செவ்வாய், 23 ஜூலை, 2013

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரப்பகுதியில் நிலநடுக்கம்


சுவிட்சர்லாந்தில் சூரிச் பகுதியில் 20.07.2012 . காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பாரிய அளவில் பாதிப்புக்கள் ஏற்படவில்லையாயினும் மக்கள் மத்தியில் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது.
அண்மைக்காலமாக தொடர்ச்சியாக சிறு சிறு நிலநடுக்கங்கள் இடம்பெற்றுள்ளமையே இந்த அச்ச நிலமைக்கு காரணமாகும். அத்துடன் சூரிச் பெடரல் பொலித்தீனிக் நிறுவனமும் இந்த நில நடுக்கங்கள் தொடர்பாக சந்தேகங்களை வெளியிட்டுள்ளது.
அதாவது நிலத்திற்கு அடியில் 140 டிகிரி செல்சியசில் உள்ள நீர் நிலையைக் கண்டுபிடிப்பதற்காக நிலத்தை துளைபோடும் பணி கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
ஜியோதேர்மல் எனப்படும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 4500 மீட்டர் ஆழத்திற்கு பூமியில் துளையிட வேண்டும். இதன் காரணமாக பூமித் தகட்டில் ஏற்பட்டுள்ள விரிசல்களால் நில நடுக்கங்கள் ஏற்படுவதாக அந்நிறுவனம் சந்தேகம் தெரவித்திருந்தது.
இதற்கிடையில் இவ்வாறானதொரு திட்டம் கடந்த 2006 மற்றும் 2007ம் ஆண்டு காலப்பகுதிகளில் சுவிட்சர்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள பஸல் நகருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.