வெள்ளி, 31 ஜூலை, 2015

கார்ரை ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

சுவிட்சர்லாந்தில் கார் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்த பயங்கர விபத்து Unterkulm Teufenthal - Wynentalstrasse பகுதிக்கு இடையே நடந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், காரின் ஓட்டுனர் வேகமாக வந்ததுடன் ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் எதிர் வரிசையில் வந்த வாகனங்களால் அவரால் ரயில் பாதையை கடக்க முடியவில்லை.
இதனால் ரயில் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட அவரது வாகனத்துடன் அவ்வழியாக வந்த ரயில் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் காரில் பயணம் செய்த பெண் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து நடந்ததை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சாலைகளை மூடிவிட்டு விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தினர்.
அப்பகுதியில் உள்ள பயணிகளுக்காக மாற்று பேருந்து இயக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாகன ஓட்டிகள் அந்த பாதையை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இதனால் அப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளயினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 22 ஜூலை, 2015

பயங்கர மின்னல் வீட்டின் மீது தாக்கிய அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

சுவிட்சர்லாந்தில் ஒரு வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் வீட்டின் மேல்தளம் சேதமடைந்ததுடன், பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் ஆர்கவ் மண்டலத்தில் உள்ள Safenwill என்ற நகரத்தில் தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை நேரத்தில் அப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் அடிக்கடி இடியும் மின்னலும் அடித்தவாறு இருந்துள்ளது.
இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த Nicole Baur (42) என்ற பெண் ஒருவர் தனது வீட்டின் குளியல் அறையில் குளித்து விட்டு வெளியே வந்துள்ளார்.
அவர், வெளியே வந்த சில நிமிடங்களில் பலத்த ஓசையுடன் அந்த வீட்டை மின்னல் தாக்கியுள்ளது.
வீட்டியே குழுக்கிய அந்த மின்னல் குளியல் அறையின் மேல் தளத்தை துளையிடும் அளவிற்கு மோசமாக தாக்கியுள்ளது.
மின்னல் தாக்கியவுடன், அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த அனைத்து வீடுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பேசிய அந்த பெண், குளியல் அறையிலிருந்து சில நிமிடங்கள் தான் தாமதமாக வந்திருந்தால், மின்னல் தாக்கி தன்னுடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும், வீடு சேதாரம் ஆகியுள்ளதால் அதனை சீர்ப்படுத்த சுமார் 20 ஆயிரம் பிராங்குகள் வரை செலவாகும் எனவும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் மின்னலை தாங்குகின்ற பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணின் வீடு மட்டுமல்லாமல், சுவிஸில் உள்ள பெரும்பாலான வீடுகளில் மின்னலை தாங்கும் பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 450 வீடுகள் மின்னல் தாக்கி சேதாரத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதிதாக கட்டப்படும் வீட்டில் மின்னலை தாக்கும் சாதனத்தை பொருத்த வேண்டும் என்றால் சுமார் 3000 பிராங்குகள் செலவாகும்.
இதுவே, ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள வீட்டிற்கு இந்த சாதனத்தை காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து செய்து முடிக்க 10 ஆயிரம் பிராங்குகள் வரை செலவாகும்.
இது குறித்து பேசிய காப்பீடு நிறுவனம் ஒன்றின் செய்தி தொடர்பாளரான Kirstin Steyer, சுவிஸில் உள்ள ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் தங்களது வீடுகளில் மின்னலை தாங்கும் சாதனங்களை பொருத்த முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திடீர் கோளாறு ரயிலில் நடுவழியில் பயணிகளை இறக்கிவிட்டனர் -

சுவிட்சர்லாந்து நாட்டில் பயணத்தில் ஈடபட்டிருந்த ரயில் ஒன்றில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் விளைவாக அதில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கி விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சூரிச் மண்டலத்தில் உள்ள Winterthur என்ற ரயில் 
நிலையத்திலிருந்து S7 என்ற ரயில் பயணிகளுடன் நேற்று பிற்பகல் 5 மணியளவில் புறப்பட்டுள்ளது.
Effretikon நகரை நோக்கி சென்றுக்கொண்டிருந்த அந்த ரயிலில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் விளைவாக Kemptthal என்ற பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரமாக பயணிகள் ரயிலிலேயே தவித்து வந்துள்ளனர். ஆனால், ரயிலில் உள்ள பிரச்சனை சரி செய்ய முடியாததால், பயணிகளை அதே இடத்தில் இறக்கி விட்டனர்.
மேலும், தீயணைப்பு துறையை சேர்ந்த வாகனம் வந்துக்கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் பயணம் செய்து Winterthur நகருக்கு திரும்புமாறு ரயிலில் இருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ரயில் பாதையிலேயே பயணிகள் காத்து இருந்தபோது சுமார் 456 நிமிடங்களாக வாகனம் அங்கு வரவில்லை. அதன் பின்னர், சிறிது நேரத்தில் அங்கு வந்த சேர்ந்த தீயணைப்பு துறையை சேர்ந்த வாகனத்தில் பயணிகள் அனைவரும் திரும்ப அனுப்பப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய சுவிஸ் ரயில்வே நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், ரயிலில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால் அதனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றும், பயணிகள் குறிப்பிட்ட நகருக்கு செல்ல மாற்று ரயில் சேவை ஏற்படுத்தப்பட்டதாகவும் 
தெரிவித்தார்.
மேலும், எதிர்பாராமல் நிகழ்ந்த சிரமத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>பயணிகள் பேருந்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை

சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் பேருந்தில் ஏறிய மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லூசேன் மண்டலத்தில் உள்ள Stalten Ettiswil என்ற நகரிலிருந்து பயணிகள் பேருந்து Ruswil நகருக்கு கடந்த ஞாயிறு மாலை 4.45 மணியளவில் புறப்பட்டுள்ளது.
பேருந்து புறப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர் வழித்தடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளது.
அப்போது, முகமூடி அணிந்தவாறு திடீரென பேருந்துக்குள் நுழைந்த இரண்டு நபர்கள் பயணிகளை நோக்கி சத்தம் எழுப்பாமல் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மரண பயத்தில் பயணிகள் உறைந்துள்ள நேரத்தில், இரண்டு நபர்களில் ஒருவன் துப்பாக்கியை எடுத்து ஓட்டுனர் தலையில் வைத்து மிரட்டியுள்ளான்.
எவ்வித சத்தமும் எழுப்பாமல் பணத்தை எடுக்குமாறு மிரட்டியுள்ளான். பீதியடைந்த ஓட்டுனரும் தன்னிடமிருந்த எல்லா பணத்தையும் கொள்ளையனிடம் அளித்துள்ளார்.
பின்னர், பயணிகளிடம் திரும்பி கொள்ளையர்கள், அவர்களிடமிருந்தும் பணத்தை கொள்ளையடித்து விட்டு Buttisholz நோக்கி தப்பியுள்ளனர்.
கொள்ளை சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் ஓட்டுனரும் பயணிகளும் புகார் அளித்துள்ளனர்.
கொள்ளையை நிகழ்த்திய நபர்கள் ஜேர்மனி மொழியில் பேசியதாகவும், இருவருக்கும் 15 முதல் 20 வயதிருக்கலாம் என ஓட்டுனர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
புகாரை பெற்ற பொலிசார், துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

காருக்குள் குழந்தையை விட்டுச் சென்ற தாய்: வெப்பத்தில் பரிதாப பலி

சுவிட்சர்லாந்தில் பெண்மணி ஒருவர் தனது 5 வயது குழந்தையை காரினுள் வைத்து பூட்டி சென்றதால், வெப்பம் தாங்காமல் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சுவிஸில் கடந்த சில காலமாக வெப்ப அலை (Heat wave) அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சுவிஸில் உள்ள Ticino மாகாணத்தில் உள்ள Muzzano-வில், கடந்த செவ்வாய் கிழமையன்று தாயார் ஒருவர் தனது 5 வயது குழந்தையை காரில் தனியாக விட்டுவிட்டு சென்றுள்ளார்.

அந்த நேரம் வெப்ப அலைகள் கடுமையாக வீசியதால், காருக்குள் இருந்த குழந்தை வெப்பம் தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே அந்த குழந்தை இறந்துவிட்டது உறுதியானதால், மருத்துவ உதவியாளர்களால் எந்த உதவியும் செய்யமுடியவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், என்ன காரணத்திற்காக அந்த பெண்மணி குழந்தையை காரில் தனியாக விட்டுச் சென்றார் என்பதை பற்றி பொலிசார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

Ticino மாகாணத்தை சேர்ந்த அரசு வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது தொடங்கியுள்ளது.

மேலும், செவ்வாய் கிழமை மதிய வேளையில் வெப்பத்தின் அளவு தீவிரமாக இருந்ததால், வானிலை சேவை மையம் 4ம் நிலை எச்சரிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2003ம் ஆண்டு யூலை மாதம் இருந்த சராசரி வெயிலின் அளவான 32.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தை விட இந்த மாதத்தின் முதல் 2 வாரங்களிலேயே அதிகளவு வெப்பம் பதிவாகி உள்ளதாக 
தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 14 ஜூலை, 2015

குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து:மக்கள் அலறியடித்து ஓட்டம்

சுவிட்சர்லாந்தில் உள்ள 15 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நள்ளிரவு வேளையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தொடர்ந்து அங்கு வசித்த மக்கள் அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சுவிஸின் பெர்ன் மண்டலத்திற்கு உட்பட்ட Quartier Bümpliz என்ற நகரில் 15 அடுக்குமாடிகள் கொண்ட Mädergutstrasse என்ற வானளாவிய கட்டிடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 2.50 மணியளவில், அக்கட்டிடத்தில் உள்ள 57வது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதும் அவ்வீட்டிலிருந்து சன்னல் வழியாக கரும்புகை அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவ தொடங்கியுள்ளது.
சிறிது நேரத்தில் வீடு பற்றி எரிவதை கண்ட குடியிருப்புவாசிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நெருப்பை கட்டுப்படித்தினர்.
எனினும், சில வீடுகளிலிருந்து வெளியேற முடியாத தவித்த நபர்களை தீயணைப்பு வீரர்கள் ஏணியின் உதவியுடன் கீழே இறக்கி கொண்டு வந்துள்ளனர்.
இந்த விபத்தில் 3 நபர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டதால், அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளின் சன்னல்கள் திறந்தே இருந்ததால், கரும்புகை மற்ற வீடுகளுக்கு வேகமாக பரவியுள்ளது.
இதில், பல நபர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் முதலுதவி அளித்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாததால், இந்த சம்பவம் தொடர்பாக பெர்ன் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சுயநினைவின்றி மூழ்கி இருந்த சிறுவன்: மருத்துவமனையில்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து 5 வயது சிறுவன் சுயநினைவின்றி மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிவரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூரிச் மண்டலத்தில் உள்ள Schwamendinger நகரில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் கடந்த சனிக்கிழமை அன்று அதிர்ச்சி அளிக்கும் 
சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிற்பகல் வேளையில், நீச்சல் குளத்திற்கு சென்ற அப்பகுதி வாலிபர்கள், தண்ணீருக்குள் சுமார் ஒன்றரை மீற்றர் ஆழத்தில் 5 வயதுடைய சிறுவன் ஒருவன் மூழ்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விரைந்து செயல்பட்ட வாலிபர்கள் சிறுவனை உடனடியாக கரைக்கு தூக்கி வந்து முதலுதவி அளித்துள்ளனர்.
சிறுவன் ஏற்கனவே தண்ணீருக்குள் சுயநினைவின்றி இருந்துள்ளதால், முதலுதவி அளித்த பின்னரும் அவனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்த அந்த வாலிபர்கள் அவசரஊர்தியை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.
மருத்துவமனைக்கு வந்த பொலிசார், சிறுவனின் உடல் நலம் குறித்து விசாரணை செய்தபோது, சிறுவனுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை என்றும், அபாய கட்டத்தில் தான் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுவன் எவ்வளவு நேரம் தண்ணீருக்குள் மூச்சு இல்லாமல்
 இருந்துள்ளான் என்பதை கண்டறிய முடியவில்லை.
மேலும் சிறுவனின் அடையாளங்களை அறிவுத்துள்ள பொலிசார், சிறுவனை கொல்வதற்காக யாராவது முயற்சி செய்துள்ளனரா 
அல்லது அவன் தவறுதலாக நீச்சல் குளத்தில் விழுந்துள்ளானா என்பது குறித்து பொலிசார் விசாரணை
 நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புகைப்படம் எடுத்த வெளிநாட்டு வாலிபரின் : குடியுரிமையை பறித்த அரசு???

தன்னுடைய கைப்பேசியில் புகைப்படம் எடுத்து அந்த பெண்ணிற்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் வெளியே கசிந்ததால், சுவிஸ் புலம்பெயர்தல் அலுவலகம் அவரது கடவுச்சீட்டை முடக்கிய அந்த இளைஞருக்கு அறிவிப்பு செய்தி ஒன்றையும் அனுப்பியது.
அதில், சுவிஸில் உள்ள சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், அவரது குடும்ப உறுப்பினர்களில் அவருக்கு மட்டும் குடியுரிமை அளிக்க மறுத்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இதனை எதிர்த்து தற்போது அந்த இளைஞர் சுவிஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஆனால், புலம்பெயர்தல் அலுவலகம் எடுத்துள்ள நடவடிக்கை சரியானதே என விளக்கம் அளித்துள்ள நீதிபதி, இளைஞருக்கு இரண்டு வருட கால அவகாசம் அளிப்பதாகவும், அதன் பிறகு இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்ய வேண்டும் என கூறி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கிற்கு செலவிடப்படும் சுமார் 3000 பிராங்குகளை இளைஞரே செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி 
உத்தரவிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திங்கள், 13 ஜூலை, 2015

குடியேற போகிறீர்களா? இந்த 10 வழிமுறைகளை பின்பற்றுங்கள்???

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேற உள்ள அல்லது அந்நாட்டிற்கு முதன்முதலாக பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டினர்கள் சுவிஸ் மக்களுடன் இயல்பாகவும் அன்பாகவும் பழக தேவையான 10 வழிமுறைகளை சுவிஸ் உளவியல் நிபுணர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
தாய்நாட்டிலிருந்து எந்த நாட்டிற்கு சென்றாலும், அந்த நாட்டின் பழக்க வழக்கங்கள், பண்பாடு உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை பற்றி சிறிதாவது முன்கூட்டியே தெரிந்துக்கொள்வது அவசியம்.

இதன் அடிப்படையில், சுவிட்சர்லாந்து நாட்டிற்கு குடியேற விரும்பும் அல்லது அந்நாட்டிற்கு தற்காலிகமாக பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டினர்கள் சுவிஸ் மக்களிடம் பழகும்போது பின்பற்ற வேண்டிய முக்கிய 10 வழிமுறைகளை ஜெனிவாவை சேர்ந்த பிரபல உளவியல் நிபுணரான Lawson-Botez வலியுறுத்தியுள்ளார்.

1. சுவிஸ் மொழியை கற்றுக்கொள்ளவும்

நீங்கள் எந்த நபரிடம் பேசினாலும் கூட, அவருடைய தாய்மொழியில் பேச தொடங்கினால் உங்கள் மீதான மரியாதை அவருக்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சுவிஸில் அலுவலக மொழிகளாக உள்ள ஜேர்மன், பிரெஞ்ச் மற்றும் இத்தாலி மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

சுவிஸில் உள்ள எந்த மண்டலத்தில் நீங்கள் குடியேறினாலும், அங்குள்ள ஜேர்மன், பிரெஞ்ச் மற்றும் இத்தாலி மொழிகளை கற்றுத்தரும் வகுப்புகளில் சேர்வது மிகச்சிறந்த வழியாகும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> </.

2. விளையாட்டு கிளப்புகளில் சேரவும்

சுவிஸ் மக்களுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளதால், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை விளையாட்டு கிளப்புகளில் உறுப்பினராக இருப்பவர்கள் அந்நாட்டில் அதிகம்.

எனவே, நீங்கள் தங்கியுள்ள பகுதியில் உள்ள விளையாட்டு கிளப்புகளில் நீங்களும் உறுப்பினராக இணைந்தால், அங்கு வரும் நபர்களுடன் பழகும் வாய்ப்பு மிக அதிகம்.

குறிப்பாக, டென்னிஸ் விளையாட்டு கிளப்புகளில் சேருவது அதிக பலனளிக்கும் என Lawson-Botez சுட்டிக்காட்டியுள்ளார்.

3. இரவு வகுப்புகளுக்கு செல்ல பழகுங்கள்

சுவிஸில் மாலை முதல் இரவு வரை பல வகையான வகுப்புகள் நடைப்பெறுகின்றன. உங்களுக்கு பிடித்தமான ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல் உள்ளிட்ட பல திறமைகளை அந்நாட்டு மக்களுடன் இணைந்து வளர்த்துக்கொள்ள இது ஒரு சிறந்த வழியாகும்.

4. இரவு விருந்துகளில் கலந்துக்கொள்ளுங்கள்

சுவிஸில் உள்ள தேவாலயங்கள் அல்லது பொது இடங்களில் நடைபெறும் இரவு விருந்துகளில் ஆர்வமுடன் கலந்துக்கொள்ளலாம். உங்களுக்கு பழக்கமான நபர் இரவு விருந்துக்கு அழைப்பு விடுத்தால், அங்கு அவரது நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அதிகம். இது உண்களுடைய நட்பு வட்டத்தை விரிவாக்கும்.

5. பிற துறைகளை சார்ந்த நபர்களிடம் பழகுங்கள்

நீங்கள் பணிசெய்யும் அல்லது உங்களுக்கு விருப்பமான துறை சார்ந்த நபர்களை அடுத்து, பிற துறைகளை சார்ந்த நபர்களிடம் பழக ஆரம்பித்தால் இரு தரப்பினரும் தங்கள் துறைகள் தொடர்பான தகவல்களை பரிமாரிக்கொள்ளும்போது நட்பு அதிகரிக்கும். இந்த வட்டத்தை விரிவாக்கி கொள்வதன் மூலம் நமது பொது அறிவும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

6. சக ஊழியரிடம் மனம் விட்டு பழகுங்கள்

சுவிஸில் நீங்கள் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டால், உங்கள் நிறுவனத்தில் உள்ள சக ஊழியர்களிடம் மனம் விட்டு பழக வேண்டும். நீங்கள் தனிமையில் இருப்பதாக கூறினாலும் கூட, அந்த சக ஊழியர் மூலம் நிறைய நண்பர்கள் சேர வாய்ப்பு உள்ளது.

7. நவீன தொழிநுட்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள்

சுவிஸில் பெரும்பாலான மக்கள் நவீன கால இணையதளங்கள் மற்றும் கைப்பேசிகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலமே ஒவ்வொருவரிடமும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதால், நீங்களும் தொழில்நுட்ப அறிவில் தேர்ந்தவராக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.

8. தன்னார்வ சேவைகளில் ஈடுபடுங்கள்

பண்பாட்டு நிகழ்ச்சி அல்லது சமூக நல பணியாக இருந்தாலும் கூட, நீங்கள் அவற்றில் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு உங்களால் முடிந்த சேவைகளை செய்யலாம். இது நிறைய நபர்களுடன் பழக வாய்ப்பு ஏற்படுத்துவதுடன், மொழிகளை கற்கவும் உதவும்.


9. வித்தியாசமாக சிந்தியுங்கள்

Think Out of the Box என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, நீங்கள் எதை செய்தாலும் அதனை பிற நபர்களை விட வித்தியாசமாகவும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்திலும் செய்ய வேண்டும். இது உங்கள் மீதான மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.

10. இறுதியாக, நண்பர்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்

சுவிஸில் தங்கியுள்ள நாட்களில் பல வகையான நபர்களை சந்தித்து இருந்தாலும் கூட, உங்களுடைய நண்பர்களுக்கென தனியாக நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களுக்கு முக்கியத்துவத்தை அளியுங்கள். இணையத்தளங்கள் மூலமாக தவறான காதலன் அல்லது காதலி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு நேரத்தை செலவிடாமல், உங்களுக்காக இருக்கும் நண்பர்களிடம் அன்பாக பழகி வந்தால், அந்த உறவு என்றென்றும் நீடித்து இருக்கும்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>> இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> </
Blogger இயக்குவது.