வெள்ளி, 25 செப்டம்பர், 2015

ஈழத்தமிழரவை சுவிஸ் பாராளுமன்ற வெளிவிவகாரப் பிரிவை சந்தித்தது

சுவிட்சர்லாந்து நாட்டின் பாராளுமன்ற வெளிவிவகாரப் பிரிவை சுவிஸ் ஈழத்தமிழரவை சந்தித்து, தமிழீழ மக்களின் அரசியல் நிலைப்பாடுகளையும், தேவைகளையும் விளக்கினர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் இலையுதிர் காலத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் கடந்த 3 கிழமைகளாக இடம்பெற்றுவருகிறது.

வருடத்தில் நான்கு பருவகாலங்களையும் ஒட்டி கூடும் தேசிய பாராளுமன்றமானது, பலதரப்பட்ட அரசியல் நிலவரங்களையும் ஆராய்ந்து திட்டமிடல்களையும் மேற்கொள்ளும்.

இதனையொட்டி சுவிஸ் வாழ் தமிழ்பேசும் மக்களின் சனநாயக அரசியல் அவையான சுவிஸ் ஈழத்தமிழரவை, பாராளுமன்ற வெளிவிவகாரப்பிரிவுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இச்சந்திப்பில் தமிழர்கள் தாயகத்திலும், சுவிசிலும் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மற்றம் அண்ணளவாக 60000 ஆயிரம் தமிழ் மக்களை கொண்டுள்ள சுவிட்சர்லாந்து நாடு தனது வெளிவிவகார செயற்பாடுகளில் இங்குள்ள தமிழர்களை ஒதுக்கிவைத்து செயற்படும் 
அசமந்தப்போக்குகள் பற்றியும், மனிதாபிமானமற்ற அகதிகள் பற்றிய சட்ட இறுக்கமும் 
அதனால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும், சுவிஸ்வாழ் தமிழர்களின் உரிமைகளை பயங்கரவாத சாயம்பூசி 
கட்டுப்படுத்தும் சட்டவிரோத நடைமுறைகள் பற்றியும், பெரும்பாண்மைத் தமிழர் 
சமூகத்தின் பிரதிநிதிகளை புறந்தள்ளி தமிழர் விரோத சக்திகளுடன் இணைந்த ஒருதலைப்பட்சமாக சுவிஸ் செயற்படும் அரசியல் நெறிமுறை பற்றியும் விவாதங்கள் இடம்பெற்றன.

இச்சந்திப்பில் இறுதியாக எதிர்காலத்தில் தமிழர்கள் எப்படியான செயற்பாடுகளை வரவேற்போம், எவற்றை சவால்களாக கருதுவோம் என்ற சரியான விளக்கமும் வளங்கப்பட்டு எதிர்கால இணைந்த கூட்டுவேலைத் திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

அத்துடன் வடமாகாண சபையின் இனப்படுகொலைத் தீர்மானம் பற்றி எடுத்துக்கூறப்பட்டதுடன், இன்றுபோல் என்றம் சர்வதேச சுயாதீன நீதி விசாரணைக்கே சுவிஸ் ஆதரவளிக்க வேண்டுமென்றும் சுவிஸ் வாழ் தமிழர்கள் சார்பாக சுவிஸ் ஈழத்தமிழரவையால் வேண்டிக் கொள்ளப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு பெண்கள் அணியும் உள்ளாடைகள் விற்பனை செய்ய தடை

பிரேசில் நாட்டில் தயாரிக்கப்படும் பெண்கள் அணியக்கூடிய உள்ளாடைகள் உள்ளிட்ட முக்கிய பொருட்களை சுவிட்சர்லாந்து நாட்டில் விற்பனை செய்ய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. 
சர்வதேச அளவில் பெண்கள் அணியும் மார்பக உள்ளாடைகள் தயாரிப்பதில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக பிரேசிலில் உள்ள சிலிமெட்(Silimed) என்ற நிறுவனம் விளங்குகிறது.

ஆனால், இந்த நிறுவனம் தாயாரித்து வெளியிட்ட பெண்கள் அணியக்கூடிய மார்பக உள்ளாடைகள் தரம் இல்லாமல் இருப்பதாகவும், சில ஆடைகளில் அசுத்துங்கள் அதிக அளவில் கலந்துள்ளதும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சுவிஸ் நாட்டின் மருத்துவரீதியான சிகிச்சை பொருட்கள் குறித்து ஆய்வு செய்து வரும் Swissmedic என்ற நிறுவனம் இந்த உண்மையை கண்டுபிடித்து சிலிமெட் பொருட்களுக்கு தடை விதிக்குமாறு அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தது.

சிலிமெட் நிறுவனம் தயாரித்த மார்பக உள்ளாடைகள் மட்டுமின்றி, பெண்கள் பயன்படுத்தும் மார்பக மாற்று பொருட்கள், இரைப்பை பட்டைகள், விதை மாற்று சிகிச்சை பொருட்கள், மூக்கில் அணியக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவைகளை தடை செய்யுமாறு அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

சிலிமெட் உள்ளாடைகள் மற்றும் இதர சிகிச்சை பொருட்களிள் குறைபாடுகள் இருப்பது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவற்றை சுவிஸில் விற்பனை செய்ய தற்காலிகமாக தடை செய்துள்ளதாக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட உள்ளாடைகள் மற்றும் சிகிச்சை பொருட்களை விற்பனை செய்ய பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை : துரத்தி சென்று கைது செய்த பொலிசார்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலை  ஒன்றில் அடுத்தடுத்து விபத்துக்களை ஏற்படுத்தி சென்ற கார் ஓட்டுனரை பொலிசார் விரட்டி சென்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சுவிஸின் ஆர்கவ் மண்டலத்தில் உள்ள Wildegg என்ற நகர்புற சாலையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் 53 வயதான நபர் ஒருவர் மெர்சிடஸ் காரில் பயணம் செய்துள்ளார்.

4 சாலைகளை இணைக்கும் மைத்திற்கு கார் பின்புறமாக சென்றபோது மற்றொரு வாகனம் மீது மோதியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து பொலிசார் அந்த இடத்திற்கு வந்தபோது அவர்களிடம் பிடிபடாமல் அங்கிருந்து காருடன் தப்பியுள்ளார்.

நபரை பிடிக்க பொலிசார் பின்னால் துரத்தியபோது, சில நிமிடங்களில் Rupperswil என்ற பகுதியை அடைந்த மெர்சிடஸ் கார் அங்கும் ஒரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதற்கு பிறகும் காரை நிறுத்தாத அந்த நபர், சாலையில் சென்றவர்களுக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் தொடர்ந்து காரை தாறுமாறாக ஓட்டி சென்றுள்ளார்.

நிலமையை உணர்ந்த பொலிசார், அவ்வழியில் உள்ள அனைத்து பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு, Pipe Aarau என்ற பகுதிக்கு வந்த அந்த காரை பொலிசார் மடக்கி பிடித்தனர்.

உடனடியாக ஓட்டுனரை கைது செய்த பொலிசார் அவரிடம் இருந்த ஓட்டுனர் உரிமத்தை கைப்பற்றினர். மது அருந்துவிட்டு வாகனத்தை இயக்கியுள்ளாரா என்பது குறித்து அறிந்துக்கொள்ள அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக இன்று பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், விபத்து குறித்து விரிவான தகவல் அறிந்தவர்கள் பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>பயிற்சியில் நிகழ்ந்த விபரீதம்: கார் சக்கரத்தில் சிக்கி பலியான ராணுவ வீரர்

சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ பயிற்சி நடைபெற்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சக்கரத்தில் சிக்கிய ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பெர்ன் மண்டலத்தில் உள்ள Hauenstein என்ற பகுதியில் நேற்று இரவு ராணுவ பயிற்சி நடைபெற்றுள்ளது.

ஏராளமான ராணுவ வீரர்கள் பங்கேற்ற இந்த பயிற்சியில், ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு காரில் வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் வேகமாக பின்னோக்கி சென்றுள்ளது.

காருக்கு பின்னால் சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் இதனை எதிர்பாராமல் அங்கிருந்து விலகி ஓட முயற்சித்துள்ளார்.

ஆனால், கணப்பொழுதில் பின்னோக்கி வந்த அந்த கார் வீரரின் மீது ஏறியுள்ளது. காரின் சக்கரத்தில் சிக்கிய அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

விபத்தை தொடர்ந்து மருத்துவ குழுவினருக்கு அவசர தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவர்கள் வருவதற்கு முன்பாகவே சில நிமிடங்களில் படுகாயமடைந்த வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணுவ பயிற்சியின்போது வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>வெள்ளி, 4 செப்டம்பர், 2015

பேருந்து பயணத்தின்போது நிகழ்ந்த விபரீத சம்பவம்???

சுவிட்சர்லாந்து நாட்டில் வயதான மூதாட்டி மீது மோகம் கொண்ட மர்ம நபர் ஒருவர், மூதாட்டி சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பேசல் மண்டலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், சில தினங்களுக்கு முன்னர் Barfusserplatz என்ற நகரிலிருந்து ட்ராம் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

பேருந்தில் அவர் நின்றிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த நபர் ஒருவர், மூதாட்டியின் உடலில் அத்துமீறி சில்மிஷம் செய்துள்ளார்.

நபரின் நடவடிக்கையை கண்டித்த மூதாட்டி, சிறிது நேரத்திற்கு பிறகு Zoo Bachletten என்ற பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அதே நபர், சாலையில் மூதாட்டி நடந்து சென்றபோது பின்புறமாக வந்து கட்டி அணைத்து சித்ரவதை செய்துள்ளார்.

நபரின் செய்கைகளால் எரிச்சலடைந்த மூதாட்டி, சரமாரியாக கத்தி கூச்சலிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்துள்ளார்.

சிறிது நேரத்திற்கு பின்னர், Tiergartenrain என்ற பகுதியில் இருந்த தனது வீட்டிற்குள் நுழைய முற்சித்தபோது அதே நபர் திடீரென அங்கு வந்த மூதாட்டியை வாசற்படியிலேயே கீழே தள்ளி அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளார்.

தொடர்ந்து வந்து பாலியல் துன்புறுத்தல் செய்த நபரால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, பலமாக குரல் எழுப்பி உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார்.

சில நிமிட போராட்டத்திற்கு பிறகு, அங்கு ஆட்கள் வந்ததால் மூதாட்டியை விட்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடி விடுகிறார்.

பட்டப்பகலில் தொடர்ந்து வந்து பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை பற்றி பொலிசாரிடம் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.

30 முதல் 35 வயதிற்குள் இருக்கும் அந்த நபர் குறித்து தகவல்களை சேகரித்த பொலிசார், அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


தோசைக் கல்லால் அன்பான காதலியை அடித்தே கொன்ற காதலன்

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜோடி இருவர் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் செல்லமாக தாக்கி கொண்டதில் உணர்ச்சி வசப்பட்ட காதலன் தனது காதலியை தோசைக் கல்லால் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் ஜெனிவா நகரில் 40 வயதான நபர் ஒருவர் தனது 39 வயதான காதலியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.
ஜோடி இருவருக்கும் மது மற்றும் போதை மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு மே 17ம் திகதி இரவு வேளையில், இருவரும் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர், இருவரும் ஒருவரை ஒருவர் செல்லமாக தாக்கிக்கொண்டுள்ளனர்.
மது போதை தலைக்கேறிய காதலன், தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் சமையல் அறையில் இருந்த தோசைக்கல்லை எடுத்து காதலியின் முகத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை தொடர்ந்து 
தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு மிக ஆச்சர்யம் அளிக்கும் விதத்தில் இருவரும் குளித்துவிட்டு படுக்கையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
பின்னர், இருவரும் தூங்கிவிட்ட நிலையில், அதிகாலையில் காதலன் படுக்கையில் இருந்து எழுந்து பார்க்கையில், அவரது காதலி அசராமல் படுக்கையில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காதலியின் காது வழியாக ரத்தம் வழிந்த நிலையில் இருந்ததை கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
காதலி இறந்ததை உறுதி செய்த பொலிசார் காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நபர் மீதான் வழக்கு விசாரணை நேற்று ஜேனிவா நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
காதலனின் சார்பாக வாதாடிய வழக்கறிஞ்சர், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் திட்டமிட்டு இந்த கொலையை செய்யவில்லை. சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்ததால் நடந்தது எதுவும் அவரது சுயநினைவில் நிகழவில்லை என வாதாடியுள்ளார்.
இருப்பினும், கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள காதலன் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணிடம் அத்து மீறி நடந்துக்கொண்ட காரணத்திற்காக ஏற்கனவே ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
எனவே, முழுமையான விசாரணைக்கு பிறகு தான் அவர் கொலையாளியா இல்லையா என்பது தெரியவரும் என உயிரிழந்த பெண்ணின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் நீதிபதியுடன்முறையிட்டுள்ளார்.. 


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

எந்த நேரத்திலும் சுவிஸில் பேரழிவு பூகம்பம் ஏற்படலாம்’: நில அதிர்வு ஆய்வு மையம் அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டின் பூகோள அமைப்பின் அடிப்படையில் எந்த நேரத்திலும் பேரழிவு உண்டாக்கும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுவிஸின் நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் சுவிட்சர்லாந்து நாடு பேரழிவு பூகம்பம் எந்த நேரத்திலும் எதிர்நோக்கியுள்ள நாடு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸின் பூகோள அமைப்பை 2004ம் ஆண்டிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து தற்போது ஒரு புதிய ‘நில அதிர்வு அபாயத்திற்குரிய’ பகுதிகளின் வரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் அடிப்படையில், சுவிஸின் வாலைஸ்(Valais) மண்டலம் தான் அதிகளவில் நிலநடுக்கத்திற்கு உள்ளாகும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக பேசல், Graubunden, St. Gallen Rhine பள்ளத்தாக்கு மற்றும் மத்திய சுவிட்சர்லாந்து பகுதிகள் நிலநடுக்கத்தில் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள புதிய வரைப்படத்தில், சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருப்பது நிலநடுக்கத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஆகும்.

கருஞ்சிகப்பாக உள்ள பகுதியில் அதிக பாதிப்புகள் ஏற்படும். லேசான பச்சை நிறத்தில் உள்ள பகுதிகளில் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மைய அதிகாரியான ஸ்டீபன் வைமெர், சுவிஸில் எந்த நேரத்திலும் அல்லது சில வருடங்களுக்கும் பிறகும் கூட மிதமான அல்லது கடுமையான அல்லது மிக பேரழிவை உண்டாக்கும் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சுவிஸ் நாட்டில் ஆண்டுக்கு 500 முதல் 800 முறைகள் நில அதிர்வுகள் ஏற்படுகிறது.

உதாரணமாக, பேசில் மண்டலத்தில் 6.6 ரிக்டல் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டால், 1,000 முதல் 6,000 பேர் வரை உயிரிழப்பும், 45,000 பேர் வரை பலத்த காயமடையும் நிலையும், 1.6 மில்லியன் மக்கள் வீடு இழக்க நேரிடும் நிலையும், 50 முதல் 140 பில்லியன் பிராங்க் மதிப்பில் மிக மோசமான சேதாரமும் ஏற்படும் என ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

எனினும், உடனடியாக பேரழிவு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான எந்தவித உறுதியான ஆதரங்களும் ஆராய்ச்சியாளர்களிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மிதமான நில அதிர்வு அல்லது கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டால், பொதுமக்கள் www.seismo.ethz.ch என்ற இணையத்தளத்தில் ஒவ்வொரு பகுதிகளின் சேதாரத்தை பற்றி அறிந்துகொள்ளலாம் என ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Blogger இயக்குவது.