செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

அத்துமீறிய நடன ஆசிரியர்: 15 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி

சுவிட்சர்லாந்து நாட்டில் 13 வயது சிறுமியிடம் அத்துமீறி செயல்பட்ட நடன ஆசிரியருக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் கடுமையான தண்டனையை தீர்ப்பாக வழங்கியுள்ளது.
சுவிஸின் ஃபிரிபோர்க் மற்றும் வாட் மாகாணங்களுக்கு இடைப்பட்ட ப்ரோய் என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் 
நிகழ்ந்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு பெயர் வெளியிடப்படாத நடன ஆசிரியர் ஒருவர் தனது தாயார் மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீடு ஒன்றில் குடியேறியுள்ளார்.
இந்த வீட்டில் 13 வயதில் ஒரு சிறுமி வளர்ந்து வந்துள்ளார். சிறுமியின் தாயாருக்கும் நடன ஆசிரியருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டதால் சிறுமியிடம் நெருங்கி பழகியுள்ளார்.
இதுபோன்ற சூழலில் 2001-ல் இருந்து 2003ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமியை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுப்பது, அந்தரங்க உறுப்புகளை தீண்டுவது என எல்லை மீறி செயல்பட்டுள்ளார்.
நடன ஆசிரியரின் இந்த அத்து மீறல்கள் தொடர்பாக பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. தற்போது அந்த நடன ஆசிரியருக்கு 55 வயதும் சிறுமியாக இருந்தவருக்கு 28 வயதும் நிரம்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்தில் வந்துள்ளது. அப்போது, சிறுமியின் ஒப்புதலின் அடிப்படையில் தான் இவ்வாறு நடந்துக்கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால், 13 வயதில் உள்ள ஒரு சிறுமியை பலவந்தமாக பாலியல் விவகாரங்களில் ஈடுபடுத்தியது மன்னிக்க முடியாது குற்றம். இவை அனைத்தையும் பொலிசார் உறுதி
 செய்துள்ளனர்.
எனவே, குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடன ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டு 
தீர்ப்பளித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



குடியுரிமை பெற்ற இலங்கை மக்களின் எண்ணிக்கை எத்தனை?

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் குடியுரிமை பெற்ற இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.
சுவிஸில் குற்றம் புரிந்த வெளிநாட்டினர்களை நாடு கடத்துவது தொடர்பான விவகாரம் முற்றி வரும் நிலையில், சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு வெளிநாட்டினர்கள் தீவிரம் காட்டி 
வருகின்றனர்.
அதாவது, 2006 முதல் 2014ம் ஆண்டு வரை சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு வெளிநாட்டினர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
ஆனால், ’குற்றம் புரிந்த வெளிநாட்டினர்களை நாடுகடத்த 
வேண்டும்’ 
என சுவிஸ் மக்கள் கட்சி கொண்டு வந்துள்ள புதிய மசோதா வெளிநாட்டினர்களை குடியுரிமை பெறுவதற்கு வேகப்படுத்தியுள்ளது.
சுவிஸ் குடியமர்வு துறை அலுவலகம் இன்று
 வெளியிட்டுள்ள 
அறிக்கையில், 2014ம் ஆண்டை விட சுவிஸ் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதாவது, 2014ம் ஆண்டு முடிவு வரை 32,988 வெளிநாட்டினர்கள் சுவிஸ் குடியுரிமை பெற்றிருந்தனர்.
ஆனால், இந்த எண்ணிக்கை 2015ம் ஆண்டின் முடிவில் 20 சதவிகிதம் அதிகரித்து 40,588 என்ற எண்ணிக்கைக்கு அதிகரித்துள்ளது.
சுவிஸில் 2015ம் ஆண்டில் மட்டும் இலங்கையை சேர்ந்த 767 நபர்கள் சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ளனர்.
இதே வரிசையில், இத்தாலி - 5,477, ஜேர்மனி - 5,212, போர்ச்சுகல் - 3,614, பிரான்ஸ் - 2,583, பிரித்தானியா – 614, அமெரிக்கா – 390 நபர்கள் சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ளனர்.
சுவிஸில் வெளிநாட்டினர்கள் குடியுரிமை பெறுவதற்கு 3,000 பிராங்க் தொகைக்கு மேல் செலவாகும்.
சுவிஸ் குடியுரிமைக்கு தெரிவாக மத்திய, மாகாண மற்றும் உள்ளூர் வரை நேர்காணல்கள் நடைபெற்று சுமார் 3 வருடங்களில் குடியுரிமை வழங்கப்படும் என குடியமர்வு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திங்கள், 8 பிப்ரவரி, 2016

திடீர் அதிகரிப்பு: சுவிஸ் கடவுச்சீட்டு பெறும் அகதிகளின் எண்ணிக்கை என்ன காரணம் ?

சுவிட்சர்லாந்து நாட்டில் கடவுச்சீட்டு பெறும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் சரிவில் இருந்து 2015ம் ஆண்டில் திடீரென அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் குடியேறி குடியுரிமை பெற்றுள்ள அகதிகள் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பம் செய்வது கடந்த ஆண்டுகளில் சரிவை நோக்கியே சென்றுள்ளது.
அதாவது, கடந்த 2006ம் ஆண்டில் அகதிகள் உள்பட சுவிஸ் கடவுச்சீட்டை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 45,977 என்ற 
அளவில் இருந்தது.
ஆனால், இதற்கு பிறகு கடவுச்சீட்டை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே சென்று 2014ம் ஆண்டில் 32,609 என்ற எண்ணிக்கை வரை சரிந்துக்கொண்டு வந்துள்ளது.
அதாவது, கடந்த 10 ஆண்டுகளாக கடவுச்சீட்டுக்களுக்காக விண்ணப்பம் செய்வர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துக்கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், சரிவுக்கு சென்றுக்கொண்டு இருந்த எண்ணிக்கை கடந்த 2015ம் ஆண்டில் அதிவேகமாக மேலே செல்ல தொடங்கியுள்ளது.
குறிப்பாக, 2015ம் ஆண்டில் மட்டும் சுமார் 40,000க்கும் மேலானவர்கள் கடவுச்சீட்டுக்களை பெற்றுள்ளதாக சுவிஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த திடீர் அதிகரிப்பு குறித்து குடியமர்வு பற்றிய ஆய்வு மேற்கொண்டு வரும் நிபுணரான Etienne Piguet என்பவர் கூறியபோது, ’சுவிஸில் குடியுரிமை பெற்றுள்ள வெளிநாட்டினர்கள் திடீரென கடவுச்சீட்டு பெறுவதற்கு சுவிஸ் மக்கள் கட்சியின்(SVP) நடவடிக்கைகள் தான் காரணம் என
 கூறியுள்ளார்.
அகதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு இந்த கட்சி சிறு குற்றங்கள் புரிந்தாலும், அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாராளுமன்றத்தில் கடுமையாக வாதிட்டு வருகிறது.
மேலும், அகதிகளுக்கு எதிரான ஒரு வாக்கெடுப்பையும் எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி நடத்தவுள்ளது.
இவ்வாறு அகதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர்களுக்கு கடவுச்சீட்டு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் தான் அகதிகள் அவசரமாக கடவுச்சீட்டுகளை பெற்று வருகிறார்கள். இதனால் தான் இந்த திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 4 பிப்ரவரி, 2016

முடித்திருத்தும் தொழிலாளியிடம் கொள்ளை: தடுக்க வந்த பொலிசாருக்கு கத்திக்குத்து

சுவிட்சர்லாந்து நாட்டில் முடித்திருத்தும் தொழியாளியை தாக்கி கொள்ளையிடும்போது தடுக்க வந்த 3 பொலிசாரையும் தனி ஒருவனாக எதிர்த்து தாக்கிய கொள்ளையனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் சூரிச் நகரில் உள்ள Zeughausstrasse என்ற பகுதியில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த பகுதியில் உள்ள முடித்திருத்தும் சலூன் கடை ஒன்றிற்கு நேற்று 22 வயதான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் 
வந்துள்ளார்.
சலூன் கடைக்குள் நுழைந்ததும், அங்குள்ள Ibrahim Fatah என்ற உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளரை பலமாக கத்தியால் தாக்கியுள்ளார்.
இருவரையும் தாக்கிய கொள்ளையன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளான். இந்த தாக்குதல் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைவில் வந்து 
சேர்ந்துள்ளனர்.
இரு புறங்களிலும் வந்த 3 பொலிசார் கொள்ளையனை வழிமறைத்து நின்றுள்ளனர். சூழலை அறிந்த கொள்ளையன் கத்தியை காட்டி பொலிசாரை மிரட்டியுள்ளான்.
துணிச்சலை வரவழைத்துக்கொண்டு பொலிசார் கொள்ளையனை நெருங்கியுள்ளனர். அப்போது, திடீரென பொலிசார் ஒருவர் மீது கொள்ளையன் பாய்ந்து அவரிடம் இருந்த துப்பாக்கியை 
பறித்துள்ளான்.
சற்றும் எதிர்பாராத 3 பொலிசாரும் கொள்ளையனின் கை, கால்களை மடக்கி பிடித்து துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். கொள்ளையனுடன் இருந்த அவரது சகோதரியையும் பொலிசர் கைது செய்தனர்.
கொள்ளையனிடம் ஏற்பட்ட சண்டையில் 3 பொலிசாருக்கும் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சலூன் கடை உரிமையாளர் பேசியபோது, ‘எங்கள் மீது தாக்குதல் நடத்திய இதே நபர் கடந்த செவ்வாய்கிழமை கடைக்கு வந்து முன்னோட்டம் பார்த்துள்ளார்.
பின்னர், சலூன் கடையின் சூழலை நன்கு ஆராய்ந்துவிட்டு மீண்டும் வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



இளைஞர்களும் நாடுகடத்தபடுவார்களா?: பொதுமக்களுக்கு சுவிஸ் அமைச்சர் பதில்?

சுவிட்சர்லாந்து நாட்டில் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களும் நாடுகடத்தப்படுவார்களா என்ற பொதுமக்களின் கேள்விகளுக்கு அந்நாட்டு சட்ட அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டினர்களை உடனடியாக நாடுகடத்தும் சட்டத்தை அமுலாக்குவது தொடர்பாக சுவிஸ் மக்கள் கட்சி எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி வாக்கெடுப்பு 
நடத்தவுள்ளது.
இந்த வாக்கெடுப்பு குறித்து பொதுமக்களின் கேள்விகளுக்கு அந்நாட்டு சட்ட அமைச்சரான Simonetta Sommaruga கடந்த செவ்வாய்கிழமை நேரடியாக பதில் அளித்துள்ளார்.
அப்போது, பொதுமக்களில் ஒருவர் ‘குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் உள்ளிட்ட இளைஞர்களும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்களா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு அமைச்சர் பதிலளித்தபோது, ‘புதிதாக அமுலாக்கவுள்ள இந்த சட்டம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தனி விதிமுறைகளை பின்பற்றாது.
குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு எந்த வயதாக இருந்தாலும், அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு 
வெளியேற்றப்படுவார்கள்.
இதே நிகழ்ச்சியில் சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞரான Heinz Brand என்பவரும் பங்கேற்றுள்ளார்.
’குற்றத்தில் ஈடுப்பட்ட ஒரு இளைஞரை நாட்டை விட்டு வெளியேற்றினால், அவரை பிரிந்து அவரது குடும்பத்தினர் எப்படி சுவிஸில் தங்கியிருக்க முடியும்?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
’இந்த நடவடிக்கையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். இளைஞரை விட்டு பிரிய முடியாது என்றால், ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அந்த இளைஞருடன் தாய்நாட்டிற்கு திரும்பலாம்’ என பதிலளித்துள்ளார்.
எனினும், சுவிஸ் சட்ட அமைச்சகம் இந்த நடவடிக்கைக்கு எதிரான கருத்தை வெளியிட்டுள்ளது. அதாவது, சில குற்றங்களுக்காக இளைஞர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது என்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு எதிரானது.
எனவே, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள சட்ட சிக்கல்கள் ஏற்படும் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

சுவிஸ் வித்தியசமாக வீடியோ படப்பிடிப்பு விபரீதத்தில் முடிந்த காணொளி

சுவிட்சர்லாந்து நாட்டில் மற்றவர்களை கவரும் வகையில் வித்தியசமாக வீடியோ எடுக்க எண்ணிய 14 முதியவர்கள் ஈடுபட்ட செயல் விபரீதத்தில் முடிந்துள்ளது.

சுவிஸின் Graubunden மாகாணத்தில் உள்ள Arosa என்ற பகுதி சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற இடமாகும்.

இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வினோதமான ஒரு விளையாட்டில் ஈடுபட்டு உற்சாகம் அடைவார்கள்.

இந்த இடத்திற்கு அண்மையில் வந்த 14 முதியவர்கள் வித்தியாசமான வீடியோ ஒன்றை எடுத்துக்கொள்ள முடிவு செய்தனர்.

அதாவது, குழந்தைகள் பூங்காக்களில் விளையாடுவது போல் நீளமான மரக்கட்டை ஒன்றில் ஏறி நின்று ஊஞ்சல் போல் விளையாடி அதனை வீடியோ எடுத்துக்கொள்ள திட்டமிட்டனர்.

இதன்படி, நீளமான அந்த மரக்கட்டையின் ஒரு புறத்தில் சில முதியவர்கள் நின்றுக்கொள்ள, மறுபுறத்தில் நின்றுருக்கும் எஞ்சிய முதியவர்கள் நடக்க ஆரம்பத்தால், மற்றவர்கள் மேலே எழும்புவார்கள்.

இதுபோன்ற விளையாட்டில் ஒருமுறை செய்து வெற்றிக்கண்ட அவர்கள், மறுமுறை செய்தபோது தான் அந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

மரக்கட்டையின் ஒருபுறம் கீழே இறங்கியபோது, மறுபுறத்தில் மேலே எழும்பிய முதியவர்களால் சரியாக மரக்கடை மீது நிற்கமுடியாமல் தடுமாறியுள்ளனர்.

அப்போது கடையாக நின்ற முதியவர் தள்ளாடியவாறு அருகில் உள்ளவர் மீது மோத, அதன் பிறகு வரிசையாக ஒவ்வொருவராக கீழே விழுந்துள்ளனர்.

இந்த விபத்தில் சுமார் 8 முதியவர்களுக்கு தலையிலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த Alpin Medic மீட்புக்குழுவினர் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வித்தியாசமாக வீடியோ எடுக்க முயன்ற முதியவர்களுக்கு இது அவர்களது வாழ்க்கையில் மறக்க முடியாது வீடியோவாக அமைந்துவிட்டது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Blogger இயக்குவது.