செவ்வாய், 14 ஜூலை, 2015

சுயநினைவின்றி மூழ்கி இருந்த சிறுவன்: மருத்துவமனையில்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து 5 வயது சிறுவன் சுயநினைவின்றி மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிவரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூரிச் மண்டலத்தில் உள்ள Schwamendinger நகரில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் கடந்த சனிக்கிழமை அன்று அதிர்ச்சி அளிக்கும் 
சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிற்பகல் வேளையில், நீச்சல் குளத்திற்கு சென்ற அப்பகுதி வாலிபர்கள், தண்ணீருக்குள் சுமார் ஒன்றரை மீற்றர் ஆழத்தில் 5 வயதுடைய சிறுவன் ஒருவன் மூழ்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விரைந்து செயல்பட்ட வாலிபர்கள் சிறுவனை உடனடியாக கரைக்கு தூக்கி வந்து முதலுதவி அளித்துள்ளனர்.
சிறுவன் ஏற்கனவே தண்ணீருக்குள் சுயநினைவின்றி இருந்துள்ளதால், முதலுதவி அளித்த பின்னரும் அவனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்த அந்த வாலிபர்கள் அவசரஊர்தியை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.
மருத்துவமனைக்கு வந்த பொலிசார், சிறுவனின் உடல் நலம் குறித்து விசாரணை செய்தபோது, சிறுவனுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை என்றும், அபாய கட்டத்தில் தான் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுவன் எவ்வளவு நேரம் தண்ணீருக்குள் மூச்சு இல்லாமல்
 இருந்துள்ளான் என்பதை கண்டறிய முடியவில்லை.
மேலும் சிறுவனின் அடையாளங்களை அறிவுத்துள்ள பொலிசார், சிறுவனை கொல்வதற்காக யாராவது முயற்சி செய்துள்ளனரா 
அல்லது அவன் தவறுதலாக நீச்சல் குளத்தில் விழுந்துள்ளானா என்பது குறித்து பொலிசார் விசாரணை
 நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.