புதன், 31 அக்டோபர், 2018

ஈழத்தமிழன் சுவிஸ் அணி சார்பாக சர்வதேச போட்டியில் சாதித்து காட்டிநார்

சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரர் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.
ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சோமசுந்தரம் சுகந்தன் Pascal Mancini., Amaru Schenkel மற்றும் Alex Wilson ஆகிய வீரர்கள் 
கலந்து கொண்டனர்.
இந்த போட்டியின் இறுதியில் சுவிட்சர்லாந்து 7வது இடத்தை கைப்பற்றியுள்ளது, சுவிட்சர்லாந்தின் சிறந்த Sprinters category வீரர்களில் முதல் 5 இடத்திற்குள் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் இடம் பிடித்துள்ளார்.
இங்குஅழுத்தவு ம் நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அகதி தஞ்சம் கோரியவர்களுக்கு சுவிஸில் அடையாள அட்டை

சுவிஸ் செய்திகள்:சுவிற்சர்லாந்தில் அகதி அந்தஸ்து இல்லாமல் வாழ்ந்து வருபவர்களுக்கு நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சுவிற்சர்லாந்தின் தலைநகரான பேர்ண் நகரப்பகுதியில்தான் இவர்கள் வாழ்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் ஓர் அடையாள அட்டையை வழங்குவதற்கு பேர்ண் நகர நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர். இந்த தீர்மானம் பேர்ண் நகரில் வாழ்பவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று பேர்ண் நகரத்தின் மேற்குப்பகுதியின் ஒரு பிரிவான பெத்லகேமில் நடைபெற்றது.
பேர்ண் நகரில் வாழும் ஒருவர் எந்த வகையான வதிவிட அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தாலும், வதிவிட
 அனுமதிப்பத்திரம் இல்லாவிட்டாலும் இந்த அடையாள அட்டையானது அவர்களுக்கு வழங்கப்படும் போது வதிவிட அனுமதிப்பத்திரங்கள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. இதற்கமைய பேர்ண் நகரில் வாழும் அனைவரிற்கும் இந்த நன்மை கிடைக்கவுள்ளது.
அத்துடன் இந்த நகரில் புலம்பெயர்வாழ் தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் அவர்களும் இதன் மூலம் நன்மையடையவுள்ளனர்.இந்த அடையாள அட்டைகளைப் பயனபடுத்தி அனைவரும் வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் வங்கிக்கணக்குகளை ஆரம்பிக்கலாம். தொலைபேசி ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கும் ஏனைய தேவைகளுக்கும்
 பயன்படுத்தலாம்.
அடையாள அட்டை தொடர்பாக கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் எப்போது எங்கே வழங்கப்படும் என்ற தகவல்கள் அறிவிக்கப்படும்.
இவ் அடையாள அட்டைகளுக்கு பேர்ண் நகரப்பகுதி நிர்வாகம் பொறுப்பாக இருக்கும். இது சுவிற்சர்லாந்தில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட 
உள்ள திட்டமாகும்.
இதன்மூலம் சுவிஸில் அகதி அந்தஸ்து கிடைக்காதவர்களுக்கு இந்த அட்டைகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக 
காணப்படுகின்றது
நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஆயிரத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை நாடு கடத்திய சுவிட்சர்லாந்து

:புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஐரோப்பிய நாடுகள் பல தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், சுவிட்சர்லாந்து கடந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வெற்றிகரமாக நாடு கடத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் புள்ளிவிவரங்கள் 
அலுவலகம்.
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஐரோப்பிய நாடுகள் பல தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், சுவிட்சர்லாந்து கடந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வெற்றிகரமாக நாடு கடத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 1,039 வெளிநாட்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட உத்தரவிடப்பட்டதாக சுவிஸ் ஃபெடரல் புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் அதிகம்பேர், அதாவது 348 பேர் Balkans நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.நாடு கடத்தப்பட்டவர்களில் 250 பேர் ஆப்பிரிக்கர்கள், 157 பேர் வட ஆப்பிரிக்காவையும் 93 பேர் மேற்கு ஆப்பிரிக்காவையும் 
சேர்ந்தவர்கள்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் 279 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சுவிட்சர்லாந்து ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இது Schengen ஒப்பந்தத்தை மீறியதாக கருதப்படலாம்.
ஆனால் உண்மையில் சுவிஸ் குற்றவியல் விதிகளின் கீழ் குற்றவாளிகள் என தீர்க்கப்பட்ட, வயது வந்த வெளிநாட்டவர்களில், ஒரு சிறு பகுதியினர் மட்டுமே 2017ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2017இல் சுவிட்சர்லாந்தில், கொலை முதல் பாலியல் ரீதியான தாக்குதல்கள் வரையான தீவிர குற்றங்கள் செய்தவர்களை நாடு கடத்தும் உரிமையை நீதிமன்றத்திற்கு வழங்கும் சட்டம்
 இயற்றப்பட்டது.
அந்த சட்டம், முதல் முறை குற்றம் புரிவோரை 15 ஆண்டுகள் வரை சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்க தடை செய்யும் உரிமையையும், திரும்பத் திரும்ப குற்றம் செய்வோரை ஆயுட்காலம் முழுமைக்கும் தடை செய்யும் உரிமையையும் நீதிபதிகளுக்கு வழங்குகிறது.
கடந்த ஆண்டில் ஏராளமான அகதிகள் தலைமறைவானதாலும், சிலர் மருத்துவ சான்றிதழ்கள் பெற்று நாடு கடத்தப்படுவதிலிருந்து விலக்கு பெற்றதாலும், சில சம்பவங்களில் விமானிகள் நாடு கடத்தப்படுபவர்களை அவர்களது நாடுகளுக்கு கொண்டு செல்ல 
மறுத்ததாலும்,
ஜேர்மனி முதலான பல ஐரோப்பிய நாடுகளுக்கு வட ஆப்பிரிக்கா பொன்ற பகுதிகளுக்கு குற்றம் புரிந்த புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது இன்னமும் கடினமாகவே உள்ள நிலையில் சுவிட்சர்லாந்து ஆயிரத்திற்கும் மேலானோரை நாடு கடத்தியுள்ளது
 குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 5 அக்டோபர், 2018

சுவிஸ் ஜனாதிபதியின் வினோதமான செயற்பாட்டினால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்

நாடுகளின் தலைவர்கள் கருப்புப்பூனை படை சூழ வெளியே தலை காட்டாமலே பயணிக்கும் நேரத்தில், ஆச்சரியவிதமாக, சுவிஸ் ஜனாதிபதி சாலையோரம் தரையில் அமர்ந்து ஆவணம் ஒன்றை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி 
உலகையே புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.அதுவும் சுவிஸ் ஜனாதிபதியான Alain Berset, சுவிட்சர்லாந்தில் அல்ல, நியூயார்க்கில் உள்ள ஒரு சாலையின் அருகே அமர்ந்திருந்தார்.நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை சந்திப்புக்காக 
அமெரிக்கா சென்றிருந்தபோதுதான் சுவிஸ் ஜனாதிபதியான Alain Berset இப்படி சாலையோரம் அமர்ந்திருந்தார்.
சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்த, சுவிஸ் தலைவர்களோ தங்கள் நாட்டில் இது சர்வசாதாரணம் என்கிறார்கள்.இந்த சம்பவம் முக்கியமாக ஆப்பிரிக்க மக்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது.
ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர், உகாண்டா அதிபர் பாதுகாவலர்களின் வாகனங்களின் படை சூழ, சாலையோரத்தில் கூட சொகுசுச் சேரில் அமர்ந்திருக்கும் படத்தையும், அதன் பக்கத்திலேயே சுவிஸ் ஜனாதிபதி தரையில் அமர்ந்திருக்கும் படத்தையும் முகநூலில் வெளியிட்டுள்ளார்.
இத்தகைய மனப்பான்மை கொண்ட ஆப்பிரிக்கத் தலைவர்கள்தான் தங்கள் நாட்டு மக்களை ஏழ்மையாக வைத்திருப்பதற்குக் காரணம் என்று செய்தி பதிட்டுள்ள அவர், ஒரு போன் காலுக்காக உகாண்டா அதிபர் பிஸியான போக்குவரத்துக்கே இடைஞ்சல் ஏற்படுத்தியதாக
 தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், நேரெதிராக சுவிஸ் ஜனாதிபதியோ அமெரிக்காவில் சாலையோரம் அமர்ந்து தனது நோட்ஸை படித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
சுவிஸ் ஜனாதிபதி மட்டுமல்ல, வேறு பல சுவிஸ் தலைவர்களும் மிகவும் எளிமையாகவே இருக்கிறார்கள், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் ஃபெடரல் 
கவுன்சிலரான Doris Leuthard ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார்.Micheline Calmy-Rey என்பவர் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சராக இருந்தபோது கேக் ஒன்றினால் ஒருவன் அவரது முகத்தில் தாக்கினான்.
இத்தகைய சம்பவங்கள் அபூர்வமாக நடைபெற்றாலும்கூட சுவிஸ் தலைவர்கள் சைக்கிளிலும் ரயிலிலும் பயணம் செய்வதையும் பாதுகாவலர்கள் இல்லாமல் பொது இடங்களில் நடமாடுவதையும் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல 
பாராட்டத்தக்கதுமாகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

Blogger இயக்குவது.