திங்கள், 8 பிப்ரவரி, 2016

திடீர் அதிகரிப்பு: சுவிஸ் கடவுச்சீட்டு பெறும் அகதிகளின் எண்ணிக்கை என்ன காரணம் ?

சுவிட்சர்லாந்து நாட்டில் கடவுச்சீட்டு பெறும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் சரிவில் இருந்து 2015ம் ஆண்டில் திடீரென அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் குடியேறி குடியுரிமை பெற்றுள்ள அகதிகள் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பம் செய்வது கடந்த ஆண்டுகளில் சரிவை நோக்கியே சென்றுள்ளது.
அதாவது, கடந்த 2006ம் ஆண்டில் அகதிகள் உள்பட சுவிஸ் கடவுச்சீட்டை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 45,977 என்ற 
அளவில் இருந்தது.
ஆனால், இதற்கு பிறகு கடவுச்சீட்டை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே சென்று 2014ம் ஆண்டில் 32,609 என்ற எண்ணிக்கை வரை சரிந்துக்கொண்டு வந்துள்ளது.
அதாவது, கடந்த 10 ஆண்டுகளாக கடவுச்சீட்டுக்களுக்காக விண்ணப்பம் செய்வர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துக்கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், சரிவுக்கு சென்றுக்கொண்டு இருந்த எண்ணிக்கை கடந்த 2015ம் ஆண்டில் அதிவேகமாக மேலே செல்ல தொடங்கியுள்ளது.
குறிப்பாக, 2015ம் ஆண்டில் மட்டும் சுமார் 40,000க்கும் மேலானவர்கள் கடவுச்சீட்டுக்களை பெற்றுள்ளதாக சுவிஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த திடீர் அதிகரிப்பு குறித்து குடியமர்வு பற்றிய ஆய்வு மேற்கொண்டு வரும் நிபுணரான Etienne Piguet என்பவர் கூறியபோது, ’சுவிஸில் குடியுரிமை பெற்றுள்ள வெளிநாட்டினர்கள் திடீரென கடவுச்சீட்டு பெறுவதற்கு சுவிஸ் மக்கள் கட்சியின்(SVP) நடவடிக்கைகள் தான் காரணம் என
 கூறியுள்ளார்.
அகதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு இந்த கட்சி சிறு குற்றங்கள் புரிந்தாலும், அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாராளுமன்றத்தில் கடுமையாக வாதிட்டு வருகிறது.
மேலும், அகதிகளுக்கு எதிரான ஒரு வாக்கெடுப்பையும் எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி நடத்தவுள்ளது.
இவ்வாறு அகதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர்களுக்கு கடவுச்சீட்டு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் தான் அகதிகள் அவசரமாக கடவுச்சீட்டுகளை பெற்று வருகிறார்கள். இதனால் தான் இந்த திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.