திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சுற்றுலா வந்த பெண்மணி சாலையை கடந்தபோது நிகழ்ந்த விபரீதம்???

சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலாவிற்கு வந்த கனடிய பெண்மணி ஒருவர் சாலையை கடக்கும்போது ட்ராம் வாகனத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் சூரிச் மண்டலத்தில் உள்ள Dubendorferstrasse நகரில் தான் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இன்று பிற்பகல் வேளையில், 56 வயதுடைய கனடிய பெண்மணி ஒருவர் அதே பகுதியில் உள்ள சாலை ஒன்றில் நடைப்பயணமாக சென்றுள்ளார்.
ட்ராம் வாகனம் செல்லும் வழியில் அவர் எதிர்பாராத நிலையில் கடந்துள்ளதாக தெரிகிறது. அப்போது எதிரே வந்த ட்ராம் வாகனம் பெண்மணி மீது பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடியுள்ளார். பாதசாரிகள் உடனடியாக அவசர மருத்துவ வாகனத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
ஆனால், வாகனம் வருவதற்கு முன்னதாகவே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், பெண்மணி அலட்சியமாக ட்ராம் வாகனம் செல்லும் வழியில் கடந்ததால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளதாக 
தெரிவித்தனர்.
எனினும், பெண்மணி இறந்ததற்கான விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்ற உறுதியான தகவலை பொதுமக்கள் அறிந்திருந்தால், உடனடியாக சூரிச் மண்டல பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாரு பொலிசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.