வியாழன், 7 மார்ச், 2019

சுவிட்சர்லாந்தில் இளைஞர்களுக்கான புதிய பயண அட்டை அறிமுகம்

வரும் மே மாதம் முதல் இளைஞர்களுக்கான புதிய பயண அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.ஏற்கனவே நடைமுறையில் இருந்த Gleis/Voie 7 பயண அட்டைக்கு பதிலாக, seven25 என்னும் புதிய பயண அட்டை
 பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இப்போதிருக்கும் பயண அட்டையைப் போலவே இந்த seven25 பயண அட்டையும், 16 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், சுவிஸ் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இரண்டாம் வகுப்பில் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆண்டு கட்டணத்தில்
 பயணிக்க அனுமதிக்கிறது.
முன்பு போலவே இந்த புதிய அட்டை பயன்படுத்துபவர்களும் நகர போக்குவரத்து வாகனங்களில் சிறப்பு இரவுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் சில சர்ப்ரைஸ்களும்
 இருக்கின்றன.
முதலாவது, புதிய seven25 பயண அட்டை மூலம் இளைஞர்கள் பயணிப்பதற்கு அதிக ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முன்பு சில பேருந்து சேவைகளுக்கு, தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் புதிய அட்டையைக்
 கொண்டு பயணிகள் ஒரே அட்டை மூலமாகவே பேருந்து சேவைகளையும் பயன்படுத்த முடியும்.
இத்திட்டத்தில் ஒரே ஒரு குறை, ஆரம்ப கட்டணம் அதிகம் என்பதுதான். Gleis 7 அட்டையின் கட்டணம் ஆண்டொன்றிற்கு 129 சுவிஸ் ஃப்ராங்குகள்தான், புதிய seven25 அட்டையின் கட்டணமோ ஆண்டொன்றிற்கு 390 சுவிஸ் ஃப்ராங்குகள் (அல்லது மாதம் ஒன்றிற்கு 38 சுவிஸ்
 ஃப்ராங்குகள்) ஆகும்.
இந்த கட்டணம் அதிகம்தான் என்றாலும், இனி பயணிகள் புதிய இரவு பயண அட்டையை பெறுவதற்காக பாதி விலை பயண அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் பாதிவிலை அட்டை மற்றும் புதிய seven25 இரண்டிற்கும் சேர்த்து கட்டணம் 490 சுவிஸ் 
ஃப்ராங்குகள் ஆகிறது.
இன்னொரு விடயம், அடுத்த ஆண்டிலிருந்து இந்த புதிய அட்டை வைத்திருப்பவர்கள், ஜோக்கர் தினம் என்று அழைக்கப்படும் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தங்களுடன் இன்னொரு 16 முதல் 25 வயதுக்குட்பட்ட நபரையும் இலவசமாக 
அழைத்து வரலாம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.