வெள்ளி, 17 மே, 2013

சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்


சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர்.
இவர்களில் ஒரு பிரெஞ்சுக்காரர், ஒரு அல்பேனியர், ஒரு போஸ்னியர், ஒரு கொசோவர் மற்றும் ஒரு செர்பியர் ஆவார்கள்.
மெர் சிறைக்கு வெளியே காலை 10.20க்கு ஏணி வைத்து ஏறிய முகமூடி அணிந்த ஒருவன், ஒரு பையைச் சிறை வளாகத்துக்குள் விட்டெறிந்துள்ளான். அந்த ஐவரும், அப்பையில் இருந்த ஆயுதத்தால் கைதிகளையும், காவலரையும் மிரட்டியுள்ளனர்.
மேலும் குறடு ஒன்றின் உதவியுடன் வேலியில் துளையிட்டு அதனைப் பிரித்து, சிறைச்சாலையின் சுவரைத் தாண்டி அங்கு சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஏணி வழியே கீழே இறங்கித் தப்பித்து விட்டனர்.
இதற்கு வெறும் ஐந்து நிமிடங்களே ஆயிற்று. மேலும் சிறைக்கு வெளியே இவர்களை அழைத்துச் செல்ல இரண்டு வண்டிகள் தயாராக இருந்தன.
இந்தக் குழுவில் இருந்த பிரெஞ்சுக்காரர்(47) திருட்டு, போதைப் பொருள் கடத்தல், ஆயுதப் பயன்பாடு போன்ற வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்துள்ளார்.
போஸ்னியனும்(31), கொசோவனும்(22) திருட்டு வழக்கிலும், அல்பேனியன்(34) போதைப் பொருள் கடத்தல் வழக்கிலும் சிக்கி சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளனர்.
தற்பொழுது இவர்களை சர்வதேச அளவில் தேடப்படும் மனிதர்களாக அறிவித்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.