சூரிச் விமானம் ஒன்றில் தன்னுடன் எடுத்து வந்த வளர்ப்பு நாய்க்கு உணவளிப்பதை தடுத்த விமான பணிப்பெண்ணை சுவிஸ் பயணி ஒருவர் கடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சூரிச் நோக்கி வந்து கொண்டிருந்தது சுவிஸ் விமானம் ஒன்று.
இதில் ஹங்கேரி நாட்டில் இருந்து 75 வயது சுவிஸ் பெண்மணி ஒருவர் தமது வளர்ப்பு நாயுடன் பயணம் செய்துள்ளார்.
சம்பவத்தின்போது குறித்த பெண்மணி நாயை அடைத்து வைத்திருந்த கூண்டை திறந்து அதற்கு உணவு அளித்ததாக
கூறப்படுகிறது.
இதற்கு அருகாமையில் இருந்த சக பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, விமான பணிப்பெண் தலையிட்டு குறித்த சுவிஸ் பெண்மணி அவரது நாய்க்கு உணவளிப்பதை தடுக்க முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த குறித்த சுவிஸ் பெண்மணி, விமான பணிப்பெண்ணின் கையை கடித்து
வைத்துள்ளார்.
இச்சம்பவத்தில் விமான பணிப்பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், குறித்த சுவிஸ் பெண்மணி மீது வழக்குப் பதிந்து விசாரித்துள்ளனர்.
நடந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு 300 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது¨.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக