திங்கள், 10 ஆகஸ்ட், 2015

இடியுடன் பெய்த பலத்த மழை: மின்னலுக்கு பண்ணை வீடு சேதம்

சுவிஸில் வெப்ப சலனத்தால் பெய்த இடியுடன் கூடிய பலத்த மழையில் ஒரு பண்ணை வீடு மின்னலுக்கு இரையாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை 35 டிகிரி செல்சியஸ்க்கு இருந்த தட்பவெட்ப நிலையால் பலத்த பயல் வீச ஆரம்பித்தது. இதனால் புயல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில் ஞாயிறு இரவு பெர்ன் மண்டலத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டை மின்னல் தாக்கியுள்ளது. இதில் தீப்பற்றிய அந்த வீடு முற்றிலும் எரிந்தது.
100 தீயணைப்பு வீரர்கள் போராடியும் வீட்டின் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அருகில் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் வீட்டை அழிவில் இருந்து மீட்க முடிவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாதவாறு தடுக்கப்பட்டு விட்டதாகவும், அந்த வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு விட்டதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை தேசிய வானிலை அலுவலகம் ஜெனிவா ஏரி, ஜூரா பகுதி உட்பட சுவிஸின் மேற்கு பகுதிக்கு மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் திங்கட்கிழமை சற்று மிதமான தட்பவெப்பம் இருக்கும் என்றும், மறுநாளே மீண்டும் பழைய நிலைக்கு சூழ்நிலை மாறும் எனவும் தேசிய வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.