சுவிட்சர்லாந்து நாட்டு ஆபரண நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 5 லட்சம் யூரோ மதிப்பிலான நகைகளை திருடிய 3 நபர்களுக்கு 14 வருடங்கள் வரை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கென்னஸ் திரைப்பட விழாவில் உலகப்புகழ் பெற்ற சுவிஸ் நாட்டை சேர்ந்த Chopard என்ற ஆபரண நிறுவனம் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில், அல்ஜீரியா நாட்டை சேர்ந்த Djelloul Mezzouar(44), அதே நாட்டை சேர்ந்த Mohamed Marref(46) மற்றும் Samir Guerroum(38) ஆகிய நபர்கள் கூட்டாக திட்டமிட்டு திரைப்பட விழா நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே ஹொட்டல் அறையில் தங்கியுள்ளனர்.
இந்த திரைப்பட விழாவில் பங்கேற்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அணியும் விலை உயர்ந்த ஆபரணங்களை சுவிட்சர்லாந்தை சேர்ந்த Chopard வடிவமைத்து தயார் நிலையில் வைத்துள்ளது.
இதனை முன்கூட்டிய தெரிந்துக்கொண்ட திருடர்கள் இருவரும் நூதனமாக திட்டமிட்டு 5,36,000 யூரோ மதிப்புள்ள அந்த நகைகளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
திருடிய நகைகளை அல்ஜீரியா நாட்டை சேர்ந்த Farida Saddouki என்ற பெண்ணிடம் கொடுத்து வைத்துள்ளனர்.
திருட்டு குறித்து தகவல் அறிந்து பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியதை தொடர்ந்து, 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று பிரான்ஸ் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
இந்த திருட்டு குற்றத்தில் முதல் குற்றவாளியான Mohamed Marrefநீதிமன்றத்திற்கு வராமலேயே அவருக்கு நீதிபதி 14 வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளார்.
இதற்கு அடுத்த குற்றவாளிகளான Djelloul Mezzouar என்பவருக்கு 10 வருடங்களும், Samir Guerroum என்பவருக்கு 7 வருடங்களும் நீதிபதி சிறை தண்டனை விதித்துள்ளார்.
மேலும், திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திற்காக Farida Saddouki என்ற அந்த பெண்ணிற்கும் நீதிபதி 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக