செவ்வாய், 24 நவம்பர், 2020

கொவிட்-19 தொற்றினால் சுவிசில் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் மொத்தமாக மூன்று இலட்சத்து 352பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும் சுவிஸ்லாந்தில் இதுவரை நான்காயிரத்து 222பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஒன்பதாயிரத்து 751பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 166பேர் 
உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 89ஆயிரத்து 430பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 522பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து ஆறாயிரத்து 700பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு
 திரும்பியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 21 மார்ச், 2020

இலங்கைக்கு சுவிஸிலிருந்து வந்த தலைமை போதகருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 
அதாவது  15,03,20, ஆம் திகதி இடம்பெற்ற வழிபாட்டின் போது சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அவர் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளார்.
விமான நிலையத்திலும் எவ்வித பரிசோதனைகளும் இவருக்கு இடம்பெறவில்லை.
வழிபாடு இடம்பெற்ற போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது என்பதுடன் ஒலிவாங்கியை கையில் பிடித்திருக்கவே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். பின்னர் சுவிஸ் நாட்டிற்கு மீள சென்றுவிட்டார்.
தற்போது அவருக்கு கொறோனா தெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சுவிஸ் 
நாட்டில் சிகிச்சை பெறுகிறார்.
இந்த தகவல் பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
எனவே தயவு செய்து அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் யாராக இருப்பினும் உடனடியாக மருத்துவ
 பரிசோதனைக்கு செல்ல வேண்டும். தனிமை படுத்தபட வேண்டும். அவர்கள் அனைவரையும் இனங்கண்டு மக்களும் அவர்களிடமிருந்து விலகி நடக்கவும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 26 பிப்ரவரி, 2020

கொடிய கொரானா வைரஸ். சுவிட்ஸர்லாந்திற்குள்ளும் பரவ ஆரம்பித்தது .

லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதல் முறையாக பிரேசில் நாட்டில் கொரோனா நோயாளி ஒருவர் பதிவாகிள்ளார்.இதேவேளை, ஜப்பானினுள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 861ஆக 
அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
தென்கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1000ஆக அதிகரித்துள்ள நிலையில் ஹொங்கொங் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 85ஆக 
அதிகரித்துள்ளது.
அமெரிக்கா முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, கொரோ வைரஸிற்கு முன் எச்சரிக்கையாக 
சென் பிரான்சிஸ்கோ நகரிற்கு அவசர நிலையை அறிவிப்பதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.வைரஸ் காரணமாக
 ஈரானினுள் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளதெனவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்துள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில், ஸ்பெய்ன் நாட்டின் கெனரி தீவில் உள்ள சுற்றுலா 
ஹோட்டலில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அங்கு தங்கியிருந்த 2000 சுற்றுலா 
பயணிகளுடன் ஹோட்டலை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் இத்தாலி நாட்டு வைத்தியர் எனவும் அவரை தனிமைப்படுத்தி சோதனையிடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.இதேவேளை, முதல் முறையாக சுவிட்ஸர்லாந்து நாட்டில் (லுகானோ மாநிலத்தில்) 70 வயதுடைய நபர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மேலும், இத்தாலி முழுவதும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளமையினால் இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் கொரோனா அச்சத்தில் இருப்பதாக தகவல் 
வெளியாகியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.