புதன், 22 ஜூலை, 2015

திடீர் கோளாறு ரயிலில் நடுவழியில் பயணிகளை இறக்கிவிட்டனர் -

சுவிட்சர்லாந்து நாட்டில் பயணத்தில் ஈடபட்டிருந்த ரயில் ஒன்றில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் விளைவாக அதில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கி விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சூரிச் மண்டலத்தில் உள்ள Winterthur என்ற ரயில் 
நிலையத்திலிருந்து S7 என்ற ரயில் பயணிகளுடன் நேற்று பிற்பகல் 5 மணியளவில் புறப்பட்டுள்ளது.
Effretikon நகரை நோக்கி சென்றுக்கொண்டிருந்த அந்த ரயிலில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் விளைவாக Kemptthal என்ற பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரமாக பயணிகள் ரயிலிலேயே தவித்து வந்துள்ளனர். ஆனால், ரயிலில் உள்ள பிரச்சனை சரி செய்ய முடியாததால், பயணிகளை அதே இடத்தில் இறக்கி விட்டனர்.
மேலும், தீயணைப்பு துறையை சேர்ந்த வாகனம் வந்துக்கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் பயணம் செய்து Winterthur நகருக்கு திரும்புமாறு ரயிலில் இருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ரயில் பாதையிலேயே பயணிகள் காத்து இருந்தபோது சுமார் 456 நிமிடங்களாக வாகனம் அங்கு வரவில்லை. அதன் பின்னர், சிறிது நேரத்தில் அங்கு வந்த சேர்ந்த தீயணைப்பு துறையை சேர்ந்த வாகனத்தில் பயணிகள் அனைவரும் திரும்ப அனுப்பப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய சுவிஸ் ரயில்வே நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், ரயிலில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால் அதனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றும், பயணிகள் குறிப்பிட்ட நகருக்கு செல்ல மாற்று ரயில் சேவை ஏற்படுத்தப்பட்டதாகவும் 
தெரிவித்தார்.
மேலும், எதிர்பாராமல் நிகழ்ந்த சிரமத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.