செவ்வாய், 18 அக்டோபர், 2016

சுவிஸில் கொள்ளை கூட்டத்தின் தலைவன் கைது!!!

சுவிஸில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கூட்டத்தின் தலைவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Fribourg மாகாணத்தின் bulle மாவட்டத்தில் 2015ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடம்பெற்று வரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சுவிஸ் நாட்டை சேர்ந்த 23 வயது இளைஞனை அதிரடியாக கைது செய்துள்ளனர். விசாரணையில் அவன் அப்பகுதியில் குடியேறிகள் போல் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
பொலிசார் அளித்துள்ள தகவலில், சோதனையில் பல திருட்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், Bulle நகரில் கட்டிடங்கள் மற்றும் பல்வேறு கடைகளின் அடித்தளத்தில் 2015 மற்றும் பிப்ரவரி 2016 க்கும் இடைப்பட்ட காலத்தில் திருட்டப்பட்ட பொருட்கள் தெளிவுபடுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கைதுசெய்யப்பட்ட போர்த்துகீசிய மற்றும் மொராக்கோ நட்டை சேர்ந்த குடியேறி இளைஞர்கள் குறித்த கொள்ளைகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 6 அக்டோபர், 2016

தமிழாசிரியர்களுக்கான பட்டயமளிப்பு விழா சுவிஸ்சில் இடம்பெற்றது!

சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச்சேவை இந்தியாவில் இயங்கி வரும் SRM பல்கலைக்கழகத்துடன் இணைந்து அயலகத் தமிழாசிரியர் பட்டயமளிப்பு விழா சுவிற்சர்லாந்தில் நடை பெற்றது.
பட்டயப் படிப்பினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டயமளிப்பு விழா கடந்த 10.09.2016ஆம் திகதி காலை 10.00 மணி முதல் சூரிச் ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக இப்பட்டயமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அணிவகுப்பு இசையுடன் அரங்கினுள் அழைத்து வரப்பட்டனர்.
தமிழ்மொழி வாழ்த்து, சுவிஸ் நாட்டுப்பண் தமிழ்த்தாய் வாழ்த்து, அகவணக்கம் என விழாவிற்குரிய அனைத்து அம்சங்களுடனும் ஆரம்பமாகிய இப்பட்டயமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களும் பட்டயப்படிப்பின் பயிற்றுனர்களாக பணியாற்றிய ஆசிரியர்களும் மலர்மாலை அணிவித்தும் நினைவுப்பரிசில்கள் வழங்கியும் 
மதிப்பளிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரைகளுடன் பட்டயமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இப்பட்டயமளிப்பு விழாவினைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டிற்கான ஆசிரியப் பட்டயப் படிப்பின் ஆரம்ப விழாவும் 
நடைபெற்றது.
தங்கப்பதக்கம் பெற்ற தஸ்மினி ரட்ணராஜா வெள்ளிப்பதக்கம் பெற்ற சாம்பவி மோகனதாஸ் ஆகியோரோடு பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றுப் பட்டயம் பெற்ற அறுபத்து நால்வருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு அவர்களின் ஆசிரியப்பணி செம்மையுடன் திகழ அவர்கள் தொடர் கல்விகளையும் பட்டப் படிப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் என வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இப்பட்டயமளிப்பு விழாவில் SRM பல்கலைக்கழகத் தேர்வு ஆணையாளர் முனைவர் எஸ். பொன்னுச்சாமி அவர்களும் பேராசிரியர் இல.சுந்தரம் அவர்களும் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் தலைவர் திரு. சு. உதயபாரதிலிங்கம் உட்பட பலரும் கலந்து 
சிறப்பித்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 4 அக்டோபர், 2016

இலங்கை தமிழர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல்!

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல் இருப்பதால் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள சுவிஸ் அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன.
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து இலங்கையில் மனித உரிமைகள் காக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து சுவிஸில் இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் அளிப்பதற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும் என சுவிஸ் அரசு கடந்த யூலை மாதம் அறிவித்தது.
ஆனால், புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும்போது அவர்கள் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக சுவிஸ் மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
சுவிஸில் தற்போது இலங்கையை சேர்ந்த சுமார் 50,000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். ஆனால், இவர்கள் அனைவருக்கும் புகலிடம் 
வழங்கப்படவில்லை.
இவ்வாறு புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் ஆலோசனை மேற்கொள்ள சுவிஸ் சட்ட அமைச்சரான Simonetta Sommaruga அடுத்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின்போது சுவிஸில் தமிழர்களுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாகவும், புகலிடம் மறுக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவது தொடர்பாகவும் இரு நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.