாக நடைபெற்றது.
பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தின் (Haus der Religionen) பிரதிநிதிகள், பல்சமயத் தலைவர்கள் ஒன்றுகூடி வருகை அளித்து, ஞானலிங்கேச்சுர் தேர்த்திருவிழா சிறக்க தம் வாழ்த்துக்களை நவின்று சென்றனர். றெகுலா அவர்கள் தனது உரையில் இக்கோவில் அடிக்கல் நாட்டியது முதல் இன்று விழாக்காணும் 
காலம்வரை நான் தமிழ்மக்களையும் அவர்களது பக்தியையும் அறிவேன். நேரில் கண்டு வியந்திருந்கிறேன். நீங்கள் சைவநெறிக்கூடத்தின் திருக்கோவில் ஊடாக பல்சமயத்தில் உறுப்பினாராக விளங்குவதும் எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என வாழ்த்தினார்.
பேர்ன் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தில் இருந்து திருநிறை. அன்ரன் மற்றும் திருநிறை வின்சன் அவர்கள் வருகையளித்து நிகழ்வைச் சிறப்பித்தனர். சைவநெறிக்கூடத்தின் கொள்கை சமயம் தாண்டி தமிழர்கள் நாம் ஒரு வலிமையான இனமாக விளங்கவேண்டும் 
என்பதாகும்.
வருகை அளித்த விருந்தினர்கள் யாவருக்கும் சிறப்பு மதிப்பளிப்பு நடைபெற்றது.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திருமதி. றெகுலா மேடர் மற்றும் பழைய தலைவி காலநிதி. திருமதி கேர்டா கவுக் ஆகியோர் 
வருகையளித்திருந்தனர்.
சுவிற்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்கழகத்தின் அதிகாரி திரு. பெல்லெர் அவர்களும் வருகை அளித்து விழாவைச் சிறப்பித்துப் பேசினார். தமிழர்கள் தமது பாரம்பரியத்தைப் பேணுவதற்கு தனக்கு வாய்ப்புக்கிடைப்பது மகிழ்ச்சி எனத் தன் 
உரையில் தெரிவித்தார்.

பலபத்து அடியார்கள்கூடி வேல் குத்திக் காவடி எடுத்தனர். சிறுவர்கள், பாலர்கள், இளவயதினர், காவடி எடுத்து ஆடிவந்த காட்சி இது சுவிசா ஈழமா என வியக்க வைத்தது
பல பெண் அடியார்கள் தீச்சட்டி சுமந்து வந்து தம் வேண்டுதலை நிறைவுசெய்தனர்.
இந்த ஆண்டும் மூன்று தேர்கள் திருவலம் வந்தன. முதற்தேரில் கரிமுகக்கடவுள் பிள்ளையாரும், முருக்கப்பெருமானும், திருமால் எழுந்திருக்க, ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் நடுநாயகமாக எழுந்தகாட்சி கையிலை இங்கு வந்ததாக 
அமைந்தது.
உலகப்பொது மறை அளித்த திருவள்ளுவர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இளம் சிறார்கள் திருக்குறள் ஓதி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருவள்ளுவரும் சிறப்புத் தேரில் எழுந்து உலா வந்தது, சைவமும் தமிழும் இரண்டல்ல ஒன்றென விளக்கியதாக அமைந்தது.
தமிழ் உலகின் முதன்மைத் தமிழ் ஊடகங்கள் செய்தியினை நேரடி அஞ்சலும் பதிவு செய்தன. சைவநெறிக்கூடத்தின் சார்ப்பில் யாவருக்கும் நன்றி நவிலப்பட்டது. மேலும் தமழ் ஊடகங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துக்களும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலால்
 பகரப்பட்டது.
ஐரோப்பாத்திடல் முழுவதும் தமிழ் மணம் நிறைந்தது, பல தமிழ் அங்காடிகள் திருவிழாச் சூழலை மனதில் பதிய வைத்தது.
கோவில்கள் வெறும் சடங்குகளுடன் நின்றுவிடாமல் தம் பணியை இனம், மொழி, சமயம், பண்பாடு, வரலாறு காக்கும் கருவிகாளாக விளங்கவேண்டும் எனும் சைவநெறிக்கூடத்தின் நோக்கம் ஒழுகுவதாக நிகழ்வுகள்
 அமைந்தன.
காலை 06.00 மணிக்கு தொடங்கிய வழிபாடுகளைத் தொடர்ந்து 12.30 மணிக்கு தேர் இழுக்கப்பட்டு, 13.30 மணிக்கு அருளமுது அறுசுவை விருந்தாக அளிக்கப்பட்டது. தேர் முன்றலில் முத்தமிழ் நிகழ்வுகள் 
நடைபெற்றன.
தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டால் மட்டுமே வாழ்வு உண்டெனத் தேர்த்திருவிழா அடையாளமாக விளக்குவதாக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா அவர்கள் விளக்கினார்.
ஊர்கூடி இழுத்தால் வாசல் வந்து தேர் சேரும், இன்று நாம் திருவாசல் வந்து அடைந்துள்ளோம், ஆனால் இன்னும் வாசல் வந்து சேரவேண்டிய தேர்கள் பல உண்டு, நாம் தமிழர்கள் ஒன்றாக இத்தேரை இழுத்து திருவாசல் சேர்க்க வேண்டும் என விளக்கினார்.
ஒருநாள் தமிழர்கள் தேர் திருவாசல் வரும் எனும் நம்பிக்கையுடன் ஞானலிங்கேச்சுரர் திருத்தேர் விழா நிறைவுற்றது.00:50 28.08.2017ஈழமாக மாறிய சுவிஸ்!!!!!”
பொன்னார் மேனியன் புலித்தோலை அரைக்கிசைத்த பெருமான் பொன்நகர் பேர்னில் சுவிற்சர்லாந்தில் அருட்பேரரசி ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரனாக செந்தமிழ்த்திருமறை கருவறையில் ஒலிக்க திருக்கோபுரத்தில் நால்வர் பெருமக்கள் எழுந்துநிற்க 
அருளாட்சி புரிகிறான்.
சுவிற்சர்லாந்தின் பேர்ன் பெருநகரில் சைவமும் தமிழும் சிறந்து விளங்க ஞானலிங்கேச்சுரர் பெருங்கருணை புரிந்து ஐரோப்பாத்திடலில் நாளும் தமிழ் ஒலிக்க அருள்செய்துளான்பொற்றடை ஆண்டுத் திருவிழா பெருவிழாவாக 17. 08. 2017 வியாழக்கிழமை முதல் 29. 08. 2017 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்று வருகிறது.
26. 08. 2017 சனிக்கிழமை தேர்த்திருவிழா பெரும் சைவப்பெருவிழாவாக நடைபெற்றது. ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட அடியார்கூட்டம் பெரும்திரளாக ஒன்றுகூடிய பெருநிகழ்வாக நடைபெற்றது.
பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தின் (Haus der Religionen) பிரதிநிதிகள், பல்சமயத் தலைவர்கள் ஒன்றுகூடி வருகை அளித்து, ஞானலிங்கேச்சுர் தேர்த்திருவிழா சிறக்க தம் வாழ்த்துக்களை நவின்று சென்றனர். றெகுலா அவர்கள் தனது 
உரையில் இக்கோவில் அடிக்கல் நாட்டியது முதல் இன்று விழாக்காணும் காலம்வரை நான் தமிழ்மக்களையும் அவர்களது பக்தியையும் அறிவேன். நேரில் கண்டு வியந்திருந்கிறேன். நீங்கள் சைவநெறிக்கூடத்தின் திருக்கோவில் ஊடாக பல்சமயத்தில் உறுப்பினாராக விளங்குவதும் எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என வாழ்த்தினார்.
பேர்ன் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தில் இருந்து திருநிறை. அன்ரன் மற்றும் திருநிறை வின்சன் அவர்கள் வருகையளித்து நிகழ்வைச் சிறப்பித்தனர். சைவநெறிக்கூடத்தின் கொள்கை சமயம் தாண்டி தமிழர்கள் நாம் ஒரு வலிமையான இனமாக விளங்கவேண்டும் 
என்பதாகும்.
வருகை அளித்த விருந்தினர்கள் யாவருக்கும் சிறப்பு மதிப்பளிப்பு நடைபெற்றது.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திருமதி. றெகுலா மேடர் மற்றும் பழைய தலைவி காலநிதி. திருமதி கேர்டா கவுக் ஆகியோர் வருகையளித்திருந்தனர்.
சுவிற்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்கழகத்தின் அதிகாரி திரு. பெல்லெர் அவர்களும் வருகை அளித்து விழாவைச் சிறப்பித்துப் பேசினார். தமிழர்கள் தமது பாரம்பரியத்தைப் பேணுவதற்கு தனக்கு வாய்ப்புக்கிடைப்பது மகிழ்ச்சி எனத் தன் உரையில் தெரிவித்தார்.
பலபத்து அடியார்கள்கூடி வேல் குத்திக் காவடி எடுத்தனர். சிறுவர்கள், பாலர்கள், இளவயதினர், காவடி எடுத்து ஆடிவந்த காட்சி இது சுவிசா ஈழமா என வியக்க வைத்தது
பல பெண் அடியார்கள் தீச்சட்டி சுமந்து வந்து தம் 
வேண்டுதலை நிறைவுசெய்தனர்.
இந்த ஆண்டும் மூன்று தேர்கள் திருவலம் வந்தன. முதற்தேரில் கரிமுகக்கடவுள் பிள்ளையாரும், முருக்கப்பெருமானும், திருமால் எழுந்திருக்க, ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் நடுநாயகமாக எழுந்தகாட்சி கையிலை இங்கு 
வந்ததாக அமைந்தது.
உலகப்பொது மறை அளித்த திருவள்ளுவர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இளம் சிறார்கள் திருக்குறள் ஓதி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருவள்ளுவரும் சிறப்புத் தேரில் எழுந்து உலா வந்தது, சைவமும் தமிழும் இரண்டல்ல ஒன்றென 
விளக்கியதாக அமைந்தது.
தமிழ் உலகின் முதன்மைத் தமிழ் ஊடகங்கள் செய்தியினை நேரடி அஞ்சலும் பதிவு செய்தன. சைவநெறிக்கூடத்தின் சார்ப்பில் யாவருக்கும் நன்றி நவிலப்பட்டது. மேலும் தமழ் ஊடகங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துக்களும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலால் பகரப்பட்டது.
ஐரோப்பாத்திடல் முழுவதும் தமிழ் மணம் நிறைந்தது, பல தமிழ் அங்காடிகள் திருவிழாச் சூழலை மனதில் பதிய வைத்தது.
கோவில்கள் வெறும் சடங்குகளுடன் நின்றுவிடாமல் தம் பணியை இனம், மொழி, சமயம், பண்பாடு, வரலாறு காக்கும் கருவிகாளாக விளங்கவேண்டும் எனும் சைவநெறிக்கூடத்தின் நோக்கம் ஒழுகுவதாக 
 நிகழ்வுகள் அமைந்தன.
காலை 06.00 மணிக்கு தொடங்கிய வழிபாடுகளைத் தொடர்ந்து 12.30 மணிக்கு தேர் இழுக்கப்பட்டு, 13.30 மணிக்கு அருளமுது அறுசுவை விருந்தாக அளிக்கப்பட்டது. தேர் முன்றலில் முத்தமிழ் நிகழ்வுகள்
 நடைபெற்றன.
தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டால் மட்டுமே வாழ்வு உண்டெனத் தேர்த்திருவிழா அடையாளமாக விளக்குவதாக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா அவர்கள் விளக்கினார்.
ஊர்கூடி இழுத்தால்  தேர்  வாசல் வந்து  சேரும், இன்று நாம் திருவாசல் வந்து அடைந்துள்ளோம், ஆனால் இன்னும் வாசல் வந்து சேரவேண்டிய தேர்கள் பல உண்டு, நாம் தமிழர்கள் ஒன்றாக இத்தேரை இழுத்து திருவாசல் சேர்க்க வேண்டும் என விளக்கினார்.
ஒருநாள் தமிழர்கள் தேர் திருவாசல் வரும் எனும் நம்பிக்கையுடன் ஞானலிங்கேச்சுரர் திருத்தேர் விழா 
நிறைவுற்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம்சய்தி >>>






புதன், 9 ஆகஸ்ட், 2017

தமிழ் இளைஞன் ஒருவர் சுவிஸில் சுவிஸ் பிரஜை கத்தியால் குத்தி படுகொலை

சுவிஸ் நாட்டில் St-Gall மாநிலத்தில் வசித்த 22 வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவர் சுவிஸ் பிரஜை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது St-Gall மாநிலத்தில் வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வெள்ளிகிழமை (04-08-2017) அன்று, St-Gall மாநிலத்தில் சன நடமாட்டம் உள்ள நகர் பகுதியில் (St gallen City, Market platz ) ஒரு உணவகத்தின் மத்தியில் அமைந்துள்ள தோட்டப் பகுதியில் இக் கத்திக்குத்துச் சம்பவம் நடந்ததாக தெரியவருகிறது.
கழுத்தில் ஆழமாக கத்திக்குத்து நடந்ததால், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபட்டு, தீவிர சிகிச்சையின் பலனளிக்காததால் நேற்று 08-08-2017 செய்வாய்கிழமை அன்று மரணமடைந்துள்ளார்.
கத்தியால் குத்தியவர் 42வயதுடைய சுவிஸ் பிரஜை எனவும், அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதாகவும் செங்களான் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது என்பது இதுவரை தெரியவில்லை
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சுவிஸ் வாழ் குடிமக்களுக்கு இப்படி ஒரு நிலையா?

சுவிட்சர்லாந்து நாட்டில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் அதற்கான மருத்துவ பரிசோதனையை தவிர்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சுவிஸ் சுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்று அரசின் அனுமதியுடன் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதற்காக சரியான மருத்துவ பரிசோதனையை மக்கள் மேற்கொள்கின்றனரா என கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஆய்வின் முடிவில், போதிய சேமிப்பும், வருமானமும் இல்லாத காரணத்தினாலும், மருத்துவ பரிசோதனைக்கு அதிகளவில் கட்டணம் செலுத்த வேண்டிய காரணத்தினாலும் பலரும் பரிசோதனையை தவிர்த்து வருவது தெரியவந்துள்ளது.
அதாவது, 11 நபர்களில் ஒருவர் மருத்துவ பரிசோதனையை தவிர்த்து வருவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு நடத்தப்பட்டவர்களில் சுமார் 25.5 சதவிகித மக்கள் ‘மருத்துவ கட்டணம் அதிகமாக உள்ளதால் பரிசோதனையை தவிர்த்து விட்டதாக’ தெரிவித்துள்ளனர். இதே எண்ணிக்கை 2010-ம் ஆண்டு 10 சதவிகிதமாக இருந்தது.
அதிகரித்துள்ள மருத்துவ கட்டணங்களுக்கு அதிகளவில் சுவிஸில் உள்ள வெளிநாட்டினர்களும், குறைந்தளவு ஊதியம் பெருபவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் 
தெரியவந்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 2 ஆகஸ்ட், 2017

சுவிஸ்சில்வாழும் இலங்கையர்களுக்கு இலங்கை அரசின் முக்கிய அறிவிப்பு!

சுவிசில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை அரசாங்கம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
அதன்படி சுவிசில் உள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிக்கை
 விடுத்துள்ளார்.
இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் Heinz Walker – Nederkoorn இன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அமைச்சர்
 இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சுவிசில் 50,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை நாடு திரும்பி நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு 
வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 25 ஜூலை, 2017

வாளால் சுவிட்சர்லாந்தில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்: 5 பேர் படுகாயம்!

சுவிட்சர்லாந்தின் சவோகவுசன் (Schaffhausen) நகரின் மத்திய பகுதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று வாளால் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜேர்மனி எல்லையில் அமைந்துள்ள சவோகவுசன் (Schaffhausen) நகரில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.(24.07.2017)?
உள்ளூர் நேரப்படி காலை 10.39 மணியளவில் பொலிசாருக்கு குறித்த தகவல் தொடர்பில் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மட்டுமின்றி அப்பகுதியில் அமைந்துள்ள கடைகள் மற்றும் பொதுமக்கள் புழங்கும் பகுதிகளை
 மூட உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் செயல்பட்டுவரும் நபர் ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில், நபர் ஒருவர் சாலையின் நடுவே நடந்து வந்ததாகவும், திடீரென்று chainsaw எனப்படும் ஆயுதத்தால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியதாக கூறியுள்ளார்.கண்மூடித்தனமான இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் இருவரது நிலை கவலைக்கிடம் எனவும் தெரிய வந்துள்ளது.
சம்பவயிடத்தில் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குறித்த தாக்குதலானது பயங்கரவாத தாக்குதல் அல்ல எனவும், மாயமான மர்ம நபரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மிகவும் ஆபத்தானவர் எனவும் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 20 ஜூலை, 2017

எஸ்.பி கட்சி கோரிக்கை சுவிஸில் பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை?:

சுவிட்சர்லாந்து நாட்டில் பிறக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் சுவிஸ் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி கட்சி
 முன் வைத்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி அந்நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படுவதில்லை.
சுவிஸில் வசிக்கும் தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கப்படுகிறது.
ஆனால், இச்சட்டத்தை நீக்கிவிட்டு சுவிஸில் பிறக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என SP கட்சியின் தேசிய கவுன்சிலரான Cedric Wermuth என்பவர் கோரிக்கை 
விடுத்துள்ளார்.
இதுக் குறித்து அவர் பேசியபோது, ‘அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் அந்நாடுகளின் குடியுரிமை தானாகவே கிடைக்கிறது.
பெற்றோர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைப்பதில் 
எவ்வித தடையும் இல்லை.
இதுபோன்ற ஒரு சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசும் பின்பற்ற வேண்டும்.
சுவிஸில் புகலிடம் பெற்ற அகதிகளாக இருந்தாலும், புகலிடத்திற்காக காத்திருக்கும் பெற்றோர்களாக இருந்தாலும், சுவிஸில் மண்ணில் இவர்களுக்கு குழந்தை பிறந்தால் சுவிஸ் குடியுரிமை தானாக கிடைக்கப்பெற வேண்டும்.
ஜனநாயகம் என்பது அனைத்து மக்களையும் ஒன்றாக இணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, மக்களின் ஒருமைப்பாட்டிற்கு முடிவாக இருக்க கூடாது’ என Cedric Wermuth கருத்து தெரிவித்துள்ளார்.
எனினும், இவரது கருத்திற்கு FDP மற்றும் SVP கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 11 ஜூலை, 2017

மனைவியின் பிரசவத்திற்கு கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை

சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவியின் பிரசவகாலத்தின் போது கணவருக்கு ஊதியத்துடன் கூடிய 20 நாள் விடுமுறை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் வாக்கெடுப்பில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ், சுவீடன், போலந்து, பின்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மனைவியின் பிரசவகாலத்தின் போது கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்கி
 வருகின்றன.
இந்த வரிசையில் போர்ச்சுகல் நாடு 100 சதவிகித ஊதியத்துடன் 5 வாரங்கள் கணவருக்கு விடுமுறை வழங்கி வருகிறது.
எனினும் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதை நிராகரித்து 
வருகிறது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Paternity Leave Now! என்ற பிரச்சார குழு இந்த கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களிடம் ஆதரவை திரட்டி வருகிறது.
சுமார் 1 லட்சம் மக்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்தால் இதுகுறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், எதிர்ப்பார்த்ததை விட தற்போது 1,30,000 பேர் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்து கையெழுத்திட்டுள்ளனர்.
இதுக் குறித்து பிரச்சார குழுவின் தலைவரான Adrian Wuthrich என்பவர் பேசியபோது, பொதுமக்களின் கோரிக்கை மனு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இத்திட்டத்திற்கு பொதுமக்கள் பெருமளவில் ஒப்புதல் அளித்துள்ளதால் 6 மாதங்களுக்கு பிறகு அரசாங்கம் நடத்தவுள்ள பொதுவாக்கெடுப்பு வெற்றிப் பெற வாய்ப்புள்ளது.
பொதுமக்களின் ஆதரவை தொடர்ந்து இத்திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துவதில் தடை இருக்க முடியாது என Adrian Wuthrich தெரிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 5 ஜூலை, 2017

சூரிச் நகரில் ட்ராம் மீது சிறுமி மோதி பலியான துயரச்சம்பவம்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ட்ராம் வாகனம் மீது மோதி சிறுமி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் உள்ள சூரிச் நகரில் தான் இத்துயர சம்பவம் 
நிகழ்ந்துள்ளது.
நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் சூரிச்சிற்கு அருகில் வசித்து வந்த 12 வயது சிறுமி ஒருவர் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
சில நிமிடங்களுக்கு பின்னர் Glattalbahn என்ற இடத்திற்கு வந்தபோது ட்ராம் வாகனம் செல்லக்கூடிய பாதையை சிறுமி கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
பாதையை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக வந்த ட்ராம் வாகனம் சிறுமியின் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில் சைக்கிளுடன் சில மீற்றர் தூரம் இழுத்துச்செல்லப்பட்ட சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் சிறுமியை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தினால் சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து பொலிசாருக்கு உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
ட்ராம் வாகனம் மீது மோதி சிறுமி உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி
 வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 19 ஜூன், 2017

சில இலங்கையர் சுவிஸ் வங்கியில் பதுக்கியுள்ள பணத்தால் ஆபத்து?

மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட பணத்தை பறிமுதல் செய்வதற்காக சுவிட்சர்லாந்து வங்கியுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை 
ஏற்படுத்தவுள்ளது.
இதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
(advertisement)
அதற்கமைய விசாரணை மேற்கொள்ளல், வழக்கு தாக்கல் செய்தல், குற்றத்தை தடுத்தல் மற்றும் மோசடியான முறையில் சேமித்த பணத்தை பறிமுதல் செய்தல் ஆகியன தொடர்பில் இருநாட்டு சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பில் இரு நாட்டிற்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி கொள்ள அமைச்சரவையினால்
 தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி 
வழங்கியுள்ளது.
பல்வேறு நபர்களினால் மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரியளவு பணத்தை சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளின் பிரதான தரப்பு வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மீது குற்றம் 
சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அவ்வாறு மோசடியான முறையில் பணம் சேகரித்து வைப்பு செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான ஆவணங்களும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 27 ஏப்ரல், 2017

உலகின் சிறந்த நாணயமாக சுவிட்சர்லாந்து நாணயம் தெரிவு!

சுவிட்சர்லாந்தின் 50 franc நாணயம் இந்த வருடத்துக்கான சிறந்த நாணயமாக தேர்வாகியுள்ளது.
உலகின் இந்த வருடத்துக்கான சிறந்த நாணயம் எது என்ற போட்டியை International Bank Note Society நிறுவனம் சமீபத்தில்
 நடைபெற்றது.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளின் 18 விதமான நாணயங்கள் காட்சிக்கு வைக்கபட்டது.
இதில் சிறந்த நாணயமாக சுவிட்சர்லாந்தில் 50 franc நாணயம் தேர்வானது. மேலும், அந்த நாணயத்துக்கு Bank Note of the year என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் சுவிஸ் நாணயத்துக்கு அடுத்த இடத்தை மாலைதீவின் 1000 Rufiyaa நாணயம் கைப்பற்றியது.
மாலைதீவு நாணயத்துக்கும், சுவிஸ் நாணயத்துக்கும் முதல் இடத்துக்கான தேர்வு கடுமையானதாக இருந்தது.
கடந்த 2016ல் மட்டும் உலக முழுவதும் 120 புதிய நாணயங்கள் மற்றும் பழைய நாணயங்கள் புது பொலிவு பெற்று வெளியிடப்பட்டது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஐம்பத்தைந்து ஆண்டுகள் சுவிஸில் வசித்த நபரைய்நாடு கடத்த அரசு உத்தரவு

சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்து 55 ஆண்டுகள் வசித்து வந்த நபர் ஒருவரை அவரது பெற்றோரின் சொந்த நாடான ஸ்பெயினிற்கு திருப்பி அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள Freiburg நகரில் கடந்த 1962-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெற்றோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை வளர்ந்தது முதல் கல்வி பயின்றது, அலுவலக வேலைக்கு சென்றது எல்லாம் சுவிட்சர்லாந்து நாட்டில் தான்.
சுவிஸில் குடியிருப்பு அனுமதி பெற்ற அவர் 17 வயதானது முதல் பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
திருடுவது, அடிதடியில் ஈடுப்படுவது, போதை மருந்து பழக்கம், சாலை விதிகளை மீறுவது, அரசு அதிகாரிகளுடன் தகராறில் ஈடுப்பட்டது உள்ளிட்ட 31 குற்றங்களை பல்வேறு வயதில்
 செய்து வந்துள்ளார்.
இவற்றில் சில குற்றங்களுக்காக சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார். தற்போது 55 வயதை அடைந்துள்ள நபரை ஸ்பெயின் நாட்டிற்கு அனுப்ப சுவிஸ் குடியமர்வு அதிகாரிகள் 
உத்தரவிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் கடந்தாண் இவருடைய குடியிருப்பு அனுமதியை அதிகாரிகள் பறித்துள்ளனர்.
மேலும், இவருக்கு வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
சுவிஸில் பிறந்து, கல்வி பயின்று பணியில் இருந்தாலும் கூட சமூகத்துடன் ஒற்றுமையாக இருக்கவில்லை எனில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 8 ஏப்ரல், 2017

அதிகமாக சுவிஸில் வெளிநாட்டினர்கள் வசிக்கும் பகுதிகளின் விரிவான பட்டியல்

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறியுள்ள மற்றும் பணி நிமித்தமாக வசித்து வரும் வெளிநாட்டினர்கள் எந்த பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சுவிஸ் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில், சுவிஸில் தற்போது 2,100,100 வெளிநாட்டினர்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையானது 2.5 சதவிகிதம் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.
சுவிஸில் உள்ள 26 மாகாணங்களை ஒப்பிடுகையில் அதிக வெளிநாட்டினர்கள் வசிக்கும் பட்டியலில் சூரிச் முதல் இடம் பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வாட் இரண்டாவது இடத்திலும், ஜெனிவா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மாகாண வாரியாக வெளிநாட்டினர்கள் வசிக்கும் பட்டியல் இதோ!
Geneva 196738
Jura 10642
Neuenburg 45680
Aargau 163664
Lucern 74106
Nidwalden 6029
Vaud 263775
Appenzell Ausserrhoden 8907
Schaffhausen 20872
Thurgau 99530
Glarus 9493
Graubunden 36608
Schwyz 32250
Solothurn 59171
Ticino 99530
Uri 4293
Zurich 395136
Zug 34119
Freiburg 69775
Valais 78647
Basel-Landschaft 63609
Bern 164783
Basel-Stadt 69018
St. Gallen 119662
Obwalden 5483
Appenzell Innerrhoden 1772
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Blogger இயக்குவது.