வியாழன், 23 ஆகஸ்ட், 2018

சுவிசில் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பள்ளிக்குழந்தைகள்,

சுவிட்சர்லாந்தில் பள்ளிக்குழந்தைகளின் மன அழுத்தத்திற்கு பள்ளிகள் காரணமாக அமைவதில்லை, பெற்றோரே காரணமாக உள்ளனர் என்று சிறுவர் நல அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையம் 2014 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சுவிட்சர்லாந்து நாட்டின் 11 வயதுள்ள குழந்தைகளில் 27 சதவிகிதம்பேர் தூக்கமின்மை பிரச்சினைகளால் அவதியுறுவதாகவும், 15 சதவிகிதம்பேர் தொடர் மன அழுத்தத்திற்குள்ளாவதாகவும் கண்
டறியப்பட்டுள்ளது.
இதுபோக 12 சதவிகிதம்பேர் அடிக்கடி தலைவலியால் பாதிக்கப்படுவதாக சுவிஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு காரணம் என்ன என்று பார்க்கும்போது, 30 ஆண்டுகளாக Basel நகரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்தவரும்
, Pro Juventute Foundation என்னும் அமைப்பின் தலைவருமான Katja Wiesendanger, இந்த அழுத்தத்திற்கு காரணம் பள்ளிகள் அல்ல பிள்ளைகளின் பெற்றோரே என்று கூறுகிறார்.
வர வர பள்ளிகள் பிள்ளைகளின் பிரச்சினைகளை உணர்ந்து வருவதாக கூறும் அவர், “ஆரம்பப் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு அதிக அழுத்தம் தரப்படுகிறது என்பதை அடிக்கடி கேள்விப்படுகிறேன், ஆனால் இந்தப் பிரச்சினை எங்கிருந்து வருகிறது என்பதை உங்களையே 
கேட்டுப் பாருங்கள்.
பெரும்பாலும் பள்ளிகளே இவ்விடயத்திற்காக குற்றம் சாட்டப்படுகின்றன. ஆனால் உண்மையான பிரச்சினை பள்ளிகளா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
பிள்ளைகளின் இந்தப் பிரச்சினைக்கு பெற்றோர்கள்தான் காரணம் என்னும் அவர், பல பெற்றோர் படிப்புக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதுவே பிள்ளைகள் மீதும் 
திணிக்கப்படுகிறது.
பிள்ளைகள் சரியாக படிக்காவிட்டால் ஒதுக்கப்படுவார்களோ என்னும் பயம் பெற்றோருக்கு இருக்கிறது. அந்த பயத்தை அவர்கள் பிள்ளைகளுக்கு கடத்துகிறார்கள் என்று கூறுகிறார்.
அக்டோபர் மாதம் Pro Juventute Foundation என்னும் அமைப்பு பிள்ளைகளின் விருப்பங்களுக்கு இடமளிக்கும் வகையில் அதிக ஓய்வு நேரம்கொடுக்க வேண்டும்என்பதை வலியுறுத்தும் “அழுத்தத்தைக் குறைப்போம், அதிக முக்கியத்துவம் குழந்தைக்கு கொடுப்போம்” என்னும் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
சமீப காலமாக குழந்தைகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை கேட்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>


திங்கள், 20 ஆகஸ்ட், 2018

சூரிச்சில் தமிழ்க் குடும்ப சண்டை பொலிஸ் குவிப்பு:

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே நேற்று இரவு சுமார் 11 மணியளவில் திரளான பொலிசாரும் மீட்பு குழுவினரும் திடீரென்று குவிக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தை அடுத்தே பொலிசார் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதில் ஒரு இளம் பெண் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும், அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே அப்பகுதியில் குவிந்த மக்கள் மீதும் அடிதடி நடத்தப்பட்டுள்ளதால் பொலிஸார் ஒருகட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி, பின்னர் ரப்பர் குண்டுகளையும் அங்கு கூடிய பொதுமக்கள் மீது பயன்படுத்தியுள்ளனர்.
சிட்டி சென்டர் அருகே பொலிஸ் குவிக்கப்பட்டதற்கும் குவிந்த பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கும் பொலிசார் இதுவரை விளக்கமளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இருப்பினும் சூரிச் அறோ பகுதியில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையால் குடும்பத்தில்
 இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியதாகவும் மேலும் குடும்ப உறுப்பினர் அடி காயங்களுக்கு உள்ளாகியதாகவும் இதனைத் தடுக்க வந்த சுவிஸ் பிரஜை ஒருவரையும் தாக்கியதாலும் மேலும் குடும்பக் கலவரம் வீதிக்கு வந்ததாலும் பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Blogger இயக்குவது.