செவ்வாய், 30 ஜூலை, 2013

சுவிஸ் நாட்டில் அதிரடி மது வீழ்ச்சி !


சுவிஸ் நாட்டில் மது உற்பத்தியானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சுவிஸ் நாட்டில் 8.4 லிட்டர் தரமான மதுவானது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த உற்பத்தியானது 1950ம் ஆண்டுகளில் இருந்ததை விட குறைவானதாகும்.
தற்போது சுவிஸில் 2,50,000 மக்கள் மதுவுக்கு அடிமையாக உள்ளார்கள் என இணைதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 2012ம் ஆண்டின் புள்ளி விபர அறிக்கையில் சராசரியாக ஒரு நபருக்கு 36 லிட்டர் மது மற்றும் 56.5 பீர் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு வெள்ளை மற்றும் சிவப்பு மதுவின் குறைவான இறக்குமதியே காரணம்.
கடந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி சரிவில் இருந்துள்ளது என்றும் சில மக்கள் குழுக்கள் மத்தியில் நுகர்வோருக்கான சிக்கல் உள்ளது எனவும் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த புள்ளி விபரமானது மக்கள் தொகையில் ஏறக்குறைய 20 சதவீதம் பேர் வழக்கமாக மது அருந்துபவர்கள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் ஒவ்வொரு மாதமும் நான்கு மது பானங்களை அருந்துவதாகவும் மற்றும் ஆண்கள் குறைந்தது ஐந்து பானங்கள் அருந்துவதாகவும் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது
!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.