புதன், 23 டிசம்பர், 2015

பயங்கர தீ விபத்து: குடியிருப்பில் குழந்தைகள் உள்பட பலர் உயிரிழப்பு !!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தைகள் உள்பட பலர் பலியாகிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Rupperswil என்ற நகரில் தான் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதே பகுதியில் உள்ள பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு இன்று காலை 11.20 மணியளவில் ஒரு அவசர தகவல் வந்துள்ளது.
தகவல் பெற்று அதிர்ச்சி அடைந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதே சமயம் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து சேர்ந்துள்ளனர்.
அப்போது அங்குள்ள குடியிருப்பிற்குள் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியாகி கொண்டிருப்பதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியுள்ளனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு, தீயை கட்டுபடுத்தியும் உள்ளே நுழைய முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அருகில் இருந்த குடியிருப்புவாசிகளிடம் விசாரணை நடத்தியதில், தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் ஒரு தாய், அவரது இரண்டு மகன்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் வசித்ததாக தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அளித்த தகவலில், வீட்டிற்குள்ளே பல உடல்கள் கிடப்பதாகவும், ஆனால், உள்ளே நுழைய முடியாததால் அவற்றை அடையாளம் காண இயலவில்லை என பொலிசாரிடம்
 தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் அந்த வீட்டில் உள்ள நண்பர்களை பார்க்க வந்ததாக கூறப்படுவதால், அவர்களும் தீவிபத்தில் சிக்கி இருப்பார்களா என்ற அச்சம்
 ஏற்பட்டுள்ளது.
தற்போது தடவியல் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாவும், இந்த தீவிபத்து பற்றி சில மணி நேரங்களுக்கு பிறகு முழு விபரம் தெரியவரலாம் என பொலிசார் 
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 19 டிசம்பர், 2015

வாலிபர்கள்: மாற்றான் மனைவியை கற்பழிக்க முயன்றனர் பொலிசார் நூதனமாக கைது செய்தனர்

சுவிட்சர்லாந்து நாட்டில் மாற்றான் மனைவி ஒருவரை கற்பழிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பெயர் வெளியிடப்படாத கணவன் மனைவி என இருவர் வசித்து
 வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் அந்த பெண் தனியாக பெர்ன் நகர ரயில் நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது பெண் தனியாக செல்வதை அறிந்த இரண்டு வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
இருவரும் பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசியவாறு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் Grosse Schanze என்ற பகுதியை அடைந்ததும் அங்கு ஆட்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த வாலிபர்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
வாலிபர்களின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன்னுடைய பலம் முழுவதையும் திரட்டி வாலிபர்களுக்கு எதிராக போராடியுள்ளார்.
சிறிது நேரப் போராட்டத்திற்கு பிறகு அந்த பெண் கத்தி கூச்சல் எழுப்ப அவர்கள் இருவரும் அஞ்சியவாரு அங்கிருந்து தப்பி 
ஓடியுள்ளனர்.
நள்ளிரவில் தன்னை கற்பழிக்க முயன்ற சம்பவம் குறித்து அந்த பெண் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற பொலிசார் வாலிபர்களின் உடை மற்றும் அங்க அடையாளங்களை சேகரித்துக்கொண்டு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிசாருக்கு அந்த தகவல்களை 
அளித்துள்ளனர்.
அடையாளங்களை சேகரித்துக்கொண்ட பொலிசார், அப்பகுதி முழுவதையும் சல்லடையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு சாலையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் இருவர் தான் பெண்ணை கற்பழிக்க முயன்றது தெரியவர உடனடியாக இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இரண்டு வாலிபர்களுக்கும் மற்ற குற்றங்களிலும் தொடர்பு இருக்கிறதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அடுத்தடுத்து மீட்கப்பட்ட 2 சடலங்கள் :பொலிசார் அதிர்ச்சியில்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மேலும் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவிஸின் பெர்ன் மாகாணத்தில் உள்ள Langenthal என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு வாகனம் பழுதுப்பார்க்கும் இடத்தில் 2 வாலிபரின் சடலங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதே பெர்ன் மாகாணத்தில் உள்ள Laupen என்ற பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று மேலும் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நேற்று இரவு வேளையில், Laupen பகுதி மக்களுக்கு அவசர தகவல் ஒன்றை அளித்துள்ளனர்.
தகவலை பெற்று வந்த பொலிசார், அங்குள்ள ஒரு குடியிருப்பில் 2 சடலங்களை உயிரற்ற நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.
சடலங்களை மீட்ட பொலிசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Langenthal நகரில் கண்டுபிடிக்கப்பட்ட மரணம் கொலையா தற்கொலையா என விசாரணை நிறைவு பெறாத நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் 
அடைந்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்திற்கும் புதன் கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிசாரை உடனடியாக தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை
 விடுக்கப்பட்டுள்ளது.
பெர்ன் மாகாணத்தில் 2 நாட்களுக்குள் 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>புதன், 16 டிசம்பர், 2015

காதலன் காதலியை ஈர்க்க செய்த முயற்சிக்கு 150 பிராங்குகள் அபராதம்!!!

சுவிசில் காதலன் ஓருவர் தனது காதலியை ஈர்க்கும் பொருட்டு நடத்திய நிகழ்வால் பொதுமக்கள் பாதித்துள்ளதாக கூறி நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
Winterthur பகுதியில் உள்ள 26 வயதான அந்த காதலன் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொள்ளும் பொருட்டு அவரிடம் சம்மதம் பெற முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து கிலோக்கணக்கில் ரோஜா பூக்கள், வாசனை மெழுகுவர்த்திகள், Champagne பானம், கோப்பைகள் என அவரது காதலியை மகிழ்விக்கும் பொருட்டு அனைத்தையும் எடுத்து 
சென்றுள்ளார்.
காதலியின் வீட்டில் சென்ற இந்த நபர் திருமண சம்மதம் கேட்க அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தம்முடன் எடுத்துச் சென்ற அனைத்து பொருட்களையும் அங்கேயே விட்டுச் சென்றுள்ளார்.
இந்த குப்பைகள் அப்பகுதி மக்களை பாதிப்பதாக கூறி சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கு குறித்து விசாரித்த winterthur அமர்வு நீதிமன்றம் சம்பந்தபட்ட நபருக்கு 150 பிராங்குகள் அபராதம் 
விதித்துள்ளது.
சம்பவத்தின்போது அப்பகுதியில் கடந்து சென்ற நபர் ஒருவர் பூக்கள் மற்றும் பொருட்கள் பார்ப்பதற்கு ரம்மியமாக இருப்பதாகவும் அதை அப்படியே விட்டுச்செல்லுமாறு தம்மை கேட்டதாகவும் விளக்கமளித்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>தமிழர் உள்ளிட்ட வெளிநாட்டவர்க்கு சுவிசில் நோக்கி வரும் பேராபத்து!!!

குற்றம்புரியும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா? இல்லையா? என்று எதிர்வரும் 28.02.2016 அன்று சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இதற்கான முன்மொழிவினை வெளிநாட்டவர்களை இனவாதத்தின் அடிப்படையில் எதிர்க்கும் வலதுசாரி கோட்பாட்டுக்
 கொள்கையை கடைப்பிடிக்கும் சுவிஸ் மக்கள் கட்சி (SVP) முன்னெடுத்து வருகின்றது.
இவ்முன்மொழிவு மக்கள் அங்கீகரமளித்து வாக்களிப்பின் மூலம் வெற்றி பெற்று சட்டரீதியாக அமுலாக்கப்படும்போது சுவிசில் வாழும் தமிழ்மக்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள
 நேரிடும்.
எதிர்வரும் 28 பெப்ரவரி 2016 அன்று மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும் சட்டஅங்கீகாரத்துக்கான மக்கள்வாக்கெடுப்பு வெற்றிபெற்றால் கீழ்வரும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படலாம். அவை-
* ஓர் வெளிநாட்டவர் சிறிய குற்றச்செயலில் ஈடுபட்டாலும் இனவாத ரீதியாக குற்றம்சாட்டப்பட்டு நாடுகடத்தப்படலாம்.
* சுவிஸ் நாட்டின் வதிவிடஉரிமைபெற்ற ஒருவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் இச்சட்டமூலத்தினூடாக நேரடியாக பாதிக்கப்படுவதோடு அவரது முழுக்குடும்பமும் தண்டனையை பெறும் ஓர் துர்ப்பாக்கியம் ஏற்படும். உதாரணமாக வதிவிட அனுமதியுடன் வாழும் கணவன்
 குற்றம்சாட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டால் சுவிஸ் குடியுரிமையுடன் வாழும் மனைவியும் சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நிற்பந்திக்கப்படுவார்.
* நீதிமன்ற அனுமதியின்றி காவற்துறையே முடிவெடுத்து நாடுகடத்தும் அதிகாரத்தை இச்சட்டம் அமுலாக்கவுள்ளது.
* பெற்றோர்கள் வதிவிட அனுமதியுடனும், பிள்ளைகள் சுவிஸ் குடியுரிமையுடனும் இருப்பின் பெற்றோர்கள் குற்றம்சுமத்தப்பட்டு நாடுகடத்தப்பட்டால் ஏதும்அறியாத குழந்தைகளும் சேர்த்து
 நாடுகடத்தப்படும் மனிதஅவலம் நடைபெறும். காரணம் சுவிஸ் சட்டத்தின் சமூகவாழ்வியல் மற்றும் குடும்ப உறவுமுறைக்கான 21 வது சட்டப்பிரிவின்  41வது  அறிவுறுத்தலின்படி 18 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் பெற்றோருடனேயே இருக்கவேண்டும் என்பது நியதி.
இருப்பினும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அது சுவிஸ் நாட்டின் அரசியலமைப்பை மீறுகிறது என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இச்சட்டம் ஐரோப்பிய மனிதஉரிமை உடன்படிக்கையை 
கவனத்தில் கொள்ளாது முன்னெடுக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சர்வதேச குழந்தைகள், சிறுவர்கள் பாதுகாப்புச்சட்டத்தை இப்புதிய வரைபு நிராகரிக்கும் பேராபத்தைக் கொண்டுள்ளது.
அத்துடன் ஐ.நா மனிதஉரிமைகள் சாசனத்தையும் இச்சட்ட அங்கீகாரம் நிரகரித்துள்ளது..
இனத்துவேசத்தின் எண்ணக்கருவில் முளைத்த இச்சட்ட அமுலாக்கங்களை எதிர்த்து வெளிநாட்டவர்களின் அனைத்து அமைப்புக்களுடனும் இணைந்து வெளிநாட்டவர்களை ஆதரிக்கும் சோசலிச ஜனநாயகக் கட்சி மாபெரும் வேலைத்திட்டம் ஒன்றை தேசியரீதியாக 
முன்னெடுக்கவுள்ளது.
இதற்கான தார்மீக ஆதரவை சுவிஸ் தமிழ் சமூகக் கட்டமைப்புக்கள் கவனத்தில் எடுத்து செயற்படுதல் அவசியமாகின்றது
வாழ்விட வதிவுரிமை பெற்ற ஒவ்வொருவருடைய வாக்குகளும் இச்சட்ட அமுலாக்கத்தை எதிர்த்து Nein என்று வாக்களிப்பதன் மூலம் இச்சட்டமூலத்தை தோற்கடிக்க
 முடியும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 8 டிசம்பர், 2015

இராணுவ சேவையில் சுவிஸ் தோற்றுவிட்டது கிறிஸ்டோப் ப்ருங்நேர்

சுவிஸ் இராணுவத்தினர் தங்களது பாதுகாப்பு சேவையில் தோற்றுவிட்டதாக சுவிஸ் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோப் ப்ருங்நேர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2014ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு சேவையில் இடம்பெற்ற 1,213பேருக்கும் வன்முறையினுடனாக ஆபத்து நிறைந்து காணப்பட்டமையே இதற்கு காரணம் என ஜெர்மன் மொழி செய்தித்தாள் சுவிஸ் ஏம் சொன்டெக்குக்க தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டு வறுமை நிலையை பாதுகாப்பபு தொடர்பில் 965 மதிப்பீடு செயய்ப்பட்டது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. மேலும் இது தொடபிலான நுழைவுக்கு முன் இதற்கு சாத்தியமான வீரர்கள் வேண்டும் 2011ஆம் ஆண்டே அழைத்துக் கொண்டனர்.
வன்முறை அபாயம் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள போதும் இராணுவத்தில் இளைஞர்கள் என்பது தொடர்பில் சுவிட்சர்லாந்து தான் கட்டாய இராணுவ சேவையை தொடர அனுமதி இல்லை என தெரிவித்தது.
அவர்கள் இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தாலும் சேவையில் ஈடுபட தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் ஒருவர் தனிப்பிட்ட துப்பாக்கி பெறுவதிலும் சிரமம் காணப்பட்டது.
குறிப்பாக அவர்கள் சிறுபான்மையினர் மீது தீவிர அல்லது ஜிஹாத்திச தொடர்பான வன்முறை ஆபத்து இருக்கலாம் என கருதப்படும்போது, வறுமை நிலையை மேலும், அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸ் இராணுவம் இருந்து விலக்கப்பட்ட போதிலும் இது கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயம் என்றார். 
தனடிப்படையில், சிறப்பு இராணுவ சேவை "இராணுவத்தில் தீவிரவாதம்", கடந்த ஆண்டுகளாக 41 வழக்குகள் காணப்பட்டன. 

தில் மிக தீவிர வலதுசாரி அரசியல் தொடர்பான தொடர்புகள் இருந்தன. ப்ருஙநேர், இந்த வழக்குகளில் எதுவும் குற்றவியல் நடவடிக்கைகள் விளைவாக அமையவில்லை எனவும் வன்முறை செயல்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல விடயங்கள் இருந்தனஎன
 தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>>ஞாயிறு, 6 டிசம்பர், 2015

பொலிஸ்சார் 24 மணிநேர பாதுகாப்பு விமான சேவையில் ???

சுவிஸ் பாதுகாப்பு அமைச்சின் புதிய திட்டத்திற்கமைய 24 மணிநேர விமான பொலிஸ் சேவையை 30 மில்லியன் ($29 மில்லியன்) ரூபா செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
இதற்காக முக்கிய விமான தளங்களில் ஒன்றான வோட் பியேமி என்ற விமான தளத்திலேயே இத்திட்டத்தை 
ஆரம்பிக்கவுள்ளது.
இது தொடர்பில், விமான பொலிஸ் சேவை இரண்டு முக்கிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
அதாவது, தீவிரமான போக்குவரத்து சட்டங்கள் அல்லது சுவிஸ் வான்வெளி இறையாண்மையை மீறும் வகையில் ஏனைய விமானம் தலையிடுவதற்கு தடைவிதித்தல், வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்கள் கவனமாக கண்காணிக்கவும் இராஜதந்திரம் ஒழிக்கப்படவும் வேண்டும் எனவும் கோரியுள்ளனர். 
இத்திட்டம் 2016ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் எனவும் முதலில் இரண்டு விமானங்கள் செயற்படத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 06:00 மணிமுதல் மாலை 08:00 மணிவரை இடம்பெறும். 
இதன்மூலம் இவை ஆண்டுக்கு 50 வாரங்கள் செயற்படும். மேலும் 2017ஆம் ஆண்டளவில் இது நாளாந்த சேவையாக மாற்றப்படும் . இத்திட்டம் 2019ஆம் ஆண்டளவில் வெற்றியடையம் பட்சத்தில் காலை 06.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை இடம்பெறவும் திடடமிடப்பட்டுள்ளது. 
இறுதியாக, 2020இல், இத்திட்டமானது காற்று ரோந்து வருவதிலும் சேவை 24 மணித்தியாலங்களாக, வாரம், வருடம் முழுவதும் சேவையில் இருக்கக்ககூடியதாக அமையும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 2 டிசம்பர், 2015

இருபது கார்களை நொறுக்கிய மர்ம நபர்கள் பொலிசார் தீவிர தேடுதல்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை ஓரத்தில் பார்கிங் செய்திருந்த சுமார் 20 கார்களை உடைத்து சேதாரப்படுத்திய மர்ம நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Reinach என்ற நகரில் தான் இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று நள்ளிரவு வேளையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வெளியே பல கார்கள் பார்கிங் செய்யப்பட்டிருந்துள்ளன.
இந்நிலையில், திட்டம் போட்டு வந்த சில மர்ம நபர்கள், வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை கண்மூடித்தனமாக உடைத்து சேதாரப்படுத்தியுள்ளனர்.
அதே பகுதியில் உள்ள சுமார் 20 கார்களின் மீதும் இந்த தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இன்று காலையில் சேதாரம் அடைந்துள்ள கார்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்கள் உடனடியாக பேசல் நகர பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்து கார்களை ஆய்வு செய்த பொலிசார், Tatnacht Hollenweg, Brunngasse, மற்றும் Lindenweg Rebbergweg உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்று தாக்குதலை மர்ம நபர்கள் நடத்தியுள்ளதை 
கண்டுபிடித்துள்ளனர்.
நள்ளிரவில் நிகழ்ந்துள்ள அட்டூழியம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் மர்ம நபர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே இரவில் மர்ம நபர்கள் 20 கார்களை அடித்து நொருக்கியுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


Blogger இயக்குவது.