சில குறிப்பிட்ட விடயங்கள் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக அமைந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.
அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்…
1. வழக்கமான குடியுரிமை பெறும் முறை
உங்களிடம் நிரந்தர வாழிட உரிமம் C permit இல்லையென்றால், அல்லது தொடர்ந்து 10 ஆண்டுகள் நீங்கள் சுவிட்சர்லாந்தில்
வாழவில்லை என்றால்…
8 முதல் 18 வயது வரை உள்ளவர்கள்சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த காலகட்டம் இரட்டிப்பாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனாலும், ஒருவர் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளாவது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும் என்கிறது மாகாண
புலம்பெயர்தல் செயலகம்.
B or Ci உரிமத்துடன் வாழ்ந்த காலகட்டமும் அதில் அடங்கும்.
ஆனால், நீங்கள் ஒரு புகலிடக் கோரிக்கையாளராக மட்டுமே சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருந்தாலோ, அதாவது குறுகிய கால அனுமதிக்கான உரிமத்துடன் வாழ்ந்திருந்தாலோ (N permit or on a short stay L permit) உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இதுபோக, மாகாண அளவில், குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் நீங்கள் ஒரு மாகாணத்தில் வாழ்ந்திருக்கவேண்டியதும்
அவசியம்.
நீங்கள் சுவிஸ் மக்களுடன் ஒருங்கிணைந்து வாழவில்லை என்றால்…
உள்ளூர் வாழ்க்கை முறை, உள்ளூர் மரபுகள் ஆகியவற்றுடன் நீங்கள் வாழும் இடம் குறித்து நீங்கள் நன்கு அறிந்துவைத்திருக்கவேண்டும்.
சரியான நேரத்திற்கு வரி செலுத்தாமை, கடன், குற்றப்பின்னணி ஆகியவையும் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்.
அரசு நிதி உதவி பெற்றீர்களா?
குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு மூன்று ஆண்டுகள் முன் வரை நீங்கள் அரசின் நிதி உதவி பெற்றிருந்தீர்களானால் உங்கள் குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
நீங்கள் இதுவரை பெற்ற உதவித்தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்தினால் உங்களுக்கு விதிவிலக்கு
அளிக்கப்படும்.
2. எளிதாக்கப்பட்ட குடியுரிமை பெறும் முறை
இது சுவிஸ் குடிமகன் அல்லது குடிமகளை மணந்த அல்லது, வெளிநாட்டுப் பெற்றோருக்கு சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களுக்கான ஒரு வேகமான குடியுரிமை பெறும் முறையாகும்.
எளிதாக்கப்பட்ட என்று கூறப்பட்டாலும், அதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
வாழிடத் தேவைகள்
உங்கள் கணவர் அல்லது மனைவி சுவிஸ் குடிமகனாக அல்லது குடிமகளாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும். விண்ணப்பம் அளிப்பதற்கு
முந்தைய ஆண்டு நீங்கள் சுவிட்சர்லாந்தில் செலவிட்டிருக்கவேண்டும். சுவிஸ் நாட்டவர் ஒருவரை திருமணம் செய்து அல்லது சுவிஸ் நாட்டவருடன் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது வாழ்ந்துவருபவராக இருக்கவேண்டும்.
இந்த நிபந்தனைகளுக்கு நீங்கள் உட்படாத பட்சத்தில், உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மூன்றாம் தலைமுறை வெளிநாட்டவர்
நீங்கள் சுவிட்சர்லாந்தில் பிறந்து சுவிட்சர்லாந்திலேயே வாழ்ந்து வருவதால் குடியுரிமை பெறுதல் எளிதாக இருக்கும் என நீங்கள் எண்ணலாம். ஆனால், அப்படியல்ல.
உங்கள் தாத்தா அல்லது பாட்டி, சுவிட்சர்லாந்தில் பிறந்தவராக இருக்கவேண்டும், அவர்கள் சுவிட்சர்லாந்தில் வாழும் உரிமை பெற்றவர்கள் என்பதை நிரூபித்தாகவேண்டும்.
உங்கள் தந்தை அல்லது தாய், நிரந்தர வாழிட உரிமம் பெற்று குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும். குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது சுவிட்சர்லாந்தில் கல்வி (compulsory schooling) கற்றிருக்கவேண்டும்.
நீங்கள் சுவிட்சர்லாந்தில் பிறந்தவராக இருக்கவேண்டும், நிரந்தர வாழிட உரிமம் பெற்றவராக இருக்கவேண்டும்.
நீங்கள் ஐந்து ஆண்டுகளாவது சுவிட்சர்லாந்தில் கல்வி கற்றவராக (compulsory schooling) இருக்கவேண்டும்.
நீங்கள் வெற்றிகரமாக சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வாழ்பவராக இருக்கவேண்டும்.
25ஆவது பிறந்தநாளுக்கு முன் விண்ணப்பத்தை சமர்ப்பித்திருக்கவேண்டும்.
இந்த விதிகளில் எதற்காவது நீங்கள் உட்படவில்லை என்றால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.