சனி, 28 ஜூலை, 2018

நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிருக்கு போராடிய சுவிஸ் இளைஞர்

சுவிட்சர்லாந்தின் ஜூரா மாகாணத்தில் நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிருக்கு போராடிய சுவிஸ் இளைஞரை 27 மீற்றர் உயரத்தில் இருந்து குதித்து காப்பாற்றிய அமெரிக்கருக்கு பாராட்டுகள் 
குவிந்து வருகிறது.
சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஜூரா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இங்குள்ள Saut-du-Doubs அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு வந்த சுவிஸ் இளைஞர் ஒருவர் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர்
 தமது உயிரை துச்சமாக கருதி விபத்துக்குள்ளான நபரை காப்பாற்ற குதித்துள்ளார்.
இதனிடையே இந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் உடனடியாக அவசர உதவிக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து 3 ஹெலிகொப்டரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் தண்ணீரில் தத்தளித்தபடி இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
27 மீற்றர் உயரத்தில் இருந்து தடுமாறி விழுந்ததால் சுவிஸ் இளைஞரின் கை உடைந்துள்ளது.
இதனிடையே தண்னீரில் தத்தளித்த சுவிஸ் இளைஞரை காப்பாற்றிய நபர் அமெரிக்க முன்னாள் மீட்பு குழு உறுப்பினர் எனவும், கடலில் விபத்துக்குள்ளானவர்களை மீட்பதில் சிறப்பு பயிற்சி பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது


வெள்ளி, 27 ஜூலை, 2018

யாழைச் சேர்ந்த சுவிஸ் வாழ் தமிழர் செய்த மகத்தான காரியம்

சுவிஸில் இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாமதேவன் தியாகேந்திரன் என்பவர் தனது சொந்த நிதியில் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணியுடன் 1000 வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் எவருமே முன்னெடுக்காத காரியத்தை இவர் கையில் எடுத்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக 60 பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டத்திற்கான காணிகளை யாழ்.கோப்பாயில் வாங்கியுள்ளார்.
பயனாளிகளைத் தெரிவு செய்து விரைவில் 60 பேருக்கான வீட்டுத்திட்டத்தை வழங்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏனைய இடங்களில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கான காணிகளை தெரிவுசெய்து வாங்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளார்.
இதுவரை காலம் வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்கள் தன்னுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டுள்ளார்.
இவர் யாழ்ப்பாணத்தில் தியாகி அறக்கொடை நிலையம் ஒன்றை நடத்தி அதனூடாக போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 வருடங்களுக்கு மேலாக பண பொருள் உதவிகளை 
வழங்கி வருகிறார்.
அதாவது கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு வடக்கில் 300 இற்குமேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார்.
மேலும் போரால் பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கல்வியைத் தொடர்வதற்கான மாதாந்த பணத்தினை வழங்கி வருகிறார்.
மேலும் கணவனை இழந்து குடும்ப தலைமைத்துவத்தைக் கொண்ட பெண்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் வயது முதிர்ந்தவர்களுக்கு மாதாந்த பணக்கொடுப்பனவையும் இலவச மருத்துவ 
முகாமையும் நடத்தி வருகிறார்.
வருடத்தில் 6 கோடி பணத்தை மக்களுக்கு வழங்கி வரும் இவர் வீட்டுத் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளார்.
தான் பிறக்கும் போது ஒன்றுமே இல்லாது பிறந்ததுபோல தான் இறக்கும் போதும் தன்னிடம் ஒன்றுமே இல்லாது இறக்க வேண்டும் என்று சொல்லும் இவர் தனது தொழிலில் வரும் வருமானம் முழுவதையும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவேன் என்று 
உறுதி பூண்டுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 21 ஜூலை, 2018

சுவிஸ் பெண்மணி விமானத்தில் பணிப்பெண்ணை கடித்துள்ளார்

சூரிச் விமானம் ஒன்றில்  தன்னுடன் எடுத்து வந்த வளர்ப்பு நாய்க்கு உணவளிப்பதை தடுத்த விமான பணிப்பெண்ணை சுவிஸ் பயணி ஒருவர் கடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சூரிச் நோக்கி வந்து கொண்டிருந்தது சுவிஸ் விமானம் ஒன்று.
இதில் ஹங்கேரி நாட்டில் இருந்து 75 வயது சுவிஸ் பெண்மணி ஒருவர் தமது வளர்ப்பு நாயுடன் பயணம் செய்துள்ளார்.
சம்பவத்தின்போது குறித்த பெண்மணி நாயை அடைத்து வைத்திருந்த கூண்டை திறந்து அதற்கு உணவு அளித்ததாக 
கூறப்படுகிறது.
இதற்கு அருகாமையில் இருந்த சக பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, விமான பணிப்பெண் தலையிட்டு குறித்த சுவிஸ் பெண்மணி அவரது நாய்க்கு உணவளிப்பதை தடுக்க முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த குறித்த சுவிஸ் பெண்மணி, விமான பணிப்பெண்ணின் கையை கடித்து
 வைத்துள்ளார்.
இச்சம்பவத்தில் விமான பணிப்பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், குறித்த சுவிஸ் பெண்மணி மீது வழக்குப் பதிந்து விசாரித்துள்ளனர்.
நடந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு 300 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது¨.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

சைவ ஆதீன குருமுதல்வர்கள் சுவிஸ் ஆலயங்களுக்கு வருகை

செங்காலன் அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம், வின்ரர்தூர் ஓம் காரனந்தா ஆச்சிரமம், சூரிச் அருள்மிகு சிவன் ஆலயம், கூர் அருள்மிகு நவசத்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றிக்கு அவர்கள் தல யாத்திரை மேற்கொண்டுள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து சூரிச் அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய கும்பாபிசேக மண்டலாபிசேக பூர்த்தி நிகழ்விலும், டூர்ன்ரன் கின்வில் அருள்மிகு ஶ்ரீ விஸ்ணு துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்ற வைபவத்திலும் ஆதீன முதல்வர்கள் கலந்து ஆசிகள் வழங்கி 
சிறப்பித்துள்ளார்கள்.
பாரிஸில் நடைபெறவுள்ள தமிழ்முறை திருமணத்தில் ஆசி வழங்குவதற்காக ஐரோப்பாவிற்கு வருகை தந்திருந்த ஆதீன குருமுதல்வர்களை சுவிஸ் நாட்டிற்கு வருமாறு செங்காலன் கதிர்வேலாயுத சுவாமி ஆலய தலைவர் வேலுப்பிள்ளை கணேசகுமார் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று ஆதீன குருமுதல்வர்கள் சுவிசிற்கு வருகை தந்தமை 
குறிப்பிடத்தக்கது.,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஈழத் தமிழர்களுக்கும் சுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் பாதிப்பு,

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள் திருப்பி அனுப்பப்படும்போது அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் உயிர்போகும் அபாயம் இருந்தாலும் கூட, நாடு கடத்தப்படுவதை நிறுத்துமளவிற்கு அது தீவிரமானது அல்ல என்று சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளததானது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஈழத் தமிழ் புகலிடக் கோரிககையாளர்களையும் பெரும் அளவில் பாதிக்கும் என்று தெரிவிக்கின்றார்கள் சில சட்ட 
ஆலோசகர்கள்.
எரித்ரியாவைச் சேர்ந்த ஒரு நபர், தான் தன் சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டால், அங்கு கட்டாய ராணுவ சேவையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்பதால் தன்னை நாடு கடத்துவதை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள், தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும்போது, அங்கு அவர்கள் செய்ய வேண்டிய கட்டாய ராணுவ சேவையின்போது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் அபாயம் இருந்தாலும், நாடு கடத்தப்படுவதை நிறுத்துமளவிற்கு அது தீவிரமானது அல்ல என்று சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எரித்ரியாவைப் பொருத்தவரையில், அங்கு பின்பற்றப்படும் ராணுவ சேவையின் காலகட்டம் கணிக்க முடியாதது, சராசரியாக ஐந்து முதல் பத்தாண்டுகள் வரை கூட ஆகலாம் என்பதோடு, அங்கு பாலியல் துன்புறுத்தல்களும் சகஜம் என்பதையும் நீதிமன்றம் கவனித்தாலும், அத்தகைய நடவடிக்கைகள் நாடு கடத்தலை சட்ட விரோதமானதாக்காது என்று கூறிவிட்டது.
இந்த தீர்ப்பு சுவிட்சர்லாந்தில் தற்காலிக குடியிருக்கும் அனுமதி பெற்று வசிக்கும் 9,400 எரித்ரிய நாட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து எரித்ரியாவுடன் நாடு கடத்தப்படுவது தொடர்பாக எந்த ஒப்பந்தத்தையும் செய்திருக்கவில்லை என்றாலும் அதனால் நாடு கடத்தல்கள் சாத்தியமில்லாமல் போகாது என புலம்பெயர்தல் துறையின் மாகாணச் செயலர் Mario Gattiker கூறினார்.
எரித்ரியா அகதிகளின் கட்டாய திருப்பி அனுப்புதல்களை ஏற்றுக் கொள்ளாது என்றாலும் தானாக நாடு திரும்புதல் சாத்தியமே 
என்றார் அவர்.
சுவிஸ் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது ஈழத் தமிழ் புகலிடக் கோரிககையாளர்களையும் பெரும் அளவில் பாதிக்கும் என்று தெரிவிக்கின்றார்கள் சில சட்ட ஆலோசகர்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சுவிஸ்ஸில் பிரித்தானிய பெண்மணி ஒருவரை ஏமாற்றிய நபர் கைது


பிரித்தானிய பெண்மணி ஒருவரை காதலிப்பதாக கூறி, அவரிடம் இருந்து பெருந்தொகையை ஏமாற்றி சுவிட்சர்லாந்தில் தலைமறைவாக வாழ்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் சர்வதேச அளவில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சூரிச் மாகாண பொலிசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல்
 வெளியிட்டுள்ளனர்.
45 வயது மதிக்கத்தக்க பிரித்தானியரான அவர் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த நபர் கடந்த 2 ஆண்டுகளாக பொலிசாரால் தேடப்பட்டு வந்துள்ளார். முதலில் போலியான முதவரியுடன் ஸ்பெயின் நாட்டிலும் பின்னர் சுவிட்சர்லாந்திலும் தலைமறைவாக வாழ்ந்து 
வந்துள்ளார்.
ரகசிய உளவாளி மற்றும் வங்கி அதிகாரி என பல்வேறு பெயர்களில் மோசடியில் ஈடுபட்ட குறித்த நபர் பிரித்தானிய பெண்மணி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி சுமார் ஒரு மில்லியன் பிராங்க்ஸ் தொகையை ஏமாற்றியுள்ளார்.
மட்டுமின்றி அவர் மீது சுமார் 20 மோசடி வழக்குகளும் பிரித்தானிய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக
 கூறப்படுகிறது.
குறித்த கைது நடவடிக்கையானது தேசிய மற்றும் சர்வதேச அளவில் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன் என சூரிச் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு 200,000 பவுண்ட்ஸ் தொகை முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஸ்பெயின் நாடு சிறையில் இருந்த குறித்த நபர் பின்னர் விடுதலையானார்.
கடந்த மே மாதம் முதல் அவர் ஜெனீவாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தது பொலிசாருக்கு தெரியவந்ததை அடுத்தே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அவரை பிரித்தானியாவுக்கு நாடுகடத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தகவல்
 வெளியிட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 4 ஜூலை, 2018

சுவிஸ் சூரிச்சில் பேருந்து பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்

சுவிஸ் சூரிச் நகரில் பயணச்சீட்டு இன்றி பேருந்தில் பயணம் செய்த இளைஞரை டிக்கெட் பரிசோதகர் மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 6 இளைஞர்கள் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 01.07.2018.ஞாயிறு அன்று சூரிச் நகர பேருந்து ஒன்றில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில்
 ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது பயணிகளில் ஒருவர் டிக்கெட் இன்றி பயணம் செய்வது தெரியவந்தது. மட்டுமின்றி குறித்த பேருந்து நிறுவன ஊழியர்கள் 5 பேரும் டிக்கெட் வைத்திருக்கவில்லை.
இதனையடுத்து Wipkingen ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் குறித்த 6 பேரையும் வெளியேற்றப்பட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து நிறுவன ஊழியர்களும் அந்த இளைஞரும் குறித்த டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் டிக்கெட் பரிசோதகர் அவர்களை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும், சம்பவப்பகுதிக்கு வந்த பொலிசார் பரிசோதகர் உள்ளிட்ட 
7 பேரையும் கைது செய்தனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 2 ஜூலை, 2018

நள்ளிரவில் சுவிட்சர்லாந்தில் நடமாடிய நிர்வாண மனிதன்

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் தினத்தோறும் நள்ளிரவில் நிர்வாணமாக நடமாடி வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பெர்ன் மாகாணத்தில் உள்ள
 Wynau நகராட்சியிலேயே குறித்த சம்பவம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் தொப்பி ஒன்றை அணிந்து கழுத்தில் ஸ்கார்ஃபுடன் ஷூ மட்டுமே அணிந்து காணப்படுவதாக தொலைவில் இருந்து பார்த்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 1 ஜூலை, 2018

பேர்ண் ஞான லிங்கேஸ்வர ஆலயத்தில் பண்டிதர் திரு ச.வே பஞ்சாட்சரம் அவர்களின் நூல்வெளியீடு

யாழ் இணுவிலை பிறப்பிடமாகவும் கனடாவை விதிவிடமாகக்கொண்ட பண்டிதர்  திரு.ச.வே பஞ்சாட்சரம் அவர்கள் எழுதிய 111வது நூல்வெளியீட்டு விழா சுவிஸ் பேர்ண் ஞான லிங்கேஸ்வர ஆலயத்தில் 30.06.2018 அன்று  தமிழ் மொழியின் சிறப்பு, விரிசடைக்கடவுளே எம் மொழிக்கு கழகம் கண்டார் என்பதாகும். கடவுள் மறுப்பால் புராணத்தை
மறுதலித்தாலும் தமிழர்களிடையில் இன்றுவரை நிலவும் இந் நம்பிக்கை உலகில் பிற எந்த மொழிக்கும் இல்லை. ஆகவே நாம் தெய்வத் தமிழ் என்று போற்றுவது மிகப்பொருத்தமாகும்.
என்றுயாழ் இணுவிலை பிறப்பிடமாகவும் கனடாவை விதிவிடமாகக்கொண்டதிரு பண்டிதர் ச.வே பஞ்சாட்சரம் அவர்கள் எழுதிய நூல்வெளியீடு 30.06.2018 அன்று ம் இளமையுடன் எம் மொழி ஒளிரப் பலரது தமிழ்ப்பணிகள் காரணமாகும். தாய்த் தமிழகத்துடன் ஒப்பிட்டால் ஈழத்தமிழர்களது ஆட்தொகையும் படைப்புக்களின் தொகையும் குறைவானதாக இருக்கலாம்.
ஆனால் சங்க காலம் தொட்டு இன்றுவரை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் சிறந்த நற்படைப்புக்களைத் தமிழ் உலிகிற்குப் படைத்தளித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு சிறந்த இலக்கியம் எனப்பது மொழியின் முதுசம் மட்டுமல்ல, அது இனத்தின் மற்றும் அந் நாட்டின் வரலாறும் கூட! இலக்கியம் என்பது மகிழ்வூட்டல் என்ற வகையில் மட்டுமே அமைந்துவிடாது, மானிட வாழ்வியலை செம்மைப் படுத்துவதாகவும் 
அமைந்திருக்க வேண்டும்
இத்தகைய எமது இலக்கியங்களைப் பேணிப் பாதுகாப்பது மட்டுமன்றி, புதிய பல இலக்கியங்களும் படைக்கப்பட வேண்டும். இதற்கு படைப்பாளிகளை ஊக்குவிக்கபது இன்றியமையாததாகும்.
இவ்வகையில் முத்தமிழ் அறிஞரான பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்கள் எழுதியுள்ள ‚திறந்த வெளிச் சிறையில் ஒரு
 தேசம்‘ எனும் நூல்
சைவநெறிக்கூடுத்தின் ஏற்பாட்டில் தமிழர் களறியால் 30. 06. 2018 சனிக்கிழமை மாலை 17.30 மணிக்கு சுவிற்சர்லாந்து நாட்டில் பேர்ன் நகரில் சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அமைந்திருக்கும் இடத்தில், தமிழர் களறி மண்டபத்தில் இடம் 
மிகு சிறப்பாக நடைபெற்றது.
திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் மற்றும் திருவளர். செல்வன் சண்முகலிங்கம் சபீன் அவர்கள் கடவுள் வாழ்த்துப் பாடினர்.
மங்கல விளக்கினை வருகை அளித்திருந்தி சிறப்பு விருந்தினர்கள் திருநிறை மகாலிங்கம் ஐயா (நலிவடைந்தோர் நலவாழ்வு சங்கம், சுவிற்சர்லாந்து), திருநிறை. பார்தீபன் (தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து), 
திருநிறை. சின்னத்துரை
லக்ஸ்மன் (பேர்ன் தமிழ்ப்பள்ளி இணைப்பாளர்), திருநிறை. வினாசித்தம்பி தில்லையம்பலம் (சிவஞான சித்தர்பீட நிறுவனர்களில் ஒருவர்), திருமதி. நந்தினி (கல்விச்சேவை பேர்ன் தமிழ்ப்பள்ளி ஆசிரியை) ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
நிகழ்வுகளை திருமதி. முரளிதரன் கார்த்திகா தொகுத்தளித்தார். மங்கல விளக்கேற்றலை அடுத்து நினைவுவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகியது.
வரவேற்புரையினை திருவளர். சபீன் சண்முகலிங்கம் ஆற்றியிருந்தார். இவர் ச.வே அவர்களின் இலக்கணப்பூங்கா நூலின் பயனைத் தான் பெற்றதுடன், சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து இன்று தமிழாசிரியராகத் தான் ஆற்றும் பணிக்கும் பண்டிதர் ஐயாவின் நூல் பயன்படுவதை தனது
 வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
ஆசியுரையினை திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் வழங்கினார். பண்டிதர் ச.வே பஞ்சாட்சரம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினைச் சுருக்கி உரையாக ஆற்றிய ஐயா அவர்கள், இனமான உணர்வும், தமிழ் மொழிமீது பற்றும், சைவசமய நம்பிக்கையும் கொண்டு இன்றுவரை இவர் தமிழ் உலகிற்கு ஆற்றும் தமிழ்ப்பணியின் சிறப்பினை எடுத்து உரைத்தார்.
பண்டிதர் திரு ச.வே பஞ்சாட்சரம் அவர்களுக்கு என்களதும் இந்த இணையங்களின் நல்வாழ்த்துக்கல் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
Blogger இயக்குவது.