வியாழன், 30 ஜூன், 2016

சுவிஸில் புகலிடம் மறுக்கப்பட்ட அனைவரும்நாடுகடத்தப்படுகிறார்களா?

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் மீது அந்நாட்டு மாகாண அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள 26 மாகாணங்களிலும் சுயாட்சி நடைபெற்று வருகிறது. அதாவது, மாகாண அரசுகளின் உத்தரவின் அடிப்படையில் தான் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் 
எடுக்கப்படும்.
இதுபோன்ற ஒரு சூழலில், புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் மீது ஒவ்வொரு மாகாணமும் என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பது தற்போது தெரியவந்துள்ளது.புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் மீது அதிகளவில் கண்டிப்பு காட்டாமல் அக்கறை செலுத்தி வரும் மாகாணங்களில் முதலில் இருப்பது Vaud மாகாணம் தான்.
இந்த மாகாணத்தில் புகலிடம் மறுக்கப்பட்டால், வலுக்கட்டாயமாக யாரையும் பொதுவாக வெளியேற்றுவது கிடையாது. உதாரணத்திற்கு, இந்த மாகாணத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட சுமார் 100 புலம்பெயர்ந்தவர்கள் Renens நகரில் முகாம்கள் அமைத்து பல மாதங்களாக தங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது குறித்து வாட் மாகாண அரசு கருத்து தெரிவித்தபோது, ‘குற்றப்பின்னணி உள்ளவர்கள் மீது கண்டிப்பு காட்டுவது உண்மை தான். ஆனால், குற்றம் செய்யாமல் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் நாங்கள் வித்தியசமான அனுகுமுறையை கையாண்டு 
வருகிறோம்.
இதன் மூலம், புகலிடம் மறுக்கப்பட்டவர்களை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக அவர்களை சமாதானப்படுத்தி, அவர்களுக்கு தேவையான நிதி உள்ளிட்ட வசதிகளை அளித்து அவர்களது தாய்நாடுகளுக்கு திரும்புமாரு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அனுகுமுறை மூலம் நிதி அதிகமாக செலவானாலும் கூட, தாய்நாடுகளுக்கு திரும்பி அங்கேயே தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாட் மாகாணத்திற்கு அடுத்தப்படியாக ஜெனிவா, Schaffhausen மற்றும் Zug ஆகிய மூன்று மாகாணங்கள் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் அக்கறையாக
 நடந்துக்கொள்கிறது.
ஏனைய மற்ற மாகாணங்கள் சராசரி விகிதத்தில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டாலும், Aargau, Graubunden, Lucerne, St Gallen, Ticino, Thurgau மற்றும் Valais ஆகிய 7 மாகாணங்கள் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்கின்றன.
இவற்றில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் Graubunden மாகாணம் சற்று வித்தியாசமாக செயல்பட்டு வருகிறது. புகலிடம் மறுக்கப்பட்டவர்களை இம்மாகாண அரசு நேரடியாக வெளியேற
 வலியுறுத்தாது.
இதற்கு மாறாக, புகலிடம் மறுக்கப்பட்டு Dublin ஒப்பந்த நாடுகளுக்கு செல்ல உத்தரவிடப்பட்ட நிலையிலும் அவர்கள் வெளியேற மறுத்தால், அவர்கள் அனைவரையும் Graubunden மாகாணத்தில் உள்ள நாடுகடத்தப்படும் சிறையில் தங்க வைப்படுகிறார்கள் என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 24 ஜூன், 2016

ஓட்டுனர் இல்லாத பேருந்து சுவிட்சர்லாந்து நாட்டில் அறிமுகம்


முதன் முறையாக சுவிட்சர்லாந்து நாட்டில் முதன் முதலாக தற்போது ஓட்டுனர் இல்லாத சிறிய ரக பயணிகள் பேருந்து சாலையில் பயணிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் வாலைஸ் மாகாணத்தில் உள்ள Sion என்ற நகரில் தான் இந்த சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.

மஞ்சள் நிறத்தில் இருக்கும் PostBus என்று அழைக்கப்படும் இந்த இரண்டு பேருந்துகள் ஒவ்வொன்றிலும் 11 இருக்கைகள் உள்ளன.

மின்சாரத்தால் இயங்கும் இந்த பேருந்து மணிக்கு 20 கி.மீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமைகளில் பிற்பகல் நேரத்தில் இந்த பேருந்துகள் இயக்கப்படும்.

இதில் பயணம் செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது. தானாக சாலையில் பயணிப்பது மட்டுமில்லாமல், சாலையில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து குறியீடுகளையும் நன்கு பதிவு செய்து பயணிக்கும்.

இந்த பேருந்து ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்பட்டாலும், இதில் ஒரு ஓட்டுனர் எப்போதும் இருப்பார். பயணத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர் வாகனத்தை உடனடியாக நிறுத்திவிடுவார்.

இதுமட்டுமில்லாமல், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டால், தூரத்தில் இருந்துக்கூட இதனை ரிமோட் மூலம் நிறுத்தி விடலாம்.

குளிர்சாதனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ள ஓட்டுனர் இல்லாத இந்த பேருந்தின் சோதனை ஓட்டம் எதிர்வரும் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

சனி, 11 ஜூன், 2016

சுவிஸ் மிக அமைதியான நாடுகளின் பட்டியல்: 7வது இடத்தில்உள்ளது?

உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டதில் முதல் 10 நாடுகளில் சுவிஸ் 7வது இடத்திற்கு தெரிவாகியுள்ளது.
இந்த ஆண்டிற்கான உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலை பிரபல தனியார் அமைப்பு ஒன்று 
வெளியிட்டுள்ளது.
இதில் உலக அளவில் வெறும் 10 நாடுகள் மட்டுமே உள்நாட்டு போர் மற்றும் தொடர் கலவரங்கள் ஏதுமின்றி மிக அமைதியான நாடுகளாக உள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நாடு உள்ளூரிலோ அல்லது அடுத்த நாடுகளுடனோ எவ்வித மோதல் போக்குடனும் ஈடுபட்டிருக்க கூடது என்பதை அடிப்படை விதியாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
எவ்வித பாகுபாடும் இன்றி சுவிஸ் நாடு நடுநிலையோடு அண்டை நாடுகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்தப் பட்டியலில் எளிதாக இடம் பெற்றுள்ளது.
பட்டியலில் முதலிடத்தை ஐஸ்லாந்து நாடு கைப்பற்றியுள்ளது. அடுத்த இடத்தில் டென்மார்க் உள்ளது, தொடர்ந்து 3வது இடத்தில் ஆஸ்திரியாவும் நான்காவது இடத்தில் நியூசிலாந்தும் ஐந்தாவது இடத்தில் போர்ச்சுகல் நாடும் உள்ளது.
6வது இடத்தில் செக் குடியரசும் 7வது இடத்தில் சுவிஸ் வந்துள்ளது. 8வது இடத்தில் கனடாவும் 9வது இடத்தில் ஜப்பானும், 10வது இடத்தில் ஸ்லோவேனியா வந்துள்ளது.
இதில் 47வது இடத்தில் பிரித்தானியாவும், 103வது இடத்தில் அமெரிக்காவும், 120வது இடத்தில் சீனாவும், 151வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.