செவ்வாய், 30 ஜூலை, 2013

சுவிஸ் நாட்டில் அதிரடி மது வீழ்ச்சி !


சுவிஸ் நாட்டில் மது உற்பத்தியானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சுவிஸ் நாட்டில் 8.4 லிட்டர் தரமான மதுவானது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த உற்பத்தியானது 1950ம் ஆண்டுகளில் இருந்ததை விட குறைவானதாகும்.
தற்போது சுவிஸில் 2,50,000 மக்கள் மதுவுக்கு அடிமையாக உள்ளார்கள் என இணைதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 2012ம் ஆண்டின் புள்ளி விபர அறிக்கையில் சராசரியாக ஒரு நபருக்கு 36 லிட்டர் மது மற்றும் 56.5 பீர் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு வெள்ளை மற்றும் சிவப்பு மதுவின் குறைவான இறக்குமதியே காரணம்.
கடந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி சரிவில் இருந்துள்ளது என்றும் சில மக்கள் குழுக்கள் மத்தியில் நுகர்வோருக்கான சிக்கல் உள்ளது எனவும் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த புள்ளி விபரமானது மக்கள் தொகையில் ஏறக்குறைய 20 சதவீதம் பேர் வழக்கமாக மது அருந்துபவர்கள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் ஒவ்வொரு மாதமும் நான்கு மது பானங்களை அருந்துவதாகவும் மற்றும் ஆண்கள் குறைந்தது ஐந்து பானங்கள் அருந்துவதாகவும் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது
!!

ஞாயிறு, 28 ஜூலை, 2013

சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த 3 பேரின் உடலம் கண்டுபிடிப்பு

 
சுவிட்ஸர்லாந்து பிரஜைகள் மூவரின் உடலத்தை விமானச் சிதைவுகளுக்குள் இருந்து கடந்த  சனிக்கிழமை கண்டுபிடித்துள்ளதாக கென்ய வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கென்ய வனத்துறை பேச்சாளரான Paul Mbugua மேலும் தெரிவிக்கையில், சுவிட்ஸர்லாந்து பயணிகள் மூவரும் பயணம் செய்த சிறிய ரக விமானம் கடந்த வியாழக்கிழமை காணாமற்போனதாகவும் இதையடுத்து வனத்துறையினர் உலங்குவானூர்தியை பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இத்தேடலை அடுத்து கென்யாவின் மத்திய பகுதியிலுள்ள 11,000 அடிகள் உயரமான Aberdares மலையின் உச்சியில் மூவரின் உடலங்களும் விமானச் சிதைவுகளுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்

செவ்வாய், 23 ஜூலை, 2013

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரப்பகுதியில் நிலநடுக்கம்


சுவிட்சர்லாந்தில் சூரிச் பகுதியில் 20.07.2012 . காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பாரிய அளவில் பாதிப்புக்கள் ஏற்படவில்லையாயினும் மக்கள் மத்தியில் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது.
அண்மைக்காலமாக தொடர்ச்சியாக சிறு சிறு நிலநடுக்கங்கள் இடம்பெற்றுள்ளமையே இந்த அச்ச நிலமைக்கு காரணமாகும். அத்துடன் சூரிச் பெடரல் பொலித்தீனிக் நிறுவனமும் இந்த நில நடுக்கங்கள் தொடர்பாக சந்தேகங்களை வெளியிட்டுள்ளது.
அதாவது நிலத்திற்கு அடியில் 140 டிகிரி செல்சியசில் உள்ள நீர் நிலையைக் கண்டுபிடிப்பதற்காக நிலத்தை துளைபோடும் பணி கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
ஜியோதேர்மல் எனப்படும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 4500 மீட்டர் ஆழத்திற்கு பூமியில் துளையிட வேண்டும். இதன் காரணமாக பூமித் தகட்டில் ஏற்பட்டுள்ள விரிசல்களால் நில நடுக்கங்கள் ஏற்படுவதாக அந்நிறுவனம் சந்தேகம் தெரவித்திருந்தது.
இதற்கிடையில் இவ்வாறானதொரு திட்டம் கடந்த 2006 மற்றும் 2007ம் ஆண்டு காலப்பகுதிகளில் சுவிட்சர்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள பஸல் நகருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

செவ்வாய், 16 ஜூலை, 2013

கின்னஸ் சாதனையை முறியடிக்க தயாராகும் சுவிஸ் சிறுவர்கள்


சுவிஸ் நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவர்கள் கின்னஸ் சாதனைக்காக டோமினோஸ்(dominos) சுவரை உருவாக்கியுள்ளனர்.
டேனியல் ஹவிலியர்(Daniel Huwiler) மற்றும் ஆஸ்வெல்ட் ஜோன்ஸ்(Oswald Jonas) ஆகிய இருவரும் இணைந்து இந்த சாதனையை படைக்க முயன்றுள்ளனர்.
ஹாங்கன்வில்(Häggenschwil) என்னும் உடற்பயிற்சி மையத்தில் 41,680 டோமினோக்களை கொண்டு 38 மீற்றர் நீளம் மற்றும் 1 மீட்டர் உயரத்தில் இந்த சுவரை 20 நிமிடத்தில் உருவாக்கியுள்ளனர்.
தற்போது உலக சாதனை படைத்திருக்கும் டோமினோ சுவரானது 30 மீற்றர் நீளமுடையது என செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது. மேலும் இளவயதினர் இந்த சுவர் கட்டுவதற்கு ஒரு வார காலத்தில் ஒரு நாளுக்கு 10 மணிநேரம் செலவு செய்ய நேரிடும் என டேனியல் ஹவிலியர் கூறியுள்ளார்.
இதனை உருவாக்குவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் அதனுடன் பொறுமையும் தேவைப்படும். நாங்கள் இருவரும் இணைந்து 7 வருடங்களுக்கு முன்பு இதனை எங்கள் இலட்சியமாக நினைத்து செயல்பட்டோம் அப்போது 200 டோமினோக்கள் சேர்த்தோம்.
தற்போது 75,000 டோமினோக்களை சேமித்துள்ளோம். அதனை சேமிப்பதற்கு வாடகை அறையே தேவைப்படுகின்றது என கூறியுள்ளார்.

சனி, 13 ஜூலை, 2013

நபரை கடுமையாக தாக்கிய தமிழர்களால்


சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் சூரிச்சில் 10 முதல் 15 தமிழர்களால் மிகக் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
தமிழர்கள் குறித்த நபரின் மூக்கை உடைத்து கழுத்து பகுதியை பயங்கரமாக தாக்கியுள்ளனர்.
உயிருக்கு போராடிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை தேரியிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தாக்குதலில் ஈடுபட்ட தமிழர்களில் ஒருவரையாவது அடையாளம் காட்டும் நபருக்கு 20,000 பிராங்க பணம் வழங்கப்படும் என சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது
 

வியாழன், 11 ஜூலை, 2013

சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலை வரி அதிகரிப்பு


சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலைக்கான வரிதொகையானது 40 பிராங்குகளிலிருந்து 100 பிராங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை வரி தொகையானது வருகின்ற நவம்பர் மாதம் 24ம் திகதி நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும்.
மத்திய அரசாங்கமானது நாட்டின் நெடுஞ்சாலை போக்குவரத்தை அதிகரிப்பதற்கு நிதி தேவைப்படுவதால் 2015ல் நெடுசாலை வரியினை அதிகரிக்கும் திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என அறிவித்துள்ளது.
இதுவரை வாகன ஓட்டிகள் 9.5 பில்லியன் பிராங்க் வரி செலுத்திய போது 70 சதவீத ரசீதினை மற்றும் பெற்றுள்ளனர். மேலும் தற்போது சாலையை கடக்கும் போது அநேக வரியினை செலுத்திவருவதாகவும் தற்போது உயர்த்தப்படும் வரியானது அதிகமான சுமையை தருவதாக உள்ளது என வரி உயர்வை எதிர்த்து பிடரல் அமைப்பானது வாகன ஓட்டியிடம் பெறப்பட்ட 1,05,822 கையெழுத்தினை சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில் வரி உயர்வானது வெவ்வேறு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சங்கமானது தெரிவித்துள்ளது.
ஆனால் அரசாங்க சட்டத்தின் படி சுவிட்சர்லாந்து வழியாக வாகனம் ஒட்டுபவர்கள் 40 பிராங்குகள் செலுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் செலுத்தும் 40 பிராங் வரியானது 2 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
மேலும் சுவிஸ் வாகன ஒட்டுநர்கள் கண்டிப்பான முறையில் வரிக்கான ஸ்டிக்கர் தங்கள் வாகனத்தின் முன் ஒட்டியிருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 8 ஜூலை, 2013

சுவிஸில் Alpine பயிற்சியில் ஈடுபட்ட 11 வயது சிறுவன் மரணம்



சுவிஸ் நாட்டில் 11 வயது சிறுவன் ஒருவன் அல்பைன்(Alpine) பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளான்.
சுவிஸ் நாட்டின் ஜெர்மட் பகுதியில் உள்ள பனியாற்றை கடக்கும் பொழுது இந்த விபத்தானது நடந்துள்ளது.
அல்பைன்(Alpine) பயிற்சியாளர்கள் 2,883 தொலைவில் உள்ள மான்டே ரோசா(Mannte Rosa) பகுதியில் தங்கியுள்ளனர்.
இவர்கள் அங்கிருந்து 8 நபர்கள் ஒரு குழுவாகவும், 5 நபர்கள் ஒரு குழுவாகவும் ஆக மொத்தம் இரண்டு குழுக்களாக பனியாறு கடந்து சென்றுள்ளனர்.
அப்போது காலை 11.15 மணிக்கு பாதையில் ஒரு பாறையின் ஒரு துண்டானது பிரிக்கப்பட்டதில் அக்குழுவில் இருந்த ஒரு சிறுவன் படுகாயமடைந்துள்ளான்.
பின்பு அக்குழுவின் உறுப்பினர் ஒருவர் உடனடியாக அவசர சேவையை தொடர்பு கொண்டு பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
விமானத்தின் மூலம் காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் 1.45 மணிக்கு உயிரிழந்தான்.
இந்த விபத்திற்கான காரணங்களை கண்டறிய வழக்கறிஞர் அலுவலகத்தில் விசாரணை தொடங்கியுள்ளது
  

ஞாயிறு, 7 ஜூலை, 2013

சீனா மற்றும் சுவிஸ் இடையே வர்த்தக ஒப்பந்தம்




 
சீனா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கிடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது..சீனாவின் வர்த்தக அமைச்சர் கா ஹசன்பெங் (Gao Hucheng) மற்றும் சுவிஸின் பொருளாதார அமைச்சர் ஜோஹான் ஸ்கினெய்டர்(Johann Schneider-Ammann) ஆகிய இருவரும் இணைந்து வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொண்டனர்.
2012ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகத்தில் 26.3 பில்லியன் டொலர் அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த உடன்பாடானது செய்யப்பட்டுள்ளது. சீன நாடானது 2012ல் உலக பொருளாதார இடத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என சுவீஸ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதாகும் என அவ்விழாவின் இறுதியில் சுவிஸ் நாட்டின் பொருளாதார அமைச்சர் ஸ்கினெய்டர் (Schneider) தெரிவித்துள்ளார்.
மேலும் சீன நாடானது நடுத்தர வர்த்தகத்தில் இருந்து வளர்ந்து கொண்டு வருகின்றது. சுவீஸ் நாடு இன்னும் ஜரோப்பிய நாடுகளில் ஒரு அங்கத்தவர் கிடையாது. ஆனால் அதற்கான வாய்ப்பிற்காக காத்திரிக்கின்றோம்.
மேலும் சீன நாட்டின் சீன கைக்கடிகாரங்கள், மருந்துகள் மற்றும் இராசாயன பொருட்கள் அத்துடன் இயந்திரங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதாக உள்ளோம்.
உலக சந்தைதயில் பல்வேறு வகையான வழிமுறைகளை கண்டறியவும் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளவும் நல்ல வாய்ப்பாக உள்ளது. இந்த ஒப்பந்தமானது நடைமுறைக்கு வருவதற்கு முன்வு சுவிஸ்ஸின் அங்கீதாரம் தேவை என ஸ்கெய்டர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 5 ஜூலை, 2013

திருமணத்திற்கு முன்பு குழந்தை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு


 சுவிட்சர்லாந்தில் திருமணத்திற்கு முன்பு குழந்தைபெறும் தாய்மார்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளியியல் விபரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2012ம் ஆண்டில் திருமணமாகாமல் குழந்தை பெற்ற தாய்மார்களின் சதவீதம் 20.02 அதாவது 82,200 என கணக்கிடப்பட்டுள்ளது. ஜரோப்பிய நாடுகளின் மொத்தக் கணக்கெடுப்பில் 39.5 சதவீதம் பெண்கள் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுள்ளர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2012ல் திருமணத்திற்கு முன்பு குழந்தை பெரும் பெண்களின் எண்ணிக்கை 1.7 சதவீகிதம் அதிகரித்துள்ளது.
பெண்கள் தங்களது 30 வயதிலிருந்து முடிவு காலம் வரை குழந்தை பெற்றுக்கொள்ள பெரிதும் விரும்புகின்றனர். இதற்கு முன்னர் 35 வயதில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள பெரிதும் விரும்புவர். ஆனால் தற்போது 30 வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் பெரிதும் விரும்புவதாக சுவிட்சர்லாந்தின் புள்ளியியல் ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுடைய இறுதி காலம் வரை குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தங்களது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர்.
Blogger இயக்குவது.