திங்கள், 31 ஆகஸ்ட், 2015

பயங்கர விபத்து : காருக்குள்ளே இருவர் சாவு

இத்தாலி நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நிகழ்ந்த எதிர்பாராத பயங்கர விபத்தில் சிக்கிய 2 சுவிட்சர்லாந்து வீரர்கள் காருக்குள்ளேயே எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் உள்ள கார்லசோ என்ற நகருக்கு அருகில் ரோண்டே பாரெல்லி என்ற கார் பந்தயம் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த கார் பந்தயத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டிசினோ மண்டலத்தை சேர்ந்த 2 வீரர்கள் கலந்துகொண்டனர்.
Renault Clio R3C என்ற அதிவேக காரில் பங்கேற்றபோது, ஒருவர் கார் ஓட்டுனராகவும், மற்றொருவர் முன்னிருக்கையில் அமர்ந்தவாறு ஓட்டுனருக்கு ஆலோசனை வழங்கியவாறு போட்டி 
நிகழ்ந்துள்ளது.
கார் பந்தயத்தின் இறுதி சுற்று வரும்போது, சுவிஸ் வீரர்கள் பயணித்த அந்த கார் தாருமாறாக ஓடி சாலையில் இருந்த ஒரு பெரிய சுவற்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் சுவற்றில் மோதிய வேகத்தில் தீப்பற்றியதால், வீரர்கள் இருவரும் உடனடி மயக்கத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த பயங்கர விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீட்பு குழுவினரால், உடனடியாக காருக்கு அருகில் செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது.
சில நிமிடங்களுக்கு பிறகு, மீட்புக்குழுவினர் தீப்பற்றி 
எரிந்த கார் அருகில் சென்று 2 பேரையும் மீட்க முயற்சித்துள்ளனர்.
ஆனால், காரின் இருப்பக்க கதவுகளும் திறக்க முடியாத அளவில் விபத்தில் சேதமடைந்துள்ளது.
தீவிரமாக முயன்றும் 2 நபர்களை காரை விட்டு வெளியே கொண்டு வர முடியாததால், இருவரும் காருக்குள்ளே எரிந்து உயிரிழந்துள்ளனர்.
கார் பந்தயத்தில் கலந்துகொண்ட இருவரும் திறமையான ஓட்டுனர்கள் என்றும், இதற்கு முன்னர் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர் என தகவல்கள்
 வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்களில் 22 வயதான நபருக்கு 10 மாத குழந்தையும், 39 வயதான மற்றொரு நபருக்கு 2 குழந்தைகளும் உள்ளது 
குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.