புதன், 22 ஜூலை, 2015

பயங்கர மின்னல் வீட்டின் மீது தாக்கிய அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

சுவிட்சர்லாந்தில் ஒரு வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் வீட்டின் மேல்தளம் சேதமடைந்ததுடன், பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் ஆர்கவ் மண்டலத்தில் உள்ள Safenwill என்ற நகரத்தில் தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை நேரத்தில் அப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் அடிக்கடி இடியும் மின்னலும் அடித்தவாறு இருந்துள்ளது.
இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த Nicole Baur (42) என்ற பெண் ஒருவர் தனது வீட்டின் குளியல் அறையில் குளித்து விட்டு வெளியே வந்துள்ளார்.
அவர், வெளியே வந்த சில நிமிடங்களில் பலத்த ஓசையுடன் அந்த வீட்டை மின்னல் தாக்கியுள்ளது.
வீட்டியே குழுக்கிய அந்த மின்னல் குளியல் அறையின் மேல் தளத்தை துளையிடும் அளவிற்கு மோசமாக தாக்கியுள்ளது.
மின்னல் தாக்கியவுடன், அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த அனைத்து வீடுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பேசிய அந்த பெண், குளியல் அறையிலிருந்து சில நிமிடங்கள் தான் தாமதமாக வந்திருந்தால், மின்னல் தாக்கி தன்னுடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும், வீடு சேதாரம் ஆகியுள்ளதால் அதனை சீர்ப்படுத்த சுமார் 20 ஆயிரம் பிராங்குகள் வரை செலவாகும் எனவும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் மின்னலை தாங்குகின்ற பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணின் வீடு மட்டுமல்லாமல், சுவிஸில் உள்ள பெரும்பாலான வீடுகளில் மின்னலை தாங்கும் பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 450 வீடுகள் மின்னல் தாக்கி சேதாரத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதிதாக கட்டப்படும் வீட்டில் மின்னலை தாக்கும் சாதனத்தை பொருத்த வேண்டும் என்றால் சுமார் 3000 பிராங்குகள் செலவாகும்.
இதுவே, ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள வீட்டிற்கு இந்த சாதனத்தை காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து செய்து முடிக்க 10 ஆயிரம் பிராங்குகள் வரை செலவாகும்.
இது குறித்து பேசிய காப்பீடு நிறுவனம் ஒன்றின் செய்தி தொடர்பாளரான Kirstin Steyer, சுவிஸில் உள்ள ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் தங்களது வீடுகளில் மின்னலை தாங்கும் சாதனங்களை பொருத்த முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.