திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சுற்றுலா வந்த பெண்மணி சாலையை கடந்தபோது நிகழ்ந்த விபரீதம்???

சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலாவிற்கு வந்த கனடிய பெண்மணி ஒருவர் சாலையை கடக்கும்போது ட்ராம் வாகனத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் சூரிச் மண்டலத்தில் உள்ள Dubendorferstrasse நகரில் தான் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இன்று பிற்பகல் வேளையில், 56 வயதுடைய கனடிய பெண்மணி ஒருவர் அதே பகுதியில் உள்ள சாலை ஒன்றில் நடைப்பயணமாக சென்றுள்ளார்.
ட்ராம் வாகனம் செல்லும் வழியில் அவர் எதிர்பாராத நிலையில் கடந்துள்ளதாக தெரிகிறது. அப்போது எதிரே வந்த ட்ராம் வாகனம் பெண்மணி மீது பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடியுள்ளார். பாதசாரிகள் உடனடியாக அவசர மருத்துவ வாகனத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
ஆனால், வாகனம் வருவதற்கு முன்னதாகவே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், பெண்மணி அலட்சியமாக ட்ராம் வாகனம் செல்லும் வழியில் கடந்ததால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளதாக 
தெரிவித்தனர்.
எனினும், பெண்மணி இறந்ததற்கான விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்ற உறுதியான தகவலை பொதுமக்கள் அறிந்திருந்தால், உடனடியாக சூரிச் மண்டல பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாரு பொலிசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பயங்கர விபத்து : காருக்குள்ளே இருவர் சாவு

இத்தாலி நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நிகழ்ந்த எதிர்பாராத பயங்கர விபத்தில் சிக்கிய 2 சுவிட்சர்லாந்து வீரர்கள் காருக்குள்ளேயே எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் உள்ள கார்லசோ என்ற நகருக்கு அருகில் ரோண்டே பாரெல்லி என்ற கார் பந்தயம் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த கார் பந்தயத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டிசினோ மண்டலத்தை சேர்ந்த 2 வீரர்கள் கலந்துகொண்டனர்.
Renault Clio R3C என்ற அதிவேக காரில் பங்கேற்றபோது, ஒருவர் கார் ஓட்டுனராகவும், மற்றொருவர் முன்னிருக்கையில் அமர்ந்தவாறு ஓட்டுனருக்கு ஆலோசனை வழங்கியவாறு போட்டி 
நிகழ்ந்துள்ளது.
கார் பந்தயத்தின் இறுதி சுற்று வரும்போது, சுவிஸ் வீரர்கள் பயணித்த அந்த கார் தாருமாறாக ஓடி சாலையில் இருந்த ஒரு பெரிய சுவற்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் சுவற்றில் மோதிய வேகத்தில் தீப்பற்றியதால், வீரர்கள் இருவரும் உடனடி மயக்கத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த பயங்கர விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீட்பு குழுவினரால், உடனடியாக காருக்கு அருகில் செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது.
சில நிமிடங்களுக்கு பிறகு, மீட்புக்குழுவினர் தீப்பற்றி 
எரிந்த கார் அருகில் சென்று 2 பேரையும் மீட்க முயற்சித்துள்ளனர்.
ஆனால், காரின் இருப்பக்க கதவுகளும் திறக்க முடியாத அளவில் விபத்தில் சேதமடைந்துள்ளது.
தீவிரமாக முயன்றும் 2 நபர்களை காரை விட்டு வெளியே கொண்டு வர முடியாததால், இருவரும் காருக்குள்ளே எரிந்து உயிரிழந்துள்ளனர்.
கார் பந்தயத்தில் கலந்துகொண்ட இருவரும் திறமையான ஓட்டுனர்கள் என்றும், இதற்கு முன்னர் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர் என தகவல்கள்
 வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்களில் 22 வயதான நபருக்கு 10 மாத குழந்தையும், 39 வயதான மற்றொரு நபருக்கு 2 குழந்தைகளும் உள்ளது 
குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



சனி, 22 ஆகஸ்ட், 2015

அ.சண்முகதாஸ் தகைசார் தமிழ்ப்பேராசிரியார்க்கு பவளவிழா

விட்சர்லாந்தின் சூரிச் நகரில் தகைசார் தமிழ்ப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களது 75  - வது அகவை நிறைவை முன்னிட்டு "பவளவிழா" நடைபெறவிருக்கிறது.
சுவிட்சர்லாந்து தமிழ்ச்சங்கமும், தமிழ்க்கல்விச் சேவையும் இணைந்து நடாத்தும் இவ்விழா 22 ஆம் திகதி பிற்பகல் 15.30 மணியளவில் சூரிச் நகரில் நடைபெறவிருக்கிறது.
பேராசிரியர் அவர்களின் தமிழ்சேவை தொடரவும், தாய்மொழியாம் தமிழை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் தொடர்ந்து பணியாற்றிவரும் அவர்களை வாழ்த்துவதற்கும் இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

புதிய கரன்ஸி நோட்டுகள்:சுவிஸ் சுக்கு வருகிறது தேசிய வங்கி அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டு மக்களின் பயன்பாட்டிற்காக புதிய மற்றும் அதிநவீன கரன்ஸி நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நாட்டு தேசிய வங்கி அறிவித்துள்ளது.
சுவிஸ் தேசிய வங்கியான SNB கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 
அதில், தற்போது பயன்பாட்டில் உள்ள 50 பிராங்க் கரன்ஸிற்கு பதிலாக அதிநவீன முறையில் தயாரிக்கப்பட்ட 50 பிராங்க் கரன்ஸி நோட்டை அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. 
2017ம் ஆண்டு இறுதிக்குள் புதிய 20 பிராங்க் கரன்ஸியையும் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 
மேலும், 2019ம் ஆண்டிற்குள், ஒவ்வொரு ஆண்டின் மத்தியில் அல்லது இறுதியில், தற்போது உள்ள 10 பிராங்க், 100 பிராங்க், 200 பிராங்க் மற்றும் 1,000 பிராங்க் கரன்ஸி நோட்டுகளுக்கு பதிலாக புதிய மற்றும் அதிநவீன கரன்ஸி நோட்டுகளை அறிமுகப்படுத்தப்படும். 
சுவிட்சர்லாந்து நாட்டு வரலாற்றில் 1907ம் ஆண்டில் தான் முதன்முறையாக கரன்ஸி நோட்டுகளை மக்களின் பயன்பாட்டிற்கு 
அறிமுகப்படுத்தப்பட்டது. 
இதுவரை 8 முறை புதிய கரன்ஸி நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தற்போது 9வது முறையாக புதிய நோட்டுகளை அச்சிட்டு பயன்பாட்டிற்கு வெளியிடப்பட உள்ளது. 
சுவிஸில் புதிய கரன்ஸிகள் அறிமுகப்படுத்தப்படும் என தேசிய வங்கி கடந்த 2005ம் ஆண்டே அறிவித்திருந்தது. 
ஆனால், தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் எளிதில் கள்ள நோட்டுகளை தயாரிக்க முடியும் என்பதால், அதனை முறியடிக்கும் வகையில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கரன்ஸிகளின் வடிவமைப்பை தயார் செய்ய இந்த 6 ஆண்டுகள் தாமதம் ஆகியுள்ளதாக சுவிஸ் தேசிய வங்கி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 
தற்போது புதிதாக அறிமுகப்படுத்த உள்ள கரன்ஸி நோட்டுகளை சூரிச் மண்டலத்தை சேர்ந்த பிரபல கிராஃபிக் கலைஞரான Manuela Pfrunder என்பவரின் வடிவமைப்பிற்கு தேசிய வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. 
தற்போது புழக்கத்தில் உள்ள கரன்ஸி நோட்டுகளில் இருப்பது போன்ற சுவிஸ் நாட்டு பிரபலங்களின் படங்கள் புதிய கரன்ஸியில் இடம்பெறாது. 
மாறாக, 50 பிராங்க் கரன்ஸியில் சுவிஸ் மலையில் சில நபர்கள் நடந்து செல்வது போலவும், மறுபுறம் சூரியன் இருப்பது போலவும் படங்கள் இடம்பெற்று இருக்கும். 
10 பிராங்க் கரன்ஸியில் சுவிஸின் பிரபல விளையாட்டான பனிச்சறுக்கு படம் இடம்பெற்று இருக்கும் என சுவிஸ் தேசிய வங்கி
 தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

இடியுடன் பெய்த பலத்த மழை: மின்னலுக்கு பண்ணை வீடு சேதம்

சுவிஸில் வெப்ப சலனத்தால் பெய்த இடியுடன் கூடிய பலத்த மழையில் ஒரு பண்ணை வீடு மின்னலுக்கு இரையாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை 35 டிகிரி செல்சியஸ்க்கு இருந்த தட்பவெட்ப நிலையால் பலத்த பயல் வீச ஆரம்பித்தது. இதனால் புயல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில் ஞாயிறு இரவு பெர்ன் மண்டலத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டை மின்னல் தாக்கியுள்ளது. இதில் தீப்பற்றிய அந்த வீடு முற்றிலும் எரிந்தது.
100 தீயணைப்பு வீரர்கள் போராடியும் வீட்டின் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அருகில் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் வீட்டை அழிவில் இருந்து மீட்க முடிவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாதவாறு தடுக்கப்பட்டு விட்டதாகவும், அந்த வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு விட்டதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை தேசிய வானிலை அலுவலகம் ஜெனிவா ஏரி, ஜூரா பகுதி உட்பட சுவிஸின் மேற்கு பகுதிக்கு மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் திங்கட்கிழமை சற்று மிதமான தட்பவெப்பம் இருக்கும் என்றும், மறுநாளே மீண்டும் பழைய நிலைக்கு சூழ்நிலை மாறும் எனவும் தேசிய வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வங்கி கொள்ளை: கொள்ளையனை வலை வீசித் தேடும் பொலிசார்

சுவிட்சர்லாந்தின் Aesch பகுதியில் அமைந்திருக்கும் தேசிய வங்கியில்தான் இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.
Aesch பகுதியில் அமைந்திருக்கும் தேசிய வங்கியில் சம்பவத்தன்று காலையில் கருப்பு உடையணிந்த ஒருவர் வங்கியில் நுழைந்து அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த அவன் அங்கிருந்த மொத்த பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதை பார்த்த அப்பகுதி மக்கள் Basel பகுதி பொலிசாருக்கு தெரிவித்தனர்.
கருப்பு நிறத்தில் தோள்பை வைத்திருந்ததாக கூறப்படும் அந்த கொள்ளையனிடம் ஆயுதங்கள் எதுவும் இருந்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த துணிகர கொள்ளை குறித்து Basel பகுதி பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த கொள்ளையன் குறித்த விவரங்கள் தெரிய வந்தால் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 5 ஆகஸ்ட், 2015

மர அமைப்பு சரிந்து விபத்து:பிரபல ஹொட்டலில் ஏராளமானோர் படுகாயம்

சுவிட்சர்லாந்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் நடந்த விபத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரோசா பகுதியில் உள்ள Metropol ஹொட்டலின் மரவேலைப்பாடுகள் நிறைந்த அமைப்பு திடீரென சரிந்து விழுந்துள்ளது.
பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்த இந்த அமைப்பின் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஹொட்டலின் காட்சிகூடத்தில் நின்றிருந்த பலரும்
 இந்த விபத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ள பார்வையாளர்கள் உடனடியாக மீட்புப்படையினருக்கு தகவல் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து 
வந்த பொலிசார் மற்றும் தீயணைப்புப்படையினர் துரித நடவடிக்கையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கும் மீட்புப்படையினர் எஞ்சியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Blogger இயக்குவது.