வியாழன், 22 மார்ச், 2018

வாகனம் செலுத்தும் போது கையடக்கதொலைபேசி உபயோகிப்பவர்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து வாலீஸ் (Wallis) மாகாணத்தில் வாகனம் செலுத்தும் போது கையடக்கதொலைபேசிகளை உபயோகிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வாலீஸ் மாகாண பொஸிஸார் அறிவித்துள்ளனர்.
வாகனம் செலுத்தும் போது கையடக்க தொலைபேசிகளை பாவிப்பதானது இனிவரும் நாட்களில் கடுமையான குற்றச் செயலாக கருதப்படும் (Criminal), அதேவேளை பொலிஸாரின் வழக்குப் பதிவைப் பொறுத்து தண்டப்பணம் 100 சுவிஸ் பிராங்குகளில் இருந்து அதிகரித்துச் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஓட்டுனர் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழப்பதோடு தண்டனையைப் பொறுத்து சிறைவாசம் அனுபவிக்க வேண்டிவரும் எனவும், பொஸிஸார் எச்சரித்துள்ளனர்.
கையடக்கதொலைபேசி பாவனையின் போது விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் காப்புறுதி இழப்பீட்டுத் தொகையும் குறைவதோடு, காப்புறுதி சலுகைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது.
வாகனம் செலுத்தும் போது கையடக்கதொலைபேசியை பாவிப்பதன் மூலமே அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதனை தடுக்கும் முகமாகவே அதிகபட்ச தண்டனைகளை வழங்க அதிரடி முடிவெடுத்துள்ளதாக பொலீஸார் மேலும்
 தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நடத்தப்பட்ட ஆய்வில் சுவிசில் புலம்பெயர்ந்த மாணவர்கள் அசத்தல்

பாரீஸில் அமைந்துள்ள Organisation for Economic Cooperation and Development (OECD) என்னும் அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுவிட்சர்லாந்து பள்ளிகளில் பயிலும் புலம்பெயர்ந்த மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதாகத் தெரியவந்துள்ளது.
திங்களன்று வெளியான அந்த ஆய்வு குறிப்பாக புலம்பெயர்ந்த மாணவர்களின் கல்வித்தரம் குறித்த முந்தைய புள்ளி விவரங்களையும் தற்போதைய புள்ளி விவரங்களையும் ஒப்பிட்டு நோக்கியது.
புலம்பெயர்ந்த மாணவர்கள் நன்றாகவே படிப்பதாகவும் அதிலும் 58%பேர் வாசித்தல், கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மாணவர்கள் உற்சாகமாகக் கற்கிறார்களா, மற்றும் பள்ளிச் சூழல் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 46%பேர் நேர்மறையான பதிலளித்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஐரோப்பிய மாணவர்களின் எண்ணிக்கையுடன் (66%)ஒப்பிடும்போது குறைவுதான் என்றாலும், சுவிட்சர்லாந்தில் பிறந்த மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது
 இது மிக அதிகமாகும்.
ஆனால் சுவிட்சர்லாந்தில் பிறந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த மாணவர்கள் இருவரின் எண்ணிக்கையையும் ஒப்பிடும்போது உலகிலேயே சுவிட்சர்லாந்து மாணவர்கள்தான் கல்வியில் உற்சாகமாகப் பங்குபெறும் மாணவர்களாகிறார்கள்.
ஆனால் சுவிட்சர்லாந்தை சொந்த நாடுபோல் உணர்கிறீர்களா என்ற கேள்விக்கு 54%வெளிநாட்டு மாணவர்கள்தான் ஆம் என்று பதிலளித்துள்ளனர்.
பத்தாண்டுகளுக்குமுன் இதே கேள்வி கேட்கப்பட்டபோது, ஆம் என்று பதிலளித்தவர்களை விட இந்த எண்ணிக்கை 17 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 14 மார்ச், 2018

சுவிசில் இருந்து இலங்கையர்கள் சிலர் திருப்பி அனுபப்பட்டனர்

இலங்கை தமிழர்கள் சிலரை நேற்றைய தினம் திருப்பி அனுப்புவதற்கு சுவிஸ் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 20இற்கும் மேற்பட்டோர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை 5 மணியளவில் விசேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த இலங்கைத் தமிழர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பரவலாக செய்திகள் வெளிவந்தபோதிலும், இந்த தகவல் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது
 குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 13 மார்ச், 2018

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் கட்டணம் அதிகரிப்பு

கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை குறைவாககாணப்பட்ட நிலையில் புகலிடம் கோருவோருக்கான கட்டணம் கடுமையாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் பெரும்பாலான புகலிடம் கோருவோருக்கான மையங்கள் பாதி மட்டுமே நிரம்பின.
அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் 3700 புகலிடம் கோருவோருக்கான படுக்கைகளில் கிட்டத்தட்ட பாதி வெறுமையாக இருந்ததாக SonntagsZeitung என்னும் நாளிதழ் நேற்று செய்தி 
வெளியிட்டது.
இந்த புள்ளிவிவரம் State Secretariat for Migration (SEM)இடமிருந்து பெறப்பட்டது. அதன்படி 2017 ஆம் ஆண்டில் 20 புகலிடம் கோருவோருக்கான மையங்களில் இரண்டில் மட்டுமே முக்கால்வாசி நிரம்பியிருந்தது. தனி நபருக்கான செலவு அதிகரித்ததன் காரணமாக இப்படி நிகழ்ந்துள்ளதாக
 கருதப்படுகிறது.
புகலிடம் கோரும் ஒரு நபருக்கான ஒரு நாள் செலவு 83 சுவிஸ் ஃப்ராங்குகள் என்று அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டுள்ளது. இது உணவு, பாதுகாப்பு மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தையும்
 உள்ளடக்கியதாகும்.
2017 ஆம் ஆண்டிலோ இது 132 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருந்தது. Bernese Oberlandஇலுள்ள ஒரு கிராமத்தில் இந்த தொகை 350 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருந்தது. இதற்குக் காரணம் அந்த கிராமத்தில் வெகு சில புகலிடம் கோருவோரே இருக்கின்றனர்.
தவறான பட்ஜெட்டால் அரசு 30 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை இழப்பதாக SonntagsZeitung குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் SEM என்னும் State Secretariat for Migration,புகலிடம் கோருவோரின்
 எண்ணிக்கையில் ஏற்படும் உயர்வு தாழ்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சுவிட்சர்லாந்து தயாராக இருக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு புகலிடத் தேவைகள் குறைவாக இருந்ததால் 900 படுக்கைகளை நீக்கியதாகவும் 
தெரிவித்துள்ளது.
அதேபோல் ஞாயிறன்று அரசாங்கம் புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர் ஒருவருக்கு, அவர் அனுபவித்த சித்திரவதை மற்றும் வேதனைக்காக பல ஆயிரம் சுவிஸ் ஃப்ராங்குகளை இழப்பீடாக வழங்கியதை SonntagsZeitung சுட்டிக்காட்டியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 6 மார்ச், 2018

சுவிசில் கேபிள் TVக்கு பணம் கட்டுவது சரியென வாக்களித்த மக்கள்

சுவிட்சர்லாந்தில் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு கட்டணம் வசூலிப்பது தொடரவேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதற்காக நேற்றைய தினம் வாக்கெடுப்புஒன்று நடத்தப்பட்டது.
ஆச்சரியத்திற்குரிய விதமாக மக்கள் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்தனர்.
சுவிட்சர்லாந்து மக்கள் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்காக ஆண்டுதோறும் வீடொன்றுக்கு 451 சுவிஸ் ஃப்ராங்குகளை கட்டணமாக
 செலுத்துகின்றனர்.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தாங்கள் பார்க்காத நிகழ்ச்சிகளுக்காக கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்தப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்
இதனால் சுவிட்சர்லாந்தில் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு கட்டணம் வசூலிப்பது தொடரவேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 71% பேர் 73 மாகாணங்களில் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்தனர்.
சுவிட்சர்லாந்து ஒரு சிறிய நாடு என்றும் அதன் கலாச்சாரத்தையும் மொழி வித்தியாசங்களையும் பிரதிபலிக்கும் வகையில் செயல்படும் ஒரு ஒளி, ஒலிபரப்பும் அமைப்பு நிச்சயம் தேவை என்று பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்த பிரிவினர் கூறுகின்றனர்.
சுவிட்சர்லாந்தின் ஒளி, ஒலிபரப்பும் அமைப்பான SBCயின் டைரக்டர் ஜெனரல் Gilles Marchand, இந்த வாக்கெடுப்பு முடிவுகள் நேர்மறையான கருத்துகளை வெளிப்படுத்தியிருப்பதாகவும், இந்த முடிவை வரவேற்கும் வகையில் தாங்கள் TV மற்றும் ரேடியோவுக்கான கட்டணத்தை முடிந்த அளவுக்கு குறைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து அரசும் 2019 முதல் இனி TV மற்றும் ரேடியோவுக்கான கட்டணத்தில் ஒரு கணிசமான தொகை குறைக்கப்படும் 
என்று கூறியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
Blogger இயக்குவது.