வியாழன், 26 ஏப்ரல், 2018

சிறந்த ரயில் சேவையை வழங்கும் நாடு சுவிட்சர்லாந்து

மூன்றாவது முறையாக Boston Consulting Group வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டின் European Railway Performance Index அறிக்கையின்படி சுவிட்சர்லாந்து ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில் சேவையை வழங்கும் நாடாகத் தொடர்ந்து விளங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்துக்கு 7.2 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்தின் பயணிகள் ரயில் சேவை, அதிகப் பயன்பாடு, சேவைத்தரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கை 
தெரிவிக்கிறது.
டென்மார்க்(6.8 புள்ளிகள்), பின்லாந்து(6.6 புள்ளிகள்) மற்றும் ஜேர்மனியை(6.1 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளிய சுவிட்சர்லாந்து முன்பு இருமுறை முதலிடத்தைப் பிடித்தது போலவே இம்முறையும் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
பட்டியலின் கடைசியில் இருப்பது பல்கேரியா(1.9 புள்ளிகள்).
எவ்வளவு பயணிகள் எவ்வளவு முறை ரயில் சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் கிட்டத்தட்ட முழு மதிப்பெண்கள் பெற்றாலும் தரத்தில் சற்றுக் கீழிறங்கியுள்ளது சுவிட்சர்லாந்து.
இந்த விடயத்தில் பின்லாந்தும் பிரான்ஸும் முந்திக்கொண்டன. இரண்டுமே 3.3க்கு இரண்டு புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் சுவிட்சர்லாந்து 1.8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.
பாதுகாப்பு விடயத்தில் டென்மார்க், லக்ஸம்பர்க், பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அனைத்தும் சுவிட்சர்லாந்தைவிட சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளன.
இந்த நிலைக்கு வந்துள்ளதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ள சுவிஸ் ரயில்வே இந்நிலையைத் தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து பாடுபடும் என உறுதி எடுத்துக் கொள்வதாக
 தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 19 ஏப்ரல், 2018

இலங்கையர்கள் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயம்

7
சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இலங்கையர்கள் பலர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று பிற்பகல் 3.15க்கு  இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுற்றுலாவுக்கு சென்ற இலங்கையர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று சுவிஸில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 சுற்றுலாப்பயணிகளை சென்ற இந்த பேருந்து, சூரிச்சின் வடக்குப்பகுதி அதிவேக வீதியில் வைத்து இரண்டு கனரக வாகனங்களுடன்
 மோதியுள்ளது
சம்பவத்தில் ஒருவர் கடுமையன காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று சுவிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 18 ஏப்ரல், 2018

ஈழ தமிழர் சுவிஸில் தேர்தலில் அமோக வெற்றி

சுவிட்ஸர்லாந்து தேர்தல் ஒன்றில் ஈழ தமிழர் ஒருவர் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத் தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி அமோக
 வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 15 ம் திகதி இடம்பெற்ற குறித்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அவர் இரண்டாவது முறையாகவும் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
36 ஆசனங்களை கொண்ட குறித்த நகரசபைக்கு 140 இற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர். அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார்.
சோசலிசக் கட்சி சார்பில் குறித்த நகர சபைக்கு 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி ஐந்தாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது 
குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>புதன், 4 ஏப்ரல், 2018

சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டவர்கள் மூவர் சுவிசில் பலி

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டவர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த
 ஸ்பெயின் நாட்டவர்கள் மூவர் பனிச்சறுக்கு விளையாட்டின் போது பனிப்பாறைச் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அவர்களுடன் வந்த இருவர் உயிர் பிழைத்துள்ளதாகவும் Valais பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இன்னொரு பனிச்சறுக்கு குழுவினர் பொலிசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து பொலிசார் மீட்பு பணியில்
 ஈடுபட்டனர்.
பனிப்பாறைச் சரிவில் சிக்கிய ஐந்து பேரும் சமிக்ஞை கருவிகளை அணிந்திருந்ததால் மீட்பு குழுவினர் அவர்கள் இருக்கும் இடத்தை சற்று எளிதாக கண்டறிந்து இருவரை ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்தது.
என்றாலும் போதுமான வெளிச்சம் இல்லாததால் மூன்று பேரின் உடல்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
உயிரிழந்தவர்கள் ஸ்பெயின் நாட்டவர்கள் என்பது மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய பொலிசார் அவர்களது தனிப்பட்ட அடையாளங்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஏற்கனவே பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றின் காரணமாக பனிப்பாறைச் சரிவுகள் ஏற்படலாம் என்று Valais பொலிசார் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>Blogger இயக்குவது.