வியாழன், 26 ஏப்ரல், 2018

சிறந்த ரயில் சேவையை வழங்கும் நாடு சுவிட்சர்லாந்து

மூன்றாவது முறையாக Boston Consulting Group வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டின் European Railway Performance Index அறிக்கையின்படி சுவிட்சர்லாந்து ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில் சேவையை வழங்கும் நாடாகத் தொடர்ந்து விளங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்துக்கு 7.2 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்தின் பயணிகள் ரயில் சேவை, அதிகப் பயன்பாடு, சேவைத்தரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கை 
தெரிவிக்கிறது.
டென்மார்க்(6.8 புள்ளிகள்), பின்லாந்து(6.6 புள்ளிகள்) மற்றும் ஜேர்மனியை(6.1 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளிய சுவிட்சர்லாந்து முன்பு இருமுறை முதலிடத்தைப் பிடித்தது போலவே இம்முறையும் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
பட்டியலின் கடைசியில் இருப்பது பல்கேரியா(1.9 புள்ளிகள்).
எவ்வளவு பயணிகள் எவ்வளவு முறை ரயில் சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் கிட்டத்தட்ட முழு மதிப்பெண்கள் பெற்றாலும் தரத்தில் சற்றுக் கீழிறங்கியுள்ளது சுவிட்சர்லாந்து.
இந்த விடயத்தில் பின்லாந்தும் பிரான்ஸும் முந்திக்கொண்டன. இரண்டுமே 3.3க்கு இரண்டு புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் சுவிட்சர்லாந்து 1.8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.
பாதுகாப்பு விடயத்தில் டென்மார்க், லக்ஸம்பர்க், பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அனைத்தும் சுவிட்சர்லாந்தைவிட சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளன.
இந்த நிலைக்கு வந்துள்ளதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ள சுவிஸ் ரயில்வே இந்நிலையைத் தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து பாடுபடும் என உறுதி எடுத்துக் கொள்வதாக
 தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.