புதன், 30 அக்டோபர், 2013

இறப்பை ஏற்படுத்தும் சுவிஸ் நோய்த்தொற்று மருத்துவமனைகள்


 
சுவிட்சர்லாந்தில் கிருமிகளால் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுவிசோநோ மருத்துவகுழு

 அமைப்பு தெரிவித்துள்ளது.
சுவிஸ்நோ மருத்துவகுழு நடத்திய ஆய்வில் சுவிட்சர்லாந்தில் மருத்துவமனைகள் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 600 மரணங்களையும், 15,000 நோய்த்தொற்றையும் கட்டுப்படுத்தலாம் என்று தெரியவந்துள்ளது.

மேலும் இந்நாடு சுகாதார வசதிகளில் பிற நாடுகளை விட பின்தங்கி உள்ளது. மத்திய பொது சுகாதார அலுவலகம் தொற்றுநோய்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக ஒரு தேசிய திட்டத்தை தற்போது

 தொடங்கியுள்ளது.
சுவிஸில் பெருங்குடல் அல்லது மலக்குடல் தொடர்பான அறுவை சிகிச்சைகளில் எட்டு பேரில் ஒருவர் நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த எண்ணிக்கை ஜேர்மனியில் 11 பேர், பிரான்சில் 13 பேர் மற்றும் அமெரிக்காவில் 16 பேரில் ஒருவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

திருடியை வலைவீசி தேடும் சுவிஸ் பெண்


சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய செல்போனை திருடி சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த கல்லூரி மாணவி நில்டாயூஸ் நிஷி(வயது 24).
இவர் கடந்த ஏப்ரல் மாதம் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது போது, செல்போன்(ஸ்மார்ட் போன்) தொலைந்து போனது.
இந்நிலையில் DropBox-யை அவர் தற்செயலாக சோதித்தபோது திருட்டுப்போன செல்போனை மொராக்கோவில் ஒரு இளம்பெண்

பயன்படுத்தி வருவதும், அந்த செல்போன் கொண்டு எடுக்கப்பட்ட இளம்பெண்ணின் புகைப்படங்களையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆனால் அந்த பெண்ணுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் இணையத்தளத்தில் தனி வளைத்தளம் உருவாக்கி இளம்பெண்ணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இவருடைய வளைத்தளத்தில் மொராக்கோ நாட்டை சேர்ந்த 13 ஆயிரம் பேர் பார்வையிட்டும் எதுவும் கிடைக்கவில்லையாம்.
எனினும் விரைவில் அந்த பெண்ணை கண்டுபிடிப்பேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் நில்டாயூஸ்.
 

செவ்வாய், 22 அக்டோபர், 2013

இடைத்தரகர் கைது ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ,..


விவிஐபிகளுக்கான ஹெலிகொப்டர்களை வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் இடைத்தரகர் கய்டோ ரால்ப் ஹாஸ்செக், சுவிட்சர்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிக முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்துவதற்காக 12 ஹெலிகொப்டர்களை வாங்க இந்திய இராணுவ அமைச்சகம் டெண்டர் விட்டது.
இதில், இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட்(AgustaWestland) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது.
ரூ.3 ஆயிரத்து 600 கோடி செலவில் 12 ஹெலிகொப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்த பேரத்தில், ரூ.360 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது, இந்த ஹெலிகொப்டர் பேரத்தில் முக்கிய தரகராக செயல்பட்டவர் கய்டோ ரால்ப் ஹாஸ்செக்(வயது 62). இவர் சுவிஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின்பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இத்தாலி நாட்டு லா ரிபப்ளிகா செய்தி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கெய்டோவை சுவிஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, அவரை இத்தாலிக்கு நாடு கடத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கெய்டோ பெடரல் கோர்ட்டில் அப்பீல் செய்யாவிட்டால் அவர் சுவிஸ் நாட்டில் இருந்து ஒரு வாரத்தில் இத்தாலிக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தியாகி, ஹாஸ்செக் உள்ளிட்ட 13 பேரின் பெயரைச் சேர்த்துள்ளது.

தற்போது கைதாகியுள்ள ஹாஸ்செக்கும், இன்னொரு இடைத்தரகரான கார்லோ ஜெரோசா என்பவரும், மொஹாலியைச் சேர்ந்த ஐடிஎஸ் இன்போடெக் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த ஆரோமேட்ரிக்ஸ் இன்போ சொலூசன்ஸ் நிறுவனம் மூலம் இந்தியாவுக்கு 50 மில்லியன் ஈரோ லஞ்சப் பணத்தை அனுப்பி வைத்ததாக சிபிஐ கூறியுள்ளது.

மேலும் 2.43 கோடி ஈரோ லஞ்சப் பணத்தை அகஸ்டாவெஸ்ட்லேன்ட் நிறுவனத்திடமிருந்து வாங்கிய இவர்கள், அதை ஐடிஎஸ் துனிஷியா நிறுவனத்தின் கணக்கில் சேர்த்துள்ளனர் என்றும் சிபிஐ கூறுகிறது.

இந்த வழக்கை விசாரித்து வரும் இத்தாலிய புலனாய்வு அமைப்புகள், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க, அகஸ்டாவெஸ்ட்லேன்ட் நிறுவனத்தின் மூல நிறுவனமான பின்மெக்கானிகாவின் தலைமை செயலதிகாரி, இடைத்தரகர்களைப் பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

புதன், 16 அக்டோபர், 2013

உயிருக்காக போராடும் 79 வயது முதியவர்


 சுவிட்சர்லாந்தில் 79 வயது முதியவர் ஒருவர் விபத்துக்குள்ளானதில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவிஸின் சூரிச் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் அமர்ந்திருக்கையில் 60 வயது பெண்ணொருவர் ஒட்டிய கார் ஒன்று அவர் மீது மோதியது.

இதில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இது சம்பந்தமாக பொலிசார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

செவ்வாய், 15 அக்டோபர், 2013

ஏலத்திற்கு வருகிறது உலகின் பெரிய Orange Diamond


உலகில் காணப்படும் ஆரேஞ்ச் நிற டயமண்ட்களிலே பெரிது எனக் கருதப்படும் பேரிக்காய் வடிவம் கொண்ட வைரம் ஒன்று ஏலத்திற்கு விடப்படவிருக்கின்றது.
சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா பகுதியில் வசிக்கும் கிறிஸ்ரே என்பவரால் இது ஏலத்திற்கு விடப்படவுள்ளது.

இதன் இறுதிப் பெறுமதியானது 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என எதிர்பார்ப்பதாக கிறிஸ்ரே குறிப்பிட்டுள்ளார்.

(வீடியோ இணைப்பு)

மலைகளை மூடும் பனி சுவிஸில்


 
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள பனிவீழ்ச்சியால் மலைகள் மூடப்படும் நிலைமைக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுவிஸில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டதால் பனிவீழ்ச்சிகளும் ஆரம்பித்துவிட்டன.

மேலும் இந்த பனிவீழ்ச்சிகள் மலைகளை மூடும் அளவுக்கு அதிகமாகியுள்ளன. புலிலா, சான் பெர்னரிடோ, ஸ்பிலகின் மற்றும் கிரவ்பெடன் போன்ற மலைகளை சுமார் 2,000 மீற்றர் அளவுக்கு பனிவீழ்ச்சி மூடியுள்ளது.

மேலும் சூரிச் பகுதியில் வெப்பநிலை 16 டிகிரியிலும் மற்றும் சியான் பகுதியில் 14 டிகிரி அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வெப்பநிலை அடுத்தவாரத்தில் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

புதன், 9 அக்டோபர், 2013

இத்தாலியில் சடலமாக மீட்பு சுவிஸைச் சேர்ந்த 6 வயது சிறுவன்


 
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன சுவிஸ் சிறுவன் இரண்டு நாட்களுக்குப் பின்னர் இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
இத்தாலியின் தெற்குப் பகுதியான டஸ்கனி பிரதேசம் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு விடுமுறையைக் கழித்துவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தினரின் கார் விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் 6 வயது சிறுவன் காணாமல் போனான். இதனையடுத்து, இரு தினங்களாக தீயணைப்புப் படையினர், நீச்சல் வீரர்கள் மேலும் பலர் மோப்ப நாய்களுடன் தேடினர்.
அப்பகுதியிலிருந்து 150 மீற்றர் தூரத்திலுள்ள பாலத்தில் கார் சிக்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சிறுவனின் உடல் 7 கிலோமீற்றர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் அம்மா கால்நடையாக வீட்டுக்குத் திரும்பினார். அவர் காயப்படவில்லை எனினும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தார்.
காரினுள் சிறுவனின் கலர் பென்சில்கள் மட்டும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

திங்கள், 7 அக்டோபர், 2013

நெடுஞ்சாலையில்தீப்பற்றி எரிந்தது. சுவிஸில் கோர விபத்து


சுவிட்சர்லாந்து நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வான் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் நாட்டில் உள்ள A1 நெடுஞ்சாலையில் வான் ஒன்று படுவிபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்தது.

இந்த தீப்பொறியானது 100 மீற்றர் தொலைவிற்கு பரவியதால் இதனை அணைப்பதற்காக 70 அவசரப்படையினர், 50 தீயணைப்பு படையினர், 3 அவசர ஊர்தி, இரண்டு ஹெலிகொப்டர் போன்றவை வரவைக்கப்பட்டன.
இதனால் இந்த நெடுஞ்சாலை பாதையானது 5 மணி நேரத்திற்கு முன்னதாகவே மூடப்பட்டது.

மேலும், இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் மோசமான காயங்களுடன் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

ஓடும் ரயிலிலிருந்து ஜன்னல் வழியாக குதித்த வாலிபர்சுவிஸில் ஓடும் ரயிலிலிருந்து குதித்த வாலிபருக்கு பலமான காயம் ஏற்பட்டுள்ளது.
19 வயதே ஆன இவருக்கு, தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை சர் ரயில் நிலையத்தில் நடந்தது.
இது குறித்து விசாரித்த பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், அந்த வாலிபர் உண்டேர்வாஷ் நகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

ரயில் சரியாக 6:01க்கு நிலையத்தை அடைந்தது. ஆனால், அப்போது இறங்காமல் விட்ட வாலிபர் வண்டி கிளம்பிய 3 நிமிடங்கள் கழித்து வண்டியை நிறுத்த உதவும் செயினை இழுத்திருக்கிறார்.

ஆனால் அது பயனடையாததால், உடனே ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து விட்டார். ஓடும் ரயிலில் இருந்து குதித்ததால் தலையில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் இது பற்றிய விசாரணையை நடத்தி வருகிறோம். இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரேனும் இருந்தால் சர் ரயில் நிலையத்திலோ அல்லது 081 257 73 00 என்ற இந்த தொலைபேசி எண்ணுக்கோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சனி, 5 அக்டோபர், 2013

சுவிஸில் இருந்து திருப்பி அனுப்பப்படும் இலங்கை தமிழர்கள்

சுவிஸில் இருந்து திருப்பி அனுப்பப்படும் இலங்கை தமிழர்கள்
[ வெள்ளிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2013, 03:34.58 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தி இவர்களின் புகலிடக் கோரிக்கையானது 2011ம் ஆண்டு ரத்துசெய்யப்பட்டது.
மேலும் இவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு செல்லுமாறு சுவிஸ் அரசாங்கம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இவர்களில் ஒருவர், நாங்கள் எங்கள் நாட்டிற்கு சென்றால் எங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் எனவே எங்களை திருப்பி அனுப்ப வேண்டாம் எனவும் சுவிஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையானது அகதிகள் ஜக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையருக்கு எடுத்து செல்லப்பட்டது. சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்கள் ஏராளமாக வசிக்கின்றனர்.
மேலும் இலங்கையில் 1972 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைபெற்ற போரில் 100,000 மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மனித உரிமை தலைவர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு 40,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கை அரசோ இதனை மறுத்துவிட்டு சமரச செயல்களில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Blogger இயக்குவது.