புதன், 27 நவம்பர், 2013

சுவிட்சர்லாந்தில் ரயில் விபத்து: 11 பேர் காயம்!!

சுவிட்சர்லாந்தில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ரெயில் ஒன்று சரக்கு வாகனத்துடன் மோதியதில் ரெயிலில் வந்துகொண்டிருந்த 11 பயணிகள் காயமடைந்தனர்.
பனிமலைகள் மிகுந்த வலைஸ் நகரத்திலிருந்து இந்த ரெயில் திரும்பிவந்துகொண்டிருந்தபோது மொரேல் என்ற கிராமத்தின் அருகே இருந்த ஆளில்லா லெவல் கிராசிங்கைக் கடக்க வான் சாரதி ஒருவர் முயற்சித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் பயணிகளுக்குக் காயமேற்பட்டது.  மொத்தம் 41 பயணிகள் ரெயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர். அதில் 11 பேருக்குக் காயமேற்பட்டது. இதில் இருவருக்குப் பாதிப்புகள் அதிகமாகவும் மற்றவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ரெயில் மற்றும் வாகன சாரதி காயமின்றி தப்பித்தனர். ரெயிலின் மூன்று பெட்டிகள் இந்த விபத்தின் காரணமாகத் தடம் புரண்டன. 

கடந்த 2010 ஆம் ஆண்டில் செர்மாட்டிலிருந்து செயின்ட் மோரிசுக்கு சென்றுகொண்டிருந்த வலைஸ் கிளேசியர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 64 வயது கொண்ட ஜப்பானியப் பெண் பயணி ஒருவர் இறந்தார்.

பனிரெண்டுக்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்தனர். அந்த விபத்து நடந்த இடத்திற்கு சற்று தூரத்திலேயே தற்போது புதிய விபத்து நடந்துள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.