வெள்ளி, 5 ஜூலை, 2013

திருமணத்திற்கு முன்பு குழந்தை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு


 சுவிட்சர்லாந்தில் திருமணத்திற்கு முன்பு குழந்தைபெறும் தாய்மார்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளியியல் விபரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2012ம் ஆண்டில் திருமணமாகாமல் குழந்தை பெற்ற தாய்மார்களின் சதவீதம் 20.02 அதாவது 82,200 என கணக்கிடப்பட்டுள்ளது. ஜரோப்பிய நாடுகளின் மொத்தக் கணக்கெடுப்பில் 39.5 சதவீதம் பெண்கள் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுள்ளர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2012ல் திருமணத்திற்கு முன்பு குழந்தை பெரும் பெண்களின் எண்ணிக்கை 1.7 சதவீகிதம் அதிகரித்துள்ளது.
பெண்கள் தங்களது 30 வயதிலிருந்து முடிவு காலம் வரை குழந்தை பெற்றுக்கொள்ள பெரிதும் விரும்புகின்றனர். இதற்கு முன்னர் 35 வயதில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள பெரிதும் விரும்புவர். ஆனால் தற்போது 30 வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் பெரிதும் விரும்புவதாக சுவிட்சர்லாந்தின் புள்ளியியல் ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுடைய இறுதி காலம் வரை குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தங்களது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.