செவ்வாய், 14 ஜூலை, 2015

குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து:மக்கள் அலறியடித்து ஓட்டம்

சுவிட்சர்லாந்தில் உள்ள 15 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நள்ளிரவு வேளையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தொடர்ந்து அங்கு வசித்த மக்கள் அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சுவிஸின் பெர்ன் மண்டலத்திற்கு உட்பட்ட Quartier Bümpliz என்ற நகரில் 15 அடுக்குமாடிகள் கொண்ட Mädergutstrasse என்ற வானளாவிய கட்டிடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 2.50 மணியளவில், அக்கட்டிடத்தில் உள்ள 57வது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதும் அவ்வீட்டிலிருந்து சன்னல் வழியாக கரும்புகை அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவ தொடங்கியுள்ளது.
சிறிது நேரத்தில் வீடு பற்றி எரிவதை கண்ட குடியிருப்புவாசிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நெருப்பை கட்டுப்படித்தினர்.
எனினும், சில வீடுகளிலிருந்து வெளியேற முடியாத தவித்த நபர்களை தீயணைப்பு வீரர்கள் ஏணியின் உதவியுடன் கீழே இறக்கி கொண்டு வந்துள்ளனர்.
இந்த விபத்தில் 3 நபர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டதால், அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளின் சன்னல்கள் திறந்தே இருந்ததால், கரும்புகை மற்ற வீடுகளுக்கு வேகமாக பரவியுள்ளது.
இதில், பல நபர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் முதலுதவி அளித்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாததால், இந்த சம்பவம் தொடர்பாக பெர்ன் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.