புதன், 27 டிசம்பர், 2017

சுவிசில் ரயில் கட்டணங்கள் அடுத்தாண்டு குறைக்கப்படும்;

சுவிஸில் மதிப்பு கூட்டு வரிகள் குறைக்கப்படுவதன் விளைவாக ரயில் கட்டணங்களும் அடுத்தாண்டு குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வரியானது 8லிருந்து 7.7 சதவீதமாக வரும் ஜனவரி முதல் குறைக்கப்படவுள்ளது, இதன் காரணமாக
 யூன் மாதம் முதல் சுவிஸ் ரயில் பயண கட்டணங்கள் 0.3 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்படவுள்ளதாக நாட்டின் பொது போக்குவரத்து தொழில் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பழைய ஓய்வூதிய திட்டத்தை விரிவாக்கம் செய்யலாமா என கடந்த செப்டம்பர் மாதம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் வாக்காளர்கள் அதை நிராகரித்தனர்.
இதன் காரணமாகவே நாட்டின் மதிப்பு கூட்டு வரி குறைக்கப்படவுள்ளது, சுவிஸில் ரயில் பயண கட்டணங்கள் குறைக்கப்படும் அதே வேளையில் ஜேர்மனியில் இந்த மாதம் 2 சதவீத கட்டணம் 
உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல பிரித்தானியாவில் வரும் ஜனவரி 2-ஆம் திகதி முதல் 3.4 சதவீதம் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது 
குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






சனி, 9 டிசம்பர், 2017

தொடர்வண்டி (TRAM) போக்குவரத்து சுவிஸ் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஆரம்பம்.

பாசல் மாநில போக்குவரவு சேவையான BVB நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாசல் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள ஜேர்மனியின் Weil am Rhein நகரின் தொடருந்து நிலையம் வரை Tram போக்குவரத்தை  விஸ்தரித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக பாசல் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டின் எல்லை நகரான St louis நகரின் தொடருந்து நிலையம் வரை தனது போக்குவரத்தினை விஸ்தரிக்க நீண்ட காலமாய் எடுத்த முயற்சி இன்று நடைமுறைக்கு வருகின்றது
இன்று மதியம் ஒரு மணியளவில் உத்தியோகபூர்வமான போக்குவரவு ஆரம்பமாகவுள்ளது. இன்று மதியம் ஒரு மணி முதல் இரவு ஆறு மணி வரை இலவசமாக பயணஞ் செய்ய முடியும். இச் சேவையை வரவேற்கும் முகமாக இரு நாடுகளிலும் பல தரப்பட்ட சிறப்பு நிகழ்வுகள்
 நடைபெறவுள்ளன.
கீழே இணைக்கப்பட்டுள்ள இரண்டாவது படத்திலுள்ள அட்டைகள் பாசல் மாநிலத்தின் அனைத்து Tram மற்றும் பேருந்துக்களிலும் உள்ளது. அதை எடுத்துச் செல்பவர்களுக்கு இலவச குளிர்பானம் 
காத்திருக்கின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.