ஞாயிறு, 31 மார்ச், 2019

சுவிட்சர்லாந்து வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறது

சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த மனப்பான்மையை
 வெளிப்படுத்துகிறது.
வெளிநாட்டவர்கள் பொருளாதாரம் செம்மையாக இயங்குவதற்கும் சமூக பாதுகாப்பின் பொருளாதார தேவைகளுக்காகவும் அவசியம் என பெரும்பாலான சுவிஸ் நாட்டவர்கள் (64%) கருதுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மற்றவர்கள் செய்யாத வேலைகளையும் வெளிநாட்டவர்கள் செய்வார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது (66%).
அதே நேரத்தில், சமூக பாதுகாப்பு அமைப்பை வெளிநாட்டவர்கள் தவறாக பயன்படுத்துவதாக கிட்டத்தட்ட பாதிப்பேர்
 (47%) நினைக்கிறார்கள்
அதேபோல, வெளிநாட்டவர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிப்பதாக சிலரும் (28%), சுவிட்சர்லாந்து குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய நல்ல கல்வியை தட்டிப்பறிப்பதாக சிலரும் (28%), தெருக்களில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக சிலரும் (28%) கருதுகிறார்கள். இந்த ஆய்வில் 3,127 பேர் பங்கேற்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 24 மார்ச், 2019

சுவிட்சர்லாந்தில் 3 மணி நேரம் மூடங்கிய விமான நிலையம

சுவிட்சர்லாந்தில் கேட்பாரின்றி மர்ம பொருள் ஒன்று கிடந்ததால், சுமார் 3 மணி நேரம் விமான நிலையம மூடப்பட்டுள்ளது.
சுவிடசர்லாந்தின் Basel பகுதியில் இருக்கும் Basler Euro விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை லக்கேஜ் கொண்டுவரப்படும் டெர்மினல் பகுதியில் வெகுநேரமாக கேட்பாரற்று லக்கேஜ் 
ஒன்று இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அங்கிருந்த பயணிகள் உடனடியாக விமான அதிகாரிகளுக்கு தெரிவிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு அங்கிருந்த பயணிகள் அனைவரையும் வெளியேற்றி சுமார் 3 மணி நேரம் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதன் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 ஆனால் அதில் என்ன இருந்தது? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த சோதனையின் காரணமாக 6 விமானங்கள் புறப்படுவதற்கு தாமதாக புறப்பட்டு சென்றுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 18 மார்ச், 2019

சூரிச் நகரில் காணாமல் போன 12 வயது சிறுமி

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் மாயமான 12 வயது சிறுமி தொடர்பில் பொதுமக்களின் உதவியை மண்டல பொலிசார்
 நாடியுள்ளனர்.
சூரிச் மண்டலத்தின் Kreis 9 பகுதியில் பெற்றோருடன் 
குடியிருந்துவரும் 12 வயது Mebit என்பவரே பாடசாலையில் இருந்து திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார், குறித்த சிறுமியை மீட்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சிறுமி 165 முதல் 167 செ.மீ உயரம் கொண்டவர் எனவும் மெலிந்த உடல்வாகு கொண்டவர் எனவும் பொலிசார் 
குறிப்பிட்டுள்ளனர்.
மாயமான அன்று கருப்பு ஜாக்கெட், வெளிர் நீல ஜீன்ஸ் அல்லது பழுப்பு நிற உடையை அவர் அணிந்திருந்துள்ளார்.
சிறுமி தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் மண்டல பொலிசாரை அணுக வேண்டும் என கோரிக்கை
 வைத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 7 மார்ச், 2019

நடைமுறை வருகிறது புதிய சட்டங்கள் சுவிஸ் நாட்டில்

சுவிஸ் நாட்டில் அகதி விண்ணப்பம் கோரும் நபர்கள் தொடர்பாக இம் மாதம் 01ஆம் திகதி முதல் புதிய சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக பேர்ண் மாவட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் நந்தினி முருகவேல்
 தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
 01.03.2019 இற்கு முன்னர் சுவிஸ் நாட்டில் ஏதிலி (அகதி) விண்ணப்பத்தை மேற்கொண்ட அனைவருக்கும் இதுவரை இருந்தது போலவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வழங்கப்படும்.
01.03.2019 இற்குப் பின்னர் அகதி விண்ணப்பம் கோருபவர்கள், அகதி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு என சுவிஸ் நாட்டில் 17 அகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன.
இவ் 17 அகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இடங்களில் ஏறக்குறைய 4000 நபர்கள் தங்கலாம்.
இவ் இடங்களில் தங்கி அகதி விண்ணப்பங்களை மேற்கொண்டவர்களுக்கு 140 நாட்களுக்குள் அகதி விண்ணப்பம் தொடர்பான முடிவுகள் வழங்கப்படும். 140 நாட்களுக்குப் பின் வழங்கப்படும் முடிவுகள் எதிர்மறையானதாக வரும் சந்தர்ப்பத்தில் அதற்கான மேன்முறையீடு செய்யும் காலப்பகுதி 7 நாட்கள் மட்டுமே ஆகும்.
சுவிஸ்நாட்டில் அகதி விண்ணப்பம் கோரிய ஒருவர், ஏற்கனவே அகதி விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாட்டில் அகதி விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தால் சுவிஸ் நாட்டு அரசாங்கத்தால் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, மேன்முறையீடு செய்வதற்கு 5 நாட்கள் மட்டுமே இதுவரையும் வழங்கப்படும்.
இவ் நடைமுறை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>சுவிட்சர்லாந்தில் இளைஞர்களுக்கான புதிய பயண அட்டை அறிமுகம்

வரும் மே மாதம் முதல் இளைஞர்களுக்கான புதிய பயண அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.ஏற்கனவே நடைமுறையில் இருந்த Gleis/Voie 7 பயண அட்டைக்கு பதிலாக, seven25 என்னும் புதிய பயண அட்டை
 பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இப்போதிருக்கும் பயண அட்டையைப் போலவே இந்த seven25 பயண அட்டையும், 16 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், சுவிஸ் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இரண்டாம் வகுப்பில் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆண்டு கட்டணத்தில்
 பயணிக்க அனுமதிக்கிறது.
முன்பு போலவே இந்த புதிய அட்டை பயன்படுத்துபவர்களும் நகர போக்குவரத்து வாகனங்களில் சிறப்பு இரவுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் சில சர்ப்ரைஸ்களும்
 இருக்கின்றன.
முதலாவது, புதிய seven25 பயண அட்டை மூலம் இளைஞர்கள் பயணிப்பதற்கு அதிக ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முன்பு சில பேருந்து சேவைகளுக்கு, தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் புதிய அட்டையைக்
 கொண்டு பயணிகள் ஒரே அட்டை மூலமாகவே பேருந்து சேவைகளையும் பயன்படுத்த முடியும்.
இத்திட்டத்தில் ஒரே ஒரு குறை, ஆரம்ப கட்டணம் அதிகம் என்பதுதான். Gleis 7 அட்டையின் கட்டணம் ஆண்டொன்றிற்கு 129 சுவிஸ் ஃப்ராங்குகள்தான், புதிய seven25 அட்டையின் கட்டணமோ ஆண்டொன்றிற்கு 390 சுவிஸ் ஃப்ராங்குகள் (அல்லது மாதம் ஒன்றிற்கு 38 சுவிஸ்
 ஃப்ராங்குகள்) ஆகும்.
இந்த கட்டணம் அதிகம்தான் என்றாலும், இனி பயணிகள் புதிய இரவு பயண அட்டையை பெறுவதற்காக பாதி விலை பயண அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் பாதிவிலை அட்டை மற்றும் புதிய seven25 இரண்டிற்கும் சேர்த்து கட்டணம் 490 சுவிஸ் 
ஃப்ராங்குகள் ஆகிறது.
இன்னொரு விடயம், அடுத்த ஆண்டிலிருந்து இந்த புதிய அட்டை வைத்திருப்பவர்கள், ஜோக்கர் தினம் என்று அழைக்கப்படும் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தங்களுடன் இன்னொரு 16 முதல் 25 வயதுக்குட்பட்ட நபரையும் இலவசமாக 
அழைத்து வரலாம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.