சுவிட்சர்லாந்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் நடந்த விபத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரோசா பகுதியில் உள்ள Metropol ஹொட்டலின் மரவேலைப்பாடுகள் நிறைந்த அமைப்பு திடீரென சரிந்து விழுந்துள்ளது.
பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்த இந்த அமைப்பின் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஹொட்டலின் காட்சிகூடத்தில் நின்றிருந்த பலரும்
இந்த விபத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ள பார்வையாளர்கள் உடனடியாக மீட்புப்படையினருக்கு தகவல் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து
வந்த பொலிசார் மற்றும் தீயணைப்புப்படையினர் துரித நடவடிக்கையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கும் மீட்புப்படையினர் எஞ்சியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக