2016, ஜனவரி புத்தாண்டான 1-ம் திகதி முதல் சுவிட்சர்லாந்து நாட்டில் பல்வேறு புதிய சட்டங்களை அந்நாட்டு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2016ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என ஏற்கனவே புதிய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதன் முதற்கட்டமாக 3 முக்கிய புதிய சட்டங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
ரயில், பேருந்துகளில் பயணச்சீட்டு அவசியம்
சுவிஸ் அரசின் பொது போக்குவரத்துகளான ரயில் மற்றும் பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 1ம் திகதி முதல் ரயில் மற்றும் பேருந்துகளில் முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபர்களின் தகவல்களை சேகரித்து அவற்றை தேசிய தகவல் மையத்தில் பாதுகாக்கப்படும்.
இந்த தகவல்களை போக்குவரத்து நிறுவனங்கள் எளிதில் பெற்றுக்கொள்வதுடன், பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
நுகர்வோர்களுக்கு பயனளிக்கும் புதிய சட்டம்
சுவிட்சர்லாந்து நாட்டில் தொலைபேசி மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிற்கே அனுப்புவைக்கும் நடைமுறை அதிகமாக புழக்கத்தில் இருந்து வருகிறது.
மேலும், திருப்தி இல்லாத பொருட்களை நிறுவனத்திற்கே திருப்பி அளிப்பதற்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இதில் ஒரு அதிரடி மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 1ம் திகதி முதல் தொலைபேசி மூலமாக 100 பிராங்க் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள பொருட்களை ஆர்டர் செய்து, அதில் திருப்தி இல்லை என்றால், அதனை நிறுவனத்திற்கு திருப்பி அளிக்கும் கால அவகாசத்தை 2 வாரங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும், இணையதளம் மூலமாக பொருட்களை வாங்குபவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது.
மேலும், சிறிய அளவிலான கடனை பெறுவதற்கு அதிகப்படியான மற்றும் மிதமிஞ்சிய விளம்பரங்கள் செய்து பொதுமக்கள் மீது கடன் சுமை ஏற்றும் நடவடிக்கைக்கும் தற்போது முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டுள்ளது.
பணமோசடியை தடுக்கும் நோக்கில், 1,00,000 பிராங்க் தொகைக்கு மேல் பணபரிவர்த்தனையை மேற்கொண்டால், அதற்கு கூடுதலான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை மாசுப்படுத்தம் வாகனங்களுக்கு வரி அதிகரிப்பு
சுவிஸ் சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் வெளியிடும் கார்பன் –டை –ஆக்ஸைடு வாயுவால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறது.
எதிர்வரும் 2020ம் ஆண்டிற்குள் இவ்வாறான வாயுக்களை
வெளியிடுவதை கடுமையாக குறைக்கப்படும் என சுவிஸ் அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன் முதல் கட்டமாக, ஒரு டன் அளவிற்கு மிதமிஞ்சிய கார்பன் – டை –ஆக்ஸைடு வாயுவை வெளியிடும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை தற்போது 60 பிராங்கில் இருந்து 86 பிராங்காக அரசு உயர்த்தியுள்ளது.
இதன் மூலம், சுவிஸில் சுற்றுச்சூழல் வெகுவாக பாதுகாக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக