வெள்ளி, 3 ஜூன், 2022

சுவிட்சர்லாந்துக்கு உக்ரைனிலிருந்து வந்துள்ள அகதிகளுக்கு வெளியான அறிவிப்பு

உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ‘S’ permit என்னும் சிறப்பு அனுமதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை சுவிட்சர்லாந்து அரசாங்கம் 
வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திற்கு வந்துள்ள உக்ரைன் அகதிகள் ஓராண்டுக்கு வாழவும், பணி செய்யவும் அனுமதிக்கும் வகையில் இந்த ‘S’ permit என்னும் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கால எல்லையானது சிலநேரங்களில் நீட்டிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ‘S’ permit என்னும் அனுமதி தொடர்பிலான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், அதனால் அந்த அனுமதி ரத்து செய்யப்படலாம் என்றும் சுவிஸ் புலம்பெயர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, உக்ரைன் அகதிகள் மூன்று மாதங்களில் 15 நாட்களுக்குமேல் சுவிட்சர்லாந்திலிருந்து உக்ரைனுக்குச் சென்று தங்கினாலோ அல்லது இரண்டு மாதங்களுக்கு மேல் வெளிநாடு ஒன்றில் தங்கினாலோ, அவர்களுடைய ‘S’ permit என்னும் அனுமதியை அவர்கள்
 இழக்க நேரிடும்.
எனினும் நிரந்தரமாக உக்ரைன் திரும்புவதற்கான ஆயத்தங்கள் செய்வதற்காக ஒருவர் சுவிட்சர்லாந்திலிருந்து உக்ரைன் சென்றாலோ அல்லது உடல் நலமில்லாமல் இருக்கும் ஒரு உறவினரைக் காணச் சென்றாலோ அவர்களுக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



Blogger இயக்குவது.