திங்கள், 26 டிசம்பர், 2016

இலங்கை தமிழருக்கு சுவிஸில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை.?.

சிறீலங்காவின் பிரதான வீதியான ஏ-9 நெடுஞ்சாலையில் 2016ஆம் ஆண்டு மாத்திரம் அதிக பட்ச விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இவ்விபத்தில் 117 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன எனவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தவகையில், அண்மையில் சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் இதற்குள்ளேயே அடங்கும்.
இந்த விபத்தில் 10 அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் 
உயிரிழந்தார்.
ஏ-9 நெடுஞ்சாலையில் அதிகளவிலான விபத்துக்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளன என்றும் இந்த தரவுகளின் மூலம் 
தெரியவந்துள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாலும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியதாலுமே இவ்விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>திங்கள், 19 டிசம்பர், 2016

சுவிஸில் புதிய சட்டங்கள் வர உள்ளன ?

சுவிஸில் வசிப்போர் பின்வரும் விடங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது தற்போது அவசியமாகியுள்ளது.
குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறவும் பணி ஒப்பந்தமாக தங்கவும் வெளிநாட்டினர்களுக்கு புதிய விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடிப்படையில் சுவிஸில் குடியேறும் மற்றும் பணி ஒப்பந்தமாக தங்கும் வெளிநாட்டினர்கள் அவசியமாக சுவிஸ் தேசிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.
பின்னர், பொது இடங்களில் குடிமக்களுடன் மரியாதையுடனும் கனிவுடனும் பழக வேண்டும். சுவிஸ் தேசிய பாதுகாப்பையும் சமூக பழக்க வழக்கங்களை மதிப்பதுடன் அந்நாட்டு பொருளாதார வளர்ச்சியிலும் பங்கேற்க வேண்டும்.
இதுபோன்ற விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வெளிநாட்டினர்களின் பி- அனுமதிபத்திரம்   உடனடியாக ரத்து செய்யப்படும். 
மேலும், 
சி.அனுமதிபத்திரம்  உள்ளவர்களின் அனுமதியானது தற்காலிக குடியிருப்பு அனுமதிக்கு
 மாற்றப்படும்.
இதுமட்டுமில்லாமல், சுவிஸில் 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் வெளிநாட்டினர்களும் இந்த விதிகளை பின்பற்றாவிட்டால் அவர்களுடைய அனுமதியும் பறிக்கப்படும் வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இக்கோரிக்கை தொடர்பான விவாதம் நடைப்பெற்ற பிறகு அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள்
 வெளியாகியுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 8 டிசம்பர், 2016

கணிதத்தில் ஐரோப்பியா நாடுகளில் சுவிஸ் மாணவர்கள் தான் கில்லியாம்!

ஐரோப்பிய நாடுகளில் சுவிற்சர்லாந்து நாட்டு பள்ளி மாணவ, மாணவிகள் தான் கணிதத்தில் புலி என்ற விடயம் ஆய்வில் 
தெரியவந்துள்ளது.
Organization for Economic Cooperation and Development என்னும் அமைப்பு சமீபத்தில் பள்ளி பாடங்கள் சம்மந்தமாக ஒரு ஆய்வை 
மேற்கொண்டது.
அதில், ஐரோப்பியா நாடுகளில் சுவிற்சர்லாந்து நாட்டை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் தான் கணிதத்தில் கெட்டிக்காரர்கள் என தெரியவந்துள்ளது.
இதுவரை இதில் முதலிடத்தில் இருந்த எஸ்டோனியா நாட்டை பின்னுக்கு தள்ளி சுவிற்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
கணிதத்தை பொருத்தவரை சுவிற்சர்லாந்துக்கு அடுத்தடுத்த இடங்களில் நெதர்லாந்து, டென்மார்க், ஸ்லோவேனியா போன்ற
 நாடுகள் உள்ளன.
அறிவியல் பாடம் விடயத்தில் சுவிற்சர்லாந்து முதலிடம் பிடிக்கவில்லை என்றாலும் களரவமான இடத்தையே பிடித்துள்ளது.
அதனுடன் மற்ற ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, பிரித்தானியா, பின்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளும் உள்ளதாக ஆய்வுகள் 
கூறுகின்றது.
உலகளவி லான நாடுகள் பட்டியலில் கணிதம், அறிவியல் போன்ற எல்லா பாடங்களிலும் சிங்கப்பூர் முதலிடம் வகிப்பது 
குறிப்பிடத்தக்கது.    
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 5 டிசம்பர், 2016

குடியுரிமை வழங்கும் குழுவில் சுவிசில் ஈழத்தமிழ் பெண்மணி.

சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் பிரஜா உரிமை வழங்கும் விசாரணைக்குழுவில் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவுக்கு திருமதி. தர்ஷிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் தெரிவு
 செய்யப்பட்டுள்ளார்.
மற்றும், தூண் நகராட்சியில் வாழும் சுவிஸ் மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் 18 வயது மேற்பட்டவர்களுக்கான குடியுரிமை பெறும் உயர்மட்டக்குழு விண்ணப்பதாரர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு குடியுரிமை வழங்கும் குழுவிலும் அங்கம் வகிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் தை மாதம் முதல் தனது பணியை தர்சிகா கிருஸ்ணானந்தம் ஆரம்பிக்கவுள்ளார்.
அவருக்கான கடிதம் தூண் நகராட்சியினால் இன்று வழங்கப்பட்டுள்ளது, அந்த நகராட்சியில் குடியுரிமை வழங்கும் உயர்மட்டக்குழுவில் அங்கம் வகிக்கும் முதலாவது புலம்பெயர் பெண்மணியும் இவரே 
என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 16 நவம்பர், 2016

சுவிஸ்சில் இருந்து ஒன்பது பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த 9பேர் மீளவும்   இங்கைக்கு  நாடுகடத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு நாடு கடத்தப்பட்டஇலங்கையர்கள் விபரம் தற்போது
 வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கிளிநொச்சியைச் சேர்ந்த சிவகுமார் சிந்துஜன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பிரதஜா நிரோசன், புங்குடுதீவு ரஜீவன், லிந்துதாஸ் இனுவில், பாலசுதன் யாழ்ப்பானம், காண்டீபன் பருத்தித்துறை, சிவநேசன் பருத்தித்துறை போன்ற இடங்களைச்
 சேர்ந்தவர்கள்.
குறித்த 9 பேரும் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளவர்கள் எனவும் இவர்கள் அந்தநாட்டு சட்ட திட்டத்தை மீறி குடியேறிய நிலையில் இவர்கள் நாட்டை விட்டு திருப்பி நாடு கடத்தப்பட்டு ள்ளனர்
இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் இன்று (புதன்கிழமை)  பிற்பகல் 1.05 மணி விசேட விமான மூலம் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்களை விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை செய்து வருவதாக கட்டு நாயக்க பொலிசார் 
தெரிவித்தனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 9 நவம்பர், 2016

சுவிஸ் உடல் எடை அதிகரிப்பால் தவிக்கும் ஓர்சிலமக்கள் ஆய்வில் தகவல்!

சுவிஸ் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதிக உடல் எடையால் அவதிப்பட்டு வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறித்த ஆய்வறிக்கையில் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 2,000 இளைஞர்களை இது தொடர்பாக ஆய்வு செய்ததில் 44 விழுக்காடு பேர் அதிக உடல் எடை கொண்டவர்களாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் பெண்களை விடவும் ஆண்களே இருமடங்கு அதிக எண்ணிக்கையில் உடல் எடை அதிகரிப்பால் தவித்து வருவதாக
 கூறப்படுகிறது.
மட்டுமின்றி மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் பரிந்துரைத்துள்ள 5 பங்கு பழங்கள் மற்றும் சைவ உணவுகளை எடுத்துக்கொண்ட 13 விழுக்காட்டினர் இந்த சிக்கலில் இருந்து மீண்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் பரிந்துரைத்துள்ள உணவில் 3 முதல் 4 பங்கு பழங்கள் மற்றும் சைவ உணவுகளை எடுத்துக்கொண்ட நான்கில் ஒரு பங்கு மக்கள் அதிக உடல் எடை பாதிப்பில் இருந்து மீள்வார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜேர்மன் மற்றும் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகம் கொண்ட பகுதிகளில் 13-14 விழுக்காடு மக்கள் பழ வகையில் ஒருபகுதிக்கும் குறைவாகவும் காய்கறி உணவுகளையும் எடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை இலத்தீன் மொழி பேசும் மக்கள் அதிகம்கொண்ட பகுதியில் 22 விழுக்காடாக
 அதிகரித்துள்ளது.
லாசான்னே பல்கலைக்கழகம் மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் ஆகியவை ஒன்றிணைந்து குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 8 நவம்பர், 2016

பாலியல் துஷ்பிரயோகம் செய்து மாடுகளை கொன்ற காமகொடூரன்!

சுவிட்சர்லாந்தில் இளைஞன் ஒருவன் இரண்டு மாடுகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Fribourg மாகாணத்திலேயே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மாடுகளை கொன்ற குற்றத்திற்காக பொலிசார் 20 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.
சம்பவத்தன்று மாலை மாட்டு பண்ணையில் நுழைந்த இளைஞன் இரண்டு மாடுகளை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோம் செய்துள்ளான்.
இதைக்கண்ட உரிமையாளர் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் குற்றவாளியை விரட்டி பிடித்துள்ளனர்.
இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு மாடுகளும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், அவனுக்கு மனநலம் குறித்த சோதனை நடத்தப்படவுள்ளது.
ஏனெனில் 14 வயதில் சகோதரனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக சிறார் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவன் என்பது நினைவுக்கூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 6 நவம்பர், 2016

உங்களுக்கு சுவிஸ் விசா வேண்டுமா? இந்த வழிமுறைகளை' பின்பற்றுங்கள்?

சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விரும்பும் ஒருவரின் தாய்நாட்டு குடியுரிமையின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிய பிறகு விசா வழங்கப்பட்டு வருகிறது.
சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு முன்னர் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.
முதலில், சுவிஸ் நாட்டில் உங்களை எடுக்கும்
 நிறுவனம் அல்லது தனிநபர் அளிக்கும் அதிகாரப்பூர்வமான ‘அழைப்பு கடிதம்’(Letter of Invitation) அல்லது ’நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்’(declaration of sponsorship) ஆகிய இரண்டு கடிதங்களில் ஒன்றை உங்கள் தாய்நாட்டில் உள்ள சுவிஸ் தூதரகத்திற்கு கொடுக்க வேண்டும்.
அழைப்பு கடிதம்
சுவிஸில் உள்ள அந்த நிறுவனம்/தனிநபர் உங்களை அதிகாரப்பூர்வமாக அழைப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
மேலும், அந்த அழைப்பு கடிதத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் சுவிஸில் தங்குகிறீர்கள்? என்ன நோக்கத்திற்காக 
தங்குகிறீர்கள்?
மேலும், எத்தனை முறை சுவிஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறீர்கள்? என்ற தகவல்களை குறிப்பிட வேண்டும்.
அதேபோல், இந்த கடிதத்தில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரை தொடர்புக்கொள்ளும் முகவரியும் உங்களுடைய முகவரியும் இடம்பெற வேண்டும்.
உதாரணத்திற்கு, குடும்ப பெயர், முதல் பெயர், பிறந்த திகதி, குடியுரிமை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும்.
மேலும், உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரின் கையெழுத்து மற்றும் அதன் திகதியும் இடம்பெற வேண்டும்.
முக்கியமாக, இந்த அழைப்பு கடிதம் சுவிஸ் நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டாவதாக, சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான நிதி வசதிகள் உங்களிடம் இருப்பதை சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் நிரூபிக்க வேண்டும்.
இதனை நீங்கள் வாங்கும் ஊதிய அறிக்கை அல்லது வங்கி இருப்பு அறிக்கை மூலம் அதிகாரிகளிடம் நிரூபிக்கலாம்.
இவ்வாறு இல்லாமல், உங்களுடைய அனைத்து செலவுகளையும் உங்களை சுவிஸ் நாட்டில் எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் ஏற்றுக்கொண்டால், அதனை அழைப்பு கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.
நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்
சுவிஸ் நாட்டிற்கு செல்ல உங்களிடம் போதுமான நிதி ஆதாரம் இல்லை என சுவிஸ் தூதரக அதிகாரிகள் சந்தேகம் அடைந்தால், அவர்களிடம் நீங்கள் ’நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்’(declaration of sponsorship) அளிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.
இந்த கடிதமான அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும். அதாவது, உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அங்குள்ள உள்ளூர் அதிகாரி அல்லது மாகாண குடியமர்வு துறை அதிகாரியிடம் கையெழுத்து பெற்றுருக்க வேண்டும்.
இந்த கடிதத்தில் கையெழுத்து போடுவதன் மூலம் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அங்குள்ள குடியமர்வு துறைக்கு 30,000 பிராங்க் வரை செலுத்த நேரிடும்.
காப்பீட்டு ஆவணம்
சில நேரங்களில் உங்களுடைய அல்லது உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரின் காப்பீட்டு ஆவணத்தை சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த காப்பீட்டு கடிதமானது 30,000 பிராங்க் வரையிலான மருத்துவ செலவினங்களை ஏற்றுக்கொள்ளும்.
அதாவது, சுவிஸில் நீங்கள் தங்கியிருக்கும்போது உங்களுக்கு உடல்நலக்குறைவு காரணமாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் அல்லது சுவிஸில் மருத்துவம் பார்க்கவும் மற்றும் விபத்து உள்ளிட்ட பிற சூழ்நிலைகளில் உங்களுடைய செலவினங்களை இந்த காப்பீடு ஏற்றுக்கொள்ளும்.
மேலே கூறிய இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றினால், விசா பெறுவதற்கான அடுத்த கட்டத்தை 
அடைய முடியும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 18 அக்டோபர், 2016

சுவிஸில் கொள்ளை கூட்டத்தின் தலைவன் கைது!!!

சுவிஸில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கூட்டத்தின் தலைவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Fribourg மாகாணத்தின் bulle மாவட்டத்தில் 2015ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடம்பெற்று வரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சுவிஸ் நாட்டை சேர்ந்த 23 வயது இளைஞனை அதிரடியாக கைது செய்துள்ளனர். விசாரணையில் அவன் அப்பகுதியில் குடியேறிகள் போல் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
பொலிசார் அளித்துள்ள தகவலில், சோதனையில் பல திருட்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், Bulle நகரில் கட்டிடங்கள் மற்றும் பல்வேறு கடைகளின் அடித்தளத்தில் 2015 மற்றும் பிப்ரவரி 2016 க்கும் இடைப்பட்ட காலத்தில் திருட்டப்பட்ட பொருட்கள் தெளிவுபடுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கைதுசெய்யப்பட்ட போர்த்துகீசிய மற்றும் மொராக்கோ நட்டை சேர்ந்த குடியேறி இளைஞர்கள் குறித்த கொள்ளைகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 6 அக்டோபர், 2016

தமிழாசிரியர்களுக்கான பட்டயமளிப்பு விழா சுவிஸ்சில் இடம்பெற்றது!

சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச்சேவை இந்தியாவில் இயங்கி வரும் SRM பல்கலைக்கழகத்துடன் இணைந்து அயலகத் தமிழாசிரியர் பட்டயமளிப்பு விழா சுவிற்சர்லாந்தில் நடை பெற்றது.
பட்டயப் படிப்பினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டயமளிப்பு விழா கடந்த 10.09.2016ஆம் திகதி காலை 10.00 மணி முதல் சூரிச் ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக இப்பட்டயமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அணிவகுப்பு இசையுடன் அரங்கினுள் அழைத்து வரப்பட்டனர்.
தமிழ்மொழி வாழ்த்து, சுவிஸ் நாட்டுப்பண் தமிழ்த்தாய் வாழ்த்து, அகவணக்கம் என விழாவிற்குரிய அனைத்து அம்சங்களுடனும் ஆரம்பமாகிய இப்பட்டயமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களும் பட்டயப்படிப்பின் பயிற்றுனர்களாக பணியாற்றிய ஆசிரியர்களும் மலர்மாலை அணிவித்தும் நினைவுப்பரிசில்கள் வழங்கியும் 
மதிப்பளிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரைகளுடன் பட்டயமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இப்பட்டயமளிப்பு விழாவினைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டிற்கான ஆசிரியப் பட்டயப் படிப்பின் ஆரம்ப விழாவும் 
நடைபெற்றது.
தங்கப்பதக்கம் பெற்ற தஸ்மினி ரட்ணராஜா வெள்ளிப்பதக்கம் பெற்ற சாம்பவி மோகனதாஸ் ஆகியோரோடு பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றுப் பட்டயம் பெற்ற அறுபத்து நால்வருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு அவர்களின் ஆசிரியப்பணி செம்மையுடன் திகழ அவர்கள் தொடர் கல்விகளையும் பட்டப் படிப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் என வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இப்பட்டயமளிப்பு விழாவில் SRM பல்கலைக்கழகத் தேர்வு ஆணையாளர் முனைவர் எஸ். பொன்னுச்சாமி அவர்களும் பேராசிரியர் இல.சுந்தரம் அவர்களும் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் தலைவர் திரு. சு. உதயபாரதிலிங்கம் உட்பட பலரும் கலந்து 
சிறப்பித்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 4 அக்டோபர், 2016

இலங்கை தமிழர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல்!

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல் இருப்பதால் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள சுவிஸ் அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன.
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து இலங்கையில் மனித உரிமைகள் காக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து சுவிஸில் இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் அளிப்பதற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும் என சுவிஸ் அரசு கடந்த யூலை மாதம் அறிவித்தது.
ஆனால், புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும்போது அவர்கள் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக சுவிஸ் மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
சுவிஸில் தற்போது இலங்கையை சேர்ந்த சுமார் 50,000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். ஆனால், இவர்கள் அனைவருக்கும் புகலிடம் 
வழங்கப்படவில்லை.
இவ்வாறு புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் ஆலோசனை மேற்கொள்ள சுவிஸ் சட்ட அமைச்சரான Simonetta Sommaruga அடுத்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின்போது சுவிஸில் தமிழர்களுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாகவும், புகலிடம் மறுக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவது தொடர்பாகவும் இரு நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 17 செப்டம்பர், 2016

உலகிலேயே சுவிட்சர்லாந்து பசுமையான நகரத்தை கொண்டுள்ள நாடு!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரம் உலகிலேயே பசுமையான நகரங்களில் முதல் இடத்தை பிடித்து அந்நாட்டிற்கு பெருமையை சேர்த்துள்ளது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Arcadis என்ற நிறுவனம் உலகளவில் பசுமையான 100 நகரங்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், சுவிஸில் உள்ள சூரிச் நகர் இந்த 100 நகரங்களில் முதல் இடத்தை 
பிடித்துள்ளது.
உலகளவில் பசுமையாக திகழும் முதல் 10 நகரங்களின் பட்டியல்:
சூரிச் (சுவிட்சர்லாந்து)
சிங்கப்பூர் (சிங்கப்பூர்)
ஸ்டாக்ஹோம் (சுவீடன்)
வியன்னா (ஆஸ்திரியா)
லண்டன் (பிரித்தானியா)
பிராங்க்பர்ட் (ஜேர்மனி)
சியோல் (தென் கொரியா)
ஹேம்பர்க் (ஜேர்மனி)
பிரேக் (செக் குடியரசு)
முனிச் (ஜேர்மனி)
இதே பட்டியலில், பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் 15-வது இடத்திலும், கனடாவில் உள்ள வான்கூவர் நகர் 23-வது இடத்திலும், அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகர் 26-வது இடத்திலும் 
உள்ளன.
இதே பட்டியலில் இந்தியாவில் உள்ள சென்னை 89-வது இடம் பெற்றுள்ளது. எனினும், இந்த பசுமையான 100 நகரங்களின் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 7 செப்டம்பர், 2016

கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய மூவர் சுவிஸில் கைது!

சுவிஸில் பல கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Bursins மாவட்டத்தில் உள்ள பல வீடுகள் புகுந்து திருடி வந்த பிரான்ஸ், மொராக்கோ மற்றும் அல்ஜீரிய நாட்டை சேர்ந்த மூன்று பேர் பிடிப்பட்டுள்ளனர்.
Denes பகுதியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமான இருந்த வாகனம் குறித்து அப்பகுதி மக்கள் தகவல் 
கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய வகையில் பயணித்து வந்த காரை மடக்கி, பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் Denes பகுதியில் கொள்ளையடித்த பொருட்கள் சிக்கியுள்ளது.
இதை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், அதில் வந்த மூவரும் பிரான்ஸ், மொராக்கோ மற்றும் அல்ஜீரிய நாட்டினர் என
 தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் நடந்த பல திருட்டு சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யபட்ட மூவரிடமும் தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 17 ஆகஸ்ட், 2016

ரூபாய்.2.34 கோடி மதிப்புள்ள நகைகளை திருடிய பெண்!

  சுவிட்சர்லாந்து நாட்டில்  ரூபாய் 2.34 கோடி  மதிப்புள்ள நகைகளை திருடிய வேலைக்கார பெண்ணிற்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுவிஸில் உள்ள லூசேர்ன் மாகாணத்தில் பெண்களை வீடு வீடாக அனுப்பி சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் Obwalden மாகாணத்தை சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
நிறுவனம் அனுப்பும் வீடுகளுக்கு சென்று சுத்தம் செய்யும் பணியை இவர் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 2011ம் ஆண்டு முதல் மார்ச் 2012ம் ஆண்டு வரை இந்த வேலைக்காரப் பெண் 5 வீடுகளில் திருடியுள்ளார்.
இவ்வாறு இவர் திருடிய நகைகளின் ஒட்டுமொத்த மதிப்பு 1,56,000 பிராங்க்(2,34,41,163 இலங்கை ரூபாய்) ஆகும்.
பெயர் வெளியிடப்படாத இப்பெண் மீது திருட்டு குற்றம் அம்பலமானதை தொடர்ந்து அவர் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
பெண் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது, 5 வீடுகளில் நகைகளை திருடியது நிரூபனம் ஆனதை தொடர்ந்து பெண்ணிற்கு நீதிமன்றம் 20 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இவ்வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு ஆன 8,500 பிராங்க் செலவினத்தையும் அப்பெண் செலுத்த வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளா
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

ஒரு உணவகம்:பரந்த வெளியில்சுவர்கள் இல்லை, கூரையும் இல்லை!

சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் நிறுவனம் ஒன்று கூரை எதுவும் இல்லாத பரந்த வெளியில் உணவம் ஒன்றை அமைத்து அசத்தி வருகின்றது.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகாமையில் பிரபல ஹொட்டல் ஒன்று Zero Star உணவகம் என்ற பெயரில் இந்த நூதன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த உணவகத்தின் சிறப்பு என்னவெனில் இங்கு சுவர்கள் இல்லை மட்டுமின்றி கூரையும் இல்லை. திறந்த வெளியில் இயற்கையை அனுபவித்தபடி உணவு அருந்தலாம், தூங்கி 
ஓய்வெடுக்கலாம்.
ஒரே ஒரு அறை மட்டுமே கொண்ட இந்த சிறப்பு சேவையானது கடல் மட்டத்தில் இருந்து 6,463 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஒரு நாள் இரவு இந்த சிறப்பினை அனுபவிக்க சுமார் 15,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை Frank மற்றும் Patrik ஆகிய இரு கலைஞர்கள் தங்களுக்கு அறிமுகமான விருந்தோம்பல் நிபுணர் ஒருவருடன் இணைந்து செயல்படுத்தியுள்ளனர்.
இங்கு வந்து தங்குபவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் உணவுகளை சமைத்து வழங்க ஒரு சமையல்கலைஞரையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதிக குளிர் நாட்களில் இங்கு விருந்தினர்களை அனுமதிப்பதில்லையாம். மட்டுமின்றி பனிப்பொழிவு காலங்களிலும் ஹொட்டல் மூடப்படுமாம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வாலிபரை கத்தியால் தாக்கி கொள்ளையிட்ட மர்ம நபர்கள்!

சுவிட்சர்லாந்து நாட்டில் கழிவறைக்கு சென்ற வாலிபரை கத்தியால் குத்திவிட்டு கொள்ளையடித்த இரண்டு மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
பேசல் மாகாணத்தின் Freiburgerstrasse என்ற பகுதியில் உள்ள கழிவறைக்கு 19 வயதான வாலிபர் ஒருவர் சென்றுள்ளார்.
அப்போது, அறையின் வாயிலில் நின்று இருவர் திடீரென வாலிபர் மீது பாய்ந்து அவரை தாக்கியுள்ளனர்.
மேலும், இருவரில் ஒருவன் கத்தியை எடுத்து வாலிபரின் இடுப்பு பகுதியில் குத்திவிட்டு அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியுள்ளனர். இச்சம்பவத்திற்கு பிறகு வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் 18 வயதான வாலிபர் ஒருவர் இருவரிடம் குறிப்பிட்ட முகவரி ஒன்றை கேட்டுள்ளார்.
முகவரியை தெரிவிப்பதாக கூறிய இருவர் வாலிபரை அழைத்துச் சென்றுள்ளனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு இருவரில் ஒருவன் வாலிபரை மடக்கி பிடித்துக்கொள்ள மற்றொருவன் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வாலிபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இரு சம்பவங்கள் தொடர்பாக ஆதாரங்கள் சேகரித்துள்ள பொலிசார் கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை தீவிரமாக தேடி
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 4 ஆகஸ்ட், 2016

குடியுரிமைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி?

எதிர்வரும் 2018 ஜனவரி 1-ம் திகதி முதல் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
தற்போது சுவிஸில் 12 ஆண்டுகளாக குடியிருக்கும் வெளிநாட்டினர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், 2018ல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் மூலம் சுவிஸில் 10 ஆண்டுகளாக குடியிருப்பவர்களும் குடியுரிமை பெற முடியும்.
எனினும், இவர்கள் C permit எனப்படும் நிரந்தர குடியிருப்பு அனுமதியை பெற்றிருப்பது அவசியமாகும்.
தற்போது, B permit எனப்படும் தற்காலிக குடியிருப்பு பெற்றவர்களும் குடியுரிமை கோரி விண்ணிப்பிக்கலாம்
ஆனால், 2018ம் ஆண்டு புதிய சட்டத்தின் மூலம் B permit வைத்துள்ள சுமார் 6,50,000 வெளிநாட்டினர்களுக்கு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் உரிமை பறிக்கப்படும்.
இதுபோன்ற ஒரு சூழலில், சுவிஸில் உள்ள Socialist Party(SP) கட்சி ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 1-ம் திகதி சுவிஸில் தேசிய திணம் கொண்டாடப்பட்டபோது எஸ்.பி கட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், சுவிஸ் குடியுரிமைக்கு காத்திருக்கும் வெளிநாட்டினர்களுக்கு உதவ தானாக முன்வந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலேயே சுவிஸில் தான் குடியுரிமை பெறுவதற்கு என்ணற்ற தடைகள் உள்ளன. இதைவிட, 2018ம் ஆண்டின் புதிய சட்டம் கூடுதலான சிரமங்களை உருவாக்கும்.
எனவே, B permit வைத்துள்ள ஒவ்வொரு வெளிநாட்டினருக்கும் கடிதம் அனுப்ப எஸ்.பி கட்சி முடிவு செய்துள்ளது.
அதாவது, ஒவ்வொரு மாகாண அரசுடன் இணைந்து அங்குள்ள B permit வைத்துள்ள வெளிநாட்டினர்கள் எப்படி குடியுரிமை பெறுவது? என்னென்ன விதிகளை பின்பற்ற வேண்டும்? என்னென்ன உதவிகள் தேவை? என்பதை அறிந்து எஸ்.பி கட்சி உதவும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டை பொருத்தவரை அனைத்து தகுதிகளும் இருந்தாலும், அந்நாட்டு குடிமக்களிடம் ஒருங்கிணைந்து பழகாத வெளிநாட்டினர் குடியுரிமை பெறுவது மிகவும் கடினமாகும்.
உதராணமாக, சுவிஸில் கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்த அமெரிக்க குடிமகன் ஒருவர் சுவிஸ் குடிமக்களிடம் சரியாக கலந்து பழகாத காரணத்திற்காக அவருக்கு 2014ம் ஆண்டு குடியுரிமை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 3 ஆகஸ்ட், 2016

சுவிஸ் விமானங்கள்அதிக விபத்துக்குள்ளாகின்றது !

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 2015 ஆம் ஆண்டும் மட்டும் சுவிஸ் பதிவு விமானங்கள் அதிக விபத்துகளில் சிக்கியுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுகிறது.
சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் 75 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பட்டியலிட்டுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் இந்த புள்ளிவிவரங்களை ஒப்பிடுகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டும் ஒட்டுமொத்தமாக 71 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்படுகிறது. மேலும் 2004 ஆம் ஆண்டு இது 73 எனவும் 
பதிவாகியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் சுவிஸில் பதிவு செய்யப்பட்ட விமானங்களால் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக கடந்த 2012 ஆம் ஆண்டு 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் சுவிஸ் பொது விமானச் சேவையின் பல்வேறு பிரிவுகளில் அதிரடியான மாற்றங்கள் கடந்த 2015-ல் இருந்தே துவங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டுக்காட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் தற்போது குட்டி ரக விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர் உள்ளிட்டவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்பட்டு வரும் நிலையில், ட்ரோன் உள்ளிட்ட குட்டி விமானங்களால் அதிக விபத்து ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

எதற்காக தெரியுமா ஜெனிவா ஏரியை கடந்து சாதனை படைத்த ஸ்பெயின் நபர்?

ஸ்பெயினை சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் ஜெனிவா ஏரியில் 83 கிலோ மீற்றர் தூரம் கடந்து சாதனை படைத்துள்ளார்.
Jaime Caballero எனபவர் ஸ்பெயின் நீச்சல் வீரர். இவர் பிரித்தானியாவின் Gibraltar கடல் பகுதி மற்றும் Ibiza தீவு பகுதியை நீச்சலடித்து கடந்து சாதனை படைத்தவர்.
இந்நிலையில் இவர் ஜெனிவா ஏரியில் 83 கிலோ மீற்றர் தூரத்தை 24 மணி நேரத்திற்குள் கடந்து 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த ஞாயிறு மாலை 3 மணியளவில் இந்த சாதனை பயணத்தை Villeneuve என்ற இடத்தில் ஏரியின் கிழக்கு பகுதியில் இருந்து தொடங்கி வெற்றிகரமாக முடித்தார்.
இந்த சாதனை பயணத்தின் போது ஒரு படகு, மருத்துவர்கள் அவர் கூடவே பாதுகாப்புக்காக சென்றனர். வழியில் அவருக்கு உணவளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர் இந்த சாதனை பயணத்தை நீரழிவு நோய் விழிப்புணர்வுக்காகவும், ஜெனிவாவின் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை திரட்டவும் மேற்கொண்டுள்ளார்.
இவரின் இந்த செயலுக்கு ஜெனிவா நகர மேயர் Guillaume Barazzone பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து Jaime Caballero கூறுகையில், நான் நன்றாகவே முயற்சி செய்தேன். இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நீச்சலடிப்பது உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் கடினமானது.
இந்த சாதனை பயணத்தின் போது மழையாலும், உயர்ந்த அலையாலும் அவதிப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 14 ஜூலை, 2016

இலங்கை குடிமக்களுக்குபுகலிடம் வழங்க கடும் கட்டுப்பாடுகள்:?

சுவிட்சர்லாந்து நாட்டில் இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு புகலிடம் வழங்க இனிமேல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அந்நாட்டு குடியமர்வு துறை அலுவலகம் அதிரடியாக
 அறிவித்துள்ளது.
சுவிஸ் குடியமர்வு துறை அலுவலகமான SEM சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு சுவிஸில் புதிதாக புகலிடம் வழங்குவதில் கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகள் தற்போது ஓரளவிற்கு சீரடைந்துள்ளது என சுவிஸ் அரசு நம்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
’’தற்போது இலங்கையில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. குறிப்பாக, கருத்து சுதந்திரம், பொது இடங்களில் கூடுவது உள்ளிட்ட மனித உரிமைகள் தற்போது வளர்ச்சி அடைந்துள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் இலங்கையில் இருந்து புகலிடம் கோரி வரும் அந்நாட்டு குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு அகதி அந்தஸ்த்துடன் புகலிடம் அளிப்பதற்கு கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’’ என அந்த அறிக்கையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளும் தற்போது குறைந்து வருகிறது.
எனினும், மனித உரிமைகள் தொடர்பான சில விடயங்களில் முன்னேற்றம் இல்லை என்பதால், தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும்போது தனிக்கவனம் செலுத்தப்படும்.
நடப்பாண்டு மே மாதம் இறுதி வரை 5,000 இலங்கை குடிமக்கள் சுவிஸில் நுழைய அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3,674 நபர்களுக்கு அகதி அந்தஸ்த்துடன் புகலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
1,316 நபர்களின் புகலிடக் கோரிக்கை மனுக்கள் தற்போது நிலுவையில் உள்ளன. மேலும், 1,613 நபர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும், இவர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழலில் உள்ளனர்.
ஈழத்தமிழர்களுக்கான சுவிஸ் கவுன்சிலின் துணை தலைவரான Anna Annor என்பவர் 47 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ’’இலங்கை நாட்டிற்கு திரும்பிச் செல்லும் தமிழர்கள் அனைவரையும் ‘தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு’ ஆதரவானவர்கள் என அந்நாட்டு அரசு முடிவு செய்கிறது.
இதன் விளைவாக, கொழும்பு விமான நிலையத்திலேயே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறையிலும் அடைக்கப்படுகிறார்கள்.
2009ம் ஆண்டு யுத்தத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களில் பலரை அந்நாட்டு அரசு இதுவரை விடுதலை செய்யவில்லை.
எனினும், கடந்த 2014ம் ஆண்டு முதல் இலங்கை நாட்டில் சூழல்கள் மாறியுள்ளன. கடந்த ஜனவரி முதல் பெப்ரவரி வரை இலங்கை நாட்டிற்கு திரும்பியவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சுவிஸில் புகலிடம் கோரும் இலங்கை குடிமக்கள் மீது கடுமையான நிபந்தனைகள் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 7 ஜூலை, 2016

கழுகுக்கு புறாவை பலி கொடுத்த கொடூரனுக்கு அபராதம்?

சுவிட்சர்லாந்து நாட்டில் புறாவை திட்டமிட்டு கழுகுக்கு இறையாக்கிய நபருக்கு 11 மாதங்கள் சிறை தண்டனையும் 6 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் சூரிச் நகருக்கு அருகில் உள்ள Dielsdorf பகுதியை சேர்ந்த போலியான சமூக ஆர்வலர் மீதான குற்றம் தான் தற்போது
 நிரூபிக்கப்பட்டுள்ளது.
42 வயதான இவர் சுமார் 200 புறாக்களை வளர்த்து வருகிறார். புறாக்களை வானத்தில் பறக்கவிட்டு அவை எவ்வளவு நேரம் தரைக்கு திரும்பாமல் பறந்திருக்கும் என்பதை நிரூபிக்கும் போட்டியிலும் இவர் பங்கேற்று வந்துள்ளார்.
இந்த போட்டியில் பங்கேற்க இவர் தனது புறாக்களுக்கு நீண்ட நேரம் பறக்கும் பயிற்சியை அளித்து வந்துள்ளார்.
ஆனால், கழுகை போன்ற ராஜாளிப்பறவைகள் புறாவை நடுவானில் கொன்றுவிடுவதால் அந்த ராஜாளிப்பறவைகளை கொல்ல திட்டமிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்தாண்டு புறா ஒன்றின் உடல் மீது கடுமையான விஷத்தை தடவி வானத்தில்
 பறக்கவிட்டுள்ளார்.
இவர் எதிர்ப்பார்த்தது போல் ராஜாளிப்பறவை ஒன்று புறாவை வேட்டையாடி தின்றுள்ளது.
துரதிஷ்டவசமாக புறாவின் உடலில் இருந்த விஷத்தால், அந்த ராஜாளி பரிதாபமாக பலியானது. சுவிஸ் நாட்டில் ராஜாளிப்பறவைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த பறவைகளை கொல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பெயர் வெளியிடப்படாத அந்த நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில தினங்களில் தீர்ப்பில் அவருக்கு 11 மாதங்கள் சிறை தண்டனையும் 4,000 பிராங்க் (6,03,447 இலங்கை ரூபாய்) அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 2 ஜூலை, 2016

தமிழர் பண்பாட்டு உடையில் வந்து மாநகர சபையின் உறுப்பினர் திருமதி தர்ஷிகா

சுவிஸ்தமிழர் பண்பாட்டை மறந்து வாழ்வோர் மத்தியில் இவர் தமிழர் பண்பாட்டு உடையில் வந்து எமது பாரம்பரியத்தை வெளிக்காட்டியுள்ளார்..
சுவிசின் தூண் மாநகர சபையின் உறுப்பினராக திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் பிராத்ஹவுசில் நடந்த கூட்டத்தில் முதற் தடவையாக கலந்து கொண்டார்.
அப்போது மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டதுடன், இன்றிலிருந்து எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்னால் முடிந்த நல்ல சேவைகளை செய்வேன் என கூற கடமைப்பட்டுள்ளேன்.
சுதந்திரமான வாழ்வுக்கும், சுகாதாரமான வாழ்வுக்கும், படிப்பு, பிள்ளைகள், குடும்பம் என இந்த விடயங்களில் கூடுதலாக அழுத்தத்தை கொடுத்து பாடுபடுவேன் என்பதை கூற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

வியாழன், 30 ஜூன், 2016

சுவிஸில் புகலிடம் மறுக்கப்பட்ட அனைவரும்நாடுகடத்தப்படுகிறார்களா?

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் மீது அந்நாட்டு மாகாண அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள 26 மாகாணங்களிலும் சுயாட்சி நடைபெற்று வருகிறது. அதாவது, மாகாண அரசுகளின் உத்தரவின் அடிப்படையில் தான் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் 
எடுக்கப்படும்.
இதுபோன்ற ஒரு சூழலில், புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் மீது ஒவ்வொரு மாகாணமும் என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பது தற்போது தெரியவந்துள்ளது.புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் மீது அதிகளவில் கண்டிப்பு காட்டாமல் அக்கறை செலுத்தி வரும் மாகாணங்களில் முதலில் இருப்பது Vaud மாகாணம் தான்.
இந்த மாகாணத்தில் புகலிடம் மறுக்கப்பட்டால், வலுக்கட்டாயமாக யாரையும் பொதுவாக வெளியேற்றுவது கிடையாது. உதாரணத்திற்கு, இந்த மாகாணத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட சுமார் 100 புலம்பெயர்ந்தவர்கள் Renens நகரில் முகாம்கள் அமைத்து பல மாதங்களாக தங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது குறித்து வாட் மாகாண அரசு கருத்து தெரிவித்தபோது, ‘குற்றப்பின்னணி உள்ளவர்கள் மீது கண்டிப்பு காட்டுவது உண்மை தான். ஆனால், குற்றம் செய்யாமல் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் நாங்கள் வித்தியசமான அனுகுமுறையை கையாண்டு 
வருகிறோம்.
இதன் மூலம், புகலிடம் மறுக்கப்பட்டவர்களை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக அவர்களை சமாதானப்படுத்தி, அவர்களுக்கு தேவையான நிதி உள்ளிட்ட வசதிகளை அளித்து அவர்களது தாய்நாடுகளுக்கு திரும்புமாரு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அனுகுமுறை மூலம் நிதி அதிகமாக செலவானாலும் கூட, தாய்நாடுகளுக்கு திரும்பி அங்கேயே தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாட் மாகாணத்திற்கு அடுத்தப்படியாக ஜெனிவா, Schaffhausen மற்றும் Zug ஆகிய மூன்று மாகாணங்கள் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் அக்கறையாக
 நடந்துக்கொள்கிறது.
ஏனைய மற்ற மாகாணங்கள் சராசரி விகிதத்தில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டாலும், Aargau, Graubunden, Lucerne, St Gallen, Ticino, Thurgau மற்றும் Valais ஆகிய 7 மாகாணங்கள் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்கின்றன.
இவற்றில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் Graubunden மாகாணம் சற்று வித்தியாசமாக செயல்பட்டு வருகிறது. புகலிடம் மறுக்கப்பட்டவர்களை இம்மாகாண அரசு நேரடியாக வெளியேற
 வலியுறுத்தாது.
இதற்கு மாறாக, புகலிடம் மறுக்கப்பட்டு Dublin ஒப்பந்த நாடுகளுக்கு செல்ல உத்தரவிடப்பட்ட நிலையிலும் அவர்கள் வெளியேற மறுத்தால், அவர்கள் அனைவரையும் Graubunden மாகாணத்தில் உள்ள நாடுகடத்தப்படும் சிறையில் தங்க வைப்படுகிறார்கள் என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 24 ஜூன், 2016

ஓட்டுனர் இல்லாத பேருந்து சுவிட்சர்லாந்து நாட்டில் அறிமுகம்


முதன் முறையாக சுவிட்சர்லாந்து நாட்டில் முதன் முதலாக தற்போது ஓட்டுனர் இல்லாத சிறிய ரக பயணிகள் பேருந்து சாலையில் பயணிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் வாலைஸ் மாகாணத்தில் உள்ள Sion என்ற நகரில் தான் இந்த சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.

மஞ்சள் நிறத்தில் இருக்கும் PostBus என்று அழைக்கப்படும் இந்த இரண்டு பேருந்துகள் ஒவ்வொன்றிலும் 11 இருக்கைகள் உள்ளன.

மின்சாரத்தால் இயங்கும் இந்த பேருந்து மணிக்கு 20 கி.மீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமைகளில் பிற்பகல் நேரத்தில் இந்த பேருந்துகள் இயக்கப்படும்.

இதில் பயணம் செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது. தானாக சாலையில் பயணிப்பது மட்டுமில்லாமல், சாலையில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து குறியீடுகளையும் நன்கு பதிவு செய்து பயணிக்கும்.

இந்த பேருந்து ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்பட்டாலும், இதில் ஒரு ஓட்டுனர் எப்போதும் இருப்பார். பயணத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர் வாகனத்தை உடனடியாக நிறுத்திவிடுவார்.

இதுமட்டுமில்லாமல், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டால், தூரத்தில் இருந்துக்கூட இதனை ரிமோட் மூலம் நிறுத்தி விடலாம்.

குளிர்சாதனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ள ஓட்டுனர் இல்லாத இந்த பேருந்தின் சோதனை ஓட்டம் எதிர்வரும் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 
Blogger இயக்குவது.