புதன், 15 அக்டோபர், 2014

சுவிஸ் ஓய்வூதியத் திட்டம்! ஆய்வில் தகவல்

 உலகின் தலைசிறந்த ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாக சுவிட்சர்லாந்தின் ஓய்வூதிய திட்டம் இருப்பதாக அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில், 25 நாடுகளில் பின்பற்றப்படும் ஓய்வூதியங்களை ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுவிஸ் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
அந்த ஆய்வின் முடிவில், நல்ல பலன்களை வழங்கும் ஓய்வூதியத்தை வழங்குவதில் டென்மார்க் முதலிடம் வகிப்பதாக தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடத்தை பிடித்துள்ளன.
மேலும் சுவிஸ் ஓய்வூதியம் பற்றி கூறுகையில், சுவிஸ் ஓய்வூதியம் பல நல்ல அம்சங்களை கொண்டுள்ளதாகவும், சில பகுதிகளை மட்டும் முன்னேற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
Blogger இயக்குவது.