ஞாயிறு, 20 மார்ச், 2016

என்றும் இலாத சோதனைகள் சுவிஸில் அதிகரிப்பு !

சுவிட்சர்லாந்து நாட்டில் தீவிரவாத தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நாட்டு புலனாய்வு துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சுவிஸின் புலனாய்வு துறை அலுவலகம்(FIS) நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தீவிரவாத தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் கடந்த 5 ஆண்டுகளில் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக
 தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு மட்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சந்தேகத்தில் 2 பேரை பொலிசார் கைது செய்தனர்.
தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக கடந்த 2011ம் ஆண்டு 3,50,000 பொதுமக்களை பொலிசார் சோதனை செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது 2015ம் ஆண்டு 20,00,000 லட்சமாக அதிகரித்து புலனாய்வு அதிகாரிகளை கவலையில் 
ஆழ்த்தியுள்ளது.
இதன் மூலம், சுவிஸில் தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது புலனாய்வு துறை அதிகாரிகளின் சந்தேக வட்டத்தில் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் சுவிஸில் புகலிடம் என்ற போர்வையில் இங்கு தாக்குதல் நடத்த முயற்சிப்பதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.
சுவிஸில் மோசமான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு இருந்த 3 ஈராக் நாட்டை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சுவிஸ் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ள இந்த நிலையில் வெளியாகியுள்ள இப்புள்ளிவிபரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>புதன், 16 மார்ச், 2016

மாணவியை பழிவாங்க திட்டமிட்ட மாணவன்: நிகழ்ந்த விபரீதம்

சுவிட்சர்லாந்து நாட்டில் காதலை ஏற்க மறுத்த மாணவியை பழிவாங்குவதற்காக மாணவன் அரங்கேற்றிய நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் Ostschweizer பகுதியை சேர்ந்த பள்ளி ஒன்றில் பெயர் வெளியிடப்படாத 18 வயது மாணவன் மற்றும் 16 வயது மாணவி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பள்ளி சுற்றுலா தொடர்பாக ஜேர்மனி நாட்டிற்கு சென்றுள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள Weimar என்ற நகரில் மாணவர்கள் அனைவரும் ஒரு விடுதியில் தங்கியுள்ளனர்.
ஓர் இரவு வேளையில் 18 வயதான மாணவன், அவரது நண்பன் மற்றும் 16 வயதான அந்த மாணவியும் அளவுக்கு அதிகமாக மது மற்றும் போதை மருந்தை எடுத்துள்ளனர்.
சுயநினைவை இழந்த அந்த மாணவி மயங்கி விழுந்து விடுகிறார். மறுநாள் எழுந்திருக்கும்போது அவர் அருகில் 18 வயதான மாணவனின் நண்பன் உறங்கிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி 
அடைந்துள்ளார்.
அப்போது, ‘இரவு நேரத்தில் என்னுடைய நண்பன் உன்னை கற்பழித்து விட்டான். நீ கர்ப்பம் ஆக கூடாது என்பதற்காக மாத்திரையையும் உனக்கு கொடுத்துள்ளான்’ என கூறியுள்ளான்
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். நடந்தவை அனைத்தும் உண்மையா என தெரிந்துக்கொள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்துக்கொள்ள அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், ’இந்த விவகாரம் தொடர்பாக பொலிசாரிடம் புகார் கூறுங்கள்’ என அறிவுரை கூறி மருத்துவர்கள் திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.
இதனை ஏற்றுக்கொண்ட மாணவியும் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். பொலிசாரின் விசாரணையில் தான் அனைத்து நாடகமும் வெளிச்சமாகியுள்ளது.
இது குறித்து பொலிசார் கூறியபோது, ‘மது குடித்துவிட்டு மயங்கிய மாணவியை கற்பழித்து விட்டதாக இருவரும் 
பொய் கூறியுள்ளனர்.
மாணவிக்கு கொடுத்ததும் சாதாரண மாத்திரை தான். மாணவனின் காதலை மாணவி ஏற்க மறுத்ததால் அவரை அவமானப்படுத்தி பழிவாங்குவதற்காக’ இரண்டு மாணவர்களும் நாடகமாடியதை 
ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>புதன், 9 மார்ச், 2016

அதிர்ச்சி சம்பவம் ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட நபர்?

சுவிட்சர்லாந்தில் ஓடும் காரில் இருந்து நபர் ஒருவர் தள்ளிவிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் சூரிச் நகரில் உள்ள Gubrist Tunnel என்ற சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் இருந்து திடீரெனெ 23 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தள்ளிவிடப்பட்டுள்ளார்.
கீழே விழுந்த அந்நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி வயிற்றுப்பகுதி, கால் போன்ற பகுதிகளிலும் காயம் ஏற்பட்டு ரத்தமயமாக கிடந்துள்ளார்.
அவரை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், இதற்கிடையில் Kosovo மற்றும் Macedonia நாட்டை சேர்ந்த 2 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர், இவர்கள் இருவரும் தள்ளிவிடப்பட்ட நபருடன் பணியாற்றுபவர்கள் என 
தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் தான் அந்நபரை காரில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்கள் என்று தெரியவந்தாலும், காயமுற்ற நபர் முறையாக வாக்குமூலம் அளிக்காத காரணத்தால் பொலிசார் குழப்பத்தில் 
உள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>மதுவுக்கு அடிமையான மக்கள் வசிக்கும் மாகாணம் எது ஆய்வு தகவல்கள்?

சுவிட்சர்லாந்து நாட்டில் மதுவுக்கு அடிமையாக அதிகளவில் மக்கள் உயிரிழக்க நேரிடும் மாகாணங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பேசல் நகரில் உள்ள Frederique Chammartin என்ற சுகாதார அமைப்பு ஒன்று மதுபோதைக்கு பலியாகும் நபர்களை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2008 முதல் 2012ம் ஆண்டு வரை உயிரிழந்த 60,000 நபர்களின் இறப்பு சான்றிதழ்களை இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது.
இதன் மூலம், சுவிட்சர்லாந்து நாட்டில் இத்தாலி மொழி பேசும் மாகாணங்களில் வசிக்கும் மக்களே அதிகளவில் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக இத்தாலி மொழி பேசும் டிசினோ(Ticino)மாகாணத்தில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 20.8 சதவிகிதத்தினர் தினமும் மது குடிப்பதுடன் அதனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்படுகிறது.
இரண்டாவதாக, பிரெஞ்ச் மொழி பேசும் மாகாணங்களில் 14.7 சதவிகித மக்களும், ஜேர்மன் மொழி பேசும் மாகாணங்களில் சுமார் 8.2 சதவிகித மக்களும் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகள் குறித்து Gerhard Gmel என்ற ஆய்வாளர் பேசியபோது, ‘ஒருவரின் கல்லீரல் பழுதாகிருது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் மதுவாக தான் இருக்க முடியும்.
மேற்கு சுவிஸில் வசிப்பவர்கள் அதிகளவில் மதுபோதைக்கு அடிமையாகியுள்ளதால், பெரும்பாலானவர்கள் கல்லீரல் பாதிப்பு காரணமாகவே உயிரிழப்பதாக அவர் 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


அதிரடியாக கொள்ளையனை பிடிக்க செயல்பட்ட பொலிஸ் நாய்!

சுவிட்சர்லாந்து நாட்டில் கொள்ளையை தடுக்க வந்த பொலிசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற கொள்ளையனை பொலிஸ் நாய் விரட்டி சென்று மடக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேர்ன் நகரில் உள்ள Pappelweg என்ற பகுதியில் இருந்து பொலிசாருக்கு அவசர தகவல் வந்துள்ளது.
தங்களது குடியிருப்பிற்கு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் கொள்ளையன் ஒருவன் நுழைந்துள்ளதாக தகவல் 
அளித்துள்ளனர்.
தகவலை பெற்ற பொலிசார் இரண்டரை வயதான ஜேர்மன் ஷெபார்ட் வகை பொலிஸ் நாயுடன் விரைந்து சென்றுள்ளனர்.
கொள்ளை நடந்த வீட்டை அடைந்தவுடன், பொலிசாரை பார்த்த கொள்ளையன் அங்கிருந்து தப்ப ஓட முயன்றுள்ளான்.
ஆனால், பொலிசார் ஒருவர் கொள்ளையனை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் பொலிசாரை தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளான்.
இதனை தூரத்தில் இருந்து பார்த்த அந்த பொலிசார் நாய் பாய்ந்து சென்று கொள்ளையனை தடுத்து அவனை மேலும் நகர விடமால்
 மடக்கியுள்ளது.
அச்சத்தில் உறைந்த கொள்ளையன் ஒரு அடிக்கூட எடுத்து வைக்க முடியமால் திணறியுள்ளான். பின்னால் வந்த பொலிசார் அந்த கொள்ளையனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து நேற்று தகவல் வெளியிட்ட பொலிசார், ‘கொள்ளையனை பிடிக்க பொலிஸ் நாய் பெரிதும் உதவி செய்துள்ளது. தற்போது பொலிசாரின் பிடியில் உள்ள 39 வயதான அந்த கொள்ளையன் மீது விசாரணை நடைபெற்று வருவதாக
 தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>பயங்கரமாகரயில் மீது மோதிய சொகுசு கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயில் மீது ஆடம்பரமான கார் ஒன்று மோதி இழுத்துச் செல்லப்பட்டதில் காரில் இருந்த பெண் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
சுவிஸின் சொலூதுர்ன் மாகாணத்தில் உள்ள Flumenthal என்ற நகரில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே தான் இந்த விபத்து நடந்துள்ளது.
(திங்கள் கிழமை) காலை 8 மணியளவில் பெண் ஒருவர் சொகுசு கார் ஒன்றில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் ரயில் தண்டவாளத்தில் மீது ஏறி கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது.
காரை கட்டுப்படுத்த முடியாமல் ஓட்டுனர் காருக்குள் அமர்ந்திருந்தவாறு அலறியுள்ளார்.
சில மீற்றர்கள் தூரம் இழுத்துச்செல்லப்பட்ட அந்த கார் எதிரே நின்றுருந்த ரயில் மீதும் அருகில் இருந்த ஒரு இரும்பி கம்பியின் மீதும் பலமாக மோதி நின்றுள்ளது.
இந்த விபத்தில் கார் அப்பளமாக நொருங்கிய நிலையிலும், காருக்குள் பெண் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
விபத்தை கண்ட ரயில் நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து காரில் இருந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
உடனடியாக அவசரஊர்தி வரவழைக்கப்பட்டு அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் சுமார் 10,000 பிராங்க் மதிப்பிலான சேதாரம் ஏற்பட்டிருக்கும் என விசாரணை அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வீடுகளில் கொள்ளையிட்டு திணர வைத்த திருடன்: அதிரடியாக கைது !

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள இரண்டு மாகாணங்களை சேர்ந்த சுமார் 150 வீடுகளில் தொடர்ச்சியாக புகுந்து கொள்ளையடித்து வந்த திருடனை பொலிசார் அதிரடியாக கைது
 செய்துள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு யூலை மாதம் முதல் திருடன் ஒருவன் பொலிசாருக்கு பெரும் சவாலாக விளங்கி வந்துள்ளான்.
ஆர்கவ் மற்றும் லூசெர்ன் மாகாணங்களில் இந்த திருடனின் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த புகார்களின் அடிப்படையில், இரண்டு மாகாணங்களில் உள்ள 150 வீடுகளுக்கு மேல் அந்த திருடன் தனது கைவரிசையை காட்டியிருப்பது தெரியவந்தது.

ஒவ்வொரு வீட்டிலும், ரொக்கப்பணம் மற்றும் லட்சக்கணக்கான பிராங்க் மதிப்புள்ள நகைகளையும் திருடியது பொலிசாரை திணரவைத்துள்ளது.
திருடனை பிடிக்க அதிரடி வியூகம் வகுத்த பொலிசார், சில வாரங்களுக்கு முன்னர் அந்த பலே திருடனை கைது செய்தனர்.
தற்போது சிறையில் இருக்கும் பெயர் வெளியிடப்படாத திருடன் தொடர்பான தகவல்களை நேற்று முதன் முறையாக பொலிசார் 
வெளியிட்டுள்ளனர்.
24 வயதான அந்த திருடன் அல்பேனியா நாட்டை சேர்ந்தவன் என்றும், தனியான இருக்கும் குடும்ப வீடுகளை மட்டுமே குறி வைத்து திருடுவது அவனது வழக்கம் என்றும் பொலிசார் விசாரணையில் 
தெரியவந்துள்ளது.
திருடன் மீதான குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றத்தின் மூலம் கடுமையான தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>வெள்ளி, 4 மார்ச், 2016

சுவிஸ் மருத்துவமனையில் தற்கொலைக்கு அனுமதி !!!

சுவிட்சர்லாந்தில் விதிவிலக்கான சூழ்நிலைகளில் அதிகாரபூர்வ தற்கொலைக்கு அனுமதி அளிக்கப்படும் என மருத்துவமனை ஒன்று அறிவித்துள்ளது.
சுவிட்சர்லந்தில் சட்டத்திற்கு உட்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் வசதி இருந்து வருகிறது, அதுவும் குறிப்பிட்ட மையங்கலில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
அதிக கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், உலகெங்கிலும் இருந்தும் இந்த மையங்களை நாடி பெருவாரியான மக்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் வாலெய்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்று அதிரடி அறிவிப்பை 
வெளியிட்டுள்ளது.
விதிவிலக்கான சூழ்நிலைகளில் மருத்துவமனையிலேயே சட்டத்திற்கு உட்பட்டு தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்கப்படும் 
எனவும்,
குறிப்பாக நோயாளிகளால் மருத்துவமனையில் இருந்து தன்னிச்சையாக செல்ல முடியாதபோது இந்த வசதியை கோரிக்கையின் அடிப்படையில் பயன்படுத்தல்லம் எனவும் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற கோரிக்கையை நோயாளிகள் முன்வைத்தால் அதை தீவிர ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டு அதன்பின்னரே முடிவு 
அறிவிக்கப்படும்.
மேலும், சுவிஸ் சட்டத்திட்டத்தின்படி இதற்கெனவே பயிற்சி பெற்றுள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும்,
கண்டிப்பாக அந்த மருத்துவமனை ஊழியர்கள் இந்த சேவைக்கு பயன்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மருத்துவமனையின் உள்ளார்ந்த நோக்கம் என்பது நாடிவரும் நோயாளிகளை அரவணைத்து நோய் தீர்த்து அனுப்புதல் என்பதே,
அதிகாரபூர் தற்கொலைக்கு துணைபோதல் என்பது நோயாளிகள் மீதுள்ள அக்கறை அல்ல எனவும் அங்குள்ள மருத்துவர்கள்
 தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஒட்டுமொத்தமாக சுவிஸ் நாட்டில் இதுபோன்ற தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் ஒட்டுமொத்தமாக 780 நபர்கள் இந்த தற்கொலை மையங்களில் அனுமதிக்கப்பட்டு
 உயிர்விட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Blogger இயக்குவது.