திங்கள், 16 ஜனவரி, 2017

டாக்ஸியில் இளம்பெண் பாலியல் துன்புறுத்தல்

சுவிட்சர்லாந்தில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் காரில் பயணித்த மாணவியிடம் தவறாக நடந்துக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு சூரிச் பகுதியில் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த இளம் கல்லூரி மாணவி ஒருவர், வீட்டிற்கு டாக்ஸியில்
 பயணித்துள்ளார்.
பயணத்தின் போது போதையில் மாணவி தூங்கியதை அடுத்து இதை சாதகமாக பயன்படுத்தி ஓட்டுநர் அத்துமீறி நடந்துள்ளார்.
உடனே விழித்துக்கொண்ட மாணவியிடம் தவறாக பேசவே, மாணவி ஓட்டுநரை தாக்கியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஓட்டுநர் மாணவியை காரிலிருந்து தூக்கி எறிந்துள்ளார்.
குறித்த வழக்கின் விசாரணை சூரிச் நீதிமன்றத்தல் நடைபெற்றது, இதன் போது ஓட்டுநர் மாணவி தான் அடித்து காரை சேதப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.
எனினும், விசாரணையின் முடிவில் ஓட்டுநர் குற்றவாளி என நிருபிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு 10 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 3000 பிராங்குகள் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.