செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

புலம்பெயர் தமிழ் பெண் சுவிஸில் விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்தார்

புலம்பெயர் தமிழ் பெண்ணொருவர் சுவிஸ் நாட்டின் Helvetic Airways விமான நிறுவனத்தில் முதன் முறையாக விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்துள்ளார்
சுவிஸ் நாட்டில் பிறந்த செல்வராஜன் சுஸ்மீனா என்பவரே இவ்வாறு தனது இலக்கை அடைந்துள்ளார்.
மருத்துவத்துறையில் பயின்றுள்ள இவர், தான் உலகம் சுற்றி வரவேண்டும் என்ற ஆசையால் துறைசார் கல்வியை முடித்து இத்துறையைில் பணியாற்ற முன்வந்துள்ளார்.
பாடகியான இவர், அண்மையில் ஜேர்மன் நாட்டில் நடைபெற்ற Supper Star பாடல் போட்டி நிகழ்ச்சியிலும் பங்குகொண்டார்.
அத்துடன் புதிய ஆடைகளை உலகுக்கு காண்பித்தல் (Model) துறையிலும் தன்னை ஆர்வம் காட்டிவருகிறார்.
இவரின் பல்துறை சார் ஆற்றலை சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் வாழ்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


வெள்ளி, 3 ஜூன், 2022

சுவிட்சர்லாந்துக்கு உக்ரைனிலிருந்து வந்துள்ள அகதிகளுக்கு வெளியான அறிவிப்பு

உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ‘S’ permit என்னும் சிறப்பு அனுமதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை சுவிட்சர்லாந்து அரசாங்கம் 
வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திற்கு வந்துள்ள உக்ரைன் அகதிகள் ஓராண்டுக்கு வாழவும், பணி செய்யவும் அனுமதிக்கும் வகையில் இந்த ‘S’ permit என்னும் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கால எல்லையானது சிலநேரங்களில் நீட்டிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ‘S’ permit என்னும் அனுமதி தொடர்பிலான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், அதனால் அந்த அனுமதி ரத்து செய்யப்படலாம் என்றும் சுவிஸ் புலம்பெயர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, உக்ரைன் அகதிகள் மூன்று மாதங்களில் 15 நாட்களுக்குமேல் சுவிட்சர்லாந்திலிருந்து உக்ரைனுக்குச் சென்று தங்கினாலோ அல்லது இரண்டு மாதங்களுக்கு மேல் வெளிநாடு ஒன்றில் தங்கினாலோ, அவர்களுடைய ‘S’ permit என்னும் அனுமதியை அவர்கள்
 இழக்க நேரிடும்.
எனினும் நிரந்தரமாக உக்ரைன் திரும்புவதற்கான ஆயத்தங்கள் செய்வதற்காக ஒருவர் சுவிட்சர்லாந்திலிருந்து உக்ரைன் சென்றாலோ அல்லது உடல் நலமில்லாமல் இருக்கும் ஒரு உறவினரைக் காணச் சென்றாலோ அவர்களுக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

சுவிசில் தமிழால் சாதிக்கத் துடிக்கும் மாணவன் குவியும் வாழ்த்துக்கள்

தமிழர்களுக்கு ஒரு நாடு கிடைத்திருந்தால் அவர்களின் திறமையை உலகே பாராட்டியிருக்கும் என சுவிஸில் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அதீத பற்றுக்கொண்ட அர்ஜித் குமணன் எனும் மாணவன் கூறியுள்ளார்.சங்கீத பாடத்தில் இடம்பெற்ற பரீட்சை ஒன்றுக்கு கூட
அவர் தேர்வு செய்த பாடகராக, ஈழத்து காந்தக் குரலோன் எஸ். சி. சாந்தன் இருந்துள்ளார்.ஈழப்போராட்டத்திற்கு அவர் தனது இசையால் ஆற்றிய பணிகள், அவருக்கு கொடுக்கப்பட்ட சிறப்புப் பெயர்கள், இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சனைகள், இன்னும்
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற விடயம் உட்பட பல விடயங்களை தனது இசை (சபை) மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.சுவிஸ் சூரிக்கில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் இவர், தமிழ் மொழிசார்ந்த விடயங்களில் அதிக ஆர்வம் காட்டி 
வருவதாக தெரியவருகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>வியாழன், 3 பிப்ரவரி, 2022

நீங்கள் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறீர்களாஅதன் முக்கிய செய்தி

சில குறிப்பிட்ட விடயங்கள் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக அமைந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.
அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்…
1. வழக்கமான குடியுரிமை பெறும் முறை
உங்களிடம் நிரந்தர வாழிட உரிமம் C permit இல்லையென்றால், அல்லது தொடர்ந்து 10 ஆண்டுகள் நீங்கள் சுவிட்சர்லாந்தில் 
வாழவில்லை என்றால்…
8 முதல் 18 வயது வரை உள்ளவர்கள்சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த காலகட்டம் இரட்டிப்பாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனாலும், ஒருவர் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளாவது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும் என்கிறது மாகாண 
புலம்பெயர்தல் செயலகம்.
B or Ci உரிமத்துடன் வாழ்ந்த காலகட்டமும் அதில் அடங்கும்.
ஆனால், நீங்கள் ஒரு புகலிடக் கோரிக்கையாளராக மட்டுமே சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருந்தாலோ, அதாவது குறுகிய கால அனுமதிக்கான உரிமத்துடன் வாழ்ந்திருந்தாலோ (N permit or on a short stay L permit) உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இதுபோக, மாகாண அளவில், குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் நீங்கள் ஒரு மாகாணத்தில் வாழ்ந்திருக்கவேண்டியதும் 
அவசியம்.
நீங்கள் சுவிஸ் மக்களுடன் ஒருங்கிணைந்து வாழவில்லை என்றால்…
உள்ளூர் வாழ்க்கை முறை, உள்ளூர் மரபுகள் ஆகியவற்றுடன் நீங்கள் வாழும் இடம் குறித்து நீங்கள் நன்கு அறிந்துவைத்திருக்கவேண்டும்.
சரியான நேரத்திற்கு வரி செலுத்தாமை, கடன், குற்றப்பின்னணி ஆகியவையும் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்.
அரசு நிதி உதவி பெற்றீர்களா?
குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு மூன்று ஆண்டுகள் முன் வரை நீங்கள் அரசின் நிதி உதவி பெற்றிருந்தீர்களானால் உங்கள் குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
நீங்கள் இதுவரை பெற்ற உதவித்தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்தினால் உங்களுக்கு விதிவிலக்கு 
அளிக்கப்படும்.
2. எளிதாக்கப்பட்ட குடியுரிமை பெறும் முறை
இது சுவிஸ் குடிமகன் அல்லது குடிமகளை மணந்த அல்லது, வெளிநாட்டுப் பெற்றோருக்கு சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களுக்கான ஒரு வேகமான குடியுரிமை பெறும் முறையாகும்.
எளிதாக்கப்பட்ட என்று கூறப்பட்டாலும், அதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
வாழிடத் தேவைகள்
உங்கள் கணவர் அல்லது மனைவி சுவிஸ் குடிமகனாக அல்லது குடிமகளாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும். விண்ணப்பம் அளிப்பதற்கு
 முந்தைய ஆண்டு நீங்கள் சுவிட்சர்லாந்தில் செலவிட்டிருக்கவேண்டும். சுவிஸ் நாட்டவர் ஒருவரை திருமணம் செய்து அல்லது சுவிஸ் நாட்டவருடன் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது வாழ்ந்துவருபவராக இருக்கவேண்டும்.
இந்த நிபந்தனைகளுக்கு நீங்கள் உட்படாத பட்சத்தில், உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மூன்றாம் தலைமுறை வெளிநாட்டவர்
நீங்கள் சுவிட்சர்லாந்தில் பிறந்து சுவிட்சர்லாந்திலேயே வாழ்ந்து வருவதால் குடியுரிமை பெறுதல் எளிதாக இருக்கும் என நீங்கள் எண்ணலாம். ஆனால், அப்படியல்ல.
உங்கள் தாத்தா அல்லது பாட்டி, சுவிட்சர்லாந்தில் பிறந்தவராக இருக்கவேண்டும், அவர்கள் சுவிட்சர்லாந்தில் வாழும் உரிமை பெற்றவர்கள் என்பதை நிரூபித்தாகவேண்டும்.
உங்கள் தந்தை அல்லது தாய், நிரந்தர வாழிட உரிமம் பெற்று குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும். குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது சுவிட்சர்லாந்தில் கல்வி (compulsory schooling) கற்றிருக்கவேண்டும்.
நீங்கள் சுவிட்சர்லாந்தில் பிறந்தவராக இருக்கவேண்டும், நிரந்தர வாழிட உரிமம் பெற்றவராக இருக்கவேண்டும்.
நீங்கள் ஐந்து ஆண்டுகளாவது சுவிட்சர்லாந்தில் கல்வி கற்றவராக (compulsory schooling) இருக்கவேண்டும்.
நீங்கள் வெற்றிகரமாக சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வாழ்பவராக இருக்கவேண்டும்.
25ஆவது பிறந்தநாளுக்கு முன் விண்ணப்பத்தை சமர்ப்பித்திருக்கவேண்டும்.
இந்த விதிகளில் எதற்காவது நீங்கள் உட்படவில்லை என்றால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>செவ்வாய், 11 ஜனவரி, 2022

தனது அதீத திறமையால் சுவிசில் பலரால் பாராட்டைப் பெறும் ஈழத்தமிழன்

சுவிற்சர்லாந்தின் சுற்றுலாத்துறையில் முக்கியமானது Glacier Express எனும் மலைப்பாதை ரயில் சேவை. இந்த ரயில்சேவையின் விருந்தினர் உபசாரம் என்பது தனித்துவமானது.அந்தத் தனித்துவமான
 உணவுப் பரிமாற்றத்தில் தன் கைப்பக்குவம் காட்டும் தமிழனாக பல ஆண்டுகளாக நிலைத்து நிற்பவர் எமது கூர் மாநிலத்தின் கண்ணன் எல்லோராலும் அழைக்கப் படும்
 (Kailainathan Thiyagarajah)
இங்குள்ள உணவகத்தில் உணவு பரிமாற்றம் என்பது, ஒரு மருத்துவருக்கு நிகரான பொறுப்புணர்வோடும், அழகியற் கலைஞனுக்கே உரிய கற்பனைவளத்துடனும் மேற்கொள்ள வேண்டியது
.அந்த அரிய பணியை ஆற்றும் கலைஞனை, தமது ஆண்டு மலரில் கௌரவித்திருக்கிறது Glacier 
திசாலனின் 31ம் நாள் புண்ணியாகவசனம், நாமகரண
 கிரிகைகளில் எம்முடன் இருந்தவாறே தொலைபேசி வழியாக பணிக்கான ஆயத்தங்களை உதவியாளருக்குச் சொல்லிக் கொண்டிருந்த கண்ணனைக் 
காணும்போதே,
அவனது பணிமீதான காதலும், கடமை உணர்வும், உயர்வுகளைத் தரும் என்பது புரிந்தது. என்பதுடன் கண்ணனை பலரும் பாராட்டி 
வருகின்றனர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 6 ஜூன், 2021

தமிழ்ப் பாடநூல்கள் சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வு

தமிழீழ தேசத்தின் கல்வித் திணைக்களகமாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால்  5.6.2021அன்று .. சனிக்கிழமை 
தமிழீழத்தில்
இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் குழந்தைகளின் தமிழ்க் கல்வியின் மேம்பாட்டுக்காக, புலம்பெயர்ந்த தேசத்தில் தமிழ் பயிலும் மூன்றாவது தலைமுறையினரின் தமிழ்மொழி 
ஆற்றலை இலகுவாக வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் புதிய தமிழ்ப் பாடநூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

சுவிட்சர்லாந்திலும் பரவியது இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில்
கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்,உருமாற்றம் அடைந்து மேலும் தீவிரம் அடைந்துள்ளது.  இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்தது.
அதே போல் தென் ஆப்பிரிக்கா,பிரேசில் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தியாவில் இருமுறை உருமாறிய பி.1.617- என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக சுகாதார அமைப்புகள் 
தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் சுவிட்சர்லாந்து நாட்டில் பரவி உள்ளதாக அந்த நாட்டு பொது சுகாதார ஆணையம் 
தெரிவித்து உள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு  இந்தியாவின் உருமாறிய வைரஸ்  இருந்துள்ளது.
அவரது ரத்த மாதிரிகளை கடந்த மாதம் சேகரித்து ஆய்வு செய்ததில் அவருக்கு இந்தியாவின் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்ததாக சுவிட்சர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள்
 தெரிவித்தனர்.
இந்தியாவில் பரவியுள்ள வைரஸ் கண்டறியப்பட்ட பயணி, ஐரோப்பிய நாடு வழியாக சுவிட்சர்லாந்துக்கு விமானம் மூலமாக வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் பயணிகள் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன. அதுபோன்று சுவிட்சர்லாந்தும் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று 
எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது சுவிட்சர்லாந்தின் பயண தடை பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.