வெள்ளி, 31 ஜனவரி, 2014

ரத்த வெள்ளத்தில் மனைவி! தப்பியோடிய கணவன்


சுவிசில் மனைவியை கொல்ல முயன்ற கணவன், நாட்டை விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிசின் ஆர்கெவ் மாகாணத்தில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர், திருமணமாகி ஓராண்டு கடந்த நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 27ம் திகதி தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கொலை செய்ய துணிந்துள்ளார்.

கொடூர தாக்குதல் நடத்திய நபர், பின்னர் தப்பியோடி விட்டார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தப்பியோடிய குற்றவாளியை கைது செய்ய பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார், பாதிக்கப்பட்ட இப்பெண்ணின் கணவனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாகவும், விரைவில் கைது செய்து விடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அல்பேனியாவை சேர்ந்த இக்குற்றவாளி தன் பூர்வீக இடமான கொசோவொவிற்கு சென்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
 

நிபுணர் ராஜினாமா மரணப் பின்னணியில்

 சுவிட்சர்லாந்தில் வாலியஸ்(VALIAS) மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்திலுள்ள VALIAS மருத்துவமனை அரிய மருத்துவ மனைகளில் ஒன்றானது. இங்கு கல்லீரல் பெருங்குடல், கணையம், உணவுக் குழாய், மற்றும் உள்ளுறுப்பு சிறப்பு அறுவைச் சிகிச்சைக்கு பெயர்போன மருத்துவமனையாகும்.

இந்த VALIAS மண்டல மருத்துவமனையின் தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் வின்சென்ட். இவர் கடந்த 2010ம் ஆண்டு அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருந்தபோது தொலைக்காட்சியில் காற்பந்தாட்டபோட்டியை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.
இதன் விளைவாக இரண்டு நோயாளிகள் உயிரிழந்தனர், பின்னர் குற்றம்சாட்டப்பட்ட வின்சென்ட் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், VIGOUSSE என்ற பத்திரிகை மருத்துவமனையில் மேலும் இரண்
டு மரணங்கள் நிகழ்ந்துள்ளதை வெளிப்படுத்தியபொழுது, அதிர்ச்சி அலைகள் இந்த மருத்துவமனையைத் தாக்கின.
மருத்துவமனையானது, வின்சென்ட்டின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டபோதிலும், இன்னும் சில நாட்களுக்குப் பின்னர் அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறுவார் எனக் கூறியது.

ATS, செய்திக் குறிப்பின்படி, மருத்துவர் வின்சென்ட், மருத்துவமனையின் உள் விசாரணையிருந்து தப்பியபொழுதும், இறந்தவரின் குற்ற வழக்கினையும், பாராளுமன்ற வெளி விசாரணையையும் சந்திக்க வேண்டிய காலக் கட்டாயத்தில் உள்ளார் என்று தெரிவித்துள்ளது
 

புதன், 29 ஜனவரி, 2014

உணவுப்பொருட்களை வீணடிக்கும் சுவிஸ் மக்கள்


சுவிஸ் நாட்டு மக்கள் அதிக உணவுப்பொருட்களை வீணடிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அலுவலகமானது 33 மாநகராட்சிகளில் 16.5 டன் குப்பைகளை அலசி ஆராய்ந்து பார்த்ததின் விளைவாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 30 கிலோ உணவுப்பொருட்களை ஒவ்வொரு சுவிஸ் நாட்டு குடிமகனும் குப்பைகளில் கொட்டுகிறான். அதில் நிச்சயமாக பாதியளவு உணவுகள் பயன்படுத்தப்படாத நல்ல வகை உணவுகள் என்றும் மேலும் தரமான உணவுப்பொருட்கள் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் 2.20.000 டன் எடையுள்ள செய்தித்தாள்களை சுவிஸ் நகர மக்கள் குப்பைத்தொட்டிகளில் கொட்டுகின்றனர், இந்த பேப்பர்களை மறுசுழற்சி கூடைகளில் போட்டால் அதை மறுபடியும் பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பு வாய்ப்புள்ளது.

அதேபோல், 60.000 டன் எடையுள்ள கண்ணாடிப்பொருட்களையும் குப்பையில் போடுகின்றனர், இவற்றையும் மறுசுழற்சி தொட்டிகளில் போட்டால் அதனை கண்ணாடி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் பயன்படுத்த இயலும்.


இந்த ஆய்வு அறிக்கையின்படி, சுவிஸ் நாட்டு மக்கள் கொட்டும் குப்பைகளில் ஐந்தில் ஒரு பங்கு குப்பைகள் மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய நல்ல தரமான பொருட்கள்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது

சுவிஸில் பெருகி வரும் சிறைச்சாலைகள்

 சுவிஸில் கைதிகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் சிறைச்சாலைகளும் அதிகரித்து வருகின்றன.
சுவிஸ் சிறைகளில் கைதிகள் வசிப்பதற்கான அதிகாரப்பூர்வ கொள்ளளவு மொத்தம் 7,072 மட்டுமே . ஆனால் கடந்தாண்டில் மட்டும் இதன் எண்ணிக்கை 7,048 ஆக அதிகரித்துள்ளது என கடந்த செப்டம்பர் மாதத்தில் மேற்கொண்ட ஆய்வில் மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இங்கு இருக்கும் மொத்தம் 51 சதவீத கைதிகளில், ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ள 18 சதவீதம் பேர் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கைதிகள் சிலரிடமிருந்து சாட்சியங்களை கைப்பற்றும் நோக்கில் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து தடுப்பு காவலில் வாழும் 575 எண்ணிக்கையாக இருந்த 18 வயதிற்கும் கீழ் இருக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கை கடந்த 2012ம் ஆண்டில் 9 சதவீதமாக குறைந்தது.
இதில் 91 சதவீதம் பேர் ஆண்கள் மற்ற 61 சதவீதம் பேர் சுவிஸின் குடிமகன்கள்.
 

திங்கள், 27 ஜனவரி, 2014

கூக்குரல்: தொடர்ந்து சூடு பிடிக்கும் உலக பொருளாதார மாநாடு

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் வெறும் 16 சதவீத பெண் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
சுவிசின் டாவொஸ் நகரத்தில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வணிகர்கள், செல்வந்தர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் உட்பட 2500 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கடந்தாண்டு 17 சதவீதம் பங்கேற்ற பெண் பிரதிநிதிகள் இவ்வாண்டு 16 சதவீதமாக குறைந்துள்ளனர்.

எனவே கடந்த 25ம் திகதி பெண்களுக்கான ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டைன் லகர்டி கூறுகையில், பெண்ணாக இருப்பதால் என் ஆரம்பகால வாழ்க்கையில் ஊக்கத்தை குலைக்கும் வகையில் எல்லோரும் என்னை ஏளனமாய் பேசினர் என்றும் பெண்களின் ஒதுக்கீடு சதவீதம் எல்லா வேலைத்துறைகளிலும் கண்டிப்பாக உயர்த்த பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆண், பெண் கலாச்சார பாகுபாடுகளை நீக்க வேண்டும் என பேஸ்புக்கின் தலைமை அதிகாரி ஷெரில் சான்பெர்க் கூறியுள்ளார்.
 

வியாழன், 23 ஜனவரி, 2014

உலகின் பிரம்மாண்ட ஆடம்பர ஹோட்டல்உலகின் தலைசிறந்த ஹோட்டலாக சுவிஸின் Grand Hotel Kronenhof என்ற நட்சத்திர ஹோட்டல் தெரிவாகியுள்ளது.
சுவிசின் பான்டிரிசீனா(Pontresina) பகுதியின், எங்கடைன்(Engadine) நீண்ட பள்ளதாக்கில் Grand Hotel Kronenhof நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளது.
கடந்த 19ம் நூற்றாண்டில் புதிய பரோக் பாணியில் கட்டப்பட்ட இந்த ஆடம்பர ஹோட்டல் அருகில் பெர்னினா பனிப்பாறைகள் மற்றும் எங்கடைன்(Engadine) மலைகள் அமைந்துள்ளன.
இதில் 2,000 சதுர மீற்றர் அளவில் ஸ்பா ஒன்று புதுப்பிக்கப்பட்டு, மலையுச்சிகளை காணும் வகையில் நீச்சல் குளத்தோடு கட்டப்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள உள்ள ஆடம்பர சேவைகள் பெரும்பாலும் மக்களை கவர்ந்துள்ளதால் TripAdvisor என்ற பயண இணைதளத்தில் உலகத்தின் சிறந்த ஹோட்டல் என பெயர் பெற்றுள்ளது
.

வாடிக்கையாளர்களை கவர சுவிஸ் வங்கிகள் அதிரடி நடவடிக்கை

 வாடிக்கையாளர்களின் இரகசியங்களை காப்பாற்றுவதில் நெருக்கடிகளை சுவிஸ் வங்கிகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

இதன்பிரகாரம் சில புதுமையான சேவைகளை புகுத்துவதன் மூலம் பல நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டு வருகின்றன.

'பண கூரியர்' வசதி, பணம், தங்கம், கலைப்படைப்புகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருள்களை பாதுகாக்கும் வகையில் பெரிய உலோக அறைகள் கொடுப்பது ஆகிய சில யோசனைகள் திட்டமிடபட்டு வருகிறது.

மேலும் உலக பொருளாதார மன்ற ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்ளும் உலகின் பணக்காரர்களுடன் சுவிஸ் வங்கியாளர்கள் கலந்துரையாடவும் அதன் மூலம் உலக பணக்கார வாடிக்கையாளர்களைக் கவரவும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
 

செவ்வாய், 21 ஜனவரி, 2014

50 ஆண்டுகளுக்கு பின்னர் தென்கொரியாவின் பாராட்டு மழையில் சுவிஸ்

 தென்கொரிய ஜனாதிபதி 50 ஆண்டுகளுக்கு பின்னர் சுவிஸ் நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 1963ம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை பற்றி சுவிஸ், தென்கொரியா கலந்துரையாடியது.

அதன்பின்னர் 50 ஆண்டுகள் கடந்து நேற்று தான் சுவிஸ் தென் கொரிய சந்திப்பு நடைபெற்றது.
தென் கொரிய ஜனாதிபதி தலைநகர் பேர்னில் இராணுவ மரியாதையுடன் வறவேற்கப்பட்டார்.
இவர் வருகை பற்றி வறவேற்பு உறையாற்றிய சுவிஸ் ஜனாதிபதி டிடியர் கூறுகையில், கண்டுபிடிப்பு மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டால் இணைக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் பொருளாதாரத்தில் போட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுவிஸ் பற்றி தென் கொரிய ஜனாதிபதி கூறுகையில், சுவிஸ் நாடானது பல நோபல் பரிசுகள் பெற்று படைப்பாற்றலுக்கு ஆதாரமாய் உள்ளது என்றும் குறிப்பாக ஆராய்ச்சி, அறிவியல், மருந்து, சுற்றுலா துறை, மற்றும் கல்வி துறையில் சிறந்து விளங்குகிறது எனவும் பாராட்டியுள்ளார்.

 

திங்கள், 20 ஜனவரி, 2014

இந்தியாவுடன் சுவிஸ் விமான ஒப்பந்தம்

 சுவிஸின் பிலெடஸ் நிறுவனம் பயிற்சி விமானங்களை தயாரிப்பதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த 1939ம் ஆண்டு முதல் சுவிசின் ஸ்டான் நகரில் விமானங்களை தயாரித்து வரும் பிலெடஸ் நிறுவனத்தில் 1600 பணியாளர்களும், 100 பயிற்சியாளர்களும் பணியாற்றுகின்றனர்.
இந்நிறுவனம் இந்திய விமானப்படையின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உள்ள “சூலூர்” அசெம்பளிஸ் யூனிடிற்கு 106 விமானப் படை பயிற்சி விமானங்களை தயாரிப்பதற்க்கான உரிமங்களை அனுமதித்துள்ளது.

இதன்படி பிசி-7 மார்க்-2 என்ற விமானப்படை விமானங்களை தயாரிக்க உள்ளது.
இந்த பணி மும்பை டாட்டா நிறுவனத்தின் “அசெம்ப்ளி யூனிட்” மற்றும் ஐதாரபாத்தின் Tata advance systems என்ற துணை நிறுவனம் மூலமாக மேற் கொள்ளப்படவுள்ளது.
இதற்காக இந்தியாவின் TCS நிறுவனம் பொறியாளர்கள் பிலெடஸ் நிறுவனம் பணியில் ஈடுப்பட உள்ளனர்.

மேலும் பிலெடஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் இத்திட்டத்திற்காக சுவிஸிலிருந்து இந்தியாவிற்க்கு வருகை தந்து ஆதரித்துள்ளனர்.
 

சனி, 18 ஜனவரி, 2014

சுவிஸில் அதிகரிக்கும் ரயில் கட்டணம்

சுவிஸில் ரயில் கட்டணம் அதிகரிக்க கூடும் என ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் டோரிஸ் லூதர்ட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுவிஸ் இரயில் நிலையம் கூறுகையில் சுவிஸின் சூரிஜ் மாகாண ரயில் நிலையத்தில் இரயில்வே பாதைகளை அகலப்படுத்தும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இக்காரணத்தால் ரயில்கள் தாமதமாக வருகின்றது என்றும் இக்கட்டுமான பணிகள் முடிவிற்கு வந்தபின்பு இனி சுவிசில் ரயில்கள் சரியான நேரத்தில் ரயில் நிலையத்தை வந்தடையும் எனவும் தெரிவித்துள்ளது.

எனவே வரும் 2017ம் ஆண்டு ரயில் கட்டணம் உயரலாம் என எதிர்ப்பார்க்கபடுவதாக சுவிஸின் ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் டோரிஸ் லூதர்ட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில் கட்டுமான பணிகளின் தேவைகளை சந்திக்க நிதிபற்றாக்குறை இருப்பதால் அதனை ஈடுசெய்வதற்காக ரயில் பயணச்சீட்டுகளின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

செவ்வாய், 14 ஜனவரி, 2014

உலகின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு!

   சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடந்த விழாவில் உலகின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கடந்த வருடம் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ 69 கோல்கள் அடித்து

 சாதனை படைத்தார். மேலும், சுவீடனுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்தும் சாதனை படைத்தார். இந்த ஆண்டின் சிறந்த உலக கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்ட ரொனால்டோ, தனது மகன் கிறிஸ்டியானோவுடன் சேர்ந்து மேடைக்கு வந்து விருதை பெற்று கொண்டார்.   

அப்பொழுது மகிழ்ச்சியுடன் காணப்பட்ட அவர் அழுத நிலையில் கண்களை துடைத்து கொண்டு கூறுகையில், இந்த நேரத்தில் எதனை குறித்தும் விவரித்து கூற வார்த்தைகள் இல்லை என தெரிவித்தார். இவர் பார்சிலோனோவின் லயனல் மெஸ்சி மற்றும் பிரான்ஸ் நாட்டின் பிராங்க் ரைபரி ஆகியோரை

பின்னுக்கு தள்ளி இந்த விருதை அடைந்துள்ளார். மேலும், உலகின் சிறந்த கால்பந்து வீராங்கனையாக நாடின் ஆங்கரர் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பிபா தலைவர் ஜோசப் பிளாட்டர் மற்றும்
பிரேசில் நாட்டின் சிறந்த கால்பந்து வீரர் பீலே ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

சுவிஸ் நாட்டை கலக்கும் இலங்கை ??இலங்கையை சேர்ந்த சுவிஸில் வாழும் தச்சர் ஒருவர் பாரம்பரிய சக்கரமில்லாத வண்டி(sledge) சறுக்குவண்டியை தயாரிக்கின்றார்.
கடந்த 1984ம் ஆண்டு தமிழ்கவிதை ஜெயபாலன் என்ற பெயர் கொண்ட இலங்கை தமிழர், இலங்கையில் உள்நாட்டு போர் நிகழ்ந்த போது தம் 20ம் வயதில் சுவிஸிஸ் குடிபுகுந்தார்.

சகோதரரின் அடைக்கலத்தில் இருந்த இவர் சுவிஸின் கிரவுபுடென் என்ற இடத்தில் சுர் என்னும் கிராமத்தில் வசித்து வந்தார். இவர் சுவிஸில் தச்சுவேலை செய்பவராய் பணிபுரிந்தார்.
இவர் ஜேர்மன் மொழியை நன்கு கற்றதோடு அதை பேசுவதிலும் எழுதுவதிலும் சிறந்து விளங்குகிறார்.

இவர் பணிபுரிந்த வந்த நிறுவனத்திற்கு பாரம்பரிய சறுக்குவண்டிகளை (sledge) வடிவமைத்து தயாரித்து கொடுத்து வந்தார். நாளடைவில் அந்த நிறுவனம் மூடப்பட்டதால் தானே சொந்தமாக தன்னுடன் 6 தச்சு தொழிலாளர்க்ளை சேர்த்து கொண்டு பாரம்பரிய சறுக்கு வண்டிகளை தயாரித்து
விற்பனை செய்துள்ளார்.

மிக அழகான வடிவத்துடன் தோற்றம் அளிக்கும் இச்சக்கரமில்லாத வண்டியை 490 பிராங்குகள் (540 டொலர்கள்) என விற்கின்றனர், எனினும் இவர்களுக்கு வண்டி ஒன்றிற்கு 25 பிராங்குகள் என்ற லாபம் மட்டுமே கிடைக்கின்றது.

இந்த சறுக்குவண்டிகள் சுற்றுலா பயணிகள் மற்றும் சுவிஸில் உள்ள மக்களிடமும் நல்ல வறவேற்பை பெற்றுள்ளது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் இதனை திருமணப்பரிசாக அளிப்பதற்கு வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து ஜெயபாலன் கூறுகையில், கடந்த 1990ம் ஆண்டு வீர்னி என்ற சுவிஸ் பெண்ணை மணம் முடித்து 30 வருடங்களாக சுவிஸில் சுபிக்‌ஷமாக வாழ்ந்து வருகின்றேன் என்றும் சுவிஸ் நாட்டின் மொழியை கற்றுக்கொள்வதும் குளிரும் தான் கடுமையாக இருந்தது எனவும் கூறியுள்ளார். 

சனி, 11 ஜனவரி, 2014

பிரம்மாண்ட ஹொட்டல் கேள்விக்குறியில்


சுவிஸில் கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட ஹொட்டல் கட்டுவதற்கான பணிகள் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு சுவிஸின் லுசேன் நகரத்தில் 27 மாடிகள் கொண்ட மிகப்பெரிய ஹொட்டலை உயரமான கோபுரத்துடன் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.

இதில் 200 அறைகள், மாடியின் மேல் ரெஸ்டாரண்டுகள், 80 வீடுகள் மற்றும் வாடகை குடியிருப்புகள் போன்ற பல பிரத்யேகங்களுடன் கட்டப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு ஆதரவளித்துள்ள மேயர் லுசேனின் கூறுகையில், இந்த அடுக்குபாடி கோபுரத்தின் உச்சியில் கட்டப்படும் ரெஸ்டாரண்டுகளிலிருந்து பார்த்தால் நகரின் எல்லைகள் முழுவதையும் விமானத்திலிருந்து காண்பது போல் தோற்றத்தின் காட்சிகளை கண்டுகளிக்கலாம்.

மேலும் ஜெனிவா சூரிசையும், ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தையும் ரசிக்க கூடும் என தெரிவித்துள்ளார்.
லுசேனில் முன்பே மூன்றாவது மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதால் இந்த பிரம்மாண்ட ஹொட்டலை கட்டுவதற்க்கு அனுமதி வழங்கப்படுவது மிகுந்த கேள்விகுறியாய் உள்ளது.
ஆதலால் வரும் ஏப்ரல் 13ம் திகதி இதற்கு அனுமதி வழங்கப்படுமா அல்லது மறுக்கப்படுமா என்பதை அறிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.

இதற்கு மொத்தம் 10,700 பேர் கையெழுத்திட்ட எதிர்ப்புகளை சேகரித்து வைத்துள்ளனர்.
பொது வாக்கெடுப்பின் போது குறைந்தபட்சம் 8,443 வாக்குகள் இருந்தாலே அந்த தீர்மானத்தை நிறைவேற்ற இயலும்.
எனவே கூடிய விரைவில் இவ்விடயத்திற்கு தீர்வு கிடைத்துவிடும் என நம்பப்படுகின்றது.
 

சுவிஸ் மருந்து நிறுவனத்தின் மீது பாயும் ஜப்பான்

சுவிசின் நோவார்டிஸ் என்ற மருத்துவ நிறுவனத்தின் மீது ஜப்பான் சுகாதார அமைச்சகம் குற்றவியல் புகாரை கொடுத்துள்ளது.

சுவிசில் இருக்கும் நோவார்டிஸ் என்ற மருத்துவ நிறுவனம் இரத்த அழுத்ததிற்காக அறிமுகம் செய்த புதிய மாத்திரையை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி மிகைப்படுத்த விளம்பரங்களை அளித்திருக்கிறது.
மேலும் ஜப்பான் நாட்டிலும் "டயோவின்" மருந்தானது விற்கப்படுகிறது, இது தவிர 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெறப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த மருந்தானது பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் "இந்த மருந்தை உட்கொள்பவருக்கு மார்புவலி மற்றும் பக்கவாதம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன என்றும் பொதுவாக இந்த மருந்தானது எல்லா நோயாளிகளுக்கும் உகந்தது அல்ல எனவும் கூறியுள்ளனர்.

நோவார்டிஸ் மருந்துபொருட்கள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி “டேவிட் எப்ஸ்டின்” இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் சட்டத்தின்படி, எவர் ஒருவர் மிகைப்படுத்தபட்ட விளம்பரத்தின் கீழ் குற்றவாளியாக தீர்க்கப்படுகிறாரோ அவருக்கு 2 வருடம் சிறைவாசமோ அல்லது இரண்டு மில்லியன் அபராதமோ கட்ட வேண்டும்.
எனினும் இக்குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

வியாழன், 9 ஜனவரி, 2014

பனிச்சரிவால் பலியான மலைவழிக்காட்டி

சுவிஸின் ஆல்ப்ஸ் மலை பகுதியில் மலையேருபவர்களை வழிநடத்தும் அனுபவமிக்க மலை வழிக்காட்டி ஒருவர் பனிச்சருக்கால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாகவே ஆல்ப்ஸ் மலையில் மோசமான வானிலையின் காரணத்தால் தொடர்ந்து ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவங்கள் பலரின் உயிரை காவு எடுத்துள்ளது.

இச்சம்பங்களில் ஒன்றானது மலைவழிக்காட்டி சாமூவேல் மாத்தே என்பவரின் இறப்பு. 26 வயது நிரம்பிய சாமூவேல் மலையேருவதில் மிகுந்த திறமைவாய்ந்த அனுபவசாலி.
இவர் கடந்த 5ம் திகதி ஆறு பேர் கொண்ட குழுவை 2400 மீற்றர் உயரத்திலுள்ள பனிமலையில் வழிநடத்தி கொண்டு செல்கையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு இவருடன் சேர்ந்து மூன்று பேரை அடித்து சென்றது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் சாம்வேலும் ,இவருடன் வந்த இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
 

புதன், 8 ஜனவரி, 2014

வாடிகன் நகரில் மேலோங்கும் ஓரினச்சேர்க்கைபுனித தலமாய் கருதப்படும் வாடிகன் நகரம் ஓரினச்சேர்க்கைகளால் நிறைந்துள்ளது என முன்னாள் சுவிஸ் காவல் உறுப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 5ம் திகதி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல்லாண்டுகளுக்கு முன்னர் வாடிகனில் காவல் உறுப்பினராக இருந்தபோது பல முறை கார்டினல்களாலும், ஆயர்களாலும்,குருக்களாலும்,பிற அதிகாரிகளாலும் ஓரினச்சேர்க்கைக்கு தூண்டிவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் 20 மதகுருக்கள் என்னை தூண்டிவிடும் நோக்கில் சில்மிஷ கோரிக்கைகளை விடுத்து ஓரினச்சேர்கையில் என்னுடன் ஈடுபட முயன்றுள்ளனர்.
இவ்வகை ஓரினச்சேர்க்கையாளர்கள் மதகுரு என்ற போர்வையில் மக்களை வழிநடத்துபவன் போல் போலி வேடமிட்டு பதவி வகித்தால், அது மக்களின் கடவுள் பக்தியை கெடுத்து, தேவலாயத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் பாழாக்க வழிவகுத்துவிடும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “திருமணத்திற்கு வெளியே செக்ஸ் வைத்துக்கொள்வது பாவம் ,விவாகரத்து செய்வது என்பது வன்மையான செயலாகும் என மக்களை நோக்கி கூறும் மதக்குருக்கள் ஓரினச்சேர்க்கைக்கு மட்டும் ஆதரவளிப்பது மிகுந்த வெறுப்பும் வேதனையையும் தருகிறது.
எனவே தற்போதைய வாடிகனில் போப்பாக பதவியிலிக்கும் போப்பும் இந்த ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இதில் ஈடுப்பட்ட யாரையும் மதகுருவாக நியமிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்
 

சனி, 4 ஜனவரி, 2014

ஐரோப்பிய எழுச்சியுடன் சேர்ந்த சுவிஸ் பங்குச்சந்தை

2013ம் ஆண்டில் சிறந்த செயல்திறன் கொண்டிருந்த சுவிஸ் நாட்டின் பங்குகள் ஐரோப்பிய எழுச்சியுடன் சேர்ந்துள்ளது.

சுவிஸ் பங்குச் சந்தையிலுள்ள 6 பங்குச் சந்தைகள் தங்களது 20 நிறுவன பங்குகளை 20 சதவிகித லாபத்தை மேல்நோக்கி ஈட்டியுள்ளதால், சுவிஸ் பங்கு சந்தையில் சிறந்த செயல்திறன் கொண்டுள்ளது.
சுவிஸ் பங்குகளைப் போலவே இத்தாலியின் மிலன் (17 வீதம்), ஜெர்மனிய மேட்ரிட் (21 வீதம்) நல்ல நிலையில் உள்ளன.

அமெரிக்காவின் நியூயோர்க் பங்கு சந்தை 25 வீதத்திற்கு மேல் உள்ளது. 29 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. NASDAQ பங்குச் சந்தை சாதனையாக 37 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது.
சுவிஸ் பங்குச் சந்தையில் “ஆட்டோனியம்” நிறுவனத்தின் பங்குகள் 157 டொலருக்கு 2013ம் ஆண்டில் விற்கப்பட்டன.

சுவிஸ் சந்தையின் பங்குகள் நிதித்துறையிலும் சுகாதாரத் துறையிலும் உள்ள நிறுவனங்கள் நல்ல இலாபத்தை ஈட்டியுள்ளன.

மேலும், 2014ம் ஆண்டில் சுவிஸ் நாட்டின் பங்குகள் நல்ல முன்னேற்றம் அடைந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014ம் ஆண்டு இறுதியில் சுவிஸ் சுவிஸ் சந்தையின் குறியீட்டு எண் 9100 புள்ளிகளாக உயரும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

குப்பை குவியலில் பாம்பின் கூட்டம்

சுவிசின் குப்பை அகற்றும் ஆலை ஒன்றில் ஐந்து உயிருள்ள பாம்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுவிஸின் சூரிஜ் மாகாணத்தில் குப்பை அகற்றும் ஆலையின் பெண் தொழிலாளி ஒருவர் பிளாஸ்டிக் பை ஒன்றில் ஐந்து பாம்புகள் உயிருடன் இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

அல்பேல்டெர்னில் உள்ள கழிவு அகற்ற தளத்தில் யாரோ ஒருவரால் இந்த பாம்புகள் நிறைந்த பிளாஸ்டிக் பை போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சூரிஜ் மண்டல பொலிஸ் அதிகாரி கூறுகையில் . ”இதில் எல்லா பாம்புகளும் நல்லாரோக்கியத்துடன் உள்ளது என்றும் இதை வளர்த்தவர்கள் தான் இதனை வெளியே விட்டிருக்கக் கூடும்” எனவும் கூறியுள்ளார்.

மேலும் இவ்வகை பாம்புகளின் நீளம் 1.8 மீற்றராகும். இவை வட அமெரிக்காவில் "கார்ன் பாம்புகள்" என அழைக்கப்படும் விஷதன்னமையற்ற பாம்புகள்.

இவைகள் பார்க்க கவர்ச்சியான தோல் அமைப்பை கொண்டவை மற்றும் வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றது.
 

புதன், 1 ஜனவரி, 2014

சுவிஸ் திரும்பிய மார்கே வெபர்

ஆர்க்டிக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மார்க்கோ வெபர் சுவிஸர்லாந்து திரும்பியுள்ளார்.
கிறீன் பீஸ்ஸின் சுவிஸ் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வெபர், ரஷ்யாவில் தனிச் சிறையில் இருந்து மிகவும் கடினமானதாக இருந்தாலும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டமை வருத்தத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்டமை ஆரம்பத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. சில வாரங்களின் பின்னர் அது சோர்வை ஏற்படுத்தியது என்றார்.
வெபர் கிறீன் பீஸ் நிறுவனத்தின் 30 செயற்பட்டாளர்களில் ஒருவர், டச்சு கொடியுடன் கூடிய ஆர்க்டிக் சன்ரைஸ் என்ற கப்பல் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரஷ்ய பாதுகாப்பு படையினர் கைப்பற்றப்பட்டது.
ரஷ்ய நாட்டின் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ரஷ்ய படையினர் கப்பலை கைப்பற்றியதுடன் அதில் இருந்தவர்களையும் கைது செய்தனர்.
மிக நீண்ட நாட்கள் சிறையில் இருந்த அவர்களுக்கு ரஷ்யா பொதுமன்னிப்பை வழங்கியது.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட வெபர், இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிகாரிகள் ஒரு தீர்வை தேடுகின்றனர்.
நாங்கள் குற்றவாளிகள் அல்ல. குற்றம் சுமத்தப்படாமல் எங்கள் மீதுதான நடவடிக்கைக்கு ஒரு வழியை அவர்கள் தேடினர் என்றார்.

அதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட 28 வயதான மலையேறும் வீரர், ரஷ்யாவில் தாம் மோசமாக நடத்தப்படவில்லை என்றாலும் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பில்லாமல் இருந்து மிகவும் கடினமானதாக இருந்தது என்றார்.
ரஷ்யாவில் விடுதலை செய்யப்பட்ட வெபர், ரஷ்யாவின் சென்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் இருந்து 50 மணித்தியால ரயில் பயணம் மூலமாக கடந்த திங்கட் கிழமை சுவிஸை அடைந்தார்.
 
Blogger இயக்குவது.